வங்கத்தை பிரித்த இந்தியா, ஈழத்தை மறுப்பதேன்?

வங்கத்தை பிரித்த இந்தியா, ஈழத்தை மறுப்பதேன்? ஏய் பார்பன அடிவருடி, ஆரிய அடிமையே சொல்,சொல் என்றேல்லாம் கேட்கின்றார்கள்

வங்கம் 110 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இரண்டாகவே பிரிக்கபட்டது, அடுத்த 40 ஆண்டுகளில் அது இன்னொரு நாடாயிற்று, பிரிவினையில் அவர்கள் மோதி ரத்த ஆறு ஓடியதை ஹே ராம் படம் வரை கண்டோம்.

கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினையில் மேற்கு வங்கத்தவர் தலையிட்டதோ, அது தொப்புள் கொடி உறவு எனவோ யாரும் கத்தவுமில்லை, தீகுளிக்கவுமில்லை, இவ்வளவிற்கும் பங்காளிகள், 100 வருடத்திற்கு முன்புவரை ஒரே குடும்பம்.

அகதி பிரச்சினைகளை காரணம் காட்டி இந்தியா நுழைந்து தனிநாடு ஆக்கினாலும், மேற்கு வங்கமும், வங்கதேசமும் இன்றுவரை நெருங்கிவருவதில்லை, மேற்கு வங்கத்தார் தாங்கள் இந்தியர் என்பதில் மகா உறுதியாய் நிற்கின்றார்கள்.

Stanley Rajan's photo.

ஆனால் ஈழநிலை அப்படி அல்ல, தமிழக அரசியல் வித்தியாசமானது, ஏற்கனவே திராவிட நாடு கேட்டு, இந்தியினை எதிர்த்து இவர்கள் செய்த அரசியல் கொஞ்சமல்ல, டெல்லி என்றாலே பிராமணர், நாமெல்லாம் அடிமை என்றே மக்களை நம்ப வைத்தார்கள்.

ஆனாலும் 1980 வரை ஈழபிரச்சினை தமிழகத்தை பாதிக்கவில்லை, ஆனால் போராட்டம் வெடித்து அகதிகள் வர வர அதில் இந்தியா தலையிட்டது, போதாதா? தமிழகத்தில் எம்ஜிஆரும், கலைஞரும் தலையிட பெரும் எழுச்சி உண்டாயிற்று.

சிங்களம் இதில் காய்நகர்த்தியது, இன்று தமிழகமும் இலங்கை வடபாகமும் சேர்ந்து இருக்கும் அகண்ட ஈழம் யாரால் உருவாக்கபட்டதென்றால் சாட்சாத் சிங்களனால்தான், அவன் அப்படி ஒரு தோற்றத்தை டெல்லிக்கு காட்டினான்.

(அப்படி சிங்களனால் உருவாக்கபட்ட வரைபடைத்தைத்தான் சீமானிய அடிப்பொடிகள் தூக்கி திரிகின்றன.)

இந்திரா இங்குதான் யோசித்தார், வங்கம் வெற்றிதான் ஆனால் பஞ்சாப் எரிகின்றது, ஏற்கனவே தமிழக திராவிட சித்தாந்தம் எச்சரிக்கைகுரியது, அங்கு தனிநாடு அமைவது நிச்சயம் இந்தியாவிற்கு ஆபத்து, ஆனால் சில உரிமைகளை பெற்று கொடுத்து அம்மக்களை அமைதியாக வாழவைக்க அவர் முயற்சி எடுத்தார், அப்படி ஈழத்தில் இந்தியா கால்பதிக்கும் பொருட்டு அவர் செய்ததுதான் போராளிகளுக்கான பயிற்சி.

ஆனால் அது பெரும் பிரச்சினையில் சிக்கியது, தெரு சண்டையாளர்கள் கையில் ஆயுதம் கிடைத்தால் என்னாகும் என்பதை அவர் உணர்ந்தபொழுதே கொல்லபட்டார், ராஜிவ் காந்தி வேகமாக அந்த ஆபத்தை களையமுயன்றார் செத்தார்.

