தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும் என கதறும்….

தமிழகத்தை மீட்க வந்த, அங்கிள் சைமனின் அடிப்பொடிகள் ஒன்றாவது, அதாவது தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும் என கதறும் ஒருவராவது, சகாயம் முதலமைச்சர் ஆவதற்கு நாம் தமிழர் கட்சி பாடுபடும் என சொன்னால் நிச்சயம் வாழ்த்தலாம், உங்களின் தமிழக நலன் மீட்பு, திராவிட கட்சிகளை ஒழிப்பது உண்மை என நம்பலாம்.

ஆனால் அங்கிள் மூச் இல்லை. சீடர்களும் அப்படியே கமுக்கம். காரணம் சகாயம் இந்திய நிர்வாக பயிற்சி பெற்றவர். முதல்வரானால் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து தமிழக நலன் காப்பார். அவரால் வளமான தமிழகம்நிச்சயம் சாத்தியம் எனினும், பிரிந்த தமிழ்நாடு சாத்தியமில்லை.

# இங்குதான் அங்கிளின் மங்கிகள் அஞ்சுகின்றன, இவர்களுக்கு தேவை தமிழகம் தனிநாடாக ஆகவேண்டிய ஒரு செய்தி பரபரப்பு. பெரும் இந்திய ராணுவத்துடனான ரத்த களறி. ஒரு பெரும் அழிவில் இவர்கள் தமிழனை இந்தியன் கொல்கின்றான், என ஒப்பாரி வைக்கும் பெரும் அரசியல். அப்படி ஈழத்தில் சகலமும் அழிந்தது போல இங்கும் சுடுகாடாக மாறும் ஒரு வினோத மனநோய்.

# அப்படி ஒரு நிலை வருவதுதான் இவர்கள் ஆசை, “அப்பொழுதும் அங்கிளிடம் பதில் இருக்கும். இங்கு ஆடு மாடு மேய்க்கும் என் உறவுகளே வாருங்கள் ஆஸ்திரேலியாவிலும், டென்மார்க்கிலும் போய் மேய்ப்போம், ஈழத்து உறவுகள் எல்லாம் அப்படித்தான் செய்கின்றன என் இனமே”,

‪#‎ஐரோப்பிய‬ நிரந்தர வாழ்கைக்காக அப்பாவி பிரபாகரனை பெரும் கொலைகாரனாக்கி, அந்த நாட்டை சுடுகாடாக்கி, அதனை காட்டி வெளிநாட்டில் செட்டில் ஆனவர்களுடன் “உறவாடினால்” புத்தி இப்படித்தான் போகும்.

# சொந்த நாடு அழியவேண்டும் அதனை காட்டி வெளிநாட்டில் வாழவேண்டும், இதன் பெயர் “மண்டியிடா மானம்”