இணையதள கொடூரமும், ஊடக தர்மமும்

ஒரு பெண்ணின் படத்தினை மார்பிங் செய்து உலவ விட்டிருக்கின்றான் ஒருவன்.

அப்பெண்ணின் குடும்பமோ கதறிகொண்டு காவல்நிலையம் சென்றிருக்கின்றது, அங்கோ சிலர் லஞ்சம் பெற்றுகொண்டு , சர்வர் அண்டார்டிக்கா அருகே இருக்கின்றது, படம் அழிப்பதற்கு நெடுநாள் ஆகும் என்றிருக்கின்றார்கள்.

FB_IMG_1467283800540

அவர்கள் தொழில்நுட்ப அறிவு அவ்வளவுதான்.

மகா அச்சமுற்ற அந்த அபலைபெண் தூக்கில் தொங்கி இறந்திருக்கின்றாள், விஷயம் பெரிதாக எஸ்பி மன்னிப்பு கேட்டு , சம்பந்தபட்ட காவலரை சஸ்பெண்ட் செய்துவிட்டாராம்.

2 நாளில் அப்படம் அகற்றபட்டது, விவகாரம் மூடிமறைக்கபட்டுகொண்டிருக்கின்றது, இன்னும் உருப்படியான குரல் எழவில்லை, முதல்வர் வாய் திறந்ததாக தெரியவில்லை.

இவ்வளவிற்கும் அவர் கையிலிருக்கும் துறையின் பெரும் தவறு இது, ஆனாலும் மவுனம் ஏன்?

காரணம் அவளுக்கு யாருமில்லை, வறுமையான குடும்பம், படிப்பறிவில்லா பெற்றோர், கேட்க யாருமில்லா பின்புலம்.

அவர்கள் பெற்றோரின் இந்த பெரும் கொடுமையான துயரத்திற்கு யார் காரணம்? இவர் பெற்றோரை யாரும் சென்று பார்க்கவுமில்லை, அவர்களுக்கு ஆதரவு சொல்லவுமில்லை,

காரணம் இவர்கள் ஏழைகள்.

காவல்துறை மின்னல்வேக நடவடிக்கை எடுத்திருந்தால் இக்குடும்பம் இப்படி சிதறாது

இதில் மகா கொடுமை என்னவென்றால் குற்றவாளி அப்பெண்ணின் போட்டோவினை மார்பிங் செய்து போனில் பரப்பி இருக்கின்றான்,

புகார் செய்த பெற்றோரிடம் காவலர் கேட்டது லஞ்சமாக ஒரு போன். செய்திகள் அப்படித்தான் சொல்கின்றன. எப்படிபட்ட கொடூரம் இது.

இறுதியாக குற்றவாளி சிக்கிவிட்டான், படம் அகற்றபட்டுவிட்டது, ஆனால் அந்த அபலைபெண் உலகில் இல்லை. குற்றவாளி முகத்தை மூடி கொண்டு செல்லபடுகின்றான் (அந்த சவமுகத்தை காட்டினால்தான் என்ன?), லஞ்சம் வாங்கிய காவலர் முகத்தையே காணவில்லை,

ஊடக தர்மம்.

ஸ்வாதிக்காக பொங்கும் மீடியாக்கள் இப்பெண்ணை கண்டுகொள்ளவே இல்லை, ஆனால் இருவரும் இளம்பெண்கள், வாழவேண்டிய பெண்கள். வினுப்பிரியாவின் சாவு தடுத்திருக்ககூடியது

இம்மாதிரியான மகளிர் மீதான சைபர் குற்றங்களுக்கு தனி பிரிவு மாவட்டம்தோறும் அமைக்கபடவேண்டும் என்பதை உணர்த்தும் கொடூரம் இது

என்ன செய்வது இந்த திருநாட்டில் யாராவது செத்துதானே அடுத்தவர் சாகாமல் காப்பாற்ற வேண்டும், இந்நாட்டின் தலைவிதி அது.

மகள்களை இழந்த தந்தைகளுக்குத்தான் தெரியும் அந்த வலி,

ஆறாத பெரும் வலி, மரணம் வரை நொடிக்கு நொடி கொன்றுகொண்டே இருக்கும் வலி.

