அப்படி என்ன மூட பழக்க வழக்கங்களை கிறிஸ்தவம் இங்கு துடைத்தொழித்திற்று?

நண்பர் யாரென தெரியவில்லை, ஆனால் கடும் மூளைசலலை செய்யபட்டவர் போல தெரிகிறார், சாதாரண சலவை அல்ல, நன்றாக வெள்ளாவியில் வெளுக்கவைத்த சலவை.

தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக எப்பொழுதும் இந்தியாவில் எதிர்ப்பு உண்டு, அது சித்தர்கள், திருமூலர், ராமானுஜர் என தொடர்ந்து வந்தது, சீக்கிய மதம் அப்படி உருவானது, தெற்கே பெரியார் போராடினார்.

அவ்வளவு ஏன் அக்கால புத்த ஜைன மதங்களே இப்படித்தான் உருவாயின‌

உடன்கட்டை ஏறும் வழக்கத்தை இந்தியாவிலிருந்து ஒழிக்க பாடுபட்ட ராஜாராம் மோகன்ராய் என்ன கிறிஸ்தவரா?

தெற்கே பெரும் அவதாரமாய் எழுந்து தாழ்த்தபட்ட மக்களுக்கு பெரும் நிழல்கொடுத்த ஐயா வைகுண்டர் என்ன லண்டனிலிருந்து வந்தாரா?

அப்படி என்ன மூட பழக்க வழக்கங்களை கிறிஸ்தவம் இங்கு துடைத்தொழித்திற்று? பைபிளை மாற்றி திருமணம் செய்வது என்ன அறிவுடமையா? நகை அணியமாட்டேன் என சொல்லிவிட்டு பென்ஸ்காரில் செல்வதும், பங்களாக்களில் வசிப்பதும் என்ன வகை பகுத்தறிவு?

Stanley Rajan's photo.

பன்றிகறி உண்ணாதே என பைபிள் சொல்கிறது, சுன்னத் செய் என பழைய ஏற்பாடு சொல்கிறது, அதனை எல்லாம் வேண்டாம் என்றபின் அதிலிருக்கும் பத்தில் ஒரு பாகம் காணிக்கை மட்டும் பிடித்துகொண்டு தொங்கிகொண்டிருப்பது யார்?

விபச்சாரத்தை கிறிஸ்தவம் ஒழித்ததென்றால் சில ஐரோப்பிய நாடுகளில் விபச்சாரம் வரிகட்டும் தொழிலாக அங்கீகரிக்கபட்ட அர்த்தம் என்ன?

நீலபட நிறுவணங்களை நடத்திகொண்டிருப்பது யார்?

திருடுதல் இந்தியாவில் இல்லையா? கிழக்கிந்திய கம்பெனியினை ஏமாற்றி அமெரிக்காவில் பல்கலைகழகம் தொடங்கிய வெள்ளையன் யேல் யார்? புத்த சமயத்தவனா?

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் திருட்டே இல்லையா?

இப்படி ஒரு சிந்தனையும் இல்லாமல், ஏதோ கிறிஸ்தவம் வந்துதான் இந்தியாவினை காப்பாற்றியது போல பல கிறிஸ்தவர்கள் அர்த்தமில்லாமல் பேசிகொண்டிருப்பார்கள்.

அன்று இந்தியா வளமான நாடு, அதனால்தான் வந்தார்கள் ஆண்டார்கள். சில நல்ல காரியங்களும் நடந்தன மறுப்பதற்கில்லை,

இன்று அரேபிய எண்ணெய் வளம் அந்நாட்டை பெரும் செழிப்பில் நிறுத்தியிருக்கின்றது, அதுவும் கிறிஸ்தவமா? ஜப்பான் இன்று தலைநிமிர்ந்து நிற்க காரணம் கிறிஸ்தவமா?

எதனையாவது சொல்வது, இல்லாத பிம்பத்தினை உருவாக்குவது ஏதும் சொன்னால் மத சிறுபான்மை என ஒப்பாரி இடுவது.

இவரை போன்றவர்களுக்கு மூளை சலவை மட்டுமல்ல, நன்றாக இஸ்திரியும் போடபட்டிருக்கின்றது.

