ஆனந்தவிகடன் தடுமாறுகிறது…

கொஞ்ச நாளாகவே ஆனந்த விகடன் தடுமாறுவது தெரிந்தது. ஆனால் இப்படி படுபயங்கரமாக குப்புறபடுத்துகொள்வார்கள் என்பது எதிர்பாராதது

அதாவது ஊடகங்கள் எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைப்பவை, எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள், ஒரு வழக்கு அல்லது ஒருவனின் ஜாதகத்தையே விரல் நுனியில் சொல்வார்கள், பெரும் பாரம்பரிய பெயர் கொண்ட பத்திரிகை அது.

ஆனால் இதோ ஒரு தகவலில் குப்புற விழுந்திருக்கின்றார்கள், ராஜிவ் கொலைவழக்கில் ஜெபமணி சொன்ன முகநூல் தகவலால், யாரோ முகநூலில் ஆர்வகோளாறில் பொங்கி இருக்க, பத்திரிகை செய்தியாக்கி தன் பெயரினை கெடுத்திருக்கின்றது ஆனந்த விகடன்.

ராஜிவ் கொலையாளிகளில் நிறைய சாந்தன்கள் உண்டு. ஒருவன் பத்மநாபா கொலையில் தப்பி, பின் திருப்பெருபுதூரில் ராஜிவ்கொலை சம்பவ போட்டோவில் சிக்கிய சின்ன சாந்தன், பெரும் குற்றவாளி

இன்னொருவன் குண்டு சாந்தன் எனும் பெரியசாந்தன், அவன் பிரபாகரனுக்கு  தகவல் அனுப்புபவன். ஒரு கட்டத்தில் எல்லா புலிகளும் சயனைடு கடிக்க, இவன் சுட்டுகொல்லபட்டான்.

அவனை ஆள்மாற்றி கொன்றதாக அன்றே ஒரு சர்ச்சை உண்டு, ஆனால் அந்த காலகட்டத்தில் ஏராளமான புலிகள் தமிழகத்தில் சயனைடு கடித்து செத்துகொண்டிருந்தனர்.

இப்போது எந்த புண்ணியவானோ தேடபட்ட சின்ன சாந்தன் தான் சுட்டுகொல்லபட்டதாகவும் சிறையில் 25 வருடமாக இருக்கும் சின்ன சாந்தன் அப்பாவி என்றும் கிளப்பிவிட்டுவிட்டான், இதனையே திருச்சி வேலுச்சாமி, சீமான் ஆகியோரும் சொன்னார்கள்

அவர்கள் ஆயிரம் சொல்வார்கள். ஆனால் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் சிந்தித்து செய்திவெளியிட வேண்டாமா? பத்திரிகை தர்மம் இவ்வளவுதானா? இதோ சின்ன சாந்தன் அப்பாவி 25 வருடமாக அப்பாவி சிறையிலா என ஏதோ கிளப்பிவிடுகின்றது

அவர் சொன்ன சாந்தன் வேறு, இவர்கள் இட்டுகட்டும் சிறையில் இருக்கும் சாந்தன் வேறு

என்னமோ ஆகிவிட்டது விகடனுக்கு என்பது மட்டும் உண்மை, தடுமாறுகின்றது.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தேடப்பட்ட வந்த குற்றவாளி குண்டு சாந்தன்தான். (சின்ன) சாந்தன்…
VIKATAN.COM

எத்தனை நினைவு நாட்கள் ?

மே 17 இன படுகொலைநாள் என ஒரு கும்பல் தமிழத்தில் வருடத்தில் ஒரு நாள் அழிச்சாட்டியம் செய்யும், இனி நவம்பர் 26ம் தேதி மாவீரர் நாள் என கொண்டாடுவார்கள், இந்தியாவினை திட்டி தீர்ப்பார்கள்

அதாவது ஒன்று பிரபாகரன் இறந்த நாள் அல்லது பிரபாகரன் பிறந்நநாள் (அல்லது பிரபாகரனுக்காக இறந்தவர்கள் நாள்) தவிர ஏதும் தெரியாத தமிழக தமிழர்கள் இவர்கள்

