போடா “தேசதுரோகி”

புலிகளை ஆதரிக்கும் தேச துரோகி ஒருவன் என்னை துரோகி என்றும் காட்டிகொடுப்பவன் என்றும் பிதற்றிகொண்டிருக்கின்றான், நான் திருந்தவேண்டுமாம், மிரட்டுகின்றானாம்.

புலிகளை ஆதரிப்பவர்கள், ஒன்று கைகூலி அல்லது பயந்தாங்கொள்ளி அல்லது விவரம் தெரியாத பதர்கள், இம்மூன்று அன்றி எதுவும் சாத்தியமில்லை.

அவர்களை மனிதர்கள் என்றே உலகம் ஒப்புகொள்ளாதபோது, போராளிகள் என்று நாம் எப்படி சொல்லமுடியும்? நிச்சயம் தமிழம், தமிழ் நாகரீகம் அறிந்த யாரும் அவர்களை ஆதரிக்கமாட்டார்கள், அவர்களை ஆதரிப்பவர்கள் நிச்சயம் தமிழனாய் கூட‌
அல்ல இந்தியனாய் இருக்கமுடியாது.

இந்த மிரட்டல் “பிரசன்னம்” எல்லாம் எதிர்த்து நிற்பவன் தான் இந்தியன். ஆனானபட்ட அணுவிஞ்ஞானி கானையே காரிதுப்பும் நாட்டுபற்றாளர்கள் நிறைந்த நாடு இது, இந்த புலி “பிரன்னம்” எல்லாம் இங்கு ஒரு தூசுக்கு பெறாது.

அந்நிய நாட்டு தீவிரவாதியினை புகழும் உனக்கே இவ்வளவு என்றால், சொந்த தாய்நாட்டை நேசிக்கும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?

போடா “தேசதுரோகி”

புலிகளை ஏன் விமர்சிக்கின்றோம்

புலிகளை ஏன் விமர்சிக்கின்றாய் என கேட்கின்றார்கள், புலிகள் ஒருநாளும் இந்தியாவினை நேசித்தவர்கள் அல்ல, சக போராளி குழுக்களுக்கு இந்தியா பயிற்சி அளித்ததையே அவர்களால் தாங்கமுடியவில்லை, அந்த கோபத்தை ஈழம் திரும்பியதும் சக குழுக்களை அழித்துகாட்டினார்கள். அதாவது இந்த குழுக்கள் இருந்தால் இந்தியா ஆதிக்கம் செலுத்தும், இவர்களை ஓழித்துவிட்டால் நாமே தனிகாட்டு ராஜா.

13310483_10206463412959231_308709515847967707_n.jpg

சிங்களனை மிரட்டும் இந்தியா, நாளை ஈழ அதிபராக போகும் தன்னையும் மிரட்டுவார்கள் எனும் அச்சம் பிரபாகரனுக்கு இருந்தது, வலுவான இந்தியாவாக இருக்கும் வரை தன் எண்ணம் ஈடேறாது என்பது அவருக்கு தெரியும். அதனால் இந்திய அமைதியினை குலைக்கும் நடவடிக்கைகளில் புலிகள் இறங்கினார்கள்.

இந்திய பெரும் எதிரிகளான நக்சலைட்டுகளுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்தது, அதில் தமிழக பிரிவினை தமிழ்க விடுதலை படை என்றே மாற்றி பயிற்சி கொடுத்தார்கள். 1986லே குடமுருட்டி பாலத்தை தகர்த்து ராஜிவிற்கு குறி வைத்தார்கள், 5 நிமிடம் தாமதித்திருந்தால் அன்றே ராஜிவ் காலி, குண்டு வைத்தது தமிழக விடுதலை படையினர், அதாவது இந்தியரை வைத்தே இந்தியாவினை பிளக்கும் தந்திரம்.

அந்த தமிழர் விடுதலை படையின் தலைவன் தமிழரசனை தூண்டிவிட்டார்கள், மருதையாற்று தண்டவாளத்திற்கு குண்டு வைத்து மலைக்கோட்டை ரயில் கவிழ்து 35 பேர் செத்த கொடுமையும் இங்குதான் நடந்தது மறக்க முடியுமா?

