வருமான வரிதுறைக்கு ஒரு பெரிய வேலை தீர்ந்தது,

வருமான வரிதுறைக்கு ஒரு பெரிய வேலை தீர்ந்தது, இனி ராமதாஸ் சொத்து கணக்கினை பச்சமுத்துவிடமும், பாரிமுத்துவின் சொத்துகணக்கினை ராமதாஸிடமும் விசாரித்தால் போதும்.

ஆளாளுக்கு அசராமல் ஒப்புவிக்கின்றார்கள், எல்லாம் அந்த மதன் என்பவரால் வந்தது

பிரபாகரனின் ராசியினை பலர் அறிந்திருக்கமாட்டார்கள், அவரோடு படமெடுத்தவர்கள் எல்லாம் ஒன்று படமாவார்கள், அல்லது படுகுழிக்குள் கிடப்பார்கள் அல்லது வைகோ,நெடுமாறன் போல‌ அனாதை ஆவார்கள்.

அவர் வாங்கி வந்த வரம் அப்படி, அவர் குடும்பத்தார் முதல் இயக்கத்தார், தமிழகத்து கூலிகள் வரை நிலை அதுதான். அவரின் அக்கா அண்ணன் பிரபாகரனோடு இருந்த படம் பார்த்திருக்கின்றர்களா? நிச்சயம் இல்லை, அவர்கள் கனடாவில் நலமாக உள்ளனர்.

படமெடுத்தவர்களுக்கே அந்தபாடு என்றால், அவர் வேடத்தில் நடித்த மதன் என்னபாடுபடுவார் என்பது புலிபார்வை டிரெய்லர் பார்த்த அன்றே விளங்கிற்று

தஞ்சை கோயில் செண்டிமெண்ட் போலவே பிரபாகரன் சென்டிமெண்டும் அபாயமானது என்பது நிரூபிக்கபட்டுகொண்டிருக்கின்றது.

திருமுருகன் காந்தியும், இன்னும் பல திரை நட்சத்திரங்களும்

திருமுருகன் காந்தியும், இன்னும் பல திரை நட்சத்திரங்களும் கூவி கூவி அழைத்த பேரணிக்கு கடைசி நிமிடத்தில் அனுமதி கிடைக்கவில்லையாம், “சின்ன பசங்களா, அப்பாலிக்கா போ, இப்புடி எல்லாம் போப்புடாதுப்பா.” என காவல்துறை அலைகழித்துகொண்டிருக்கின்றதாம், முறையான அனுமதிக்கு சிக்கலாம்.

இதே கலைஞர் அரசு என்றால் வைகோ சீற்றம், ராமதாஸ் முணகல், திருமா அலறல், சீமான் “என் உறவே…” என பிளிரல், திருமுருகன் காந்தியின் விவர அறிக்கை, மத்திய அரசு மீது தாக்குதல், “தமிழினி துரோகி கருணாநிதி” என கடும் அமர்க்களம் நடந்திருக்கும்,

இன்று என்ன நடக்கின்றது? ஜெயலலிதா அரசு எனும் பேச்சே இல்லை, மோடி அரசு எனும் சத்தமே இல்லை, எல்லாம் ஏதோ பொந்திற்குள் தலையினை இட்ட தவளையினை போல “அரசு அனுமதி” என முணகிகொண்டிருக்கின்றன, அதனை முழுமையாக கூட முணக முடியாததுதான் பரிதாபம்.

ஆக உங்களை எல்லாம் பேச சொல்லி சுதந்திரம் கொடுத்து பிரபலமாக்கியது கலைஞர்தான் என உணர்ந்துகொண்டு திருப்பெரும்புதூர் வாசலில் இருந்து ஊர்வலம் தொடங்கி கோபாலபுரத்து வாசலில் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிடுங்கள்.

எங்கே மானமும் வீரமும் மிக்க, ஒரு நல்ல தமிழ் தகப்பனுக்கும் தாய்க்கும் பிறந்திருந்தால் இப்படி சொல்லுங்கள் பார்ப்போம்

“தமிழினி துரோகியான, 7 தமிழர் உயிர்குடிக்க தயாராகும் ரத்தவெறி பிடித்த, தமிழருக்கு பெரும் துரோகம் செய்துகொண்டிருக்கும் வந்தேறி கன்னட ஜெயலலிதாவினை எதிர்த்து இம்மண்ணில் புரட்சி வெடிக்கும்.