இதில் புலிகளின் போராட்ட நுட்பமும் கொடுரமானது, அதாவது மக்களோடு மக்களாக இருந்து ராணுவத்தை தாக்கவேண்டும், பின் ராணுவத்தால் பாதிக்கபடும் மக்களிடம் பார்த்தாயா சிங்களன் கொடுமையினை என சொல்லி, எங்களை தவிரவேறு வழி இல்லை என சொல்லி சேர்த்துகொள்ளவேண்டும், அதாவது பழி எதிராளி மீது பலன் இவர்களுக்கு.

அப்படித்தான் ராஜிவ்கொலை மூலம் பெரும் கலவரம் தமிழகத்தில் வெடிக்கும் என்றுதான் தமிழகத்தில் கொன்றார்கள், கலவரம் வெடித்தால் பாதிக்க்படும் தமிழர்கள் புலி பின்னால் செல்வார்கள், பெரும் ரத்தகளறியினை தமிழகம் சந்திக்கும் என்பதான திட்டம் அது, ஆனால் தமிழகம் ஜெயலலிதாவினை முதல்வராக்கிவிட்டு, புலிகளை கைவிட்டது.

அதன் பின் தமிழகத்தில் இருந்து ஈழ ஆதரவு குரல் எழும்பும் போதெல்ல்லாம் டெல்லி ஒதுங்கியது, அப்படியே ஈழ பிரச்சினையிலிருதும் ஓதுங்கிகொண்டது.

வேறுகோணத்தில் பார்க்கபோனால் ஈழமக்களின் துயரத்திற்கு தமிழக பங்களிப்பும் பெரும் காரணம், இவர்கள் ஈழ ஆத்ரவு எனும் பெயரில் அவர்களை நாசமாக்கியவர்கள்.

இதோ வங்கம் அமைந்தாகிவிட்டது, வங்கதேச தீவிரவாதிகளை கைது செய்யும் பொழுதெல்லாம் மேற்கு வங்காளிகள் குதிப்பதில்லை, கொடி பிடிப்பதில்லை

ஆனால் இலங்கை தீவிரவாதிகளை விடசொல்லி இங்கு பெரும் ரகளை செய்கின்றார்கள், உண்மையில் இவர்கள் இப்படி எல்லாம் ஒப்பாரி வைக்கவில்லை என்றால் என்றோ பேரரிவாளன் மட்டுமாவது வெளிவந்திருப்பான்

இல்லாத ஈழத்திற்கே இப்படி குதிப்பவர்கள், ஈழம் அமைந்திருந்தால் தமிழகத்தை நிம்மதியாக விட்டிருப்பார்கள், சுடுகாடாக ஆக்கியிருப்பார்கள், நீங்களே பாருங்கள்.

இப்படி முடிக்கலாம், அதாவது இருகுழு சண்டையிட்டு கொண்டிருக்கின்றது, மூன்றாம் சக்திவாய்ந்த நபர் சமாதானம் பேச செல்கின்றார், அவரை சண்டையிட்ட ஒரு குழு கொன்றுவிடுகிறட்து,பேச வந்தவனை எல்லாம் கொல்கின்றது அக்குழு, என்னாகும்? எல்லோரும் சேர்ந்து அந்த கொலைகாரனை அடித்து கொல்வார்கள். கூடவே அப்பாவி மக்களும் செத்தார்கள்

அப்படித்தான் நடந்து முடிந்தது சகலமும், எல்லாம் நடந்து முடிந்த பின், அதாவது எல்லோரு பார்த்துகொண்டிருக்க நடந்து முடிந்தபின், திடீரென 2 பேர் வந்து என்ன ஆனது? உங்களுக்கு இரக்கமே இல்லையா? இந்த இனபடுகொலை உலகம் தாங்குமா? என்றேல்லாம் கத்தினால் அந்த 2 பேரையும் உலகம் எப்படி பார்க்கும்?

அதாவது சவ ஊர்வலத்தில் கூடவே வந்த ஒருவன், அடக்கம் முடிந்தபின் ஒருவன் என்ன இது ஒருவன் செத்துகிடக்கின்றானே அய்யொ…. என ஒப்பாரி வைத்தால் எப்படி இருக்கும்? உலகம் அவர்களை பைத்தியம் என்பார்களா? இல்லையா?

