சீமானைப பற்றி ஈழப்பெரியவர்

ஒரு ஈழபெரியவர் சொன்னார், “அய்யா உங்கள் தமிழகத்தில் சீமான் என்பவரின் வீடியோ பார்த்தேன், பகிரங்கமாக பொய்சொல்லிகொண்டிருந்தார், அதாவது ஒரு சிங்களன் சடலத்தை ஒரு புலி உதைத்தாகவும், பிரபாகரன் ஓடிவந்து அவனை அடித்து அந்த சிங்களனுக்கு வீரவணக்கம் சொல்ல சொன்னதாகவும் பொய் சொல்லிகொண்டிருந்தார்

அவர்கள் புலிகள் யாரையும் மதித்தவர்கள் இல்லை, நீங்கள் சொன்னது போலவே இந்திய அமைதிபடை வீரர்கள் உடலை அம்மணமாக்கி அவமரியாதை செய்தவர்கள், அதிலும் கிட்டு என்று ஒருவன் இருந்தான், ஒரு கன்னிவெடியில் சிங்களன் கால் இழக்க, அந்த துண்டிக்கபட்ட காலை யாழ்பாணமெங்கும் கோவில்கள் முன் காட்சிக்கு வைத்தான் அவன், மக்களுக்கு அது பெரும் தவறு என தெரிந்து சொன்னாலும் அவன் கேட்கவில்லை

கோவில் வாசலெல்லாம் வைத்து கண்காட்சி நடத்தினான்.

அடுத்த 6ம் நாள் உட்கட்சி பூசலில் அவன் காலை புலிகளே குண்டுவீசி துண்டித்தனர், அப்படி தெய்வத்திற்கே பொறுக்காத அட்டகாச அவமரியாதைகளை செய்தவர்கள் புலிகள், இந்த சீமான் சொல்வதெல்லாம் படுபயங்கர பொய் அய்யா, புலிகளின் பெரும் பலம் பொய்களை அவிழ்த்துவிடுவது, உங்கள் நாட்டில் சீமானும் அதனைத்தான் செய்கிறார்”

யாழ்பாணத்தில் அந்த நூலகம்

 

35 ஆண்டுகளுக்கு முன்பாக இந்நேரம் யாழ்பாணத்தில் அந்த நூலகம் எரிய ஆரம்பித்தது, தரப்படுத்துதல் எனும் இடஒதுக்கீட்டினை எதிர்த்து ஈழமாணவர்கள் போராடிகொண்டிருந்த நேரம் அது,

தனிஈழம் மட்டுமே தீர்வு என சொல்லி அரசியல்வாதிகளும் தூண்டிவிட்ட காலம் அது, தேர்தல் கால பிரச்சார கூட்டத்தில் சில போலிசார் கொல்லபட அது கலவரமாக வெடித்தது.

ஆசியாவின் குறிப்பிடதக்க நூலகமாக விளங்கிய யாழ்பாண நூலகம், யாழ்பாண தமிழர்களின் அறிவின் அடையாளமாக விளங்கியதால், இந்த கல்விக்காக தானே போராடுகின்றீர்கள் என்றுதான் சிங்களன் அதனை கொளுத்தினான், அது அன்று யாழ்பாண தமிழரின் அறிவிற்கு சான்றாக விளங்கியது.

கிட்டதட்ட 1 லட்சம் நூல்களும், அரிய சுவடிகளும் சாம்பலாயின. அவற்றில் பல நூறு நூல்கள் இன்று உலகிலே இல்லை, இனி கிடைக்கவும் கிடைக்காத பொக்கிஷங்கள்.

Stanley Rajan's photo.

Stanley Rajan's photo.

 

ஆயிரகணக்கான மாணவர்கள் அதன் பின் போராட கிளம்பினர், இந்த சம்பவமும் அதன் பின் நடந்த கொழும்பு கலவரமே எல்லா போராளிகுழுக்களிலும் மக்கள் எழுச்சியுடன் இணைய வழிவகுத்தது.

அதன் பின் அவர்களுக்குள் மோதியதும், புலிகள் ஏதேச்சதிகாரமாக தான் மட்டும் போராட்டத்தை கையிலெடுத்ததும் பின் மொத்தமாக போராட்டத்தை அழித்தது இன்னொருபக்கம்.

1995ல் புலிகளை யாழ்பாணத்திலிருந்து விரட்டிய சந்திரிகா , அந்நாளைய தவறுக்கு பிராயசித்தமாக பின் 2001ல் அந்த நூலகத்தை அமைத்தார். 1985 முதல் 1995 வரை அந்த நூலகம் சிதலமடைந்து புத்தகம் இல்லாமல் புலிகள் கட்டுபாட்டில்தான் இருந்தது,புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்

புலிகளுக்கு நூலகம் எல்லாம் பிடிக்காது, யாழ்பாண கல்லூரியினையே ஆயுத சாலையாக வைத்திருந்தவர்கள் அவர்கள்.

இயேசு, காந்தி, லிங்கன், மார்ட்டில் லுத்தர் கிங் போன்றோரின் படுகொலை வரிசையில் வரலாறு கண்ட பெரும் கொடுமைதான் இந்நூலக எரிப்பு.

உலகில் எந்த நாடும், இம்மாதிரியான சகிக்க முடியாத கொடுமைகளை, இம்மாதிரியான அட்டூழியங்களை கண்டிக்கவில்லை, யாரும் இலங்கையினை சீண்ட கூட இல்லை, இந்தியா மட்டுமே ஈழ மக்களுக்காக‌ களம் இறங்கியது, அவர்கள் வாழ்வில் அமைதி ஏற்பட முடிந்த அளவு போராடி பார்த்தது, தன் 1500 வீரர்களை இழந்தும் பார்த்தது.

