டிசம்பர் 1 – 15, 2015 குறும்பதிவுகள்

தெலுங்கு தேசம் என்றொரு ஆந்திர கட்சி உண்டு அது பிரிவினை வாதமா? மலையாளி மலையாளத்தில் ஆள்வதும், கன்னடன் கன்னடத்தில் ஆள்வது போல தமிழன் தமிழனை ஆளவேண்டும், இது தவறா? தவறா?, இதனை சொன்னால் நான் பிரிவினைவாதியா? : அங்கிள் சைமன் சீற்றம்

# அங்கிள், அவர்களை போல இங்கும் தமிழன் முதல்வராக வருவதை எதிர்ப்பவர் யார்? ஆனால் இந்தியாவின் எதிரியான அன்னிய நாட்டு தீவிரவாதியின் படத்தை பிடித்துகொண்டு, அவர்புகழ் பாடிகொண்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தமிழராட்சி, ஈழவிடுதலைக்கு பாடுபடுதல் சிங்களனை கொல்லுதல், தமிழ் இன விடுதலை, உலகார்ந்த தமிழர் விடுதலை, அண்ணன் காட்டிய வழி புலி, என சொல்லிகொண்டிருப்பதுதான் பிரிவினைவாதியாக காட்டுகின்றது.

# இது அங்கிளுக்கு புரியவில்லையா? அல்லது சமார்த்தியமாக மறைக்கின்றாரா, மற்ற மாநிலத்தவர் எல்லாம் எல்லாம் அந்நிய நாட்டு தீவிரவாதிகள் படத்தினை வைத்துதான அரசியல் செய்கின்றார்களா?

உலகிலேயே முதல் முறையாக பாரதம் தயாரித்த ஏவுகணைக்கு சீனா கண்டனம்…, உலகெல்லாம் இனி ஏற்றுமதி , இந்தியா வல்லரசு..மோடி சர்க்கார் அபாரம் : மோடி அடிமைகள்

# கடந்த 2005ம் ஆண்டு ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து தயாரிக்க தொடங்கியதுதான் இந்த ஏவுகனை, அதாவது 65% ரஷ்ய பங்களிப்பு. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியும் ரஷ்யாவின் மாஸ்கோ ஆறும் கலந்த பிரம்மபுத்திரா-மாஸ்கோ இணைந்த பெயரான பிரம்+மாஸ் என சுருக்கபட்டது.

# ரஷ்யாவிற்கு இதில் பெரும் கட்டுபாடு உண்டு, அவர்களை மீறி நாம் விற்கமுடியாது, இரு நாடுகளும் பயன்படுத்திகொள்ளலாம், ஆனாலும் ஏகபட்ட கட்டுபாடுகள் உண்டு. இதற்குள் பாரதம் மோடி தலமையில் பிரம்மாஸ்திரம் தயாரித்து விட்டது என கடும் கூச்சல்.

# அடுத்த நாட்டு ஆயுதங்களில் அரசியல் செய்வது இந்த நாட்டில் புதிதா என்ன?

“வைகோவுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. அவர் தெருவில் இறங்கி போராடுவது எல்லாம் வெளிவேஷம். என் அனுபவத்தில் சொல்கிறேன்”. # தூத்துக்குடி ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல்

# 22 வருடமாக தெரியாத விஷயம் இவருக்கு 2 நாளில் தெரிந்துவிட்டதாம், வை.கோவிற்குத்தான் கொள்கை இல்லை, கலைஞரிடமும் அவரின் சீமந்தபுத்திரனிடம் மட்டும் என்ன கொள்கை குன்று குடியிருக்கின்றது?

# “அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்..” என்பதன் விளக்கமாக வை.கோவினை இப்பொழுது சொல்லலாம், ஈழ புலிகள் இருக்கும் வரை வைகோவோடு இருந்தவர்கள் புலிகள் சரிந்தபின் பறந்தோடுவதுதான் பெரும் மர்மத்திற்குரிய விஷயம்.

 

கடலூரில் சாப்பாடு வழங்க ரூ.40 கோடியா? “வெள்ள நிவாரண ஊழல்” பற்றி விசாரணை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

# முன்பெல்லாம் கட்டுமான பணிகளில்தான் ஊழல் நடக்கும், இப்பொழுதெல்லாம் முட்டை ஊழல், வெள்ள நிவாரண சாப்பாட்டிலும் ஊழல் என தமிழகம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.

# மொத்த இந்தியா அள்ளிகொடுத்த வெள்ள நிவாரணத்திலும் ஊழலா? இன்னும் ஊழல் செய்ய எது பாக்கி இருக்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s