முகநூல் கடவுளிடம் புகார்

தாங்கமுடியாத துயரில் ஏதோ ஒரு சோம்பி உள்ளம் உடைந்து கதறியிருக்கின்றது, கடவுள் அவர்களை திரும்பியோ, குனிந்தோ, நிமிர்ந்தோ பார்க்கமாட்டார் அல்லவா, அதனால் முகநூலை படைத்தாளும் யூத கடவுள் மார்க்கரிடம் கதறியிருகின்றார்கள், அவர் என்ன பிரச்சினை என கேட்டிருக்கின்றார்

உலகின் கடவுள் பெருமாள், முகநூல் கடவுள் நீர், எமது கடவுள் பிரபாகரன் அவரை இந்த இந்தியன் விமர்சித்துவிட்டான், எங்கள் தற்கொலைபடை கலைஞரால் கலைக்கபட்டது, இல்லை என்றால் அவனை முடித்திருப்போம், ஒரு குப்பி சயனைடு இருந்தால் கடித்திருப்போம், ஆனால் ஒன்றும் இல்லை உங்களிடம் வந்தோம், அவனை விரட்டுங்கள்.

மார்க் கடவுள் என்னிடம் வந்தார், அவர் போராளியாமே, அவரை ஏன் விமர்சித்தாய் என்றார்

போராளிகள் என்ன கடவுளா? விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அதுவும் எல்லோரும் எழுதிய பின், அதுவும் 7 வருடம் கழிந்தபின் தான் நான் எழுதினேன் என்றேன்

இல்லை இல்லை விளக்கம்போதாது, அவர் அராபத், மாவோ, சே வரிசையாமே, என்றார்

அய்யன்மீர் உங்கள் ஊர் மர்லன் பிராண்டோவும், எங்கள் ஊர் சிவாஜியும் நடிகர்தான், எங்கள் ஊர் சாவித்திரியும் நடிகைதான், ஆனால் அவர்களை விட மிக சிறந்த நடிப்பினை வெளிபடுத்தும் நடிகை சன்னி லியோனையும், அபெல்லா டேஞ்சரையும் நீங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்வீர்களா?

சன்னி லியோனின் நடிப்பிற்காக இந்த வருடம் ஆஸ்கர் கொடுக்கபடுகின்றது என அறிவிக்க முடியுமா? இவ்வளவிற்கும் சர்வதேச நடிகை என்றேன்

மார்க் யோசித்தார், பொறு விசாரித்துவிட்டு வருகிறேன் என சென்றிருக்கின்றார்.

மொத்தத்தில் அவர்கள் புலனாய்வு குழுவின் சாதனை இதுதான், இதனை செய்ய கோயம்பேடு கோவிந்த்சாமி போதும்.

இதில் பெரும் காமெடி என்னவென்றால், இஸ்ரேலை கண்டித்து, படுபயங்கர மொசாத்தினை கண்டித்து, அமெரிக்காவினை விமர்சித்தெல்லாம் எவ்வளவோ எழுதியிருக்கின்றோம்

ஆனால் யூதரான மார்க் ஒரு வார்த்தை கூட தடை செய்யவில்லை

ஆனால் அழிந்துவிட்ட ஒரு இயக்கத்தின் எச்சங்கள் அட்டகாசம் தாங்கமுடியவில்லை.

 

கபாலிடா …..

கபாலி படம் அப்படி, பாடல் இப்படி என்கின்றார்கள், சிலர் அது மலேசிய ரப்பர்தோட்ட தமிழர் கதை என்கின்றார்கள், மலேசிய ரப்பர் தோட்டங்கள் ஏராளமான சரித்திரங்களை தாங்கி நிற்பவை, அதில் இந்திய சுதந்திர கால வடுக்களும் உண்டு. ரப்பர் தோட்டத்தில் பிறந்து படித்து ஆளான, முத்திரை பதித்த தமிழர் பல உண்டு.

சிலர் ரப்பர் தோட்டத்து அடிதட்டு மக்கள் பிரச்சினைதான் கதை என்கின்றார்கள், படம் வந்தால் தெரிந்துவிடபோகின்றது, ஆனால் பாடல்களின் வரிகள் சில விஷயங்களை மறைமுகமாக சொல்கின்றன.

Stanley Rajan's photo.