ஆனால் விதி இந்தியாவினை வலுகட்டாயமாக புலி வடிவில் வெளியே தள்ளிற்று

அதன் பின் நடந்ததவை எல்லாம் பெரும் அழிவுகள் மட்டுமே, அதில் இறுதியாக நடந்ததுதான் முள்ளிவாய்க்கால்,நிச்சயம் அதன் மூலகாரணம் இந்தியா அல்ல‌

ஒரு நாடும் ஏன் உங்களுக்காக வரவில்லை?

ஏய் இந்திய தமிழர்களே, பார்த்தீர்களா பாகிஸ்தான் உங்களை மிரட்டுகின்றான், எங்கள் தலைவன் பிரபாகரனின் அம்மண சாபம் உங்களை சும்மா விடாது, நாங்கள் போர்சூழலில் பழக்கபட்டவர்கள், நீங்கள் அப்படி அல்ல, யுத்தம் என்றால் சும்மாவா? சாவுங்கள், எல்லோரும் சாவுங்கள் என சாவை தவிர ஒன்றும் தெரியா, பிரபாகரனின் சாவுகுருவிகள் கத்துகின்றன‌

# அட பதரே, 1971ல் பாகிஸ்தானுக்கு பகிரங்க அழைப்பு விடுத்து தென்னிந்தியாவினை தாக்க சொன்னவன் சிங்களன், அதனை தடுக்கும் முகமாகவும், அப்படியே உங்களுக்கு ஒரு பாதுகாப்பு தரவும்தான் எம் தேசம் உள்ளே வந்தது, ஆனால் சகலத்தையும் பகைத்து அழிந்தது நீங்கள்.

# அமைதிபடையோடு நீங்கள் மோதாவிட்டால் இந்த போர்சூழல் உங்களுக்கு ஏது? கிட்டதட்ட 100 வருடம் பின்சென்றுவிட்டு பேச்சு வேறா? ராஸ்கல்ஸ். ரயிலையே 2012ல்தான் கண்டீர்களாம், ஆப்ரிக்காவினை விட பின்னால் சென்றபின்னும் பெருமை வேறு (?), மின்சாரமே பல இடங்களுக்கு இப்பொழுதுதான் வருகின்றதாம், இதில் உங்களுக்கு இவ்வளவு எகத்தாளமா?

# உங்களை காப்போம் என சொல்லிவிட்டு உங்கள் பின்னால் ஒளிந்து உங்களை சாககொடுத்து சரணடைந்து செத்த ஈன் ராணுவம் அல்ல எமது. எல்லையில் நின்று போராடி மக்களை காப்பாற்றுவது.புரிகின்றதா?

# உங்கள் நாட்டின் திரிகோணமலை இன்றும் எமது மறைமுககட்டுபாட்டில் தான் உண்டு, இந்த தெற்காசியாவின் பெரும் வல்லரசு நாங்கள், சீனாவின் பீஜிங் வரை எம்மால் தாக்கமுடியும்.

# அந்த‬ பைத்தியக்கார பாகிஸ்தானுக்கு அவன் அணுகுண்டை தாலிபன் களவெடுப்பானா? அல்லது அல்கைதா கைபற்றுமா என்பதே பெருங்கவலை, 4 முறை அவனை அடித்து விரட்டி எங்களுக்கே போரடித்துவிட்டது, இனி இதில்‬ அவன் சும்மா ஏதாவது சொல்ல உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா?

# 2009ல் நீங்கள் ஏன் அனாதையாக அடிபட்டீர்கள்?, ஒரு நாடும் ஏன் உங்களுக்காக வரவில்லை? இப்படித்தான் உலகில் எல்லா நாடுகளையும் பகைத்தீர்களா?

காங்கிரசை தமிழகத்திலிருந்து அழிப்பேன் – சீமான்

2009ல் அங்கிள் ஒப்பாரி தொடங்கினார், காங்கிரசை தமிழகத்திலிருந்து அழிப்பேன் என்றார்( அது தமிழகத்தில் அழிந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது இவருக்கு தெரியாது), கடும் பிரச்சாரம், தமிழகத்தில் வழக்கம்போல காங்கிரஸ் பல இடங்களில் தோற்றது, இது தன்னால்தான் என சீமான் சொல்லிகொண்டார்.

ஆனால் காங்கிரஸ்தான் மத்தியில் அமர்ந்தது என்பது வேறு விஷயம்.

அதன்பின் 2011 சட்டமன்ற தேர்தலில் மிக கடுமையாக கலைஞரை சாடினார், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார், ஜெயலலிதா முதல்வரார், இது உங்களால்தான் நடந்தது என அடிப்பொடிகள் போதிக்க, அங்கிள் உற்சாகமானார்.

Stanley Rajan's photo.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மிக கடுமையாக காங்கிரசை, கலைஞரை விமர்சித்தார். ஆனால் மோடி பிரதமரானார். தமிழகத்தில் கலைஞரை, காங்கிரஐ விரட்டியது நானே என சொல்லிகொண்டார். அவரின் அடிப்பொடிகளும் நம்பின,

ஆனால் மொத்த இந்தியாவிலும் காங்கிரசை தோற்கடித்தது சீமானா என அவர்கள் யோசிக்கவில்லை, அதற்கெல்லாம் மூளை வேண்டும். சிலர் இன்னும் யோசித்து இலங்கையில் ராஜபக்சேவினை தோற்கடித்ததிலும் அங்கிள் பங்கு இருக்கலாம் என அவரை கொண்டாடினர்.