ஆனால் ஈழ மக்களின் பதிவுகளில் வாரத்திற்கு மும்முறை புலிகளால் கொல்லபட்ட தமிழர்களுக்கான அஞ்சலி செலுத்தபட்டுகொண்டேதான் இருக்கின்றது சுந்தரம், மெண்டிஸ், சபாரத்தினம், உமா மகேஸ்வரன், யோகேஸ்வரன், ரஜனி, செல்வி என கிட்டதட்ட தினசரி யாருக்காவது அஞ்சலி செலுத்திகொண்டே சிலர் இருக்கின்றனர், எல்லோரும் புலிகளால் கொல்லபட்டவர்கள்

வரும் 19 பத்மநாபா கொல்லபட்ட நாளாம், அதை நோக்குமுன் இன்று யாரோ ராபர்ட்டுக்கு நினைவஞ்சலியாம், அவரும் புலிகளால் கொல்லபட்டாராம்.

இனி அடுத்த மாதம் அமிர்தலிங்கம் கொல்லபட்ட வெள்ளிவிழாவாம்.

என்ன கர்மமோ தெரியவில்லை, இந்த காட்டுமிராண்டி தனத்திற்குபெயர் தமிழர் விடுதலை போராட்டமாம். இதனை கண்டித்தவர்கள் துரோகிகளாம்.

ஈழ தமிழர்களை சிங்களனிடமிருந்து அல்ல,
மொத்த உலகத்திலிருந்து விடுவிக்கும் போராட்டமாகத்தான அது இருந்திருக்கின்றது , அப்படித்தான் சொல்லமுடியும்

நல்லவேளையாக காந்தி, மண்டேலா, சே குவேரா, மார்க்ஸ், லெனின் போன்றவர்கள் எல்லாம் ஈழத்தை தவிர வேறு நாட்டில் பிறந்தார்கள்,

ஒருவேளை அங்கு பிறந்திருந்தால் என்றோ துரோகி என சுட்டுகொல்லபட்டிருப்பார்கள்

எல்லா புலிகளின் புகலிடமாக தமிழகம் அன்று இருந்தது

ராஜிவ் கொலைக்கு பின் தமிழகம் பெரும் சுடுகாடாக மாற இருந்தது, அத்தனை நூற்றுகணக்கான புலிகள் தமிழகத்தில் குழுமியிருந்தனர்

காயம்பட்டவர்கள், உளவு, தாக்குதல், அரசியல் என எல்லா புலிகளின் புகலிடமாக தமிழகம் அன்று இருந்தது

அச்சமயம் பல காவலதுறையினர் உயிரை பணயம் வைத்து தமிழகத்தை மீட்டனர், அவர்களில் ஒருவர்தான் அய்யா Jebamani Mohanraj

சிறந்த தேசபக்தர், ராஜிவ்கொலையாளிகளை துரத்தி துரத்தி வேட்டையாடிவர். சுருக்கமாக சொன்னால் இவரின் சில கோரிக்கைகளால்தான் இன்றும் 7 பேர் உயிராவது இருக்கின்றது,

நிச்சயம் தவிர்க்கமுடியாத தேசபக்தர், நெல்லையின் வீரம் அவரிடம் தெரிகின்றது

சீமானையும், வேலுச்சாமியினையும் இவர் கேட்கும் கேள்விக்கு இருவரும் சயனைடை கடிக்கலாம், அவ்வளவு அருமையான கேள்வி

அகதியாக வந்து பத்மநாபாவின் உணவினை உண்டு, அவரால் படிக்கவைக்கபட்டு பின் அவரை புலிகளிடம் காட்டி கொடுத்து சென்னையில் கொன்றது சின்ன சாந்தன்.

திருப்பெரும்புதூரில் மரகதம் சந்திரசேகரை ஏமாற்றி நடித்து ராஜிவினை புலிகள் நெருங்க வழி ஏற்படுத்தியவனும் அவனே.

அவனை நல்லவன் என சொல்லும் வேலுச்சாமியினை என்ன செய்ய?

