விஜயகாந்த அவர் ஸ்டைலில் சொன்னார்!

அக்கால பத்திரிகைகள் உண்மைக்காக போராடின, வெள்ளையனை எதிர்த்து சுதேச மித்திரன் போன்ற பத்திரிகைகள் மிக தைரியமாக எழுதின.

சுதந்திர இந்தியாவிலும் நேரு மீதான விமர்சனங்களை கம்யூனிஸ்ட் பத்திரிகைகள் உள்பட சகலமும் மிக கடுமையாக விமர்சித்தன, இந்திரா பற்றி சொல்லவே வேண்டாம், எல்லா பத்திரிகைகளும் மீடியாக்களும் ஆண்மையுடன் சீறின.

சமூக போராட்டத்தில் பெரியார், அண்ணா போன்றோரின் பத்திரிகைகள் மிக தீவிரமாக அதிகார உச்சங்களை சீண்டின, அவர்கள் கொஞ்சமும் அஞ்சவில்லை அதுவும் பிராமண ஆதிக்கம் நிறைந்த காலத்தில் பெரியாரின் அந்த எழுத்துக்களுக்கு நிச்சயம் பெரும் தைரியம் வேண்டும்.

அவர்களுக்கெல்லாம் சமூக பொறுப்பு இருந்தது, நாட்டு நலன் சமூக நலனை காக்கும் பொறுப்பு இருந்தது, இன்று நடப்பது என்ன?

பத்திரிகைகளும், டீவிகளும் சினிமா குப்பைகளாலும், தேவையற்ற பொறுபற்ற செய்திகளாலும் நிறைந்து கிடக்கின்றன, போட்டிகள் பணங்களை குவித்தல் எனும் நோக்கில் சென்றுகொண்டிருக்கும் இவர்கள் நிச்சயம் சமூகத்திற்கு ஏதும் செய்யபோவதில்லை. மாறாக சீரழிக்கும் அபாயம் உண்டு.

ஏரி கொள்ளையர்களும், மணல் கொள்ளையர்களும், அரசியல் கொள்ளையர்களும் பத்திரிகைகளும் டிவிகளும் நடத்தும் காலமிது, அதாவது தங்களை காப்பாற்றிகொள்ள பத்திரிகை தொழிலில் இறங்கி இருக்கும் இவர்கள் உண்மைக்கு வெகுதூரம். அரசினை விமர்சிக்க மாட்டார்கள் மாறாக ரோட்டில் வருவோர் போவோரை எல்லாம் சீண்டுவார்கள்.

# ஒரு பேட்டியில் இளங்கோவன் பாண்டேயிடம் சொன்னது நிச்சயம் நியாமனானது, ஒரு வகையில் அதுவும் “த்த்தூ.” தான். “பாண்டே உங்களால் தமிழக முதலமைச்சரையோ அல்லது பெரும் அதிகார வர்க்கத்தையோ இப்படி அமர வைத்து கேட்கமுடியாது, ஒரு அமைச்சரை இங்கு அழைத்து வந்து கேளுங்கள் நான் காதை அறுத்துகொள்கிறேன்

உங்கள் எல்லை இவ்வளவுதான், கோயம்பேடு கோவித்தசாமி, சும்மா கத்தி கொண்டு இருப்பவனை அழைத்து அரசியல் விமர்சனம் செய்கின்றீர்கள், யாரிடம் கேட்கவேண்டுமோ அவர்களை விட்டுவிடுவீர்கள், இது ஊடக தர்மமா?”

# இதனைத்தான் விஜயகாந்த அவர் ஸ்டைலில் சொன்னார்.

கலைஞர் தொலைக்காட்சி

கலைஞர் டிவி தொடங்குவதற்காக வாங்கிய 200 கோடி ரூபாய் கடனை, மிக குறுகிய காலத்தில் வட்டியோடு கட்டினார்களாம், அவ்வளவு வருமானம் வந்ததாக நீதிமன்றத்திலே சொல்லி இருக்கின்றார்கள் கலைஞர் குடும்பத்தார். டிவி இன்னும் ஓடிகொண்டிருக்கின்றது.

வேலை வெட்டிக்கே செல்லாத அவரது பேரன்கள் நயந்தாராவினையும், எமி ஜாக்சனையும் வைத்து கொடிகணக்கில் செலவழித்து படமெடுப்பார்கள்.

டெல்லி நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, டெல்லியில் உச்ச நீதிமன்ற வழக்கு வருடகணக்கில் நடத்துமளவிற்கு செலவழிக்கும் உறுப்பினர்களை கொண்டது அந்த கட்சி, இன்னும் சாராய சக்கரவர்த்திகளும் உண்டு. இன்னும் தொட்ட இடமெல்லாம் கொட்டும் வசதி கொண்டது கட்சி.

இவரின் மனசாட்சி (அல்லது டெப்பாசிட் வங்கி) மாறனின் குடும்பம் இன்று ஆசியாவின் குறிபிட்ட பணக்கார குடும்பங்களில் ஒன்று, ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு கோடிகளை ஆயிரகணக்கில் அள்ளிவீசும் குடும்பம் அது.

கலாநிதி மாறனின் மனைவியின் வருமானம் மட்டும் என்ன‌? அது போதாதா நூறு தேர்தல் நடத்த?

ஏதாவது எட்டாம் அதிசயம் நடந்து இனி திமுக ஜெயித்தால் மந்திரி பதவி யாருக்கு செல்லும்? அழகிரிக்கும், கனிமொழிக்கும் மாறன் குடும்பத்தாருக்கும். இவர்களிடம் எல்லாம் கேட்கமாட்டாராம்? அப்பாவி தொண்டர்கள் கொடுக்கவில்லை என இவருக்கு கோபமாம்.

# இவை எல்லாம் இருந்தும் தொண்டர்களின் 22 கோடி நிதி ஒரு மூலைக்கும் காணாதாம். அறிவாலய கருவூல அறை அவ்வளவு பெரிதா?

# உண்மையான திமுக தொண்டன் இருந்தால் அவரின் வசனத்திலே கேட்பான், “ஆள்வதற்கு நீங்களும், மாளுதவற்கு நாங்களுமா?”

# ஏதாவது நாம் சொன்னால் “நான் என்ன மறதிநோயினால் அல்லலுறும் தயாளுவை குணப்படுத்த நன்கொடை கேட்டேனா? திருக்குவளை வீட்டையும் கோபாலபுரம் வீட்டையும் பொதுமக்களுக்கு கொடுத்தவன் நான், தமிழன் வாழ…….” என நீட்டி முழக்குவார். ஒரு மண்ணாங்கட்டி பொருளும் இருக்காது.

# அண்ணா காலத்தில் தன்னோடு தேநீர் அருந்த 10 ரூபாய், கொடியேற்ற 50 ரூபாய் (இவர் சொந்த கட்சியின் கொடி ஏற்ற அடுத்தவன் பணம் கொடுக்க வேண்டும்) வடை சாப்பிட 15 ரூபாய் என அக்காலத்தில் திரட்டி 11 லட்சம் கொடுத்த சாமார்த்தியசாலி கலைஞர், ஆனால் இப்பொழுது டீ கொடுக்க லட்சம் என அறிவித்தாலும் கட்சியினரே ஏதும் கலந்துவிடும் அபாயம் உண்டு.