இந்த இடத்தில் அங்கிளுக்கு யோசனை வந்தது, ஜெயலலிதாவினை முதல்வராக்கியது நான், மோடியினை பிரதமராக்கியதும் நான், மைத்ரிபாலா கூட என்னால்தான் அதிபரனார், இனி நானே நின்றுவெற்றிபெற்றால் என்ன? 2016ல் அங்கிள் களம் கண்டார்.

அதிமுக, திமுக நானே மாற்று என்றார், கம்யூனிஸ்டுகளுக்கு சவால் விட்டார், புலி யாருடனும் கூட்டணி வைக்காது என்றார்? யார் தமிழர்? என உலகிற்கே சொன்னார். மார்க்ஸ்,மாவோ,லெனினுக்கு வராத பொருளாதார சிந்தனைகள் எல்லாம் அங்கிளுக்கு வந்தன, பலர் ஆடுமாடுகளோடு அரசு வேலைக்கு காத்திருந்தனர். சிலர் பனந்தோப்புக்களை கூட வாங்கினார்கள்.

உலகதமிழர்களின் ஒரே நம்பிக்கை நான் என்றார், தமிழ் முதல்வரின் பதவிஏற்பு விழாவிற்காக லண்டனில் மேடை தயாரானது, ஈழம் விடியும் நாள் அறிவிக்கபட்டது, பிரபாகரனால் முடியாததை நான் செய்வேன் என்றார், அங்கிளுக்கு கடும் உற்சாகம்.

தேர்தல் முடிவு வந்தது, ஜெயலலிதா முதல்வர், கலைஞர் வலுவான எதிர்கட்சி என வீற்றிருக்கின்றனர், அங்கிள் கட்சி கணக்கிலே இல்லை.

அதாவது அங்கிளின் காட்டுகத்தலுக்கு எல்லாம் மக்கள் சிரித்திருக்கின்றார்களே ஒழிய, ஒருவரும் இவரை கணக்கில் எடுக்கவே இல்லை. ஆனால் அங்கிளோ ஒவ்வொரு சிரிப்பும் தனது பேச்சின் வெற்றி என நம்பி இருக்கின்றார் அய்யோ பாவம்.

தான் கூவா விட்டால் பொழுது விடியாது என நம்புமாம் சேவல்

அப்படியானால் 2009,2011 ஆட்சிமாற்றத்திற்கு என் பேச்சும், முழக்கமும் காரணமில்லையா? என நம்பமுடியாத சோகத்தோடு அலைகின்றார் அங்கிள். 2021, 2026..என அவர் காலண்டரில் 5 வருடங்களின் வரிசையினை குறித்துகொண்டே இருக்கின்றார்.

முகநூல் அறிவாளிகள்

சில பெரும் அறிவாளிகள் முகநூலெங்கும் பல வேடங்களில் அலைகின்றார்கள், திடீரென வந்து ஆலோசனை சொல்கின்றார்கள் பாருங்கள், அப்படியே தூக்கி வாரி போடும்.

பழிசுமந்தது புலிகள் இயக்கம், அக்கொலை பழியால் அழிந்தது ஈழபோராட்டம்.

ராஜிவ்கொலை வழக்கில் பல சக்திகள் உண்டு, மர்மங்கள் உண்டு என்பது யாருக்கும் தெரியாதது அல்ல, ஆனால் பகிரங்கமாக செய்தது புலிகள் என்பதில் சந்தேகமே இல்லை. விசாரணையும், தமிழகத்தில் தற்கொலை செய்த 24 புலிகளின் மரணமும் அதனைத்தான் சொன்னது

புலிகள் வாய்திறந்து சிலவிஷயங்களை சொல்லி இருந்தால் சில காட்சிகள் மாறி இருக்கும், பேரரிவாளன் நிச்சயம் விடுதலையாகி இருப்பான், பலருக்கு தண்டனையோடு விடுதலை கிடைத்திருக்கும், ஈழபோராட்டம் இப்படி நசுங்கி இருக்காது, சில திருப்பங்கள் நிகழ்ந்திருக்கலாம்.

அதனைத்தான் நாம் குறிப்பிட்டு சொன்னது, ராஜிவ் கொலையில் புலிகளின் கனத்த மவுனமும், பின் துன்பியல் சம்பவம் எனும் பரிகாசமும், அது இந்தியாவிடமிருந்து ஈழமக்களை பிரித்துகொண்டே சென்றதே ஒழிய வேறொன்றும் செய்யவில்லை.

இதில் நமது அறிவாளிகள் என்னிடம் வந்து, உனக்கு தெரிகிறதல்லவா? வா பொதுநல வழக்குபோடு, தூண்டிவிட்ட கொலைகுற்றவாளிகளை விசாரிக்க சொல்லி இந்திய அரசின் கழுத்தை நெறி என்கின்றார்கள்

அறிவு சூரியன்களே, ராஜிவ் கொலை எனும் பழியினை துடைத்து போராட்டத்தை தொடர்ந்திருக்கவேண்டியது நானா? அவர்களா?

கொலைகுற்றவாளி அமைதியாக இருப்பனாம், ஆனால் நான் சென்று நீதிபதியிடம் “இவன் அப்பாவி விட்டுவிடுங்கள், நாம் வேறு வகையில் மூலத்தை கண்டுபிடிக்கலாம்” என சொல்லவேண்டுமாம்.

எம்மீது இதனால்தானே தடை, இதோ உண்மை என சொல்லி இருக்கவேண்டியது நானா? அவர்களா?