சின்ன சாந்தன் அப்பாவி எனும் வேலுச்சாமியின் கேள்விக்கு அவனை பிடித்த இவரையன்றி யார் பதில் சொல்லமுடியும்? வேலுச்சாமியின் முகத்தில் கரிபூசமுடியும்

சொன்னார் பாருங்கள் “பெரிய சாந்தனை திருச்சியில் சுட்டுகொன்றது நான், இன்னொருவன் மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தான் அவன், அவளை சந்திக்க வந்த நள்ளிரவில் சுட்டு கொன்றேன்”

இதுதான் புலிகள் காத்த கண்ணியம், கோட்பாடு

வாழ்த்துக்கள் அய்யா உங்களால் நாடு பெருமை அடைகிறது Jebamani Mohanraj

(சு.சாமி வைகோ எல்லாம் எப்படி ராஜிவ் வழக்கில் இருந்து தப்பித்தார்கள் என சிலர் கேட்கலாம், அதற்கு ஜெயவர்த்தனே எப்படி புலிகள் பட்டியலில் இருந்து தப்பினார்? என எதிர்கேள்வி வரும் )

வந்தே மாதரம்

ஏழு பேர் விடுதலை , முதல்வருக்கு மனு…

7 தமிழர் விடுதலை என அர்த்தமில்லாமல் முழங்கும் அந்த மங்குணிகளின் மனுவினை கூட கையால் வாங்காத தமிழக முதல்வர், செல்லி சென்று பிரதமரை சந்தித்து 29 கோரிக்கை அடங்கிய மனுவினை கொடுத்திருக்கின்றார்.

அதில் ஒரு இடத்தில் கூட அவர்களின் விடுதலை பற்றி பேசவே இல்லை, குறிப்பிடவுமில்லை.

ஆனாலும் தமிழகத்தில் கலைஞர் துரோகி, காங்கிரஸ் துரோகி என்றுதான் குரல்வரும், இப்பொழுதும் பாருங்கள் கவனமாக “தமிழக அரசு” என்றுதான் முணங்குவார்கள்

மங்குனிகள் இனி என்ன செய்யலாம்? இவர்களை விடுவிக்கும் அதிகாரமுள்ள, உரிமையுள்ள பொறுப்புள்ள ஒருவருக்கு மனு அனுப்பி கோரிக்கை விடுக்கலாம், அவரால் நிச்சயம் முடியும்

அவர் இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா

சிரிசேனாவும் கிட்டதட்ட 5 ஆயிரம் புலிகளை நாங்கள் விடுவித்து பராமரித்து வருகின்றோம் இந்த 7 புலிகளையும் வாழவைப்பது பெரும் விஷயமல்ல என சொன்னால் ஒருவேளை விடுதலை நடக்கலாம், இவர்கள் கொழும்பும் செல்லலாம்

காரணம் இன்னொரு நாடென்றால் அப்படி பயங்கர அழிவுகளை ஏற்படுத்திய புலிகளில் ஒன்றை கூட விட்டிருக்காது, டக்ளஸ் கருணா என முன்னாள் புலிகள் ஏற்படுத்திய அழிவுகள் அப்படி, இப்பொழுதும் புணர்வாழ்வு பெற்ற புலிகளால் முன்பு அடைந்த அழிவும் கொஞ்சமல்ல,

ஆனால் குடிமக்கள் என்பதால் இலங்கை அரசு விடுவிக்கத்தான் செய்திருக்கின்றது, அப்படி ராஜிவ் கொலை 5 குற்றவாளிகளையும் அவர்கள் கேட்டாலும் கேட்கலாம்.

இந்த 7 பேருக்கும் ஒரு பாயிண்டும் இருக்கின்றது, அதாவது அமைதிபடை அனுப்பிய ராஜிவினை கொன்றோமே தவிர, அனுப்ப சொன்ன ஜெயவர்தனவேவினை கொன்றோமா? இல்லை அல்லவா? அப்படி ஒரு “இலங்கை அபிமானிகள்” நாங்கள் என்றால் உடனே சிங்களம் மகிழும். அரசு பணி கூட கிடைக்கலாம்.

எல்லா முன்னாள் புலிகளும் சிங்களனால்தான் விடுதலை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் , தமிழர்களால் இல்லை என்பது குறிப்பிடதக்கது

தமிழக தமிழர்களால் ஈழக்களுக்கு ஒன்றும் கிழித்துவிட முடியாது அந்த காலங்கள் எல்லாம் கடந்து 26 வருடம் ஆகின்றது என்பதனை உணர்ந்தால் இப்படிபட்ட முடிவிற்குதான் அந்த கைதிகள் வரமுடியும்.

