எப்படி ஏழு தமிழர் விடுதலையினை ஆதரிக்காமல் இருக்கலாம்?

எப்படி நீ ஏழு தமிழர் விடுதலையினை ஆதரிக்காமல் இருக்கலாம், சஞ்சய் தத் வெளிவரவில்லையா? ஏய் சல்மான் கான் கார் ஏற்றிய வழக்கு என்ன ஆனது? டெல்லி ரேப் என்ன ஆனது அவர்கள் எல்லாம் வெளிவரும்போது, மான தமிழர் வருவது உனக்கு பொறுக்கவில்லையா? என ஒன்று ஓலமிட்டுகொண்டிருக்கின்றது

அன்னார் பிறக்கும்போழுதே மூளை இல்லையா? அல்லது வளர மறுத்ததா அல்லது சீமானிடம் அடகு வைத்துவிட்டாரா என்பது தெரியவில்ல்லை, இல்லாவிட்டால் இப்படி அபத்தமாக ஒப்பீடுகளை தரமாட்டார.

சஞ்சய் தத்மீது கொலை வழக்கா? அவர் யாரை கொன்றார், ஆயுதம் பதுக்கினார். சல்மான் திட்டமிட்டா அபலைகள் மீது கார் ஏற்றினார்? வேண்டுமானால் மறு வழக்கு தொடு போ. டெல்லி ரேப் பற்றி பேசும் உனக்கு நாவரசு கொலையும், சரிகா ஷா ஈவ் டீசிங் சாவு எல்லாம் மறந்துவிட்டதா?

நீர் சொன்னெதெல்லாம் உள்நாட்டு குற்றங்கள், ஆனால் அடுத்த நாட்டுக்காரன் திட்டமிட்டு வருவான் திருப்பெரும்புதூரில் தீவிரவாத தாக்குதல் நடத்துவான், ஒரு தலைவனோடு மக்களையும் கொல்வான், அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையா? கவுரவ கொலையாளி எத்தனை பேர் உலாவுகின்றனர்.

அட அவ்வளவு ஏன்? நாம் தமிழர் முத்துகுமாரின் கொலையாளிகள் கைதுசெய்யபட்டனரா? சீமானே அதைபற்றி கேட்கவில்லையே ஏன்?

கவனி சென்னையில் பத்மநாபா கொலையாளிகளை இந்த நாடு தண்டித்ததா? அது அவர்கள் கோஷ்டி சண்டை என ஒதுங்கிய நாடு இது. ஆனால் அதற்காக அடுத்த 11 மாதத்தில் பெரும் படுகொலையினை இந்தியர்கள் மீது நிகழ்த்தும்போது சும்மா இருக்குமா?

ராஜிவ் கொலை ,இந்திரா கொலையாளி, காந்தி கொலையாளி, கசாப், அப்சல் குரு, மேமன் என்ற வரிசையில்தான் இந்த 7 பேரும் வருவார்கள் அப்பனே

கசாப்பினையும், குருவினையும் வெளியே விட்டுருந்தால் நீர் சொல்வதில் அர்த்தமுண்டு. ஆனால் கொடும் தீவிரவாத அந்நிய தாக்குதலுக்கும், உள்நாட்டு குற்றங்களுக்கும் வித்தியாசம் தெரியாத ஆளா நீர்?

அந்தோ பரிதாபம், உம்மை போன்ற குடிமகனை கொண்டிருக்கும் தேசத்தை பற்றி பரிதாபபடாமல் என்ன செய்ய?

ஆனாலும் நீர் வழக்கறிஞராக இருந்தால் ராம்ஜெத்மலானி எல்லாம் என்றோ அமேசான் காட்டுக்கு ஓடியிருப்பார், உங்கள் வாத திறமை அப்படி.