உச்சமாக ராஜிவ் கொலையினை இந்திய தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து நடத்தும் திட்டம்தான் புலிகளுக்கு இருந்தது, பின் மாற்றிகொண்டனர் ஆனாலும் நளினியும், பேரரிவாளனும் சிக்கி வாழ்க்கை தொலைத்தனர்,

புலிகளின் போராட்ட தத்துவம் எளிது, அதாவது தமிழ் தேசியம் பேசிகொண்டே அப்பாவி மக்களை கொல்லவேண்டும், பழி எதிர்தரப்பின் மீது விழவைக்க வேண்டும், விசாரணை வழக்கு என அலைக்கழிக்கப்டும் மக்களை இயக்கத்தில் சேர்த்து பழிவாங்க வைக்கவேண்டும், அதாவது மக்கள் பாதிக்கபட படத்தான் இயக்கம் வளரும். ஈழம் இப்படித்தான் அழிந்தது.

பிரபாகரனின் ஆரம்பகால வழக்கம் வங்கிகொள்ளை, தமிழரசன் எனும் தீவிரவாதி பொன்பரப்பி வங்கிகொள்ளையினை அடிகும்பொழுதுதான் மக்களால் அடித்தே கொல்லபட்டான், அதன் பின் லெனின் எனும் தீவிரவாதியினை உருவாக்கி அலையவிட்டனர் புலிகள், அவனும் கொல்லபட்டான். அதன் பின் மாறன் என்பவன் உருவாக்கபட்டான், இவன் வீரப்பன் காட்டில் அடைக்கலமாகி வீரப்பனை தமிழ்தேசியத்தில் இணைத்து பெரும் அழிவிற்கு திட்டமிட்டான்.

அதுவரை மான்கறி, குயில்கறி, கடத்தல் என ஜாலியாக இருந்த வீரப்பன் அதன் பின்முடித்தே தீரவேண்டியவன் ஆனான், முடித்துவிட்டார்கள். இப்படி தமிழகத்தை எப்படியாவது அமைதி குலைத்து பெரும் ரத்தகளறி மாநிலமாக்கி, அதன் இளைஞர்களை ஈழத்து ஸ்டைலில் பலிகொடுக்க துணிந்த இயக்கம்தான் புலிகள், அவர்களால் ராமேஸ்வர மீணவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல, இன்று புலிகள் இல்லை, ராமேஸ்வர துப்பாக்கி சூடு இல்லை.

இந்த இந்திய எதிர்ப்பு புலிகளின் சித்தாத்தை தமிழரசன், கலியபெருமாள், லெனின், மாறன், கொல்லபட்ட நாம்தமிழர் முத்துகுமார் என வரும் வரிசையில்தான் சீமானும் வருகின்றார், அதனால்தான் அவரால் யாசின் மாலிக்கோடு உறவாட முடிகின்றது, சக தமிழர்களை வடுக வந்தேறி என சொல்லமுடிகின்றது, இவருக்கு முதலமைச்சர் ஆசை வெறு.

இந்த பழைய அபாயங்களை, குடமுருட்டி ஆற்று பாலம், மருதையாற்று பாலம், கொடைக்கானல் டவர் குண்டு வெடிப்பு என சிறிதும் பெரிதுமாக இவர்கள் நடத்தியது 80க்கு மேற்பட்ட குண்டு வெடிப்புகளை, மறைமுகமாக 70 பேர் கொல்லபட்ட நிகழ்வுகளை, ராஜிவ் கொலை என நடந்த கொடூரங்களை எல்லாம் நினைவு கூர்ந்தால், எவ்வளவு பெரும் அபாயம் தமிழகத்தில் நடைபெற இருந்தது என்பதும், அதிலிருந்து தெய்வாதீனமாக தமிழகம் தப்பியது என்பதும், ராஜிவ் உயிர்கொடுத்து தமிழகத்தை காத்தார் என்பதும் தெரியும்

எதற்காக புலிகளை விமர்சிக்கின்றோம் என்பதும் புரியும், அவர்கள் எவ்வளவு பெரிய இந்திய எதிரிகள் என்பதும் புரியும்.