இந்தியாவில் நடந்த பத்மநாபா கொலைக்காக எம்மை தண்டிக்காமல் விட்டதற்கு நன்றி என சொல்லவேண்டியது யார்? நானா?

ராஜிவ் கொலை நடந்தபின் 1995ல் சந்திரிகா யாழ்பாணத்தை விட்டு புலிகளை விரட்டி அடித்தபொழுது, இந்தியா துணை சென்று புலிகளை அழிக்கவில்லை அல்லவா? அதற்கு நன்றி சொல்லவேண்டியது நானா? புலிகளா?

வாய் திறந்து பேசவேண்டியவர்கள் மவுனமாக இருந்து, எல்லாவற்றையும் அழித்து செத்தும் போவார்களாம், நான் சென்று இந்திய அரசினை ஏன் ஒழுங்காக விசாரிக்கவில்லை என கேட்கவேண்டுமாம்

என்ன நியாயம் இது? சுய அறிவோடுதான் பேசுகின்றீர்களா?

2 லட்சம் மக்களின் உயிரையும், 10 லட்சம் மக்களுக்கான நாட்டை விடுவிக்கும் பொறுப்பு எனக்கா? அவர்களுக்கா?

ராஜிவ் கொல்லபடும் 10 நாட்களுக்கு முன் அவரை டெல்லியில் சந்தித்து பசப்பு வார்த்தை பேசியவன் கிட்டு, அதன் பின் கொலை நடந்தவுடன் தனக்கு தெரிந்த உளவுதுறை அதிகாரிகளிடம் கொலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றான், பிரபாகரன் தொடக்கத்தில் இதனை சொன்னார்

ஆனால் விசாரணை நடந்து அதன் முடிவு புலிகளை கைகாட்ட, கிட்டுவும் பிரபாகரனும் கனத்த மவுனம் ஏன்?

சரி ஒரு வாதத்திற்கு இந்திய அரசிடம் அப்படி ஒரு கோரிக்கை நான் வைத்தாலும், , அப்படியே சென்று இலங்கை அரசிடம் ஆல்பர்ட் துரையப்பா, பிரேமதசா, நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம் ராஜினி, சபாரத்தினம்………….(கை வலிக்கின்றது) என பெரும் கொலைபட்டியலின் காரணம் யார்? என சிங்கள அரசிடம் கேட்க என்னுடன் வருவீர்களா? தயாரா?

இந்தியாவில் பிரபாகரன்

ஒருவர் வந்தார், புலிகள் எப்படி தெரியுமா? எம்ஜிஆரே அவர்களை ஆதரித்தார், வளர்த்தார். அந்த பொன்மன செம்மலுக்கு தெரியாததெல்லாம் உனக்கு தெரியுமா? எம்ஜிஆர் வாழ்க என சொல்லிவிட்டு ஓடிவிட்டார் சிலர் இப்படியும் கிளம்பி இருக்கின்றார்கள்.

பெரும் கதை இது, சுருக்கமாக எம்ஜிஆர் பக்கம் பற்றி மட்டும் பார்க்கலாம், ஆரம்பத்தில் இருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கினார், அதன் தலையீடு அவருக்கு எரிச்சலை தந்தது, இன்னொன்று யாரையும் நம்பாதவர் அவர், எல்லா குழுக்களும் இந்தியாவில் பயிற்சி பெற அவர் ஒதுங்கிதான் நின்றார், 1980களின் உலக நிலைப்படி நாங்கள் தேவை என்றால் இந்தியா எங்களிடம் வரட்டும், நாங்களாக செல்லமாட்டோம் என்பது அவரின் கொள்கை, அது அநாளைய சூழலில் சரியாக இருந்தது.

Stanley Rajan's photo.

ஆனால் 2009லும் நாங்கள் தேவை என்றால் இந்தியா எங்களிடம் தானாக வரட்டும் என்ற அவரின் பிடிவாதாம் நகைக்குப்குரியது, சரி நாம் 1983 க்கு வருவோம்.

பிரபாகரன் வர மறுத்தபொழுதுதான், அப்பொழுதுதான் இந்திரா ஆட்சியில் எம்ஜிஆர் பிரபாகரனை அழைத்து உறுதிமொழி கொடுத்தார், புலிகளும் பயிற்சிக்கு வந்தனர்.

எம்ஜிஆர் பணம் கொடுத்தார் உண்மை, ஆனால் மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில அரசு 5 பைசா அடுத்தநாட்டு தீவிரவாத இயக்கத்திற்கு கொடுக்கமுடியுமா? அப்படியானால் காஷ்மீர் அரசு பாலஸ்தீனத்திற்கு வழங்காதா? பீகார் அரசு நேபாளிய இயக்கங்களுக்கு வழங்காதா?, இதனை எல்லாம் இவர்கள் சிந்திக்கமாட்டார்கள்.

இப்படி இந்தியாவின் கட்டுபாட்டில் பிரபாகரனை கொண்டுவர இயக்கபட்டவர்தான் எம்ஜிஆர், அது பின்னாளில் விளங்கிற்று. அப்படி சென்னை பாண்டிபஜாரில் பிரபாகரன் கைது செய்யபட்டபொழுது இந்திராதான் எம்ஜிஆர் மூலம் பிரபாகரனை காத்தார்,

இந்திரா சென்றவுடன் காட்சி மாறிற்று, ஈழம் அமைக்க இந்தியாவிற்கு ஒரு நொடி ஆகியிருக்காது, ஆனால் ஆள்வது யார்? அங்கே சும்மாவே 30 போராளிகுழு, அப்படி ஈழம் அன்று அமைந்திருந்தாலும் அது இன்றைய ஆப்கன் நிலைக்கு சென்றிருக்கும், இந்திரா இதனைத்தான் யோசித்தார்.