மதம் மனிதனை பிடித்த சாபம்…

மதம் மனிதனை பிடித்த சாபம், அதனை காலில் போட்டு மிதிக்கவேண்டும் என்றனர் பல சிந்தனையாளர்கள்

ஆனால் காலில்போடுவதையே வைத்து மதபுரட்சி செய்யமுடியும் என சிலர் இம்மாதிரி கிளம்பி இருக்கின்றார்கள்,

இவர் இன்னும் எதனையும் தொலைக்காமல் இருக்கட்டும், தொலைந்தால் அடுத்த மதம் தாவி விடுவார்.

Stanley Rajan's photo.உலகினை படைத்தாளும் கர்த்தர் இவர் செருப்புக்கு மட்டும் காவல் இருந்து தன் பராக்கிரமத்தை காட்டிவருகின்றாராம்.அலறியடித்து ஓடிய கர்த்தர் இந்நேரம் புதிய உலகினை எங்காவது படைத்துகொண்டிருப்பார், இதனை விட பெரும் அவமானம் அவருக்கு எங்கு உண்டு?

அது செருப்பில்லா உலகமாக நிச்சயம் இருக்கும்.

மொழித் திணிப்பு….

வெள்ளையன் ஆங்கிலத்தை திணித்தானாம், ஒரு கும்பல் வாதிட்டுகொண்டிருக்கின்றது

உலகெல்லாம் ஆண்ட அவன் உங்களுக்காக தமிழ்படித்திருக்கமுடியுமா? உலகில் வாழ எது அவசியமோ அதனை நாம்தான் கற்றுகொள்ளவேண்டும்,.

எல்லா நாட்டவரும் எல்லா மொழியும் கற்கின்றார்கள், ஆனால் தன் சொந்தமொழி அடையாளங்களை காத்துகொள்கின்றார்கள். நாம் அதனைத்தான் செய்யவேண்டும், தமிழை காத்துவிட்டு அந்நிய மொழிகளை கற்கலாம், தவறில்லை

பாரதி அப்படித்தான் தமிழனாய் வாழ்ந்தான், ஆனால் எல்லா மொழிகளும் அறிந்திருந்தான்.

ஒரு மனிதனுக்கு கூடுதலாக கொஞ்சம் மொழிகள் தெரிவதில் என்ன தவறு வந்துவிடமுடியும்?

யாரும் எந்த மொழியினையும் யார்மீதும் திணித்துவிட முடியாது, தேவை என்றால் அவனவன் சொந்தமாக கற்றுகொள்வான், இது மானிட யதார்த்தம்.

தென்னகத்தில் மலையாளி, கன்னடன், தெலுங்கன் என எல்லோரும் ஹிந்தி கற்கின்றார்கள் அதற்காக அவர்கள் மொழி அழிந்துவிடவில்லை, வளரத்தான் செய்கிறது

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் யாழ்பாணத்தார் தமிழ்பேசும் போது மற்றமொழி கலக்காமல் பார்த்துகொள்வார்கள், நிச்சயம் அந்த பண்பு பாராட்டதக்கது. ஆனால் ஐரோப்பாவில் எல்லா மொழியும் படிக்கத்தான் செய்கின்றார்கள்.

மலேசியாவில் வாழும் சீனருக்கு, சீனாவின் பூர்வீகம் தெரியாது, ஆனால் மலாய்மொழி தெரியும், கூடவே சீனமும் தெரியும், அதனை மறந்துவிடவில்லை அவர்கள்.

தொலைந்துவிட்ட எபிரேய மொழியினை மீட்டு அசத்தி இருக்கின்றது இஸ்ரேல், ஆனால் அவர்களின் பன்னாட்டு மொழிபுலமை யாருக்கும் சாத்தியமில்லை

இது வியாபார உலகம், பல இனங்களோடு பழகாமல் நாம் ஒன்றும் கிழித்துவிட முடியாது. அந்த இனங்களோடு பழக சில மொழிகளை கற்றே ஆகவேண்டும்.

விட்டால் கணிப்பொறி மொழிகளையும் பில்கேட்ஸ் திணித்தான், அமெரிக்கன் திணித்தான் என கிளம்விடுவார்கள் போல‌.