# உன்னை பெற்றதில் அவமானம் அடைகிறது நாடு

இறுதிபோர் சாட்சி…

இறுதிபோரில் புலிகள் பொதுமக்களை கொடூரமாக தாக்கியதற்கும், காயமடைந்த பொதுமக்களை சுட்டுகொன்றதற்கும் பெரும் சாட்சியான மருத்துவர் வரதராஜாவுக்கு அடைக்கலம் வழங்கியது அமெரிக்க அரசு

# இனி எவனாவது சிங்களனின் போர்குற்றம், இனபடுகொலை, இன அழிப்பு என அமெரிக்காவிடம் புகார் கொடுக்கமுடியும்?, இவரை ஏன் அங்கு அழைத்து வைத்திருக்கின்றார்கள் என்பது புரியவேண்டியவர்களுக்கு புரியும்.

# ஆனாலும் இவரை அமெரிக்கா எப்படி பயன்படுத்தபோகின்றது என்பது இனிதான் தெரியும், சந்தடி சாக்கில் ராஜபக்சேவிற்கும் செக் வைக்கலாம்.

# ஏற்கனவே 2002ல் சிங்கள ராணுவத்தின் சிலகொலைகளை பற்றி நார்வே சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றபொழுது, வேண்டாம், புலிகளும் அவ்வாறான கொலைகளை செய்திருக்கின்றார்கள் இதனை பெரிதாக்கவேண்டாம் சிக்கல்வரும் என தடுத்தவர்தான் ஆண்டன் பாலசிங்கம்.

எங்கள் தங்கம் …

எங்கள் தங்கம் பிரபாகரனை பற்றி என்ன நினைத்தாய், அவன் சிகரெட் பிடிக்கமாட்டான், சாராயம் குடித்ததில்லை, மனைவி தவிர வேறு பெண்ணை தொட்டதில்லை அப்படி ஒரு நல்லவன் என குதிக்கின்றது ஒரு விழுது

இது என்ன தகுதி?, அவன் அசைவம் சாப்பிட்டதில்லை, புகை பிடித்ததில்லை, கண்டதையும் குடித்ததில்லை, திருமணம் கூட சாவதற்கு 1 மணிநேரம் முன்புதான் செய்தான், அவன் தான் ஹிட்லர், அவனை மிக நல்ல மனிதனாக ஏற்றுகொள்வீர்களா?

செய்தாலும் செய்வீர்கள், ஏற்கனவே வழிகாட்டி என்றீர்கள்.

சரி இன்று தமிழகத்தில் புகை பிடிக்காத, குடிக்காத மனைவிகளை மட்டுமே தொட்ட கலைஞர் கருணாநிதி இருக்கின்றார், அவரை மட்டும் ஏன் திட்டி தொலைக்கின்றீர்கள்?, அவரையும் நல்லவன் என கொண்டாடுங்கள்

சீமானை ஏன் சாடுகின்றாய் ..

சீமானை ஏன் சாடுகின்றாய் அவர் தமிழ்நாட்டில் தமிழர் ஆளலாம் மற்றவர் எல்லாம் வாழலாம் என்றுதானே சொல்கின்றார், இதிலென்ன இனவாதம் கண்டாய் என்று மல்லு கட்டுகின்றனர்

# இலங்கையில் சிங்களனும் அதனைத்தான் சொல்கின்றான், இது சிங்கள நாடு 80% நாங்கள்தான், இங்கு யாரும் வாழட்டும் நாங்கள்தான் ஆளுவோம் என்கின்றார்,சிங்களன் செய்வது அப்படியானால் சரிதானே என்றேன்.

# பின்னர் ஏன் பிரபாகரன், புலிக்கொடி என உங்கள் அண்ணன் முஷ்டி தூக்குகின்றார்?ஈழம் அமைப்போம் என முழங்குகின்றார்?

# பொறு அண்ணனிடம் கேட்டு வருகின்றேன் என சொல்லிவிட்டு அடிமை சென்றிருக்கின்றது.

(இப்பொழுது சிலர் ஓடிவந்து அப்படி அல்ல, ஈழ தமிழன் தேசிய இனம், அது நாடு அடைய உரிமை உள்ள இனம் என்பார்கள், சரி அப்படி உரிமை உள்ள இனம் வெள்ளையன் சுதந்திரம் கொடுக்கும்போதும், இது சிங்களநாடு என அறிவிக்கும்போதும் ஏன் பொத்திகொண்டு இருந்தார்கள் என கேட்டால் பதில் இருக்காது)

மற்றவர் காதலுக்குத் தண்டனை…

உமா மகேஸ்வரன் ஊர்மிளா எனும் போராளியினை காதலித்தார் என்பதற்ககாக சென்னை பாண்டிபஜார் வரை சுட்டவர் பிரபாகரன்.