அந்த பைத்தியக்காரர்கள் தான் சீமானும், திருமுருகன் காந்தியும்

எப்படிபட்ட விசித்திரம் இது?

5 இலங்கையரையும் விடுவிக்க சொல்லி அவர்களின் சொந்த நாடு இலங்கையே ஒருவார்த்தை சொல்லாதபோது, அவர்கள் தமிழர்கள் அதனால் விடுவித்தே ஆகவேண்டும் என உள்நாட்டினர் ஊர்வலம் போகும் விசித்திரத்தை நாளை பார்க்கலாம். எப்படிபட்ட விசித்திரம் இது?

உலகில் எங்காவது இப்படி ஒரு நிகழ்வினை காண முடியுமா? தன் சொந்தநாட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை விடுவி என எந்தநாட்டு மக்களாவது போராடி கேள்விபட்டிருக்கின்றீர்களா?

இப்படி நாட்டுபற்றை வெளிபடுத்திய பின் தேசம் எப்படி வளரும்?

Stanley Rajan's photo.

சீனா அப்படி, அமெரிக்கா இப்படி, சிங்கப்பூர் அப்படி என சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?

மத்திய அரசுக்கு எமது கோரிக்கை எல்லாம் ஒன்றுதான், அந்த 5 அந்நிய நாட்டு தீவிரவாதிகளும் சிறையில் இருக்கட்டும், இதோ இருசக்கர வாகனத்தில் வருபவர்களை, இந்த தேசபற்றில்லா துரோகிகளை அப்படியே இலங்கை அனுப்பி வையுங்கள்

ஒரு காலத்தில் ஏதோ ஒரு தண்டனையாக ஒரிசா பக்கம் இருந்து ஒரு கூட்டமாகத்தான் சிங்களன் இலங்கை சென்றானாம்.

அதே தண்டனையினை இவர்களுக்கும் கொடுக்கலாம், இந்தோனேஷியா அருகே ஆளில்லா தீவுகள் ஏராளம் உண்டு, அங்கு அனுப்புங்கள்

அழித்தது யார் ? அழிந்தது யார்?

இந்தியா எங்களை அழித்தது, கலைஞரும் சோனியாவும் கொலைகார பாவிகள், இந்தியா உடையவேண்டும், நாசமாய் போகவேண்டும் என அவர்கள் ஆயிரம் சொல்வார்களாம்

ஆனால் நாங்கள் செய்த உதவிகள் இத்தனை, இப்படி எல்லாம் நாங்கள் விரட்டபட்டுத்தான் ஒதுங்கினோம் என சொன்னால் உண்மையினை சொன்னால் புலனாய்வு துறை மூலம் கொல்வார்களாம்.

அதாவது நீங்கள் எதுவேண்டுமானாலும் சொல்லலாம், நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாத்து பேசிவிட கூடாதா?

உங்கள் போராட்டம், உங்கள் நாடு எப்படியும் போகட்டும், ஆனால் அந்த தலைவனின் படமும், அவனின் கொள்கை கோட்பாடுகளும் இந்த தமிழ் நாட்டில் எதற்காக? இதனை எங்கள் தமிழக மக்களுக்கு நாங்கள் சொல்ல கூடாதா? அப்படி சொல்லும் போது ஏன் புலிகளின் பாதை தமிழகத்திற்கு பொருத்தமற்றது என சொல்லும்போது விமர்சனங்கள் வராதா?

உண்மையில் புலிகளை விமர்சிப்பது நானா? பாதிக்கபட்ட எத்தனையோ தமிழர்கள் ஐரோப்பாவிலும் கனடாவிலிருந்தும் எத்தனை தளம் நடத்துகின்றார்கள், எத்தனை பேர் எழுதிகுவிக்கின்றார்கள்?, எவ்வளவு பகிரங்கமாக எல்லாம் கலாய்கின்றார்கள்?

அவர்களை எல்லாம் என்ன செய்துவிட்டீர்கள்? புத்தகம் எழுதி புலிகளை கிழித்தது நானா? தமிழினியா? சிங்களனுடன் சேர்ந்த்து புலிகளை விமர்சிப்பது நானா கருணாவா? இந்த அழிவு தவிர்க்கபட்டிருக்கலாம் என சொல்வது நானா? கே.பத்மநாபனா?