மலேசியாவினை விடுங்கள், இதனை போலவே தமிழகத்து அடித்தட்டு மக்கள் குவியலாக குவிக்கபட்ட இடம் இலங்கையின் மத்திய மலையக தேயிலை தோட்டம். அம்மக்கள் பட்ட பாடுகளும், அவர்கள் சந்தித்த இழிநிலையும் சொல்லிமாளாது, சுதந்திர இலங்கையில் அவர்கள் நாடற்றவர்கள் என பகிரங்கமாக முத்திரை குத்தபட்டனர்.

நாடற்றவர்கள் எனும் சொல், கிட்டதட்ட அம்மணமாக்குவதற்கு சமம். இந்தியா அவர்களை அரவணைத்து கொண்டது

ஆனால் அதனை எல்லாம் அன்று எந்த ஈழதொப்புள் கொடி, கொண்டை முடி எல்லாம் கண்டிக்கவே இல்லை, புலிகள் கூட அவர்களை ஒதுக்கியே வைத்திருந்தனர்.

அம்மக்களின் பிரச்சினையினை உள்ளடக்கி எழுதபட்ட இந்திய இலங்கை ஒப்பந்தமும் கிழித்தெறியபட்டது, காரணம் அதில் அவர்களுக்கும் உரிமை இருந்தது. பத்மநாபா போல ஈழபோராளிகள் அதனை ஆதரிக்க காரணமும் அதுதான், உயிரை விட்டதும் அப்படித்தான்.

இன்று தமிழகத்தில் ஒரு ஆதரவு குரல் கேட்கவேண்டுமானால் நிச்சயம் அந்த அபலைகளுக்காகத்தான் இருக்கவேண்டும், ஆனால் நடந்தது வேறு, எந்த ஈழதமிழன் தமிழக பிழைக்க வந்த தமிழரை ஒதுக்கி வைத்தானோ, அவர்களுக்காக இங்குள்ள தமிழன் பொங்கிகொண்டிருக்கின்றான்,

எவ்வளவு விசித்திரம் இது? யார் சொந்தமக்கள் என்பது கூட தெரியாத செம்மறி தமிழன் இவர்கள்.

அம்மக்களின் கதை மகா கொடூரமானது, ஆனால் யாரும் திரைபடமாக எடுப்பார்கள் என நினைக்கவேண்டாம்

காரணம் எல்லாம் பணம், அது மலேசிய தமிழனிடம் இருக்கலாம், ஈழ தமிழனிடம் இருக்கலாம், அவன் படம் எடுக்கலாம், ரஜினி நடிக்கலாம், பாட்டெழுதலாம், பரபரப்பாக்கலாம்.

ஆனால் பாவம் மலையக தமிழனிடம் என்ன இருக்கின்றது?

கபாலி பாடல்களை கொண்டாடுங்கள், விமர்சியுங்கள், ஆனால் என் காதில் ஒலித்துகொண்டிருப்பது என்ன தெரியுமா? 1940களில் இலங்கை மலையக தமிழர் மீது ஏவபட்ட வன்முறைகளை கண்டு அக்கால தமிழன் எழுதிய வரி

“தேயிலை கொழுந்தை
கிள்ள சென்ற‌
எம் குல கொழுந்தை
கிள்ளும் லங்காபுரியே

வன்கொடுமை காணிணும்
வடக்கத்தியான் என பரிகசிக்கும் யாழ்பாணமே
இதயமென்று ஒன்று
உமக்கும் உளதோ

மலையகத்தார் உங்களுக்கு
மத்தளமோ?

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
அபலைகள் காலம் ஒரு நாள் மாறும்”

ஆனால் அம்மலையக மக்கள் வாழ்வு மட்டும் இன்னும் மாறவே இல்லை. இதை எல்லாம் பற்றி பேசினால் நான் துரோகி, தமிழணர்வு இல்லாத இந்தியன் வந்தேறி.

கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன்…..