அப்படியே அவர் காலம் முடிய, ராஜிவ் ஆட்சிக்கு வந்தார். காட்சி மாறிற்று.

சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்த்தனே வந்தபொழுது, மத்திய அரசு உத்தரவுபடி சென்னையில் இருந்த பிரபாகரனின் ஆயுதம் களைந்து அவரை வீட்டுகாவலில் வைத்தார் எம்ஜிஆர், ஆயுதம் இல்லாமல் ஒருநொடி இருக்கவிரும்பாத பிரபாகரன் அன்றே சந்தேகபட்டார், உண்ணாவிரதம் எல்லாம் இருந்தார்.

அதன் பின் மதுரையிலிருந்து சொல்லிக்காமல் ஈழம் ஓடிய பிரபாகரன் அதன்பின் தமிழகம் வர மிகவும் யோசித்தார், ராஜிவினை சந்திக்கும்பொழுது மட்டும் வந்தார், அதுவும் எம்ஜிஆர் மீது திருப்தி இல்லாமல்தான் டெல்லி சென்றார்.

 

டெல்லி அசோகோ ஹோட்டல் விவகாரத்தில் பிரபாகரன் கோபபட்டு எம்ஜிஆரிடம் உதவி கேட்க, எம்ஜிஆரின் நிலை இந்த விவகாரத்தில் என்னை விட்டுவிடுங்கள் என்றே இருந்தது.

அமைதிபடையுடன் முறுகல் ஏற்பட்ட காலத்தில், ராஜிவிற்கு புலிகள் கடிதம் எழுதிய காலத்தில், மத்தியஸ்தம் செய்ய எம்ஜிஆருக்கு விடபட்ட கோரிக்கைகளையும், அவர் ஒதுங்கிய விஷயம் பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள்.

அமைதிபடை காலத்தில் எம்ஜிஆர் ராஜிவுடனான உறவைத்தான் விரும்பினார், புலிகள் அங்கே மோதிகொண்டிருக்கும் பொழுது இவர் ராஜிவுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். ராஜினாமா, எதிர்ப்பு, ஈழதமிழர் நலம் என அவர் பொங்கவுமில்லை, அவரை “துரோகி” , “இனபடுகொலைக்கு துணைபோன கயவன்”என ஒருவரும் சொல்லவுமில்லை.

இப்படித்தான் எம்ஜிஆரின் புலிகள் ஆதரவு இந்திய அரசின் எல்லைக்குள்தான் இருந்தது, மத்திய அரசினை மீறி அவர் ஒரு துரும்பினை கூட மிஞ்சியதில்லை, அதுவும் 1991க்கு மேலும் அவர் உயிரோடு இருந்திருந்தால் காட்சிகள் கடுமையாக மாறி இருக்கும்

ஆக ஈழ பிரச்சினையில் எம்ஜிஆரின் நிலைப்பாட்டை விட, டெசோ என அகில இந்திய அளவில் கலைஞர் எடுத்த நிலைப்பாடு பெரும் ராஜதந்திரமிக்கது, பாராட்டதக்கது, அது புலிகளை விட ஈழமக்களின் நலனையே காத்து நின்றது,

அந்த சபாரத்தினம் படுகொலையோடு அதுவும் போயிற்று, எம்ஜிஆர் அதனை பற்றி கண்டிக்கவே இல்லை என்பதும் வினோதம், அதாவது ஈழவிவாகரத்தில் அவருக்கு டெல்லியால் கொடுக்கபட்ட அசைன்மெண்ட் புலிகளை கவனித்துகொள்வது, அதனை மட்டும் சரியாக செய்தவர் எம்ஜிஆர்,

ஈழத்தில் மக்களிடம் புலிகளின் பிரச்சார பிம்பத்தில் அவர் பெரிய ஈழபோராளியாக காட்டபட்டார், அவ்வளவுதான் விஷயம்.

அதன்பின் தமிழகத்தில் எம்ஜிஆர் ஆதரித்த இயக்கம் நாங்கள் என புலிகள் அனுதாபம் தேட, ஒரு ஆதரவு எழும்ப‌, அதனை எம்ஜிஆர் காலத்திற்கு பின், திமுக வோட்டாக மாற்றி தருகிறேன் என கிளம்பி, இன்று அரசியல் பிளாட்பாரத்தில் பாய்விரித்து படுத்திருப்பவர் வைகோ.

மொத்தத்தில் மத்திய அரசிற்காக தலையிட்டு, அது ஒதுங்க சொன்னவுடன் ஒதுங்கியவர்தான் எம்ஜிஆர், அவரின் செயல்பாடுகள் அதனைத்தான் சொன்னது,

ஆனால் இதனை சொன்னால் நானும் துரோகி, கலைஞர் ஆதரவாளன், திராவிட வெறியன், வடுக வந்தேறி.

பெரும் எழுச்சி நிச்சயம்வெற்றியாக முடிந்திருக்கும்

டேய் விவரமில்லா பதரே, இந்திய அரசின் கை கூலியே, இன உணர்வு இல்லாதவனே, ராஜிவ் கொலை நடந்த இடத்தில் சிங்களன் ஜெயவர்த்தனேவின் உறவினரும் இருந்தார்களாம், அது சிங்களன் தொடர்பும் உண்டு, புலிகள் நல்லவர்கள், அவர்கள் தியாகிகள்,போராளிகள் என ஒருவர் அட்டகாசம் செய்கின்றார்.