நமது முயற்சிகளையும் தாண்டி லட்சகணக்கான சனம் சாகபோகுது எரிக், என நார்வேயிடம் கண்ணீர் விட்டது நானா? பாலசிங்கமா?

இப்படி எத்தனை ஆயிரம்பேர் விமர்சிக்கும் பொழுது, ஆப்பரேசன் லிபரேஷனில் பிரபாகரனின் உயிர் ராஜிவ் போட்ட பிச்சை என எத்தனை ஈழத்தவர் எழுதி தள்ளுகின்றார்கள்? அவர்களை எல்லாம் உங்கள் புலனாய்வுதுறை என்ன செய்தது?

எமது தேசத்தில் கொலைகுற்றத்தில் ஈடுபட்ட உங்கள் நாட்டவரை விடுதலை செய்ய சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?

அமைதிபடையினை அனுப்பியவர் குற்றவாளி என்பீர்களானால், அதனை அனுப்பசொன்ன ஜெயவர்த்தனே குற்றவாளி இல்லையா? அவரை தண்டித்தீர்களா?

சீமான் எனும் ஒரு பிரிவினைவாதி, பிரபாகரனின் தம்பி என சொல்லி எமது இளைஞர்களை திசைதிருப்பும்போது, உண்மையினை சொல்ல இந்த இந்தியனுக்கு உரிமை இல்லையா?

பிரபாகரனின் படம் தமிழகத்தில் ஏன் வேண்டும் என அவர்கள் சொல்லும்போது, ஏன் வேண்டாம் என சொல்ல எமக்கு உரிமை இல்லையா?

உங்கள் நாட்டு இளைஞர்கள் சுடுகாட்டில் உறங்குவதற்காக எமது இளைஞர்களையும் பலியிட முடியுமா? விட மாட்டோம்.

ராஜிவ் கொலைநடந்த அந்த நேரத்திலும், புலிகள் ஊடுருவியிருந்த அந்த அகதி முகாமிலும் ஒரு ஈழதமிழர் மீது ஒரு துரும்பு பட்டிருக்குமா? பட விட்டிருப்போமா? எங்கள் மனிதாபிமானம் அப்படி,

உங்கள் புலிகளின் மனிதாபிமானம் உலகறிந்தது.

ஐரோப்பாவில் வாழும் ஈழத்தவன் எவனாவது ஹிட்லர் வாழ்க என வீதிகளில் சொல்லமுடியுமா? சொல்லிவிட்டு அங்கு வாழ முடியுமா? காரணம் அவன் அழித்த அழிவு அப்படி. அவனை முற்றிலுமாக மறக்க நினைக்கின்றது ஐரோப்பா, அவனின் பாதிப்பு யாருக்கும் வந்துவிட கூடாது என மிக விழிப்பாக இருக்கின்றார்கள்.

அதே போன்ற ஒரு விழிப்புடன் தமிழகம் இருக்க நாங்கள் சொல்லகூடாதா?

எம்மை போன்ற எல்லோரையும் கொன்றுவிட்டு நீங்கள் சாதிக்கபோவது என்ன? அதாவது மக்கள் எப்பாடும் பட்டுவிட்டு போகட்டும், புலிகளின் புனிதமான பிம்பம் நீடுடி வாழவேண்டும், அந்த ஆசைதான் அல்லவா? மக்கள் வாழவேண்டும், அடுத்த தலைமுறை நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை அல்லவா?

முதலில் இந்தியாவில் அடைக்கலமாகி இருக்கும் ஈழதமிழர்களை, கடந்த 30 ஆண்டுகாலமாக இந்நாடு பாதுகாக்கும் அகதி ஈழத்தவர்களுக்கு என்ன கிழித்தீர்கள் நீங்கள்?

அவர்களை அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பவர் நாங்கள், நீங்களோ அந்த உங்களின் புலனாய்வுதுறையும் அல்ல.

அந்த மக்களுக்கு , உங்களின் சொந்தமக்களுக்கு ஒரு வேளை சோறு போட முடியாத நீங்கள் எல்லாம் கொலைமிரட்டல் விடுகின்றீர்களா? வெட்கமாக இல்லை?