எம் தமிழர்களை வெளியிட இந்த வடநாட்டு மோடி யார்? எவன் கொடுத்த அதிகாரம்?, இந்த கன்னட ஜெயலலிதா யார்? எவன் இவர்களுக்கு அடங்குவான்? அடங்க மாட்டோம், மண்டியிடா மானம்

இன்னும் கொஞ்சநாளில் இந்த வந்தேறி அரசினை மாற்றுவோம், 7 தமிழரை விடுவிப்போம்”

என சொல்லிபாருங்கள் பார்க்கலாம்.

(ஒரு மோட்டார் பைக்கினையே அரசினை மீறி இயக்கமுடியாத நீங்களா ராஜபக்சேவினை தண்டித்து, கட்சதீவினை மீட்டு, அகண்ட ஈழம் அமைத்து, ………………….

இதில் சிறை உடைப்போம் என சவுடால் வேறு..)

மங்குணிகள் இப்படித்தான், கலைஞரும் காங்கிரசும் என்றால் சீறுவார்கள், மோடியும் ஜேவும் என்றால் கண்களை மலங்க மலங்க விழித்துகொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டிருப்பார்கள்

ஆக உங்களுக்கு வேலை கொடுக்க கலைஞர்தான் முதல்வராக வேண்டும் இல்லையா? இதற்காகவாவது அடுத்தமுறை அவரை முதல்வராக்குங்கள்

நான் என்ன சொல்வது, நீங்களே அந்த முடிவில்தான் இருப்பீர்கள்.

கிட்டு எனப்படும் கிருஷ்ணகுமார்

ஏய் கோடாரி காம்பே, எம் இனத்து மாவீரர்கள் தெரியுமா? அவர்கள் படைத்த வீரகாவியம் தெரியுமா? அதை தெரிந்தால் இப்படி எல்லாம் பேசுவாயா? கிட்டு முதல் தீபன் வரை எமது காவிய நாயகர்களை படி, பின்பு எழுது என கொதித்துவிட்டு சென்றார் ஒருவர்.

மற்றவர் விரகாவியங்களை ஒவ்வொன்றாக எழுதலாம், முதலில் கிட்டுவினை பார்க்கலாம்.

கிருஷ்ணகுமார் எனும் சுருக்கம் கிட்டு, இந்தியாவில் தான் பயிற்சிபெற்றார், இடங்களில் ஓடி ஓடி தப்பியவர், பிரபாகரனின் திருமணத்திற்கு காரணம் இவர்தான், இதற்கு மேல் அச்சம்பவத்தை கிளர‌ வேண்டாம்.

போராளி சபாரத்தினத்தை சுட்டுகொன்றவரும் கிட்டு தான்.

Stanley Rajan's photo.

சக போராளி மாத்தையாவுடன் போட்டி, ஏன் பிரபாகரன் பெயரையும் மிஞ்சி சில இடங்களில் அவர் பிரபலமானார், கொஞ்சநாளில் குண்டுவீச்சில் கால் இழந்தார், எப்படி? மகா ரகசியமாக காதலியினை சந்திக்க செல்லும்போது தாக்கபட்டார், பழி மாத்தையா மீது சுமத்தபட்டாலும் பிரபாகரன் அமைதியாகத்தான் இருந்தார், ஏன் என்றால் தெரியவில்லை.

ஆனால் அவர் அனுமதி இன்றி இது சாத்தியமில்லை. காரணம் எந்த நடவடிக்கையும் சம்பந்தபட்டவர் மேல் பிரபாகரன் எடுக்கவில்லை.

இதன் காரணமாக சம்பந்தமே இல்லாமல் நடந்த‌ புலிகளின் “கந்தன் கருணை” படுகொலையினை இன்னொருநாள் பார்க்கலாம்.

அமைதிபடை காலத்தில் காதலி சிந்தியாவுடன் கொழும்பில் திருமணம், தலமை தாங்க யாரை அழைத்தார்கள் தெரியுமா? இலங்கை அதிபர் பிரேமதாசா, ஆனால் அவர் வரவில்லை, பின்னாளில் விருந்துகொடுத்ததாக செய்தி, அதாவது சிங்கள ராணுவத்தை எதிர்த்து பல புலிகள் செத்த இயக்கத்தின் பிராதன நாயகன் கிட்டு விருந்து உண்டது சிங்கள அதிபருடன்.

அதன் பின் ஊனமுற்றவராக பேச்சு வார்த்தை, அரசியல் துறை என இருந்தார்.