குறு குறு செய்திகள்

“எங்கள் கலைஞர் யார் தெரியுமா? சர்வ சக்தி படைத்த எம்ஜிஆர் காலத்திலே பல்கேரியா கப்பல் ஊழலுக்காகவும், திருச்செந்தூர் ஆலய வைர வேலுக்காகவும் பெரும் போராட்டம் நடந்தி எம்ஜிஆரை கலங்க செய்தவர், இம்முறை பெரும் பலத்தோடு இருக்கும் அவர் ஜெய லலிதா அரசினை சும்மா விடமாட்டார்” : திமுக உறுப்பினர்

“பல்கேரிய ஊழல் சம்பந்தபட்ட அந்நாளைய அதிமுகவினர், வைரவேல் சம்பந்தபட்ட அதிமுக பிரமுகர்கள் எல்லாம் இந்நாளில் திமுகவில்தான் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர் என்பதை இவர் அறிந்தால் இப்படி பேசுவாரா?” : துக்ளக் சோ

# ஆயிரம் சொல்லுங்கள் , சோ ராமசாமி ஆல்வேய்ஸ் கிரேட் 🙂


சமஸ்கிருதம் தெரியாமல் அவதிபடுகிறேன் – பொன்.ராதாகிருஷ்ணன்

# பாராளுமன்றத்தில் நாகர்கோவில் தொகுதி பற்றி பேச மக்கள் அனுப்பினார்களா? அல்லது டெல்லி கோயிலில் மணியாட்டி பூசை செய்ய அனுப்பினார்களா?

# அப்படி சமஸ்கிருதம் தெரியாமல் இவர் எந்தநாட்டு ராஜதந்திரியுடன் பேச அவதிபட்டார்? பாராளுமன்றத்தில் நன்றாக உறங்குவதற்கு சமஸ்கிருதத்தில் தாலாட்டு ஏதும் பாடி அது புரியவில்லையா?


சமஸ்கிருதத்திற்கு எதிராக சவுக்கு தூக்குங்கள் : கலைஞர்

# சவுக்கு என்ன? கல், உருட்டு கட்டை, கடப்பாரை, மண்வெட்டி எல்லாம் தூக்கிகொண்டு நேரே கோபாலபுரம் வந்துவிடட்டுமா?
..

..

அதாவது போராடுவதற்கு


 

நளினி குற்றமற்றவள், முருகன் குற்றமற்றவர் என மறுபடியும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.

ராஜிவ் கொலை நடந்தபின் சிவராசனோடு திருப்பதி கோயிலில் நேர்த்திகடன் செலுத்தியவர்கள் இந்த நளினி முருகன்.

அதன் பின் காதல் நிறைவேறிய களிப்பில் இரண்டாம் முறை சென்று மொட்டைபோட்ட நிலையில்தான் முருகன் நளினியோடு கைது செய்யபட்டான்.

திருப்பதிக்கு நேர்ந்துவிட்டு கொலை செய்ய சென்றிருக்கின்றார்கள் என்றால் அது தற்செயல் சம்பவமா?

திருப்பதி சக்தி சாதரணமானதா? அங்கு சென்று நேர்ச்சை கடன் செலுத்திய ஒருவரும் தப்பவில்லை, சிவராசன் கும்பல் கொல்லபட்டது, நளினி சிக்கி சகலத்தையும் ஒப்புவித்தாள்

தெய்வம் நின்றும் என்றும் கொல்லும்.


 

ஒரு விஷயத்தில் கலைஞரும் ரஜினியும் ஒன்று, ஒருவருக்கு வாய்பளித்து பார்ப்பார்கள் அவர் ஜொலித்தால் அடுத்த வாய்ப்பு இல்லையேல் கடாசிவிடுவார்கள்.

வடிவேலு, டி ஆர் என கழற்றிவிட்ட‌ கலைஞரைவிட ரஜினி ரொம்ப ஸ்ரிக்ட்

பெரும் வெற்றிபடங்களை கொடுத்தாலும் குசேலனுடன் வாசு, பாபாவுடன் சுரேஷ் கிருஷ்ணா, லிங்காவுடன் கேஎஸ் ரவிகுமார் என தூக்கி எறிந்திவிட்டு நகர்ந்துவிடுவார், அது பயமா? அல்லது அவர்களிடம் அவ்வளவுதான் சரக்கா என ஒதுங்குகின்றாரா? சொல்லமுடியாது,

ரொம்பநாளாக ரஜினி செய்யும் வியாபாரம் இது.