அடிபொடிகள் தொல்லை

என்ன சொன்னாலும் அடிப்பொடிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை, 30 வருடமாக ஒரு இயக்கம் நடத்துவது எவ்வளவு கடினம்? அவன் நடத்தினான் ஒப்புகொள் என ஒரே சத்தம்

அடேய் ஒருவன் 31 வருடமாக உலகெங்கும் சாம்ராஜ்யமே நடத்துகின்றான், பெரும் சக்தி அவன், இந்திய உளவுதுறை அவனிடம் தோற்றுகொண்டிருக்கின்றது, அவன் பாகிஸ்தானோடு சேர்ந்து மும்பையில் தாக்குதல் கூட நடத்தினான், அந்த தாவூத் இப்ராகிம்

அவனை உலக இஸ்லாமியரின் ஒரே ஒப்பற்ற போராளியாக யாராவது நினைப்பார்களா? இஸ்லாமிய பெருமக்களே அடிக்க வருவார்கள், அந்த கடத்தல்காரன் வரிசைதான், கட்ட பஞ்சாயத்து வரிசைதான் பிரபாகரனுக்கும்

இருவரும் ஒன்றுதான், அவனுக்கு கராச்சி, இவனுக்கு வன்னிகாடு

அவனுக்கு டி கம்பெனி, இவனுக்கு இயக்கம், மற்றபடி செயல்பாடுகள் எல்லாம் ஒன்றுதான்.

யார் தமிழர்?

செட்டியார்களும் தெலுங்கர்கள், ஆந்திராவிலிருந்து வந்தவர்கள், புதிய சர்ச்சையில் அங்கிள் கோஷ்டி

# சிலப்பதிகார காலத்திலே உச்சத்தில் இருந்த இனம் அது, கடலில் மூழ்கிய காவிரிபூம்பட்டினம் என தமிழனின் உச்ச அடையாளத்தின் பெரும் சுவடு அந்த இனம், அதுவும் தெலுங்கராம்.

# செட்டி இனம் கம்பனுக்கே கொடை அளித்த இனம் என்பது வரலாறு, இந்தியா முழுக்க, ஏன் தென்கிழக்காசியா முழுக்க தமிழினமாய் அது செய்திருக்கும் காரியங்கள் தமிழரின் பெரும் கவுரவ சின்னம்.

# தமிழரின் தன்னிகரற்ற அடையாளமே , மூலாதாரமே தமிழரில்லை என்றால், # அந்த செட்டி இனத்தையே தமிழர் இல்லை என்றால், இனி யார்தான் தமிழர்?

# இனி ராஜபக்சே தான் யாரெல்லாம் தமிழர் என சொல்லவேண்டும் , நிச்சயம் அவருக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

இவர்களுக்கு என்ன சிக்கல்

இவர்களுக்கு என்ன சிக்கல் என தெரியவில்லை, இந்தியா செய்த முயற்சிகளை சொன்னால் நீ காங்கிரஸ்காரன், மதவாதி என்கின்றார்கள்.

மோடி ஈழத்தில் செய்துகொண்டிருக்கும் நல்ல விஷயங்களை கூடத்தான் பதிவு செய்திருந்தேன், அதனை எல்லாம் மறந்துவிட்டார்கள் போலும்

இதோ திடீரென்று ஒருவன் வந்து சோனியா யார்? இத்தாலி பாரில் அட்டெண்டராக இருந்தவர், நடனக்காரி அவரையா கொண்டாடுகிறாய் என்கின்றார்கள்? சோனியா என்ன பிரதமராக இருந்தாரா? அல்லது வார்டு கவுன்சிலராக கூட இருந்ததில்லை

அப்பனே, அப்படியே 1964 முதல் 1975 வரையிலான தமிழ்படங்களை பார், யார் ஆட்டக்காரி என்றும், அவர் இப்போது தமிழகத்தில் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்பதை பார்,

அதனை பற்றி சொல்லமுடியுமா? முடியாதல்லவா?

இதோ ஒருவர் https://www.facebook.com/selvaalien?fref=ufi புதிதாக வந்து குதிக்கின்றார், அதற்கு பதில் சொல், இதற்கு பதில் சொல், நீ இயேசு படம் வைத்திருக்கும் கிறிஸ்தவன், அதனால் காங்கிரசை ஆதரிக்கின்றாய் என ஏகத்துக்கும் சத்தம்.