அதன்பின் நடந்ததுதான் விசித்தரம், இந்திய உளவுதுறையுடன் தொடர்பில் வந்தார் கிட்டு, டெல்லி வந்தார் ராஜிவ் கொலைக்கு முன்பான கொஞ்ச காலம் முன்பாக அவரை சந்தித்தார், அமைதிபடை மோதல்களை மறந்து சமாதானமாவோம் என உருகினார், ராஜிவும் அவரை வாசல் வரை வந்து அனுப்பினார், அதாவது புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் இல்லை என நம்பவைக்கபட்டார். பரிதாபம்!

ஒரே நேரத்தில் சிங்களனுடம், இந்திய உளவுதுறையிடமும் தொடர்பில் இருந்த வீரம் இது, இவர்கள் செய்தால் தந்திரம், இன்னொருவர் செய்தால் துரோகம், ஈனம்.

ராஜிவ் கொலை நடந்தபின் முதலில் இந்திய உளவுதுறை கிட்டுவினை தொடர்புகொண்டது, “நாங்களே அதிர்ச்சியில் இருக்கின்றோம், பிரபாகரன் சாப்பிடாமல் கிடக்கின்றார், பொட்டு அழுது அழுது கண்கள் வீங்கி கிடக்கின்றார்…” என ஒப்பாரி வைத்தார் கிட்டு, இந்திய உளவுதுறை முதலில் நம்பியது.

ஆனால் விசாரணையும், புலிகளின் வயர்லஸ் தகவலும் சரியாக புலிகளை வளைக்க, கிட்டுவிடம் இந்திய உளவுதுறை திகைப்பில் கேட்டது “நம்ப வைத்தா கழுத்தினை அறுத்தீர்கள்?”

கிட்டு சொன்னார் “இது எமது இயக்கத்தின் தந்திரோபாய நடவடிக்கை, ஒரு ரகசிய தாக்குதல்”.

அதன் பின் என்ன செய்தார்? எந்த பிரேமதசா திருமணத்திற்கு விருந்தளித்தாரோ, அவருக்கே வெடிகுண்டு அனுப்பினார், செத்தார் பிரேமதாசா.

பின் ஒரு கட்டத்தில் மாத்தையா இந்திய உளவுதுறையிடன் தொடர்பில் இருக்கின்றார் என இவர் புகார் சொல்லி பிரபாகரனால் 1000 போராளிகளுடன் கொல்லபட்டார் மாத்தையா. எப்படியோ கால் போனதற்கு மாத்தையாவினை பழிவாங்கினார் கிட்டு.

இந்திய உளவுதுறை தன்னிடம் சம்பளம் வாங்கி ,தனது நாட்டில் பயிற்சி பெற்று, ஆயுதமும் பெற்று, உணவும், உறைவிடமும் பாதுகாப்பும் பெற்று, தன் நாட்டு தலைவரையே கொன்ற கிட்டுமீது கடும் கோபத்தில் இருந்தது, கப்பல் நிறைய ஆயுதங்களுடன் அந்தமான அருகே வந்த கிட்டுவினை கப்பலோடு போட்டு தள்ளியது இந்தியா.

இப்படி நம்பவைத்து கழுதறுக்கும் துரோகத்திற்கு, உண்ட வீட்டிற்கே குண்டு வைக்கும் நன்றிகெட்ட தனத்திற்கு பெயர்தான் மாவீரம், இப்படி செய்தால் அவர் காவிய நாயகர்.

எத்தனை பச்சை துரோகங்கள், எத்தனை மனித தன்மையே இல்லா நன்றிகெட்ட தனங்கள் இவற்றின் உருவமெல்லாம் காவியம், ஆவியம் என சொல்வதை சீமானோடு நிறுத்தி கொள்ளுங்கள், அல்லது திருமுருகன் காந்தி என்பவனிடம் சொல்லுங்கள்.

இன்னும் இங்கு வந்து அவன் வீரம் தெரியுமா? இவன் சாரம் தெரியுமா? என சொன்னால் இன்னும் அதிக தகவலுடன் புலி முகத்திற்கு பின்னால் இருக்கும் துரோக, கோழை முகம் ஒவ்வொன்றாக உரிக்கபடும்.

இவை எல்லாம் ஏராளமான இடங்களில் இணையத்தில் பதியபட்டவை,இன்றும் இருப்பவை, ஏராளமானோர் எழுதிகொண்டிருக்கும் விஷயம்.

சந்தேகமிருந்தால் உங்கள் புலனாய்வு துறையிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்