பெலாரஸ் : நாடும் மக்களும்

பெலாரஸ் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நிலை அப்படித்தான் இருக்கின்றது,

மக்கள் கவுரமான வேலைகளை நாடாமல் வியர்வை சிந்தும் வேலைகளையும் செய்யவேண்டும் என பொருள்படும் வகையில், அதாவது கோர்ட் சூட்டுகளை களைந்து கடும் உழைப்பு கோரும் விவசாயம் போன்ற‌ வேலைகளுக்கும் செல்லவேண்டும் என்ற வகையில் கோரிக்கை வைத்தார் அதிபர்.

FB_IMG_1467284714432

வியர்வையால் நனையட்டும் உங்கள் ஆடை, அதனை கழற்றி வைக்கும் அழவிற்கு வியர்வை சிந்த நீங்கள் உழைக்க வேண்டும் என ஏதோ சொல்லிவிட்டார்

அவ்வளவுதான், உத்தரவு எஜமான் என சொல்லிவிட்டு ஆடைகளை துறந்துவிட்டு அலுவகங்களில் வேலை பார்த்து அதிபர் முகத்தில் கரி பூசுகின்றார்கள் பெலாரஸ் மக்கள். அதிபரை கேவலபடுத்துகின்றார்களாம், அதிபர் வெளியில் தலை காட்டமுடியாமல் தவிக்கின்றார்.

அவர்கள் சும்மா இருந்தாலும் பரவாயில்லை, தங்கள் போராட்டத்தை இலை மறை கோலமாக இணையமெங்கும் பரவவிட்டிருக்கின்றராம், சில நாடுகளில் பெலாரஸ் நாட்டு தூதரகம் சாத்தபடும் நிலையாம், விவரம் தெரிந்தவர்கள் உங்கள் நாட்டு பணியாளர்கள் எல்லாம் ஆடையின்றி பணி செய்கின்றார்களாம், நீங்கள் அந்த நாடு இல்லையா என கேட்டால் என்ன செய்ய?

பெலாரஸ் நாடு அப்பாடு படுகின்றது

இந்திய திரு நாட்டில் இதெல்லாம் அறவே சாத்தியமில்லை (நாம் வாங்கிய வரம் அப்படி :), இதற்குத்தான் ஐரோப்பா செல்ல்வேண்டும் என்பது )எனினும், ஒருவேளை அந்த மாநிலத்தில் அவர்கள் தலைவர் இப்படி ஒரு அறிக்கை விட்டிருந்தால் நிலமை எப்படி இருந்திருக்கும்?

கட்சியினர் உடனே என்ன செய்வார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை, அது கர்ணன் போல உடலோடு ஒட்டிய கவசமானாலும் கிழித்து எடுத்துவிடுவார்கள்

ஆனால் தலமை சொல்லுக்கு கட்டுபட்டு செய்த மகிழ்ச்சியில் திளைப்பார்கள், கூடவே சன்னி லியோனையும் கட்சியில் சேர்த்தால் ஏக விளம்பரம்.

மாட்டு மூத்திரத்தில் தங்கம் உள்ளது

மாட்டு மூத்திரத்தில் தங்கம் உள்ளது – குஜராத் விஞ்ஞானிகள் ஆராய்சி முடிவு

அவனவன் பசிபிக் கடல் அடியில் என்ன இருக்கின்றது, செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கின்றது என ஆராய்ந்து அதற்கும் மேல் பால்வெளி, அண்டவெளிக்கு அப்பால் என்ன இருக்கின்றது என மிக கடுமையாக ஆராய்ச்சி செய்கிறான்

கடும் நோய்களுக்கு என்ன மருந்து என மருத்துவ உலகம் கடும் ஆராய்சியில் இறங்கி இருக்கின்றது, மின்சாரத்தை சேர்த்துவைத்து நெடுநாள் பயன்படுத்தமுடியுமா என ஒரு குழு அலையாய் அலைகின்றது.