அதன் பின் பிரபாகரனின் முகாமில் சமையல் வேலை செய்துகொண்டிருந்த தியாகு என்பவருக்கும், ஜூலி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு ஜூலி கர்ப்பமானாள். இயக்க விதிகளை மீறியதாக அவர்கள் கைகள் கட்டப்பட்டு இருவரையும் முழங்காலில் இருக்கவைத்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

Stanley Rajan's photo.

ஜூலிக்கும் தியாகுவிற்கும் மரணதண்டனை கொடுப்பதில் தங்களுக்கு இஸ்டமில்லை. தலைவருக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதியா என்று கருணா கூறியிருந்தார்.

ஆனால் பின்னர் பிரபாகரன் திருமணம் செய்தபோது மதிவதனி கர்ப்பமாக இருந்தார். அதுவும் பாலசிங்கத்திடம் மதிவதனி முறையிடவில்லை என்றால் நிலமை சிக்கலாகி இருக்கும். எனினும் இதனை காட்டி புலிகள் இயக்கம் உடையும் நிலைக்கு சென்றது

பிரபாகரனுக்காக போராட வந்தீர்களா? அல்லது ஈழத்திற்காக வந்தீர்களா என கேட்டு நிலமையினை சரியாக்கினார் பாலசிங்கம். ஆனால் பின்னாளில் இயக்கம் பிரபாகரனுக்காகவே நடத்தபட்டது.

இப்படி ஆரம்பம் முதலே தனக்கொரு நியாயம், அடுத்தவருக்கொரு நியாயம் என வாழ்ந்தவர்தான் பிரபாகரன்.

நன்றி :http://salasalappu.com

(கவனியுங்கள், மதிவதனியினை உண்ணாவிரத போராட்ட களத்திலிருந்து கடத்தியவன் கிட்டு, அதாவது பாட்டன் ராவணன் வழியில் கடத்தலாம்

ஆனால் பாட்டன் வழியில் களங்கமில்லாமலா மதிவதனி கழுத்தில் தாலி கட்டினார் சீமானின் அண்ணன்)

அமெரிக்கா ப்ளோரிடாவில் துப்பாக்கி சூடு

பிரிட்டனுக்கு எதிரான குடும்பசண்டையில் வாஷிங்டன் தலமையில் ஆயுதம் ஏந்தி விடுதலை பெற்றது அமெரிக்கா. போராட்ட காலத்தில்  எல்லோர் கையிலும் ஆயுதம் இருந்தது, ஆனால் நாடு விடுதலை அடைந்தாலும் அது நீடித்தது ஏன்?

ஒருவேளை பிரிட்டன் அரசுபோல அமெரிக்க அரசு மக்கள் விரோத கொடுமையான அரசாக மாறினால் அதனை அகற்ற மக்கள் உடனே ஆயுதம் தூக்கவேண்டுமாம்.  அதனால் அந்த ஆயுத உரிமை கொடுக்கபட்டே இருந்தது. உள்நாட்டுபோர் எனும் பெரும் குழப்பம் முடிந்தபின்னும் அந்ந உரிமை இன்னும் தொடர்கின்றது.

Stanley Rajan's photo.