டேய் அறிவு சுடரே சிங்களன் அப்படித்தான், தான் செய்ய நினைத்ததை எல்லாம் புலிகள் மூலம் தந்திரமாக செய்தான். ஈழமக்களின் பெரும் எழுச்சி நிச்சயம்வெற்றியாக முடிந்திருக்கும்,

ஆனால் சிங்களனுக்கு மற்ற போராளிகளை ஒழிக்கும் வேலையினை மிச்சமாக்கி ஒரு பெரும் போராட்ட பின்னடைவினை புலிகள்தான் செய்து கொடுத்தனர் எல்லா குழுக்களையும் அழித்து சிங்களனுக்கு முதலில் உதவினர்.

ஈழவிவகாரங்களில் இந்தியா தலையிடுவதை சிங்களம் கடுமையான அவமானமாக கருதிற்று, அதனால்தான் ராஜிவினை அடித்து கொல்லவும் அது துணிந்தது, ராஜிவ் இருந்தால் நிச்சயம் தலையிட்டு ஈழமக்களுக்காக சிங்களனை எதிர்ப்பார் என்பது அதன் கணக்கு

கொழும்பில் பின்மண்டையில் அடித்து கொல்ல ராஜிவினை கொல்ல சிங்களம் நினைத்திருக்கலாம், அவர் தப்பினார். அதன்பின் அமைதிபடை எனும் இலங்கை ஆபத்தினை, புலிகளை வைத்தே விரட்டினான் சிங்களன், இது புலிகள் செய்த இரண்டாம் உதவி

அடுத்து இனி பதவிக்கு வந்தால் இலங்கையில் தலையிடுவாரோ ராஜிவ் என சிங்களம் அச்சப்பட்ட சமயத்தில் தான் , சிங்களன் மண்டையில் அடித்தும் தப்பிய அவரை கொன்று சிங்களனை மகிழ்ச்சியில் திளைக்கவிட்டனர் புலிகள்.

ஆக புலிகளுக்கும் சிங்களனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே இருந்த புரிதல் அப்படி. புலிகளின் எல்லா நடவடிக்கைகளும் இன்னொரு நாடு ஈழபிரச்சினையில் தலையிடுவதை தடுக்கும் வகையில்தான் இருக்கும், கூர்ந்து கவனித்தால் தெரியும், இது நிச்சயம் சிங்களனுக்கு பெரும் லாபம்.

சுருக்கமாக சொன்னால் பெரும் மக்கள் எழுச்சியினை தன்பக்கம் திருப்பி, தான் சொன்னதை எல்லாம் மக்களை செய்யவைத்து, அதனை சிங்களனுக்கு சாதகமாக்கி இன்று ஈழமக்களுக்கு பெரும் துரோகம் செய்தது புலிகள் மட்டுமே

சிங்களன் செய்யவேண்டியதை எல்லாம் செய்து, இந்தியாவிற்கும் ஈழமக்களுக்கும் பெரும் பகையினை உண்டாக்கியதும் புலிகளே, தந்திரமான சிங்களம் புலிகள் கையாலே எல்லாம் செய்துவிட்டு பின் புலிகளையும் அழித்துவிட்டது, எப்படிபட்ட தந்திரோபாயம் இது? புலிகளுக்கு கொஞ்சமேனும் அறிவிருந்தால் இப்படி சிங்கள வலையில் விழுவார்களா?

எந்தநாட்டு மக்கள் இப்படி சாவர்கள்? அவர்கள் செத்தார்கள், சாக தயாரானர்கள், உலகம் அவர்களை பரிதாபமாக பார்த்தது, ஒரு அனுதாபமும் வந்தது. ஆனால் அதனை நல்ல வழியில் வென்றெடுக்க முடியாத தலமையாக புலிகள்தான் இருந்தனர், எல்லாம் வீண் ஆனது.

என்னிடம் கேள்வி கேட்ட அந்த அறிவுசுடருக்கு விளங்கவேண்டியது அதுதான். இன்று ராஜிவ் கொலைபழி புலிகள் மீதுமட்டும்தான் உண்டு, அந்த சிங்கள தொடர்பு பற்றி சொல்லி இருக்கவேண்டியது நீங்கள் அல்ல அறிவே, பிரபாகரன், அவர்தான் சொல்லி இருக்கவேண்டும்

மாண்ட கடாபி மீண்டார்

கடாபி 2009ல் மிக கடுமையான யுத்தத்தில் செத்துவிட்டதாக அறிவித்து வீரவணக்கம் செலுத்தினர் புலிகள், ஆனால் அதே கடாபிதான் கடந்தவாரம் கொழும்பில் கைது செய்யபட்டிருக்கின்றார், எப்படி? கொஞ்சம் ஆழநோக்கினால் தலை சுற்றுகின்றது.

13301289_1642552109402487_4311719005340924149_o

அதாவது 2009ல் கடைசிமுயற்சியாக ஆனந்தபுரம் எனும் இடத்தில் மோதியபுலிகளுக்கு ஒன்றும் வெற்றியில்லை, அவ்வளவுதான் இவர்கள் கடாபி உட்பட‌ எல்லோரும் பலியானார்கள் என பிரபாகரன், பொட்டு அம்மான் இல்லாத‌ பெரிய பட்டியலை வாசித்துவிட்டு சிங்களனிடம் சரணடைய கிளம்பிவிட்டார்கள்,

சரணடைய வருவோர் என புலிகள் அனுப்பிய பட்டியலை ஐ.நாவே வெளியிட்டிருக்கின்றது

அப்படி சயனைடு கடிக்காமல், தற்கொலை வெடிக்காமல் கிளம்பி சென்றிருக்கின்றார்கள், மேல்மட்ட புலிகள் எல்லாம் அப்படி சரணடைந்திருக்கின்றன, இதில் குறிப்பிட்டவர்களை செய்ய வேண்டியதை செய்துவிட்டு மற்றவர்களுக்கு புணர்வாழ்வு அளித்து விடுதலை செய்திருக்கின்றது சிங்களம்.