இப்பொழுது ரஞ்சித் முறை, படம் எப்படி என்று வந்தால் தெரிந்துவிடபோகிறது, வென்றால் இன்னொரு வாய்பளித்து விரட்டுவார், இல்லை என்றால் உடனே கடாசிவிட்டு கிளம்புவார்

# இதற்கு ஏன் அவரை விமர்சித்து கொண்டிருக்கின்றார்கள் என்றுதான் தெரியவில்லை.

 

தமிழினி எழுதிய “ஒரு கூர்வாளின் நிழலிலிருந்து”

சென்னை புத்தக கண்காட்சியில் தமிழினி எழுதிய “ஒரு கூர்வாளின் நிழலிலிருந்து ” எனும் புத்தகம் விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கின்றதாம்.

என்ன தெரிகின்றது? தமிழக மக்கள் உண்மையினை அறிந்துகொள்ள துடியாய் துடித்திருக்கின்றார்கள். மகா ஆர்வமாய் இருந்திருக்கின்றார்கள். பிரிவினை வாதிகளுக்கு செருப்படி கொடுக்க ஆதாரம் தேடுகின்றார்கள்.

தமிழக மக்கள் இப்படித்தான், யாரும் என்ன பேசினாலும் அப்படியா? என கேட்பார்கள், ஆனால் யார் எப்படி பட்டவர்கள் என்று மனதிற்குள் வைத்துகொள்வார்கள். 1991க்கு பின் புலி விரட்டபட்டது, வைகோ அனாதை ஆனது எல்லாம் இப்படித்தான்.

தமிழினி 30 வருடம் புலிகள் இயக்கத்தின் இரண்டாம் நிலை தளபதி, இயக்கத்தின் அடி ஆழம் வரை அறிந்தவர். அப்புத்தகம் புலிகளின் மாய தோற்றத்தை, வெறும் மண் குதிரை பிம்பத்தை உருக்கமாக சொல்கிறது. புற்றுநோயால் பாதிக்கபட்டு மரணம் நிச்சயம் என்ற நிலையில் அவரின் வார்த்தைகள் உண்மையானவை.

இந்த இடத்தில் நான் அவளை நினைக்கின்றேன், அவள் ராஜனி திராணகம‌

யாழ்பாணத்து பெண், அன்று அவளுக்கு 34 வயதுதான் ஆகியிருந்தது, டாக்டர். அதுவும் லண்டனில் படித்து வந்த திறமையான டாக்டர். ஆனால் யாழ்பாண டாக்டர் என்ன செய்திருக்கவேண்டும்? புலிகளுக்கு மட்டும்
மருந்து கொடுத்து கட்டுபோட்டு பாதுகாத்திருக்கவேண்டும், அது தமிழ் உணர்வு, அது போராட்டம், அவள் தமிழச்சி.

ஆனால் இவள் செய்ததென்ன? அதிதீவிரவாதத்தை விமர்சித்தாள். கடும் மூர்க்கமான போராட்டம் அடுத்த சந்ததியினை பாதிக்கும் என குரல்கொடுத்தாள். மனித உரிமைகளை மதிக்கா போராளிகள் உலகில் இருந்து அப்புறபடுத்தபடுவார்கள் என பகிரங்கமாக சொன்னாள். இந்த கொடூர மூர்க்கம் யாருக்கும் எந்த பலனும் தராது என அன்றே சொன்னாள்.

Stanley Rajan's photo.

Stanley Rajan's photo.

தமிழினி

Stanley Rajan's photo.

ராஜாளி திராணகம்

உச்சகட்டமாக முறிந்த பனை என புத்தகமும் எழுதினாள், அது உலகளவில் கடும் சலசலப்பினை ஏற்படுத்தியது, விடுமா புலி…

யாழ்பாண பல்கலைகழகத்தில் இருந்த புலி உளவாளி ஸ்கெட்ச் போட்டது, வீட்டுக்கு வரும் வழியில் தலையில் மும்முறை சுடபட்டு நடுவீதியில் இறந்துகிடந்தாள் அந்த சிந்தனையாளர், வீதியெல்லாம் சிதறிகிடந்தது மருத்துவம், சமூக சிந்தனையும் நிரம்பிய மூளை.

அவளது இரு குழந்தைகள் அவள் உடலை பிடித்து கதறிகொண்டிருந்த கொடுமை எல்லாம் மறக்க முடியாது என்பார்கள்.