இந்த கொடூரங்களை எல்லாம் நினைத்து பார்த்தால் வீரப்பனை ஏன் அங்கிள் கொண்டாடினார் என்பது தெரிய வரும், சீமான் சொல்லிகொண்டிருப்பது எவ்வளவு பெரும் ஆபத்தின் விதை என்பதும் தெரியவரும்.

அப்படி தெரியவந்தால் நிச்சயம் எம்மை எல்லாம் நீங்கள் குறை கூறமாட்டீர்கள், மாறாக சீமானை வேறுமாதிரி பார்ப்பீர்கள். உண்மையான இந்தியனாக இருந்தால் நிச்சயம் சிந்திப்பீர்கள். அப்பொழுது பிரபாகரனின் சுய உருவம் உங்கள் கண்களில் தோன்றும்.

சில வெறுப்புக்களும், அரசு மீதான கோபமும், சமூக அமைப்பும் இளைஞர்களை மிக விரைவாக தீவிரவாதத்தின் பக்கம் இழுத்துவிடும், அதிலிருந்து நமது இளைஞர்களை காத்தல் வேண்டும், உண்மையினை உணர வைக்க வேண்டும் அந்த சமூக பொறுப்பு இருக்கின்றது.

அந்த பொறுப்பு இல்லாதவர்களுக்கு என்ன அக்கறை இருக்க முடியும்?

நார்வே அமைதி ஒப்பந்தம்

*பாலசிங்கம் நார்வே அமைதி ஒப்பந்தம் பற்றி சொன்னதும், அவர்கள் நமது ஆயுதத்தை பிடுங்க முயற்சி செய்கின்றார்கள் என முகத்தில அடித்தது போல சொன்னார் பிரபாகரன்,

*பேச்சுவார்த்தைக்கு நடுவராக இந்தியாவினை அழைக்க பாலசிங்கத்தை வற்புறுத்தினார் பிரபாகரன், அவர்கள் வரமாட்டார்கள் அது நடக்காது என சொன்ன பாலசிங்கத்தை அதன் பின் பிரபாகரன் ஒதுக்க தொடங்கினார், கலங்கிய கண்களுடன் சென்ற பாலசிங்கம் அதன் பின் பிரபாகரனை சந்திக்கவே இல்லை

* இவ்வளவு நடந்தும் இந்தியா எப்படி பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்யவரும் என அவர் நம்பினார் என்றும் தெரியவில்லை,

*தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்தக் கட்டத்திலும் ஆயுதங்களைக் கையை விட்டு இழப்பதற்குத் தலைவர் கிஞ்சித்தும் தயாராக இருக்கவில்லை.

*விடுதலைப் புலிகளின் நிதித்துறையினர் தமது வரி வசூலிப்பு நடைமுறையைச் செயற்படுத்திய விதம் மக்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியது.

*கட்டாய ஆள்சேர்ப்பும் இயக்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பினை கொண்டு வந்தது , இயக்கத்திற்குத் தேவையாக இருந்ததெல்லாம் ஆயுதங்களை இயக்குவதற்குப் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு மனித உருவம் மட்டுமே என்றளவிற்கு பிரபாகரன் மாறி இருந்தார்

*சமாதானச் சூழ்நிலையில் அரசியல் ராஜதந்திரத்தின் நுணுக்கங்களைத் துணிச்சலுடன் பயன்படுத்தி, தமிழர்களுக்கு உறுதியான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நிலையை நோக்கி முன்னேறிச் செல்ல முடியாமல் திணறத் தொடங்கினார்.வாழ்வாதாரங்கள் எல்லாவற்றையும் இழந்துபோன நிலையிலும், போராட்டத்தை நம்பியிருந்த மக்களுக்காகத் தனது பிடிவாத குணத்திலிருந்து வெளியே வரவேண்டியவராகத் தலைவர் பிரபாகரன் இருந்தார்.