ஈழநிலைப்பாட்டில் இந்தியாவின் நிலையினை சொன்னால் அது காங்கிரஸ் ஆதரவா? நாட்டுபற்று என்ற வகையில் அது வராதா?

இவர் எங்கிருந்து வந்தார் என தெரியவில்லை, கீழ்பாக்கம் மருத்துவமனை அல்லது ஏர்வாடி தர்காவில் ஏதும் எண்ணிக்கையில் ஒன்று குறைந்திருந்தால் தயவுசெய்து எனக்கு தெரியபடுத்துங்கள், நம்மால் முடிந்த சமூக சேவை ஒன்றை செய்யலாம்.

வெள்ளிகிழமை என்பதை தவிர என்ன சொல்ல, நாளை காலைக்குள் சரியாகிவிடலாம்

எனினும் பொழுதுபோக்கு வாய்பில்லாதோர், இவரை பயன்படுத்திகொள்ளலாம், 100% சிரிக்கலாம், உத்திரவாதம்

((அன்னார் இப்போது இங்கு வந்து குதிப்பார் பாருங்கள், பி ரெடி)

சட்டம் ஒழுங்கு என்றால் என்ன?

சட்டம் ஒழுங்கு என்றால் என்னவென்று கூட தெரியாத, ஏதோ ஒரு காட்டுமிராண்டி நாட்டில் இருப்பதாக நினைத்துகொண்டு இவர்கள் சொல்வதை காணுங்கள்

சிறையினை உடைத்து ராஜிவ் குற்றவாளிகளை மீட்பார்களாம், எப்படி இருக்கின்றது நிலை?

ஆனால் ராஜிவ் கொலை விசாரணை நடந்தபொழுது, அந்த அலுவலகமான மல்லிகையின் மீது தாக்குதல் நடத்தி கார்த்திகேயன் உட்பட எல்லோரையும் கொல்ல அதிரடி திட்டம் வைத்திருந்தான் சிவராசன், புலிகளுடனான வயர்லெஸ் தகவல் அதனைத்தான் சொன்னது, பின்னர் ஏனோ கைவிடபட்டது

அப்படி பட்டவர்களின் சிந்தனையின் தாக்கம் உருவான சிலரின் பதிவுகள் இப்படித்தான் இருக்கும், இருக்கட்டும்

13394175_10206523385178499_1816975580647816939_n

ஆனால் ஒரு டாஸ்மாக்கினை கூட் அடித்து நொறுக்கமுடியாதவர்கள் சிறையினை உடைப்பார்களாம்?, சட்டத்தை மதிப்பது மானங்கெட்டதனமாம்

இன்னும் என்னென்ன காரியங்களுக்கு மானம்கெட்ட தனம் என பெயரிடுவார்களோ தெரியவில்லை,

இவை எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கே சவால் விடும் விஷயங்கள்.

பத்மநாபா கொலை குற்றவாளிகள் தப்பிய விஷயத்தில்தான் இதற்காக கலைஞர் அரசே கலைக்கபட்டது, அந்த குற்றவாளிகளில் ஒருவன் தான் இன்று சிறையில் இருக்கும் சின்ன சாந்தன்.

அப்படியானால் கலைஞர் அரசு கலைக்கபட்டதன் அர்த்தம் என்ன? அவர் அரசு செய்தது தவறு, இந்த அரசு இவர்களை எல்லாம் விட்டு வைத்திருப்பது நியாயமா?

ஆனால் ஒன்று விரைவில் இவர்களால் இவர்கள் அண்ணன் சீமான் சிறைகாணபோவது உறுதி, விரைவில் அது நடக்கலாம்.

அடிபட்டு விழுந்த ஹீரோ

அடிபட்டு விழுந்த ஹீரோ போல எழுந்து விளாசுவார் விஜயகாந்த்: பிரேமலதா

# அதாவது மேடம், 1960ல் இருந்து வெற்றிகொடி நாட்டி வரும் ஒரு பிரபல டைரக்டர் எவ்வளவோ எடுத்து சொல்லியும், இப்பக்கம் வா அப்பக்கம் படுகுழி என “ஷூட்டிங்கில்” கெஞ்சிபார்த்தும் கேட்காமல் மலையிலிருது உருண்டு கிடப்பவர் கேப்டன், இனி எழுவது கொஞ்சகாலம் சாத்தியமில்லை.