அணுவுலை வெடித்தால் கட்டுபடுத்துவது, அணுகுண்டு வெடித்தால் கட்டுபடுத்துவது, அணு கழிவுகளை நீர்க்கசெய்வது என உலகம் செய்யும் ஆராய்சி கணக்கற்றது

உலகம் இப்படி எல்லாம் ஆராய, குஜராத் விஞ்ஞானிகள் மோடியின் பொற்கால ஆட்சியில் என்ன ஆராய்ந்திருக்கின்றார்கள் பார்த்தீர்களா? இனி விரைவில் யானை சிறுநீரில் வைரமும், சிங்கத்தின் சிறுநீரில் மாணிக்கமும் எடுப்பார்கள், பாம்புக்கு சிறுநீர் உண்டா இல்லையா தெரியாது, இருந்தால் நாகரத்தினம் எடுப்பார்கள்

இந்த ஆராய்சியினை மிருகங்களோடு நிறுத்திகொள்ளுங்கள், இன்னும் என்னென்ன ஆராய்சி செய்யபோகின்றார்களோ??

(இனி ஒருவன் சொல்வான் பாருங்கள், இவ்வளவு நாளும் காங்கிரஸ் ஆட்சியில் கோடிகணக்கான தங்கம் வீணாடிக்கபட்டிருக்கின்றது, நேருதான் காரணம். இந்திய தங்கத்தை மீட்ட மோடி வாழ்க..)

மிஸ்டர் மகேந்திரன்

காஞ்சிகோயிலில் கொல்லபட்ட சங்கராமனும் பிராமணன் தான், திருச்செந்தூர் கோயில் வைரவேல் சர்ச்சையில் மர்மமாக உயிரழிந்த‌ சுப்பிரமணிய பிள்ளையும் உயர்சாதிதான்

அட அவ்வளவு ஏன்? காந்தி கொலையாளி என்ன தாழ்த்தபட்டவானா? அல்லது இஸ்லாமியனா? திராவிடனா?

இப்படி உயர்சாதியினர் கொல்லட்டபோது , பிராமணர்களால் கொல்லபட்டபோதும் கூட அமைதியாக இருப்பீர்கள்,

சங்கராச்சாரியிடம் சென்று ஆசியெல்லாம் வேறு வாங்குவீர்கள்? ஏன் அவர் சாமி அல்லவா? யாரையும் கொல்லலாம்.

தேசபிதா கொலைவழக்கில் சிக்கியவருக்கு நாடாளுமன்றத்தில் படம் திறந்தாலும் அமைதியாக இருப்பீர்கள், காரணம் மதம் மற்றும் சாதி.

ஆனால் இன்னும் விடை தெரியாத வழக்கினில் முந்திகொண்டு திராவிட பொறுக்கி, தலித் இயக்கம், காம்ரேட்டு கயவர் என பொங்குவீர்களா?

செத்தவனில் சாதி பார்ப்பது யார் மிஸ்டர் மகேந்திரன்?

FB_IMG_1467269888722

குற்றவாளிகளை தேடிக் கொண்டே இருக்கிறது…

ஸ்வாதி கொலவழக்கில் குற்றவாளிகளை காவல் துறை தேடுகின்றது

# ராமஜெயம் வழக்கு குற்றவாளிகளை சில ஆண்டுகளாக தேடுகின்றது, அதில் மாநில காவல்துறையின் சுயகவுரமே அடங்கி இருப்பதால் வழக்கு இன்னும் வேறுதுறைக்கு மாற்றபடவில்லை.

# இந்த நூற்றாண்டில் தமிழக காவல்துறைக்கு விடபட்ட பெரும் சவால் அது, ராமஜெயம் தன்னைதானே கைகளை கட்டி, வாயினை கட்டி செத்துகொண்டாரா எனும் அளவிற்கு செட் செய்யபட்ட கொலை அது,

# தா.கிருட்டினனின் கொலை வழக்கு என்ன ஆனது? அருவாளோடு வாக்கிங் சென்ற அவர், தடுக்கி விழுந்து அரிவாளில் விழுந்து செத்தார் எனும் அளவிற்கு ஆனது நிலை.

# ஆனால் கொலையாளிகளை விசாரிப்பவர்கள் மனிதர்கள், மறைத்துவிடலாம், தெய்வம் நின்று சொல்லும் அல்லவா? தப்பவே முடியாது, இந்த வழக்குகளில் தப்பித்தாலும் இன்னொரு வழக்கில் சிக்கும் பொழுது எல்லா உண்மைகளும் வெளிவரும்

# ஏராளமான மர்ம வழக்கு மர்மங்கள் இப்படித்தான் விளங்கின, தமிழகத்தில் கொல்லபட்ட பத்மநாபா கொலையின் முடிச்சு, ராஜிவின் கொலைக்கு பின் தானாக அவிழ்ந்தது, அது திமுக அரசு போட்டு வைத்த முடிச்சு என்பது மர்மம் அல்ல‌

# நியாயங்கள் சாகாது, உண்மைகள் தோற்காது. எந்த கொலையாளியும் தப்ப முடியாது, இது இயற்கையின் நீதி

எப்படிபட்ட மனித நேயம் இது?