புலிகள் இயக்கத்தவருக்கு ஒரு நாளைக்கு ஒரு பெயர் வைக்கபடும், அப்படி ஆதவன் என்ற அய்யாதுரை மோகன் தாஸ் என இயற்பெயர் கொண்ட கடாபியும் கைது செய்யபட்டு விடுவிக்கபட்டிருக்கின்றார், காரணம் இவர் புலிகளில் அவ்வளவு பிரபலமில்லை, புலிகள் அழிந்ததால் ராணுவமும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை

இந்த கடாபிதான் குறி தவறாமல் “டப் டப்” என்று சுட்டவர், கைதுப்பாக்கியால் விமானத்தை சுட்டவர், என்னை பாராட்டி தழுவியவர் என அங்கிள் சைமனால் தமிழகம் எங்கும் சொல்லபட்டவர். பெரும் வீரர், துப்பாக்கி இவரை கண்டால் தானாக சுட்டுகொள்ளும் என்றெல்லாம் கதை கட்டபட்டவர்.

அவர்தான் கொழும்பு விமான நிலையத்தில் இந்தியாவிற்கு தப்பும்பொழுது பிடிபட்டிருக்கின்றார், இவர் இந்தியா சென்றால் யாருக்கு நஷ்டம் என தெரியவில்லை, பிடித்துகொடுத்துவிட்டார்கள். இப்பொழுது சிக்கல் என்னவென்றால் அன்னார் பிடிபட்ட விஷயம் புலி அபிமானிகளிடம் பெரும் அதிர்ச்சி உண்டாக்கி இருக்கின்றது

இந்த உயிரோடு உள்ள கடாபிக்குத்தான் கடந்த 6 வருடமாக மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றது சீமான் கோஷ்டி. ஹிஹீஹிஹ்

அவ்வளவுதான் ஆரம்பித்துவிட்டார்கள், இவந்தான் தலைவரை காட்டி கொடுத்திருப்பான்,துரோகி, ஈனபிறவி என்றெல்லாம் அர்ச்சனை தொடங்கிவிட்டது, அதாவது இவர் பிரபாகரனோடு சரணடைய சென்றவர் என்பதால், எப்படியும் பிரபாகரனின் இமேஜுக்கு கடும் அடி விழும்.

மொத்தத்தில் அப்பாவி புலிகள் சாக பெரும் மட்டபுலிகள் ராணுவத்திடம் சரண்டைந்திருக்கின்றன, அவன் மண்டையிலே போட்டு கொன்றிருக்கின்றான், சில தப்பி இருக்கின்றன அதிலொன்று ஆதவன் என்ற இந்த கடாபி. இதுதான் புலிகளின் மண்டியிடாத மானம், விழுந்துவிடாத வீரம். புலிகளின் இந்த ஏமாற்றுவேலை பற்றி உலகமே காரி துப்புகின்றது. மற்றவர்கள் என்றால் சாக வேண்டும், மூத்த புலி எல்லாம் வாழவேண்டும். இது புலிகொள்கை, கேட்டால் போராட்டம் என்பார்கள்.

எப்படி சிங்களன் உயிரோடு விடுவான் என நம்பினார்கள் என தெரியவில்லை, சென்றார்கள். சிக்கினார்கள்

சரி இந்தியா வருவதற்கு இந்த ஆதவன் என்ற கடாபி ஏன் திட்டமிட்டார், இந்திய தமிழகத்தில் அவரின் வீரதீரங்களை தமிழகத்து மூலை முடுக்கெல்லாம் முழங்கியவர் அங்கிள் சைமன், ஒரு வேளை அவரை பார்க்க வந்திருப்பாரோ?, ஆச்சரியமாக சைமன் கடாபி பற்றி புகழ்ந்த வீடியோக்களை எல்லாம் காணாவில்லை, இனி பாருங்கள், அங்கிள் கூட கடாபியினை துரோகி என்பார்.

ஜெயலலிதாவினை அங்கிள் அவசரமாக வாழ்த்தியதில்ம் மர்மம் இருக்கலாம் 🙂

கடந்த உலகளாவிய போட்டியில் சரண்டைந்த சில புலிகளை (புலிகளின் செய்திகளை நம்பி) துப்பாக்கி சுடும் போட்டிக்காக சிங்களம் வெளிநாட்டிற்கு இலங்கை சார்பில் அனுப்பியது, அதன்பின்புதான் தெரிந்தது புலிகளின் பயிற்சி இவ்வளவுதானா? என்று. அதன் பின் சிங்களம் அந்த முன்னாள் போராளிகளை துப்பாக்கி துடைக்கமட்டும் பணி அமர்த்தியது ,

இந்த ஆதவன் மட்டும் அன்றே சிக்கி இருந்தால் அவரையும் எங்காவது போட்டிக்கு அனுப்பி, அவர் சொதப்புவதை சீமானுக்கு வீடியோ அனுப்பி இருப்பார்கள். எல்லாம் சும்மா அளவிற்கு மீறிய கட்டுகதைகள்.