மக்கள் அரசினை எதிர்க்கத்ததான் ஆயுதம் தூக்குவார்கள் மற்றபடி அமைதியாகத்தான் இருப்பார்கள் எனும் வாஷிங்டனின் நம்பிக்கை இன்று பொய்த்து கொண்டிருக்கின்றது.  அமெரிக்கா ப்ளோரிடா மாகாணம் ஓர்லாண்டோவில் வழக்கம் போல இன்று துப்பாக்கி சூடு. ஆனால் இம்முறை 50ஐ தாண்டுகிறது பலி.

அமெரிக்காவில் பஸ் டயர் கழண்டாலும் நாங்கள் தான் செய்தோம் என சொல்லும் ஐஎஸ் இயக்கம் இதனை விடுமா? உரிமை கொண்டாடுகின்றது.

இந்த சட்டத்தை எப்படி மாற்றுவது என அமெரிக்கா கடும் தலைவலியில் இருக்கின்றது, ஆயுதம் என்பது நமது சமைலறை கத்திபோலவே பழகிவிட்ட சமூகம் அது விடுமா? விடாது, அமெரிக்கா கையினை பிசைந்து நிற்கும் தருணமிது.

அமெரிக்காவில் எல்லோரும் ஆயுதம் வைத்திருந்தும் இம்மாதிரியான நிகழ்வுகள் எப்பொழுதாவதுதான் நடக்கும். எவனாவது மனநிலை பாதிக்கபட்டவன் சுடுவானே அன்றி, கும்பலாக சுட்டு சண்டையிட மாட்டார்கள். ஒரு வேளை இந்தியாவில் மட்டும் இப்படி வசதி இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அங்கிள் கோஷ்டி எல்லாம் எவ்வளவு அட்டகாசத்தில் இறங்கி இருக்கும்? நினைத்தாலே பகீரென்கிறது.

வரும் 19ம் தேதி பத்மநாபா நினைவுநாள்…

 • திமுக ஏன் தன் மீதான இனபடுகொலை விமர்சனத்திற்கு பதிலளிக்கவில்லை, ஏன் வைகோவினை கண்டிக்கவில்லை, ஏன் ஒருவார்த்தை பேசவில்லை என பலர் சலசலக்கின்றனர்

  அள்ளி வீச ஏராளமான பாயிண்டுகள் திமுகவிடமும் உண்டு, ஒரு நிமிடத்தில் வீசலாம், ஆனால் சிக்கிகொள்வார்கள் எப்படி?

  1990ல் பத்மநாபா அடைக்கலம் கேட்டு கெஞ்சியபோது, எங்காவது போய் தொலையுங்கள் என விரட்டியது கலைஞர்தான், உரிய பாதுகாப்பு இல்லாமல் அவர் அபலையாய் சென்னையில் அலைந்தபோதுதான் சகல ஆயுதங்களுடன் வந்த புலிகள் பத்மநாபாவினை கொன்றனர். அந்நேரம் ஏதோ மகுடிக்கு உட்பட்ட மயங்கிய நிலையில் திமுக இருந்தது.

  ஏதோ ஒரு சக்தி திமுகவினை இயக்கியது, அதனை சொல்ல திமுகவினால் முடியாது, அது பல சிக்கல்களை கொண்டுவரும் விஷயம்.

  வெற்றிமுகத்தில் இருந்த அமைதிபடையினை அழைக்க கலைஞர் கொடுத்த அழுத்தமும் குறிப்பிடதக்கது.

  மறைமுகமாக பத்மநாபா படுகொலைக்கு திமுக தான் காரணம், புலிகள் பலம்பெற திமுகதான் காரணம் என இன்னும் பல சர்ச்சைகள் வரும்.

  பழி துடைக்கின்றேன் என முகத்தை துடைத்து புண்ணாக்க திமுக விரும்பவில்லை, அது அமைதி காக்கின்றது, அரசியல், அவர்கள் பிரச்சினை.

  நமக்கென்ன சொல்லுங்கள் புட்டு புட்டு வைக்கலாம், வரும் 19ம் தேதி பத்மநாபா நினைவுநாள், அன்றைக்கு தெரியும் கலைஞர் புலிகளுக்கு உருகி உருகி உழைத்த விதம்.