கூலிப்படைகளால் மக்களின் மனஉறுதி குலைவு:
திருமாவளவன் வேதனை

# அதே போன்றதொரு கும்பலால் பக்கத்து நாட்டில் எத்தனை லட்சம் மக்கள் பாதிக்கபட்டார்கள்? பணம் முதல் உயிர்வரை இழந்து நிர்கதியானோர் எத்தனைபேர். எத்தனை ஆயிரம் மக்கள் கதறி அழுதார்கள், அந்த வடுக்கள் ஆறுமா?

# அந்த கூலிபடையினை ஆதரிப்பீர்கள், அவர்களை கடல்கடந்து சென்று சந்தித்து விருந்து சாப்பிட்டு உற்சாகபடுத்துவீர்கள்
ஏதும் அவர்களுக்கு பிரச்சினை என்றால், இங்கே இந்திய அரசினை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பீர்கள்,

#ஆனால் உள்நாட்டில் நடந்தால் வேதனைபடுவீர்கள், மக்கள் மனஉறுதி குறையும் என கவலைபடுவீர்கள்

# எப்படிபட்ட மனித நேயம் இது?

ரஜினி தனித்து நிற்பது இதில்தான்

FB_IMG_1467270728160நினைத்தாலே இனிக்கும் படம் அக்கால சிங்கப்பூர் மலேசியாவில் படமாக்கபட்டபொழுது ரஜினி எதிர்காலம் தெரியாத தமிழக புதுமுக நடிகர்.

அன்று கமலஹாசன் தான் டாப், ரஜினியிடம் ஆட்டோகிராப் வாஙக கூட யாரும் வரவில்லை என்பார்கள்.

இன்று கபாலிக்காக கிழக்காசியா காத்துகொண்டிருக்கின்றது, மலாய் மொழியில் மொழிமாற்றபடும் முதல் படமாம், பொதுவாக மலாய், சீன மக்களுக்கும் அவரை பிடிக்கின்றது, குறிப்பாக குழந்தைகளுக்கு

மலேசியாவில் படமாக்கபட்ட படம் அது, என்பதால் கூடுதல் சந்தோஷமாம், ஏர் ஏசியா நிறுவணம் ரஜினி படத்தை விமானத்திலே பொறித்திருக்கின்றது.

ஐரோப்பாவின் மிகபெரும் திரையரங்கில் படம் வெளியிடபடுகின்றதாம், உலகின் மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யபடுகின்றதாம்.

மூலவர் வரும்ப்பொழுது சிறு சாமிகளின் ஆட்டம் அடங்கும் என்பார்கள், அப்படி என்னதான் தலை, தளபதி, தறுதலை, இம்சை, என பலர் இருந்தாலும் ரஜினியின் இடம் மகத்தானது.

மனிதரிடம் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும், ஏற்றுகொள்ள கூடியது ஒன்றுதான், அது அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, நிம்மதியினை இழக்கவேண்டும் என்றோ அவர் நினைப்பதில்லை, தனக்குரிய எல்லை எது என்பதை அறிந்திருக்கின்றார், அதில் நம்பர் 1 ஆக நின்றுகொண்டே இருக்கின்றார்.

உண்ண ஒன்றும் இல்லாமல் இருப்பதன் பெயர் விரதம் அல்ல பட்டிணி, பெண்களே இல்லா தீவில் கடைபிடிப்பது பிரம்மசரியம் அல்ல, ஆனால் அறுசுவை உணவு முன்னால் இருந்தும் தொடாமல் இருப்பதுதான் விரதம், உலக அழகிகள் எல்லாம் வரிசை கட்டும் இடத்தில் கண்களை திருப்புவதுதான் பிரம்மசரியம்.