இனி இவர் கெஞ்சினாலும் சீமான் போன்ற ஐரோப்பிய‌ புலிகள், நாகேஷ் ஸ்டைலில் சொல்வார்கள், “நீ செத்துவிட்டதாக அஞ்சலி எல்லாம் செலுத்தி சங்கத்திலிருந்து நீக்கிவிட்டோம், இனி சேர்க்கமுடியாது , அதனால் நீ செத்து போ”

ஆக செத்த புலிகள் எல்லாம் வருகின்றன, இவர்கள் இனி “ஆவி வணக்கம்” செய்வார்கள், செய்யட்டும். ஒருவேளை பிரபாகரனோ அல்லது பொட்டுவோ சரணடைந்து சிங்கள ரகசிய சிறையில் உயிரோடு இருந்தால் இப்படித்தான் சொல்லிகொண்டிருப்பார்.

“ஒற்றே ஒரு முறை, என்னை வெளிக்கால விடுங்கோ, யுவன் சைமன்னு ஒருத்தன் தமிழ்நாட்டில திரியுரான். அவன மட்டும் மண்டையில போட்டுட்டு வந்துரவன், என்ன நம்புங்கோவன், அவனால என்னட பேரும், இயக்க பேரும் மோசமா சீரழியுது..”

இது நம்ம ஆளு

டி.ராஜேந்தரின் குடும்ப படமான “இது நம்ம ஆளு” என்றொரு படம் வந்திருக்கின்றது, “பீப்” பாடலுக்கு அடுத்து வந்திருக்கும் படமென்பதால் சிம்பு நிறைய அடக்கி நடித்திருக்கலாம், ஆனாலும் ஆங்காங்கே பலபேரை சீண்டுகிறார், சில இடங்களில் தன்னைதானே விமர்சிக்கின்றார், தமிழ் திரையுலகம் உள்ள காலம் வரை அவர் திருந்தமாட்டார்.

Stanley Rajan's photo.அதிலும் பல காதல்களை கண்ட சிம்புவும், ஏராளமான காதல்களை உசேன் போல்ட் வேகத்தில் அசால்ட்டாக தாண்டிவந்த நயனும் இந்த கதையில் கடந்த கால காதல்கதைகளை பற்றி பேசும்பொழுது எரிச்சல்தான் வருகின்றது, இவர்களை பற்றி யாருக்கு தெரியாது?,

பாரதிராஜா படங்களில் வரும் ராஜா போல எல்லா படங்களிலும் அதே ஒரு தலை அல்லது அறுந்த தலை பாத்திரம் ஆண்டிரியாவிற்கு, பல படங்களில் வந்த அதே ரோல், ஆனாலும் கவுவர வேடம் ஜெய்க்கு பதிலாக அனிருத் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். 🙂

நாயகி நயனுக்கும் பட குழுவினருக்கும் பல இடங்களில் சம்பள மோதல், இன்னபிற சிம்பு மோதல் நடந்திருக்கலாம் என்பதை படம் சொல்லுகின்றது, அதனால் நயன் நாயகனுடன் படம் முழுக்க போனில் பேசும்படியே காட்சி அமைத்திருக்கின்றார் இயக்குனர், அவரின் Risk Management யுக்தியினை நிச்சயம் பாராட்டலாம், படம் தொடங்கபட்ட பின் எப்படிபட்ட ரிஸ்க், எப்படிபட்ட சமாளிப்பு..🙂

ஆனால் நம்மால் தாங்க முடியவில்லை, படம் பார்த்தபின் நமது போனில் மீதே வெறுப்பு வருகின்றது.

மற்றபடி “பார்த்தீர்களா இவ்வளவு நாள் தொடர்ந்து பேசியும் பில் குறைவாகத்தான் வந்திருக்கின்றது..” என பிரபல செல்போன் கம்பெனியும், “சார்ஜ் போடாமலே எங்கள் போனில் 6 மாதம் பேசமுடியும் ..”என கொரியன் கம்பெனியும் விளம்பரம் செய்து முடித்திருக்க‌ வேண்டிய படம் இது.

மே 18 லண்டனில்

ஐரோப்பிய ஈழ அமைப்புகளிடையே கடந்த 18ம் தேதி லண்டனில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது, பெரும் குழப்பமும் அவமானமும் நிறைந்த இந்த சம்பவம் புலி ஆதரவாளர்களால் திட்டமிட்டு மறைக்கபட்டுள்ளது : பரபரப்பு செய்தி

# இதெல்லாம் விஷயமா? வைகோவின் ஈழ சுருதி குறைய ஆரம்பித்து, சீமானின் தொண்டை உச்சத்திற்க்கு செல்லும் போதே எமக்கெல்லாம் விளங்கிற்று, நெடுமாறன் சீமான் உறவு முறிவும், இன்னும் பல விஷயங்களும் அப்பொழுதே சண்டையினை அறிகுறிகளாய் சொன்னது,

# அதாவது பல ஐரோப்பிய புலி ஆதரவு ஈழகுழுக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒருவரை தமிழகத்தில் இயக்குகின்றன, எந்தநபர் அதிகம் கத்துகின்றாரோ அவருக்கு வருமானம் அதிகம், யார் சத்தமில்லையோ அவருக்கு குழுக்கள் ஒன்றும் அனுப்பவில்லை என அறிக.

# அங்கிளின் கடும் தோல்வியினை தொடர்ந்து இனி அங்கிளை லண்டனுக்கு அழைத்து அவர்கள் போட்டு சாத்தலாம், அங்கிள் லேசுபட்டவரா? ஏதாவது பிரபாகரன் படத்தோடு போராட்டம் செய்து ஜெயிலில் சென்று பிரியாணி சமைக்க ஆரம்பித்துவிடுவார், இதனால் லண்டனுக்கு செல்ல முடியாது என காரணமும் அழகாக சொல்லிவிடுவார்.