*ஆனால் அந்த நேரத்தில் அவர் அதைச் செய்வதற்கான துணிச்சலற்றவராகவே இருந்தார்.

*புலிகள் செய்த கதிர்காமர் கொலையினை பிரபாகரன் பகடியாய் கொண்டாடியதும் , அமெரிக்கா முதலான நாடுகள் அதற்காய் தடைவிதித்ததும் பெரும் ஆபத்து, இது நிச்சயம் நம்மை அழிக்கும் என அவரிடம் கேட்க சென்றால், இப்படி அர்த்தமே இல்லாமல் சொன்னார்

“இந்தப் பெரிய நாடுகள் எல்லாம் தடைசெய்கிற அளவுக்குச் சர்வதேச அளவில இராணுவ பலம் பொருந்திய இயக்கமாக நாம் வளர்திருக்கின்றோம் என சந்தோசபடுங்கள்” எப்படி பட்ட அபத்தம் இது?

இயக்கத்தின் முடிவு அன்றே தெரிந்தது, உச்சமாக சொன்னார், ரணிலுக்கு வாக்களிக்கவேண்டாம் அவர் அமைதி பேசுவார், மகிந்தாவிற்கு வாக்களித்தால் சண்டை வரும், அடிக்கலாம்.

*அமெரிக்க சமாதான பேச்சையும், ஆயுதங்களை பிடுங்க சதி என புறந்தள்ளிய பிரபாகரன் இறுதியாக சொன்னார், “இனி யுத்தம் இலங்கையோடு அல்ல, சர்வதேசத்தோடு, அதில் வென்று நம் வீரத்தை நிரூபிப்போம்”, அன்றே தெரிந்தது பெரும் பழுகுழியில் தமிழனத்தை இவர் தள்ளபோகின்றார் என்று

# இவை எல்லாம் 30 ஆண்டுகளாக புலிகளோடு இருந்த போராளி தமிழினியின் வார்த்தைகள் , அவருக்கு தெரியாததா? முகநூலில் புலிகளை பற்றி மல்லுகட்டும் இந்த அடிமைகளுக்கு தெரிந்துவிட்டது,

# ஆச்சர்யமாக 1987ல், ராஜிவ் சொன்ன அதே வார்த்தைகளை, தமிழினியும் சொல்லி இருகின்றார், அதே வரிகள் தான் “தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்தக் கட்டத்திலும் ஆயுதங்களைக் கையை விட்டு இழப்பதற்குத் தலைவர் கிஞ்சித்தும் தயாராக இருக்கவில்லை.”

இனியாவது தெளிவாக சொல்லுங்கள்

அடேய் அங்கிள் பாய்ஸ், “இன விடுதலை இன விடுதலை” என் ஒப்பாரி வைக்கின்றீர்களே. அப்படி எங்கு அடிமைபட்டு கிடக்கின்றீர்கள்? தெளிவாக சொல்லுங்கள். இங்கு கட்சியும் நடத்துகின்றீர்கள், டெபாசிட்டும் இழக்கின்றீர்கள். அவ்வளவு உரிமை இருக்கும் இடத்தில் என்ன அடிமைத்தனம் கண்டீர்கள்?

பொய்களை அள்ளி விடுகின்றீர்கள், கண்டதையும் எழுதுகின்றீர்கள், கலவரம் தூண்டும் விதத்தில் பேசுகின்றீர்கள், இவ்வளவு சுதந்திரமான நாட்டில் என்ன அடிமைதனம் கண்டீர்கள்?

உண்மையில் அடிமைதனம் என்றால் என்ன என உங்களுக்கே தெரியவில்லை, ஆட்சி கையில் கிடைக்காததன் பெயர் அடிமைத்தனமா? அட பதர்களா?

