அன்புமணி ராம்தாஸ் கபடி ஆடினார்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலம் அருகே கிராம விழாவில் பங்கேற்று கபடி விளையாடினார்.

# இவர் செல்லும் பொழுது கபடி போட்டி நடந்துகொண்டிருந்ததால் அன்னார் விளையாடி இருக்கின்றார், அப்பொழுது கரகாட்டம் நடந்ததா? என்பது பற்றி தகவல் இல்லை.

# இவர் தொடங்கி வைத்துவிட்டார், இன்னும் முக ஸ்டாலின், சீமான் போன்றவர்கள் எல்லாம் என்ன செய்ய போகின்றார்களோ?, தேர்தல் தேதி அறிவிக்கபட்டுவிட்டதால் வரும் காலத்தில் காமெடிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உண்மை.

# ஜல்லிகட்டிற்கு தடை இருப்பதால் காளை அடக்கும் திட்டம் இருக்காது, இல்லாவிட்டால் கன்றுகுட்டியோடு நிச்சயம் உருண்டுகொண்டிருப்பார்கள்.

# நிச்சயம் பெண் அரசியல் தலைவர்கள் விரைவில் களை எடுத்தல், பசுவில் பால் கறத்தல், சாணம் அள்ளுதல், சுட்டிக்கல்,தாயம்,பாண்டி விளையாடுதல் போன்ற ஸ்டில்களுடன் காட்சி தருவார்கள் என நம்பலாம்.