கலைஞர் தொலைக்காட்சி

கலைஞர் டிவி தொடங்குவதற்காக வாங்கிய 200 கோடி ரூபாய் கடனை, மிக குறுகிய காலத்தில் வட்டியோடு கட்டினார்களாம், அவ்வளவு வருமானம் வந்ததாக நீதிமன்றத்திலே சொல்லி இருக்கின்றார்கள் கலைஞர் குடும்பத்தார். டிவி இன்னும் ஓடிகொண்டிருக்கின்றது.

வேலை வெட்டிக்கே செல்லாத அவரது பேரன்கள் நயந்தாராவினையும், எமி ஜாக்சனையும் வைத்து கொடிகணக்கில் செலவழித்து படமெடுப்பார்கள்.

டெல்லி நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, டெல்லியில் உச்ச நீதிமன்ற வழக்கு வருடகணக்கில் நடத்துமளவிற்கு செலவழிக்கும் உறுப்பினர்களை கொண்டது அந்த கட்சி, இன்னும் சாராய சக்கரவர்த்திகளும் உண்டு. இன்னும் தொட்ட இடமெல்லாம் கொட்டும் வசதி கொண்டது கட்சி.

இவரின் மனசாட்சி (அல்லது டெப்பாசிட் வங்கி) மாறனின் குடும்பம் இன்று ஆசியாவின் குறிபிட்ட பணக்கார குடும்பங்களில் ஒன்று, ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு கோடிகளை ஆயிரகணக்கில் அள்ளிவீசும் குடும்பம் அது.

கலாநிதி மாறனின் மனைவியின் வருமானம் மட்டும் என்ன‌? அது போதாதா நூறு தேர்தல் நடத்த?

ஏதாவது எட்டாம் அதிசயம் நடந்து இனி திமுக ஜெயித்தால் மந்திரி பதவி யாருக்கு செல்லும்? அழகிரிக்கும், கனிமொழிக்கும் மாறன் குடும்பத்தாருக்கும். இவர்களிடம் எல்லாம் கேட்கமாட்டாராம்? அப்பாவி தொண்டர்கள் கொடுக்கவில்லை என இவருக்கு கோபமாம்.

# இவை எல்லாம் இருந்தும் தொண்டர்களின் 22 கோடி நிதி ஒரு மூலைக்கும் காணாதாம். அறிவாலய கருவூல அறை அவ்வளவு பெரிதா?

# உண்மையான திமுக தொண்டன் இருந்தால் அவரின் வசனத்திலே கேட்பான், “ஆள்வதற்கு நீங்களும், மாளுதவற்கு நாங்களுமா?”

# ஏதாவது நாம் சொன்னால் “நான் என்ன மறதிநோயினால் அல்லலுறும் தயாளுவை குணப்படுத்த நன்கொடை கேட்டேனா? திருக்குவளை வீட்டையும் கோபாலபுரம் வீட்டையும் பொதுமக்களுக்கு கொடுத்தவன் நான், தமிழன் வாழ…….” என நீட்டி முழக்குவார். ஒரு மண்ணாங்கட்டி பொருளும் இருக்காது.

# அண்ணா காலத்தில் தன்னோடு தேநீர் அருந்த 10 ரூபாய், கொடியேற்ற 50 ரூபாய் (இவர் சொந்த கட்சியின் கொடி ஏற்ற அடுத்தவன் பணம் கொடுக்க வேண்டும்) வடை சாப்பிட 15 ரூபாய் என அக்காலத்தில் திரட்டி 11 லட்சம் கொடுத்த சாமார்த்தியசாலி கலைஞர், ஆனால் இப்பொழுது டீ கொடுக்க லட்சம் என அறிவித்தாலும் கட்சியினரே ஏதும் கலந்துவிடும் அபாயம் உண்டு.

One thought on “கலைஞர் தொலைக்காட்சி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s