ஈழ விடுதலை என்றால் இலங்கைக்கு சென்று கத்துங்கள், இங்கே இருந்துகொண்டு இன விடுதலை என சொல்வதாக இருந்தால், “தனி தமிழ்நாடு” என தெளிவாக கேளுங்கள் ஆனால் நிச்சயம் அப்படி கேட்க மாட்டீர்கள்,கேட்டால் “ஜெயில் விடுதலை” என நீதிமன்றத்தில் குரலேழுப்புவீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்

இனியாவது தெளிவாக சொல்லுங்கள்

டக்லஸ் தேவாநந்தா

பிரபாகரனுடனிருந்து அவருக்கு துரோகம் செய்த டக்ளஸ் தேவனந்தா போல நீ ஒரு துரோகி என்கிறான் ஒருவன், அட பரிதாபத்துகுரியவனே, டக்ளஸ் என்றைக்கு பிரபாகரனோடு இருந்தார்? உன் அறிவு இவ்வளவுதானா?

டக்ளஸ் ஒரு கம்யூனிஸ்ட், பதமநாபா குழுவின் முக்கிய புள்ளி. லெபானானில் பாலஸ்தீன போராளிகளிடம் பயிற்சிபெற்றார் என்ற செய்தியும் உண்டு, ஈழ போராட்ட வரலாற்றில் முதன் முதலாக ஷெல் குண்டு சொந்தமாக செய்து சிங்கள படையினரை திணறடித்த பெருமை அவருக்கே உண்டு,Stanley Rajan's photo.ஆலன் தம்பதி எனும் அமெரிக்கர்களை உளவாளிகள் என கடத்திய விஷயத்தில் இவர்தான் அமெரிக்க அதிகாரிகளால் குறிவைக்கபட்டார், ஆனால் தப்பினார். கடும் போக்குடைய இவர் பதம்நாபாவின் நிதானமான போராட்டத்தில் இருந்து கொஞ்சகாலம் வேறுபட்டபொழுதுதான் புலிகள் எல்லா இயக்கத்தையும் தடை செய்து தன்னைவிட வலுவானவர்களை எல்லாம் அழித்தனர்.

(சென்னை சூளைமேட்டில் ஒருவரை இவர் சுட்டுகொன்றார் என்ற வழக்கும் உண்டு, அங்கு பலமுறை புலிகள் இவர் மீது கொலைமுயற்சியில் ஈடுபட்டதும் உண்டு, அப்படி ஒருமுறை ஏற்பட்ட சர்ச்சையில்தான் இவரின் தவறுதலான சூட்டில் ஒருவர் உயிரழந்தார். அந்த‌ கொலைக்கு தண்டனை இந்திய சட்டபடி கொடுக்கத்தான் வேண்டும். அதே சூளைமேட்டில்தான் பத்மநாபாவும் பின் புலிகளால் கொல்லபட்டார், அந்த புலிகளையும் பிடித்து தண்டிக்கவேண்டும் அல்லவா? தற்காப்பிற்காக சுட்டேன் என்ற டக்ளசின் வார்த்தைகளில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம்)

 

அதன் பின் புலிகள் தீவிரமாக கொல்ல தேட இவர் சிங்களனிடம் அடைக்கலமானார். எத்தனையோ சிங்கள ராணுவ வீரர்களை கொன்றவர்தான், சிங்கள அரசுக்கு பெரும் சிம்ம சொப்பணமாக இருந்தவர்தான், ஆனால் பாருங்கள் சிங்களன் மன்னித்து இன்றுவரை விட்டுவைத்திருக்கின்றான் அதுவும் அமைச்சராக. கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது

இது புலிகளிடம் சாத்தியமா என்றால்? மாத்தையா கதை ஒன்றே போதும்.

கொழும்பிலும் கிட்டதட்ட 10 தற்கொலை தாக்குதலில் இருந்து தப்பினார் டக்ளஸ், அவருக்கு ஆயுள் கெட்டி. புலிகள் சிங்களனிடம் இவர் அடைக்கலமானதால் துரோகி என்றனர், அதே சிங்களனுடன் இணைந்து புலிகள் செய்த காரியங்களுக்கு பெயர் “ராஜதந்திரம்”.