# ஒருவேளை “வைக்கோ”ல் அப்பக்கம் இருக்கும் அடிபடாது என டைரக்டருக்கு சாகசம் காட்ட உங்கள் ஹீரோ நினைத்திருக்கலாம், ஆனால் அது பயங்கர பாறை என இப்பொழுதுதான் புரிந்திருக்கும் .

# அந்த டைரக்டர் சொன்னபடி கேட்டிருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா? அவர் அனுபவம் கொஞ்சமா? நல்ல ஹீரோ என்றால் அந்த டைரக்டரின் அனுபவத்தை பயன்படுத்தி இருக்கவேண்டாமா?

யாழ்பாணத்தில் இந்திய உதவியுடன் சீரமைக்கபட்ட விளையாட்டு அரங்கம்

யாழ்பாணத்தில் இந்திய உதவியுடன் சீரமைக்கபட்ட ஆல்பர்ட் துரையப்பா விளையாட்டு அரங்கினை 18ம் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைக்கின்றார், மோடிக்கு யாழ்பாண மக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன‌

13413708_10206522910486632_2120966381677305486_n

# அங்கிள் சைமன் கோஷ்டி இந்த செய்திகளை எல்லாம் சொல்லவே சொல்லாது, அட சொல்லவேண்டாம் இனபடுலை நடந்த நாட்டிற்கு இந்திய உதவி ஏன்? என் வரிப்பணம் ஏன் என்றாவது குட்டிகரணம் போடலாம் அல்லவா? செய்யமாட்டார்கள்.

# அது என்னவோ தெரியவில்லை, காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்தால் தமிழகத்தில் இம்மாதிரியான விஷயம் அணல் பறக்கின்றது, அணுவுலை பிரச்சினை பூதகரமாக்கபடுகின்றது, ஆனால் பாஜ ஆட்சியில் ஈழநாடு அமையவுமில்லை, போர்குற்ற தண்டனையுமில்லை, கூடங்குள அணுவுலை மூடபடவுமில்லை ஆனால் ஒரு சத்தமுமில்லை. என்னவோ ஒரு வகையான அரசியல் இது என்பது மட்டும் புரிகின்றது.

# அப்படித்தான்யானை இறவு யுத்த புலிகள் வெற்றியிலும் சர்ச்சை நடந்தது, ஆனால் அன்று வாஜ்பாய் அரசு அல்லவா? தமிழகத்தில் ஒரு சத்தமுமில்லை, அன்று காங்கிரஸ் அரசு இருந்திருந்தால் ஈழதுரோகம் என பொங்கி இருப்பார்கள்,

# சீமானியர், திருமுருகன் காந்தி கோஷ்டி போன்ற உணர்வாளர்களுக்கு முகத்தில் பெரும் கரிபூசும் சம்பவம் இது, அதுவும் புலி ஆதரவாளர்கள் உண்மை வரலாறு தெரிந்தால் நிச்சயம் சயனடை தேடுவார்கள், அப்படி கிடைக்காவிட்டால் எலிமருந்தை தின்றுவிட்டோ அல்லது ஓலை பட்டாசு மீதோ படுத்துகொண்டோ அழும் சம்பவம் இது

# அதாவது பிரபாகரனின் முதல் கொலை ஆல்பர்ட் துரையப்பா எனும் யாழ்பாண தமிழ்மேயரை கொன்றது, அதாவது அவர்தான் அன்னாரின் முதல் எதிரி, துரோகி, புள்ளிகணக்கு எல்லாம், அதன் பின்புதான் பிரபாகரன் ஹீரோ ஆனார்.

# அந்த துரையப்பா பெயரில் ஸ்டேடியமாம், அதனை சீரமைத்து கொடுத்து திறந்து வைப்பதும் இந்திய அரசாம், எப்படி தாங்கிகொள்ளபோகின்றீர்கள் அங்கிள் பாய்ஸ்?