அப்படி தன் முன்னால் பெரும் அரசியல் வாய்பிருந்தும், அதனை தொடாமல் ஒதுக்கி வைப்பதுதான் கட்டுப்பாட்டின் உச்ச கட்டம், அது தான் ரஜினி.

இன்னொன்று மேக் அப் இல்லாமல், டை அடிக்காமல் எந்த நடிகனும் எளிதில் வெளிவரமாட்டான், அதில் மகா முதன்மையானவர் எம்ஜிஆர். சாகும் பொழுது கூட அவரின் உண்மை முகம் தெரியாமல் மேக் அப் அவரை காத்தது.

ஆனால் விருது வாங்கும் விழாவிற்கும் மொட்டை தலையுடனும், கலைந்த தாடியுடனும், இஸ்த்ரி செய்யபடாத உடையுடன் அவர் செல்வதுதான் அவரின் இயல்பினை வெளிகாட்டுகின்றது,

இதுதான் நான், இப்படித்தான் நான் என தைரியமாக உலகிற்கு சொல்ல முடிகின்றது, ஆனாலும் அவருக்கான மார்கெட்டில் ஒரு சதம் குறையவில்லை.

ஒரு தமிழ்நடிகருக்கு இவ்வளவு பெரும் வரவேற்பு உலகெல்லாம் இருப்பது பெரும் விஷயம். எப்படி சாத்தியம் என்றால்? அவர் கைகாட்டும் இடமான வானத்தை பார்த்துகொள்ளவேண்டியதுதான்.

மனிதரிடம் ரசிப்பது ஒரே விஷயம்தான், அது முதல்வர், பிரதமர் , உலக தலைவர் என யாரை பார்த்தாலும் இருக்கும் அதே சிரிப்புதான், சின்ன குழந்தையினை , ரசிகனை பார்த்தாலும் அவர் முகத்தில் காணமுடியும், எல்லோரையும் என் ரசிகர்கள் என ஒரே தரத்தில் வைக்கும் அந்த சந்தோஷம் தான் அவர் கண்களில் மின்னும்

ரஜினி தனித்து நிற்பது இதில்தான்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து காணாமல் போய்கொண்டிருக்கும் நடிகர்களும் , இயக்குநர்களும் இப்போது அதே வானத்தினைத்தான் பார்த்துகொண்டிருப்பார்கள்.

படம் விரைவில் வரலாம் என்கின்றார்கள் , ஏதோ டான் கதை என்கின்றார்கள், உரிமை போராட்டம் என்கிறார்கள், எப்படியோ பல நாடுகளில் அது வெளியிடபடுகின்றது.

# ஆனால் அது ஒருவேளை வன்முறை படமாகவும், வெளிநாடுகளில் தமிழர் அடக்கி வைக்கபடுகின்றனர் , உரிமை மறுக்கபடுகின்றனர் என்பதை போன்ற சித்திரம் இருக்குமானால் படத்தினை தூக்கி கடலில் போடவும் அந்நாடுகள் தயங்காது.

நாட்டின் நற்பெயர் அவர்களுக்கு முக்கியம்.

# அது ரஜினி படமாக இருந்தாலும் சரி, ஜாக்கிசான் படமாக இருந்தாலும் சரி.

(நான் மிக ரசித்தது அவரின் ஒரு பேச்சுதான், 2007களில் தமிழ் திரையுலகம் இறுதிபோரில் கலைஞரை கிழித்துகொண்டிருந்த போராட்டத்தில் பேச வந்தார் ரஜினி

“30 வருஷமா சண்டை போட்டு போராடுறீங்க, இன்னும் ஜெயிக்க முடியலண்ணா தோல்விய ஒத்துகிட்டு சமாதானமாக போக வேண்டியதான, இதுல ஏன் இவ்வளவு பேர் சாகணும்”

அவர் சொன்னது புலிகளையா? அல்லது சிங்கள ராணுவத்தையா? என இறுதிவரை தலையினை பிச்சிகொண்டிருந்தேன், ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் புரியவே இல்லை.

ஹா..ஹா..ஹா என சிரித்துகொண்டேன், அது தான் ரஜினி பன்ஞ்)

“இனபடுகொலை” என்ற பதத்திற்குள் எப்படி கொண்டு வருவீர்கள்?