பிரபாகரனை விட அறிவான, வீரமான பெரும் போராளிகள் எல்லாம் ஈழத்தில் இருந்தனர், அவர்களை எல்லாம் அழித்துவிட்டு புலிகள் சொன்ன “அகற்றபட்ட தடை கற்கள்” என்னும் சொல்தான், ஈழப்போராட்டத்தையே உலகிலிருந்து அகற்றிவிட்டது.

கவனியுங்கள் வரதராஜ பெருமாளும் தமிழர், டக்ளசும் தமிழர், இருவருமே போராளிகள். இவர்களை கொல்ல தேடியதும் ஈழ போராளிகள் என சொன்ன புலிகள். ஆனால் இவர்களை காப்பாற்றியது அந்நிய இனமான இந்தியாவும், எதிராளியான சிங்களனும்.

இன்னும் ஆழமாக பார்த்தால் பல இடங்களில் புலிகளிடமிருந்து தமிழர்கள் உயிரினை மீட்ட விஷயங்களில் சிங்களரே முண்ணனியில் இருக்கின்றனர், ஏராளமான சாட்சிகளும் சம்வங்களும் உண்டு.

தம்பிக்கு கடிதம்

2009ம் ஆண்டு மார்ச் 15ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் ‘அன்புள்ள தம்பி மூன்று இலட்சத்து முப்பதாயிரம் மக்களுடைய சாபம் உம்மை நிம்மதியாக வாழவிடாது என்பது மட்டுமல்ல உங்களையும் உங்கள் சந்ததியினரையும் பல தலைமுறைகளுக்கு பின்தொடரும் என்றும்

உங்கள் ஆதரவாளர்களைக்கூட விட்டுவைக்காதென்றும் கூறி தயவுசெய்து உங்கள் மனதை மாற்றி இப்போதாவது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை விடுவிக்குமாறும் மக்கள் பசியாலும், தாகத்தாலும் மரணிக்க ஆரம்பித்துவிட்டார்கள் எனவும் இந்தப் பொறுப்பை ஏற்று செயற்படுமாறும் கேட்டிருந்தேன்.

புலிகள் அதற்கு செவிசாய்க்கவில்லை, போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் மக்களை விடமுடியும் என புலிதலமை சொன்னது, மற்ற தமிழ் அமைப்புகளும் புலிகளை கண்டிக்கவில்லை, இந்த கொடும் பிடிவாதமே ஏராளமான மக்கள் பலியாக காரணம், இந்த கொடும் சாவு நிச்சயம் தவிர்க்கபட்டிருக்க கூடியது” – ஆனந்த சங்கரி , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

# அங்கிருக்கும் தமிழர்களுக்கு தெரிந்திருக்கின்றது யார் இந்த பேரழிவிற்கு காரணம் என்று, ஆனால் இங்கே சொந்த ஊரை தாண்டி இருக்காத தமிழக பிரபாகர‌ அடிப்பொடிகளுக்கு மட்டும் இப்படி தெரிகின்றதாம் அதாவது முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணம் சோனியா, கலைஞர்

# கிளிநொச்சியிலிருந்து மக்களளை திரட்டி முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று சாககொடுத்தவன் போராளியாம், அதனை கண்டித்து சொல்பவனெல்லாம் துரோகியாம். எந்த போராளி இயக்கமாவது மொத்த தளபதிகளோடு இப்படி மொத்தமாக அழியுமா? அப்படி அறிவுகெட்டு மொத்தமாக அழிந்த இயக்கம் இது ஒன்றுதான்

# காரணம் அதன் நோக்கம் ஈழவிடுதலை அல்ல, , மாறாக பிரபாகரன் உயிரை காப்பது மட்டுமே, இதனைத்தான் ராஜிவ் அன்றே சொன்னார் “ஒரு தனிபட்ட தலைவரின் உயிர்பயமே இப்பொழுது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது, ஆயுதமின்றி அவரால் வாழமுடியாது, தனக்கான பாதுகாப்பிற்காக மட்டும் ஒரு நாட்டை உருவாக்கும் அவரின் முயற்சி வெற்றிபெறாது”