பீப் சாங்க்….

முதிர்ந்த வயது, அவர் இருக்கும் நிலை ஒரு வித தனிமை ஒரு யோக நிலை,இனி சாதிக்கவேண்டியதோ அல்லது எட்டவேண்டிய இலக்கு என எதுவுமே இல்லாத எல்லாம் கடந்த ஒரு உயர் நிலை.

அந்நிலையிலும் சென்னை வெள்ளத்தின் பாதிப்பிற்கு ஓடி ஓடி உதவுகின்றார். உதவி என்றால் வெள்ளம் வடிந்ததும் படகிலை ரோட்டில் போட்டுவிட்டு வேலைக்கு செல்லும் உதவி அல்ல. மக்களுக்கு இன்றுவரை தன்னால் என்ன செய்யமுடியுமோ அதனை ஓடி ஓடி செய்கின்றார்.

# அந்த நிலையில் அவரிடம் அல்ல யாரிடம் வலிய சென்று, சிம்புவின் பீப் சாங் பற்றி கேட்டால் அதே ****** வார்த்தையால்தான் திட்டியிருப்பார்கள். இவர்களாக அவரை சென்று கடுப்பேற்றுவார்களாம், அவர் காட்டமாக பேசினால் அது தவறாம், போராடுவார்களாம்.

# ஒருவருக்கும் உதவாமல் சென்னையி மார்கழி பஜனை பாடும் கூட்டத்திடம் சென்று இதனை கேட்டிருக்கலாம், அல்லது பின் நவீனத்துவ‌ கவிஞர்களிடம் அந்த *** வார்த்தைக்கு அர்த்தம் கேட்டிருக்கலாம் (அவர்கள் பல அர்த்தம் வைத்திருப்பார்கள்), அதனை எல்லாம் விட்டுவிட்டு அந்நிலையில் இவரிடம் கேட்டால், சீறத்தான் செய்வார்.

# உயர்தட்டு மக்களின் இசை ஆதிக்கத்தை தமிழக சினிமாதுறையில் நொறுக்கி எறிந்தவர் அவர். இன்று ஊடகங்கள் எனும் போர்வையில் ஒழிந்திருக்கும் அந்த வன்மம் இப்படித்தான் வெளிப்படும்.

# எஸ்.ஜே சூர்யா, திரிசா இல்ல நயந்தாரா இயக்குநர், உயிர்,சிந்துசமவெளி படமெடுத்தவர் , இன்னும் பெண்ணின் அங்கங்களை அப்பட்டமாக சொல்லி நவீனத்துவ கவிதை வடிக்கும் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் (பெண்களும் உண்டு) இவர்களை எல்லாம் அன்றே இப்படி கண்டித்திருந்தால் இன்று பீப்சாங் வந்திருக்கும்?

# சில பெண்கள், (கவிஞர் தாமரை போன்ற அபூர்வங்களை தவிர) அதாவது தன்னை பெரும் அறிவுஜீவி கவிஞர்கள் என சொல்லி கொள்பவர்களின் கவிதை எனும் கண்றாவிகளை படித்துபாருங்கள், சிம்பு மிக உன்னதமாக தெரிவார், அவைகளை எல்லாம் படித்தால் 1 மாமங்கம் சோறு வாய்க்குள் செல்லாது, அவ்வளவு அருவெருப்பானவை.

உதாரணத்திற்கு ஒரு பெண் கவிஞர் எழுதியது

” அதோ அந்த மாலை சிகப்பு
மாதத்திற்கொரு முறை
நான் தூக்கி எறியும் **** * போல இருக்கின்றதே”

# எப்படி உருவகபடுத்துகின்றார் பார்த்தீர்களா? அந்த கவிஞர் பிரபல பெண் கவிஞர்தான். இதற்கெல்லாம் எந்த மாதர் சங்கமாமது கொடிபிடித்ததா? வழக்கு தொடுத்ததா?. இப்படி எவ்வளவோ காண சகிக்காத கொடுமைகள் உண்டு, மொத்தமாக எல்லாவற்றையும் அல்லவா கண்டிக்க வேண்டும்.