1987ல் இந்திய உதவி….

1987களில் ஈழ‌ போராளிகள் மூலம் ஜெயவர்த்தேனே அரசு வழிக்கு வரவில்லை என்றால் படையெடுக்க இந்தியா தயாராக இருந்தது, அதற்கான திட்டங்கள் தயாராக வகுக்கபட்ட இடம் இந்தியாவின் கோவா.

அந்த தாக்குதல் திட்டத்தை வகுத்த தளபதியும் தமிழரே

வடமராட்சியில் புலிகள் அழியும் நிலையில் இந்தியா உணவுபொருள் வீசியதும் அடுத்த கட்டத்தை உணர்ந்த சிங்கள அரசு ராணுவநடவடிக்கையினை நிறுத்திவிட்டு அமைதியானது.

ஆனால் புலிகள் நிலை எப்படி இருந்தது? அந்த இந்திய உதவிபொருளை, மருந்தும் உணவும் நிரம்பிய அந்த பொதிகளை மக்களை தொட கூட விடவில்லை, எல்லாவற்றையும் கைபற்றிய புலிகள், நாங்கள் விநியோகிப்போம் என சொல்லி அமைதியானார்கள்.

காரணம் மக்களிடம் இந்திய பொருள் கிடைத்தால், மக்கள் இந்தியாவினை நேசிக்க தொடங்கிவிடுவார்கள் என்ற அச்சம் புலிகளுக்கு இருந்தது, காரணம் அன்று தங்கள் உயிரை இந்தியா காத்தது எனும் பெரும் ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் ஈழ மக்கள் இருந்தார்ள்கள்

இந்தியா சில பொருட்களை வீசியது உண்மைதான், ஆனால் அவை எங்கோ விழுந்தன என பூசிமெழுகி அமைதியானர் புலிகள், மனமெல்லாம் ஒருவகை வன்மம்.

தங்களால் காக்கமுடியாத மக்களை, இந்தியா எப்படி காப்பாற்றலாம் எனும் ஆத்திரமும், இனி தங்களை மக்கள் மறந்துவிடுவார்கள் எனும் பயம் தவிர வேறு இருக்கமுடியாது

அதன் பின் நடந்த சம்பவங்களும், இறுதியாக நடந்த முள்ளிவாய்க்காலும் காலத்தின் சோகங்கள்.

1987களில் இருந்த தமிழக ஈழமக்கள் ஆதரவு 2009ல் அறவே இல்லாமல் போனதன் காரணம் ஒன்றும் மர்மம் அல்ல.

இன்று அதே கோவாவிலிருந்து இந்தியா சிங்களனுக்கு போர்கப்பலை நட்புக்காக கொடுக்கின்றது, 1987ல் இலங்கையினை தாக்க யுத்த கப்பல் கிளம்பி இருக்கவேண்டிய கோவாவிலிருந்து இன்று நட்புகப்பல் கிளம்புகின்றது.

இதெல்லாம் ஏன்? எப்படி? எதற்காக என்றெல்லாம் ஆழ்ந்து சிந்திப்பீர்களானால் நீங்களும் நானும் துரோகி, வந்தேறி

ஏன் என் தாயும் தகப்பனும் கூட தமிழர்களாக இருக்கமுடியாது என்ற அளவிற்கு வந்து ஆபாசமாக அள்ளி எறிவார்கள்.

மஹிந்த ராஜபக்‌ஷே..

மாவீரன் ராஜபக்சே

உண்மையில் மற்ற எல்லா சிங்கள தலைவர்களும் ஒரு கட்டத்தில் நிறுத்திவிடும் ஈழயுத்தத்தை இறுதிவரை நடத்தினானே அவன் மாவீரன், அந்த ராஜபக்சே மாவீரன்

எந்நேரமும் தற்கொலை தாக்குதல் நடத்தபடலாம் எனும் நிலையிலும் பதுங்குகுழியில் பதுங்காமல் சுற்றி சுற்றி வந்தானே, தன் தம்பி மீது தாக்குதல் நடத்தபட்ட நிலையிலும் அஞ்சாமல் சுற்றினானே அந்த ராஜபக்சே மாவீரன்.

Kulasekara Pandiyan's photo.

புலிகளின் டப்பா விமானம் வந்து தாக்கலாம் என்றாலும் ஜனாதிபதி மாளிகையில் தைரியமாக இருந்த அவன் மாவீரன்

ஆனால் யாரையும் நம்பாமல் எல்லோரையும் கொன்று, எவன் சமாதானம் பேச வந்தாலும் ஆயுதம் பிடுங்க வருகின்றான் என அஞ்சி ஓடி, பெண்கள் மீது குண்டு கட்டி படுகொலை செய்து, ஆயுதம் மீது ஆசை கொண்ட மனநோயாளியாக இறுதிவரை வாழ்ந்த பிரபாகரன் மாவீரனா? சைக்கோவா?

எது வீரம்? எது சைக்கோ தனம்.

இந்தியாவினை விரட்டி விட்டு பின் அதனை பார்த்து காப்பாற்று என்றதும், தன் இயக்கத்திற்கு தடை விதித்த அமெரிக்கா தன்னை காப்பாற்றும் என நினைத்து அமெரிக்க கப்பலுக்காக கடற்கரையில் நின்றதும் வீரமா?

மற்ற போராளிகளுக்கெல்லாம் சயனைடு குப்பி கடிக்கவிட்டு, திலீபனை எழும்பவிடாமால் சாகடிக்கவிட்டு, தான் மட்டும் சிங்களனிடம் வெள்ளைகொடி காட்டி அம்மணமாக சரணடைந்ததும் என்ன வீரமா?

பிரபாகரன் அம்மணமாக சரணடைந்தான், அப்பொழுது கொல்லபட்டான் என்பதுதான் உண்மை என்கின்றார்கள்,

இப்படி அம்மணமாக செத்த பிரபாகரன் மாவீரனா? அல்லது அவனை கெத்தாக அடக்கிய ராஜபக்சே மாவீரனா?

எங்களை பொருத்தவரை பெரும் அரக்கனை, ஒரு சைக்கோவினை,இந்திய நாட்டு எதிரியினை
கொன்ற ராஜபக்சேவே மாவீரன்.