# ஆனால் அப்படி சிங்களன் 7 தமிழர் விடுதலை கோரிக்கை விடுத்தால் நிச்சயம் தடுக்கப்போவது யார் தெரியுமா? சைமன், நெடுமாறன், வைகோ , திருமுருகன் காந்தி , சிங்களன் விடுவித்து வீரதமிழன் விடுதலை ஆவதா? முடியாது,

அதற்கு தமிழக சிறை பரவாயில்லை 🙂

அங்கும் இங்கும் …

# இருக்கட்டும், இந்தியா அவ்வளவு பெரும் நாடு, நகரத்திற்கொன்று என அவர்கள் கணக்கெடுத்தாலும் ஏராளம் வேண்டும், அவர்களோ மிக சிறிய நாடு இந்தியாவிடம் 5 குண்டுகள் இருந்தால் அந்த நாட்டையே கடல் மட்டத்திற்கு கொண்டு சென்றுவிடலாம், அவனிடம் எவ்வளவு இருந்தால் என்ன? மோதினால் தேசமே இருக்காது அல்லவா?

# ஆனாலும் பாகிஸ்தான் அணுகுண்டு செய்யும்போது அமைதி காத்துவிட்டு, அது பெருக்கும் போதும் அமைதியாக இருந்துவிட்டு , இன்று எந்நேரமும் அது தீவிரவாதிகள் கையில் சிக்கலாம், அதனை கொண்டு அவர்கள் யாரையும் தாக்கலாம் எனும் நிலையில் பாகிஸ்தான் அணுகுண்டு கணக்கினை சொல்கிறான் அல்லவா? அதுதான் மேற்கத்திய தந்திரம் 🙂

 —————–

உத்திரபிரதேசத்தில் குண்டர்கள், ரவுடிகள் அட்டகாசம் கவலை அளிக்கின்றது : மோடி சோகம்

# பாபர் மசூதி இடிக்கபட்டபோது மட்டும் உத்திரபிரதேசம் பூலோக சொர்க்கமாகவா இருந்தது, அன்று மாநிலத்தை ஆண்டது யார்?

# வரவர மோடி பெரும் அரசியல்வாதியாகின்றார், கலைஞர் போலவே 🙂

இதோ புலனாய்வு துறையினர்

இதோ புலனாய்வு துறையினர்

இந்திய தேசியம் எனது கண் என வாழ்ந்த அந்த உன்னத தலைவரின் படம், இவரால் எவனுக்கு இணையாக வைக்கபட்டதிலேயே இவரின் தராதரம் தெரியும், இவன் ஒரு புலி உளவாளி, இப்படியா சொதப்புவார்கள்?

Stanley Rajan's photo.
13427863_10206556566648015_4380248517641868627_n

முடக்கபட்ட எனது முகநூல் கணக்கு

முடக்கபட்ட எனது முகநூல் கணக்கு,

இறுதியாக அவர்களின் புலனாய்வுதுறை மார்க்கிடம் மண்டியிட்டு என்னை பற்றி அழுதிருக்கின்றது, அட அழுவினிகளா

அவர்கள் அப்படி என்ன நினைத்துகொண்டிருக்கின்றார்களோ தெரியவில்லை, புனிதமான இயேசு,புத்தன், நபிபெருமான் வரிசையில் பிரபாகரனும் இருப்பதுபோலவும், தமிழகத்தில் அவர்களுக்கு பெரும் ஆதரவு இருப்பது போலவும், எனது பதிவுகளால் அது பாதிக்கபட்டதாகவும், மகா பரிசுத்த பிரபாகரனை நான் தூஷித்துவிட்டதாகவும் முகநூலை படைத்தாளும் மார்க்கிடம் அழுதிருக்கின்றார்கள்,

அவரும் ஒரு நாள் என்னை வகுப்பினை விட்டு அனுப்பிவிட்டார்.

இவர்கள் குற்றசாட்டினை பாருங்கள், நான் தமிழக மக்களிடம் தவறாக சொல்கிறேனாம், என்னை விட்டால் இவர்கள் எதிர்காலம் பாதிக்குமாம், கவனியுங்கள் சொல்வது ஈழத்து அரைவேக்காடுகள், அப்படி என்ன இந்த தமிழகத்தில் இவர்களுக்கு ஆதரவு இருக்கின்றது?