“கச்சதீவை மீட்க சொல்லி சட்டசபையில தீர்மானம் போடுவேன்.மத்திய அரசு முடியாது என திருப்பி அனுப்பும்.தமிழ்நாட்டை பிரிச்சு கொடுன்னு தீர்மானம் அனுப்புவேன்.இந்திய அரசு மிரண்டு பிரிவினைவாதி என சொல்லும். நான் கூப்புட்டு ஏன்யா எங்க நாட்லா இருக்குற ஒரு பகுதியை நீ பிரிச்சு கொடுக்கலாம்.நான் பிரிச்சு கேட்ட தப்பாயா ன்னு கேட்பேன்..” சிலுக்கு சீமான்

# அதெல்லாம் சரி அங்கிள், அப்படியானால் முன்பு 5 ஆயிரம் பட்டாலியன், படையெடுப்பு, கச்சதீவில் இந்திய, தமிழ்தேசிய கொடி ஏற்றுவேன் என்றதெல்லாம் கஞ்சா அடித்துவிட்டு உளறியதா?

# இது கொஞ்சமேனும் சாத்தியமா? காஷ்மீரியர்களும் பஞ்சாபியர்களும் கேட்டவுடன் கொடுத்துவிட்டார்களா? கார்கிலை அபகரித்த பாகிஸ்தான் வாங்கிகட்டியதென்ன? அதனை விட்டுவிட்டு இந்த தேசம் வந்துவிட்டதா?

# இவன் முதல்வர் ஆவதே 9ம் அதிசயம், இதில் இவர் கேட்ட மாத்திரத்தில் 356ம் பிரிவில் அரசை கலைத்து, எமர்ஜென்சி அமுல் செய்து, இவனை தூக்கி போட்டு சாத்த எவ்வளவு நேரமாகும்?

# இந்தியா மிரளுமா? உன்னை கண்டா? அட பையித்தியகாரா, ஆனானபட்ட பாகிஸ்தானும், சீனாவும், அமெரிக்காவுமே பல நேரங்களில் இந்தியாவினை கண்டு பின் வாங்கும்போது, உன்னை கண்டா இம்மாபெரும் தேசம் மிரளும்? இதனைத்தான் உன் அண்ணனும் வன்னிகாட்டில் சொல்லி மண்டையில் வாங்கினான், இது மாபெரும் இந்தியா, எவனுக்கும் என்றும் அஞ்சாது. அதிலும் நீயெல்லாம் ……………போடா

# இந்த மடையனை இந்திய அரசு சிறையில் தள்ளினால் வந்து கேட்கபோவது யார்? ஓபாமா முதல் புடின் வரை ஓடிவருவார்களா? கனடாவில் இந்திய தூதரகத்தில் கண்ணீர் விட்டழுத கழுதை கச்சதீவினை மீட்குமா?

# அப்பனே அடுத்த நாட்டு கச்சதீவு வேண்டாம், கேரளத்து பீர்மேடு தேவிகுளம் பகுதியும், ஆந்திர சித்தூர் பகுதியும் முன்பு தமிழ்நாடுதான். இந்த இந்தியாவில் இருக்கும் தமிழக பகுதிகளை மீட்க உன்னால் முடியுமா? முடியாதல்லவா? ஒரு முயற்சி செய்து பாரேன், அப்பொழுது தெரியும் சேதி.

>> கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன், வைகுண்டராஜன் டிவியில் ஏறி ராக்கெட் பிடிப்பானாம்.

Stanley Rajan's photo.

இந்தாங்க கொசுரு

அடேய் மங்குனி சுப்ரிமோ, உனக்கும் நயனுக்கும் என்ன தொடர்பு என்றா கேட்டார்கள்? வெட்கத்தில் தலைகுனிந்துகொள்ள

கேள்வி வருவது உனக்கும் பாகிஸ்தானிய நைனுக்கும் என்ன தொடர்பு என்பது, ஏன் இன்னும் பதில் இல்லை? இதனை சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம்?

அப்படியானால் ஐஎஸ்ஐ தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வலுக்கிறது, நல்லது பேரரிவாளன் கும்பல் அருகிலிருந்து சின்ன சாந்தனுக்கும், முருகனுக்கும் நீர் ஆறுதல் சொல்லும் நாள் தொலைவில் இல்லை

****************

யாரடா என்னை புலிகளின் புலனாய்வுதுறை தேடிக்கொண்டிருக்கின்றது என்றது?, இவர்களை போல ஆயிரம் பேர் உண்மையினை எழுத கிளம்பிவிட்டார்களே, என்ன செய்யபோகின்றீர்கள்

மிச்சமீதி தற்கொலை படை (இருந்தால்) அனுப்புவோம் என மிரட்டபோகின்றீர்களா?