பின் அப்புத்தகம் புலிகளால் தடை செய்யபட்டது, அமைதிபடை காலம் என்பதால், தமிழகத்தில் அப்புத்தகம் காணமலே போனது மாறாக பேரரிவாளனும் அவன் சகாக்களும் அமைதிபடையினை விமர்சித்து புலிகளை தேவதூதர்களாக்கிய “சாத்தானின் படைகள்” எனும் புத்தகம் பெரும் பிம்பமாயிற்று.

இன்று எல்லாம் கடந்துவிட்ட மயான நிலை.

முறிந்த பனை புத்தகம் மறுபடியும் கிடைக்கின்றது. அதில் புலிகளை 27 ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டித்த ராஜினியின் குரல் கேட்கின்றது.

இன்று புலிகளோடு 30 ஆண்டுகாலம் தோட்டா கொட்டிய தமிழியின் குரலில் இப்புத்தகம் வந்து தமிழக புத்தக கண்காட்சி விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கின்றது

இதே ஈழ புலிக்காலம் அல்லது புலிஆதரவு உச்ச தமிழகம் என்றால் என்ன ஆகும்? புத்தகம் தடை செய்யபடும், பதிப்பகம் துரோகி என அறிவிக்கபடும், வாங்கியவர்கள் துரோகி என புத்தகம் பறிக்கபடும், வாசகர் மேல் தோட்டா பதிக்கபடும்,

புத்தகம் மொத்தமாய் போட்டு எரிக்கபடும் , முன்பு புலி ஆட்சியில் தமிழக பத்திரிகைகள் தணிக்கை செய்யபட்டு, அதாவது புலி விமர்சன இந்திய செய்தி பக்கம் கிழிகபட்டே ஈழ மக்களிடம் கொடுக்கபடும்.

பின் அதற்கான காரணம் போராட்டம் எனும் வார்த்தையில் மறைக்கபடும்.

சில தமிழக ஊடகங்கள் புலிகளை ஆதரித்த மர்மமும் இப்படித்தான், எல்லாம் வியாபாராம்.

ஆனால் சில உண்மை எழுதும் பத்திரிகைகள் முன்பு இருந்தது, பத்மநாபா கொலை நடந்த காலங்களில் தமிழகத்தில் தராசு என்றோரு பத்திரிகை உண்டு, பின்னாளில் தமிழகத்தில் நடக்க இருக்கும் பயங்கர ரத்த வெறி தாக்குதல்களை அது முன்கூட்டியே எழுதியது,

ஆனால் அப்பத்திரிகை காணாமல் போனது, ராஜிவும் கொல்லபட்டார். தமிழகத்தில் இப்படி ஊடக கொடுமைகளும் உண்டு. எல்லா வேடங்களும் கலைந்துகொண்டிருக்கின்றன.

முன்னாள் புலி தமிழியின் அந்த புத்தகத்தில் என்னை பாதித்த வரி உண்டு

“தலைமை மக்களின் மனங்களை விட விலகி நின்றது, எதுவும் புரியும் நிலையில் அது இல்லை, உலகெல்லாம் பகைத்துவிட்டு ஒரு இனம் விடுதலை அடைவது சாத்தியமா? என்று கூட சிந்திக்கவில்லை”

உலகம் எழும்பும் முன் பொய் உலகம் சுற்றிவிடும் என்பார்கள், அப்படித்தான் இங்கு உண்மை மெதுவாக வந்துகொண்டிருக்கின்றது

ஹிட்லர் வீழ்த்தபடும் வரை அவன் கொடுமைகள் உலகிற்கு தெரியாது, கோயேபெல்ஸ் என்பவன் மிக திறமையான வாதங்களால், வார்த்தைகளால் அதனை மறைத்து கொண்டிருந்தான். ரஷ்யபடைகள் ஹிட்லரை வீழ்த்திய பின்பே அவன் கொடூரம் கண்டு உலகம் அலறிற்று.

இப்படி தமிழக கோயபல்ஸ் கும்பல் யார் என்று உங்களுக்கே தெரியும் என்பதால் அவர்களை யார் என சொல்ல அவசியமில்லை.

இப்படி ஈழத்தில் பிறந்து புலிகளோடு வாழ்ந்து, புலிகளோடு போராடிய இவர்களுக்கு தெரியாததெல்லாம், சீமானுக்கும் வைகோவுக்கும் நெடுமாறனுக்கும், திருட்டு காந்தி திருமுருகனுக்கும் மட்டும் தெரியுமாம்.