இன்னொன்று இவர்களை நான் பிளாக் செய்கிறேனாம், கொஞ்சமேனும் விவாதிக்க தெரிந்தவனிடம் விவாதிக்கலாம், உதாரணம் வடமராட்சி யுத்தம் இந்திய தலையீடால் நின்றது, இந்திய தலையிடாவிட்டால் பிரபாகரன் கொல்லபட்டிருப்பார் என்பது உண்மை, ஆனால் இவர்கள் வந்து என்ன சொல்வார்கள்? இந்தியா வயல்களில் உணவு வீசிற்று, நீ சொன்ன தேதி அன்று இந்தியா வரவில்லை, பிரபாகரன் சுற்றி வளைக்கபடவில்லை என குழப்புவார்கள்.

ஆனால் இந்தியா வந்ததை மறுப்பார்கள், மீறி சொன்னால் உன் அம்மா, அப்பா என தரம் தாழ்வார்கள், இவர்களிடம் என்ன பேசமுடியும்? கதவைத்தான் பூட்டமுடியும்.

இந்த கும்பல்தான் என் ஐடியினை முடக்கி இருக்கின்றது, அதுவும் பிரபாகரன் திருமணம் சம்பந்தமான பதிவிற்காக

புலிகளை பற்றி இன்னும் மகா கேவலமாக எழுதும் தளங்கள் உண்டு, பாதிக்கபட்ட ஈழத்தவர்தான் எழுதுவார்கள். அதுவும் பிரபாகனை அவர்கள் கேவலபடுத்தும் விதத்திற்கு மற்றவர்கள் என்றால் எப்பொழுதோ தற்கொலை செய்வார்கள், அந்த அளவிற்கு அது தரம் தாழ்ந்திருக்கும். நான் அம்மாதிரி எல்லாம் பதியவில்லை,

இன்னொன்று பலகாலம் எல்லா ஈழமக்களின் பதிவுகளை படித்தவன் என்றமுறையில் பகிர்ந்தேன் அவ்வளவுதான்.

சொல்கிறான் பாருங்கள், என்னை பேசவிட்டால் தமிழக நலனுக்கு ஆபத்தாம், என்ன அக்கிரமம், அப்படியானால் பெரும் திட்டத்தோடுதான் இருக்கின்றீர்களா?

இங்கு என்ன இருக்கின்றது? போர் என்றால் மக்கள் சவார்கள், பிரபாகரன் கொல்லபடவேண்டியவர் என்ற ஜெயா முதல்வர், புலிகள் கொல்லபட எத்தனை மக்கள் செத்தாலும் கவலை இல்லை என மவுனம் காத்த கலைஞர் எதிர்கட்சி தலைவர்.

மத்தியில் என்ன?, ஆனையிரவில் 50 ஆயிரம் சிங்கள ராணுவத்தை காப்பாற்றிய, ஒரே மிரட்டலில் புலிகளை ஓடசெய்த பாஜக அரசுதான் இன்றைய ஆளும் கட்சி, புலிகளின் நன்றியினை அனுபவத்தில் கண்ட காங்கிரஸ் எதிர்கட்சி

நெடுமாறன் எங்கோ பல்குத்திகொண்டிருக்கின்றார், வைகோ முக்காடு போட்டு அழுகின்றார், சீமான் ஏதோ உளறிகொண்டிருக்கின்றார், இதுதான் தமிழக யதார்த்தம் அதாவது உங்கள் இன உணவாளர்களின் நிலை.

இப்படி உங்கள் எந்த இந்திய புலி அபிமானத்தை நான் கெடுத்துவிடபோகிறேன்? ஏதோ காமெடியன் சீமானை, அவன் அள்ளிவிடும் புலிகளைதகளை நான் விமர்சித்தால் உங்களுக்கு புளிக்கிறதா

இந்த முகநூல்மீதும் பெரும் சந்தேகம் கிளம்புகின்றது.

இயேசு முதல் காந்தி வரை கிழிக்கின்றார்கள், அண்ணாவினை விபச்சார புரோக்கர் அளவிற்கு விமர்சிக்கின்றார்கள், சோனியா ஜெயா, கலைஞர் என இவர்கள் படுபகிரங்கமாக விமர்சிக்கபடுகின்றார்கள், அதனை எல்லாம் என்ன புகார் சொல்லியும் முகநூல் தடுக்கின்றதா?