“இறுதி யுத்தத்தில் யாழ்பாண தமிழர், மலையக தமிழர், கிழக்கு மாகாண தமிழர், கொழும்பு தமிழர், கண்டி தமிழர் என யார் மீதும் சிறு கீறல் கூட விழவில்லை,

புலிகளின் கட்டுபாட்டு பகுதியிலிருந்த மக்கள்தான் பாதிக்கபட்டார்கள், அதுவும் அவர்களை புலிகள் செல்ல அனுமதித்திருந்தால் சாவுகள் நடந்திருக்காது, எனவே இதனை “இனபடுகொலை” என்ற பதத்திற்குள் எப்படி கொண்டு வருவீர்கள்?

இனபடுகொலை என்றால் மொத்த தமிழினத்தையும் அல்லவா நாங்கள் தாக்கியிருக்கவேண்டும்?, மாறாக புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தில் தமிழர்களும் பங்கெடுத்ததை சுட்டி காட்டுகின்றோம்

போர்குற்ற விசாரணை குறித்து விசாரணை நடத்த நாங்கள் தயார்.

எத்தனையோ தீர்வுகளுக்கு இறங்கி வந்தபின்னும் யுத்தம் நின்றபாடில்லை.

புலிகள் இல்லாவிட்டால் சிங்கள் தமிழர்களை எல்லாம் அழித்துவிடுவான் என்ற பிம்பம் எங்கே?

இன்றும் எத்தனை லட்சம் தமிழர்கள் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள், பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவரே தமிழர் என்பதை குறித்துகொள்ளுங்கள், அந்த அளவிற்கு ஜனநாயகத்தை நாம் காப்பாற்றுகின்றோம்

வடக்கு கிழக்கில் தமிழர்களால் தேர்ந்தெடுக்கபட்ட தமிழர்களே முதல்வராக உள்ளனர், வலுகட்டயாமாக அமர்த்த பட்ட சிங்களர்கள் அல்ல.

1983க்கு பின் கொழும்பில் தமிழருகு எதிராக எங்கே கலவரம் நடந்தது? 1995 முதல் அரசகட்டுபாட்டில் இருக்கும் யாழ்பாணத்தில் என்ன நடந்தது? 2009க்கு பின் வன்னியில் என்ன தாக்குதல் நடந்தது ,

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் மறுநொடி இலங்கையில் தமிழர் வாழமுடியாது எனும் பிரச்சாரம் எப்படி பொய்யானது என்பதை உலகம் கண்டுகொண்டிருக்கின்றது” :

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் சிங்கள அமைச்சர் முழக்கம்

# இதற்கு எந்த நாடு பதில் சொல்லமுடியும? ஆழ்ந்த அமைதியில் இருக்கின்றன சர்வதேச நாடுகள் , இதற்கு பதில் திருமுருகன் காந்தி கும்பலிடமும் இருக்காது, ஆனாலும் சம்பந்தமில்லாமல் சீறிகொண்டே இருப்பார்கள் அர்த்தமே இல்லாமல்.

ஈழ தமிழர் நலன் பற்றி பேச வடக்கு மாகாணா முதல்வர் விக்னேஸ்வன் யார்? என்ன உரிமை : சீமான்

ஈழ தமிழர் நலன் பற்றி பேச வடக்கு மாகாணா முதல்வர் விக்னேஸ்வன் யார்? என்ன உரிமை : சீமான்

வடக்கு கிழக்கு மாகாண நாடாளுமன்ற பிரதிநிதிகளை மக்களின் பிரதிநிதிகளாக ஏற்க முடியாது : திருமுருகன் காந்தி

# இது ஒருவகை வியாதி, அவர்கள் மாகாண முதல்வர் அந்த மக்களால்தான் தேர்ந்தெடுக்கபட்டிருக்கின்றார், அந்த நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்ததும் அம்மக்களே, அவர்கள் எல்லாம் பிரதிநிதிகள் அல்ல என சொல்ல இவர்கள் யார்?

# ஒரு அந்நியநாட்டின் உள்புகுந்து அவனுக்கென்ன உரிமை? இவனுக்கென்ன உரிமை? என பேசமுடியுமா?, இவர்கள்தான் ஐ.நாவில் முழங்க போகின்றார்களாம், சர்வதேசம் சிரிக்காதா?

