எமது தலைவன் ஈழத்தில் பொற்கால அரசு நடத்தினான், அவன் வரி வசூல் ஒரு அழகு, அவனது நிர்வாகம் பெரும் அதிசயம், அவனது மக்கட் நலன் மிகுந்த ஆட்சி அப்படி, அந்த ஈழ அரசு இப்படி என்றேல்லாம் வந்து முழங்குகின்றார்கள்.
முழங்குமுன் மூளையினை கழற்றி வைத்துவிட்டு கத்துகின்றார்கள் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.
காரணம் அப்படி ஒரு பொற்கால ஆட்சிநடந்தால் தமிழகத்தில் ஏன் அத்தனை ஈழ மக்கள் அகதிகளாக வந்தனர், சரி பொற்கால ஆட்சி என்றால் திரும்பி சென்றிருக்கமாட்டார்களா? புலிகளாவது அழைத்தார்களா? சொந்த மக்கள் தானே, ஈழகுடிமக்கள் தானே, அப்படி ஒரு பொற்கால ஆட்சி நடந்தால் இவர்கள் சென்றிருக்கமாட்டார்களா?
ஐரோபாவிலிருந்து பிரபாகரன் பொற்கால ஆட்சி நடத்தினான் என ஒப்பாரி வைக்கும் ஒருவர் கூட ஈழம் சென்று குடியேறவில்லையே ஏன்?
புலிகளின் வரிகொடுமை என்ன என்பதை வன்னி மக்களே கதை கதையாக சொல்வார்கள், மின்சாரம் கிடையாது, மண்ணெணெய் சிங்கள பகுதிவிட 3 மடங்கு விலை, ஒரு தீப்பெட்டியே கடும் விலை, காரணம் வரி.
கலப்பை வரி, விதை வரி, விதைப்பு வரி, விவசாய வரி, அறுவடை வரி, விற்பனை வரி, வாகன வரி, பொருள் வரி, லாப வரி,சுங்க வரி, ஈழ வரி என வரிவரியாக இவர்கள் மக்களை பாடாய்படுத்திய கதை எல்லாம் உலகிற்கே தெரியும்.
ஒரு ரயில் ஓடினால் சிங்களன் வந்துவிடுவான் என தண்டவாளத்தையே பெயர்தெடுத்த இயக்கம், இரவில் விளக்கெரிந்தால் குண்டு வீசிவிடுவான் சிங்களன் என மின்சாரத்தையே தடை செய்த இயக்கம், பள்ளிகள் எல்லாம் ஆயுதசாலைகள் எனம் மாற்றி பிஞ்சுகள் கையில் ஆயுதம் கொடுத்த இயக்கம் பொற்கால ஆட்சிநடத்தியதாம்.
2004 சுனாமி கொடுமையில் சர்வதேச அமைப்புகளையே உள்விடாமல் செய்த அமைப்பு, அப்படியும் சில உதவிகளை வெளிநாடுகள் செய்தபோது பணம் கொடு, செய்வதை நாங்கள் செய்வோம் என அவர்களை விரட்டி, மக்களை தவிக்க விட்ட அமைப்பு பொற்கால ஆட்சி நடத்தியதாம்
இதனை எல்லாம் நாம் தமிழர் அடிப்பொடிகளிடம், மேடையில்சீமான் பேசும்பொழுது அவர்கள் காதோரம் சொல்லுங்கள் நம்புவார்கள்.