கலைஞர் விமர்சிக்கபடுவது விதிமுறைகளை தாண்டி அருவெருக்கதக்க நிலைக்கு சென்றும் இன்னும் தடுக்கபடவில்லை

ஆனால் பிரபாகரனை பற்றிய விமர்சனம் மட்டும் தடுக்கபடுகின்றது, பதிவு நீக்கபடுகின்றது என்றால் இதற்கு யார் காரணம்? சமூக வலைதளமான முகநூலை நிர்வகிப்பது யார்? நிச்சயம் முகநூலின் இந்த போக்கு சரியல்ல.

இதற்குமேல் என்ன செய்வீர்கள்? ஐடி முடக்குவீர்களா? முடக்கிகொள்ளுங்கள், ஆனால் ஆயிரகணக்கான குழு, பக்கங்கள், தளங்கள் உண்டு, அங்கெல்லாம் ஆயிரம் கதைகள் வரும், தடுக்க முடியுமா?

எனக்கு மகா ஆச்சரியமான விஷயம் ஒன்றுதான்

நான் அதிகம் விமர்சித்தது மொசாத் மற்றும் அமெரிக்க அமைப்புகளைத்தான், நிச்சயம் இஸ்ரேலிய மொசாத்திற்கு தமிழக உளவாளிகள் இருப்பார்கள், அவர்களை மீறி ஒரு வரி கூட வராது, ஆனால் பாருங்கள் இதுவரை ஒரு மிரட்டல் கூட இல்லை, காரணம் அவர்கள் கெத்து அப்படி.

நீ எல்லாம் எங்களை என்ன செய்துவிடமுடியும் என்ற அவர்கள் கர்வம், அது உண்மையும் கூட.

ஆனால் அந்த யானைகளே சும்மா இருக்கும்போது இந்த கொசுக்களின் தொல்லை தாளவில்லை

இன்னமும் முடக்கலாம், இன்னமும் புகார் செய்யலாம், அது முகநூலின் தரத்தை குறைக்குமே ஒழிய எனக்கு ஒன்றுமில்லை, பார்க்கலாம்

அதற்காக எமது நாட்டினை பற்றி இல்லாத பழிகளை சுமத்தினால், நான் பார்த்துகொண்டிருக்க முடியுமா? ராணுவத்தாருக்கு மட்டும் பாதுகாப்புகடமை நமக்கு இல்லை என நினைக்கமுடியுமா? நாடு முக்கியம், அதன் பெருமைகளை குலைக்க, இல்லாத பொய்களை எவனாவது சொல்லும்போது அதனை தடுக்கும் கடமை நமக்கு உண்டல்லவா?

நான் இந்தியன், இந்திய குடிமகன் என்ற எண்ணமுள்ளவன் என் பின்னால் வரலாம், மற்ற யாரையும் நான் அழைக்கவுமில்லை, அவர்கள் என்னைபற்றி பேசவேண்டிய அவசியமுமில்லை.

110 கோடி மக்கள் கொண்ட இம்மாபெரும் தேசத்தை 10 லட்சம் கூட தேறா ஈழத்தவர் மிரட்டுவார்களாம், அதனை நாம் பார்த்துகொண்டிருக்கவேண்டுமாம்

வந்தே மாதரம்

இந்த கோஷத்தை தடுக்க முடியுமா? 110 கோடிபேர் எழும்பி சொன்னால் வங்க கடலே வட இலங்கையில் புகுந்துவிடும் ஜாக்கிரதை

ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள், அப்படி எந்த இனபடுகொலைக்கு இந்தியா துணை சென்றது? 1983ல் இருந்து 2009 வரை இந்தியா வந்த அகதிகள் எத்தனை ஆயிரம்?

இந்தியா என்ன கொன்றுவிட்டதா? அல்லது வைத்து ஆதரிக்கின்றதா?

அம்மக்களை அடித்து விரட்டியது நீங்கள், வைத்து ஆதரித்துகொண்டிருப்பது நாங்கள், அந்த மனிதாபிமானத்தில் தான் பேசிகொண்டிருக்கின்றோம்.

சொந்த மக்களுக்கு ஒருவேளை சோறுபோடாத நாயெல்லாம் மார்க்கிடம் சென்று அழுகின்றது.