# இதே யாழ்பாணத்தில் அதிக வோட்டு வாங்கியவன் ராஜபக்சே, அன்று நடந்த யாழ்பாண விளையாட்டரங்க விழாவில் மைத்திரிபாலாவிற்கு கொடுக்கபட்ட வரவேற்பு கொஞ்சமல்ல, அதாவது அவர்களே ஒரு இணக்கபாட்டில் இருக்கும் போது இங்கிருந்து இவர்கள் கத்துவது ஒரு வகை கயவாளித்தனம்

# இவர்கள் சொல்லவருவது என்ன? டேய் தயவு செய்து சண்டை போட்டு சாவுங்கள், செத்துகொண்டே இருங்கள், அதனை வைத்துதான் நாங்கள் இந்திய எதிர்ப்பினை தமிழகத்தில் விதைத்துகொண்டே இருக்கமுடியும், அது செழித்து வளர்ந்தால்தான் தமிழகத்தை ஈழம் போல தலைவன் வழியில் சுடுகாடாகா மாற்றமுடியும், பிளீஸ் சண்டை போடுங்கள், சாவுங்கள்…………….

# இன்னும் கொஞ்சநாளில் பைத்தியம் முற்றிபோய் கொழும்பு இலங்கை தலைநகராக இருப்பதை ஏற்க முடியாது, கதிர்காமத்தில் முருகன் கோயில் இருப்பதை ஏற்க முடியாது, இலங்கை சுற்றி இருக்கும் கடலை ஏற்க முடியாது என இவர்கள் நிச்சயம் உளறுவார்கள்

நானே ராஜதந்திரி – வைகோ

“எனது ராஜ தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது.

FB_IMG_1467267747616

என்னை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து போய்விட்டார்கள்” : வைகோ பேச்சு

# தொடர் தோல்வி ஒருவன் மனநிலையினை புரட்டிவிடும் என்பதற்கு இவரே பெரும் சாட்சி, இல்லாவிட்டால் இப்படி உளரமுடியாது, இவர் இன்னும் சுயநினைவில் பேசிகொண்டிருக்கின்றார் என்றால் இப்படியான முடிவிற்குதான் வரவேண்டி இருக்கும்

1) கரைந்துகொண்டிருக்கும் கட்சியோ, இவரை நம்பி இருப்பவர்களோ இவருக்கு முக்கியமல்ல, இவர் ஸ்டெர்லைட் முதல் அணுவுலை போராடிய எல்லாமும் நாடகமே, கூட்டணி அமைத்ததும் கலைஞர் எதிர்ப்பே அன்றி வேறு அல்ல‌

2) இந்த தேர்தலில் அழிநிலையில் இருப்பது நிச்சயமாய் விஜயகாந்த் அன்றி கலைஞர் அல்ல, மிக சொற்பமான எண்ணிக்கை வித்தியாசத்தில் எந்நேரமும் ஆட்சியினை கைபற்றும் வலு அவருக்கு இருக்கின்றது.

3) “எம்மை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்கள்..” எனும் இடத்தில்தான் இருபொருள் வருகின்றது, அது கட்சி தொடங்கி வைகோவினை பாதித்த விஜயகாந்தா? அல்லது இறுதிவரை நம்பிக்கை கொடுத்து தவறான வழிகாட்டலில் அழிந்துபோன புலிகளின் எச்சரிக்கையா? என தெரியவில்லை, அழிந்து போனது புலிகளும், விஜயகாந்துமே, ஆக இவர் குறிப்பிடுவது யாரை என்றுதான் தெரியவில்லை.

4) சொந்த கட்சியினரை விட, இவரை இறுதிவரை நம்பி அழிந்த புலிகளை விட, புலிகளுக்காக இவரை உள்ளே தள்ளி பெண்ட் எடுத்த ஜெயலலிதாவினை விட, தன்னை வளர்த்து ஆளாக்கி அடையாளமிட்ட கலைஞர் மீதுதான் இவருக்கு இன்னும் வன்மம் என்றால், வள்ளுவன் வாக்கு பொய்க்குமா?

“எந்நன்றி கொன்றாருக்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்க்கு”

இது வைகோ, பிரபாகரன் என இருவருக்கும் பொருந்தும், செய்நன்றி அழித்தார்கள், தானாய் அழிந்தார்கள்.