பத்மநாபா… கலைஞர் நிலைப்பாடு

கலைஞரை பத்மநாபா படுகொலை சம்பவத்திற்கு விமர்சித்தால் சில திமுக சொம்புகள் பொங்குகின்றன.

அமைதிபடையினை இலங்கையிலிருந்து திரும்பசொல்லி விபிசிங் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது யார்? சென்னை வந்த அந்த அமைதிபடையினை, ராணுவத்திற்கு சொந்தமான கோட்டையின் முதல்வராக இருந்து வரவேற்காதது யார்?

பத்மநாபா சென்னைக்கு அகதியாக வந்தபொழுது ஒரிசாவிற்கு ஓடிப்போ என சொன்னது யார்? சரி அவருக்கு ஆயுதம் வைத்திருக்கும் உரிமையினை ஏன் கலைஞர் பறித்தார்.

புலிகள் ஆயுதமோடு தமிழகத்தில் நடமாடியபொழுது பத்மநாபா ஆயுதம் மட்டும் களையபட்டது ஏன்?

தமிழரை காப்பாற்ற அனுப்படபடை தமிழரை கொல்கிறது என சொல்லி திரும்ப சொன்ன கலைஞர், சட்டமன்றத்தில் மகாபாரத கதை சொல்லி நாடு அமையும் என சொன்னது ஏன்? யார் அமைத்து கொடுப்பார்கள் இந்தியா வந்த பின்பு? புலிகள் அமைத்துகொள்வார்கள் என்ற அர்த்தமன்றி வேறென்ன?

புலிகளை கலைஞர் தாங்கி பிடித்தது கொஞ்சமல்ல, அதற்காக பத்மநாபா உயிர்வரை அவருக்கு பொருட்டே அல்ல, ஆனால் ராஜிவ் கொலையும் அதன் பின் சிபிஐ விசாரணையில் பொறி கலங்கிய பின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது.

பிறந்ததல்லவா? அதனை வாய்விட்டு சொன்னால் என்ன? அதனைத்தான் கேட்டோமே தவிர வேறு ஒன்றுமில்லை.

வீரம் என்பது என்ன? ஆயுதம் தூக்குவது அல்ல, ஒரு கட்டத்தில் அதனை கீழே வைக்கவும் பெரும் தைரியம் வேண்டும் என்றார் சே, அவன் தான் மாவீரன்.

எப்பொழுது ஆயுதம் தூக்கவேண்டும் என தெரிந்த பத்மநாபாவிற்கு எப்போது கீழே வைக்கவேண்டும் என்பதும் சரியாக தெரிந்தது, அவன் வைக்க தயாரானான், அது தைரியம், அது வீரம்.

பத்மநாபா அன்று புலிகளின் மிரட்டலையும் மீறி தேர்தலில்  தைரியமாக நின்று வெற்றியும் பெற்றவர், அந்த இந்திய ஆதரவு பெற்றவரை சென்னையில் காப்பாற்றியிருக்க வேண்டியது தமிழக முதல்வரின் கடமையா இல்லையா?

ஆனால் அம்முதல்வர் செய்ததென்ன? பத்மநாபாவினை ஒரிசாவிற்கு நிராயுதபாணியாய் விரட்டிவிட்டு, புலிகளை அடக்கிகொண்டிருந்த இந்தியபடையினை வா என அழைத்தால் அத அர்த்தம் என்ன?

எவ்வளவு சொன்னார்கள் டெல்லி அதிகாரிகள்?. அங்கே தமிழருக்கு ஒரு உரிமையும் இல்லை, செயல்படுத்தவேண்டிய திட்டம் எவ்வளவோ உண்டு, நாமோ புலிகளுடன் சண்டையிட்டே 1.5 வருடம் வீணாகிவிட்டது, வரமுடியாது என சொன்னால் என்ன வரத்து வந்தார் கலைஞர்? அவரல் மறுக்கமுடியுமா?

இன்னும் அதிகமாக சொல்லவேண்டுமென்றால் அந்நாளில் கலைஞர் செய்தது புலிகளை ஆதரித்து இந்தியாவிற்கு எதிரான …………….

1960ல் காமராஜரை எதிர்த்து அரசியல் செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன் என பகிரங்க மன்னிப்பு கேட்ட கலைஞர், இந்த விஷயத்தில் மட்டும் கனத்த மவுனம் ஏன்?

ஈழபிரச்சினையில் கலைஞர் அமிர்தலிங்கம், டெசோ என சுற்றிகொண்டிருந்த பொழுது ஜெயலலிதா என்ன செய்துகொண்டிருந்தார் என தெரியாது, ஆனால் பின்னாளில் மிக தைரியமாக இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை இழுத்து வந்து தூக்கில் போடவேண்டும் என பகிரங்கமாக சொன்னவர் அவர்.

அந்த ஒன்றிற்காகவே அவரை பாராட்டலாம்.

அவர் என்ன அரசியலிருந்து விரட்டபட்டாரா? அல்லது தமிழக மக்கள் அவரை ஏற்றுகொள்ளவில்லையா? இன்றும் அவர்தானே முதல்வர்,

அவருக்குள்ள அந்த தைரியம் இவருக்கு இல்லாதது ஏன்?

அன்று புலிகளை ஆதரித்தற்காக மிகவும் வருதுகிறேன் என ஒரு வார்த்தை சொன்னால்தான் என்ன? டெல்லியிடம் சொல்லமலா இருப்பார்?

அங்கு மெல்லிய குரலில் ரகசியமாய் சொன்னதை இங்கு கரகரத்த குரலில் சொன்னால்தான் என்ன?

(பாருங்கள் இப்பொழுது வந்து கலைஞரே வாயடைத்து நிற்கும் அளவிற்கு சமாதானம் சொல்வார்கள் உடன் பிறப்புக்கள் )

கட்சத்தீவு … சில உரிமைகள்…..

கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டாலும் அந்த ஒப்பந்தபடி இந்திய மீணவர்கள் அதனருகே மீன் பிடிக்கவும், அங்கு இளைப்பாறவும், வலை உலர்த்தவும் உரிமை உண்டு.

கச்சதீவு மீட்கபட்டாலும் நமது மீணவர்கள் செய்யபோவது இதுதானே தவிர, அங்கு குடியேறபோவது அல்ல, அங்கு குடிநீர் கூட கிடைக்காது.

ஒப்பந்தபபடி கச்சதீவு அவர்களிடமே இருந்தாலும், இந்த உரிமைகளை மீட்டுதாருங்கள் என மத்திய அரசினை வலியுறுத்தினாலே தீர்ந்தது விஷயம்.

இந்த உரிமைகளை மீட்டாலே பிரச்சினை தீர்ந்ததாகத்தான் பொருள், அங்கிருக்கும் அந்தோணியார் ஆலய சீரமைப்பினை மீணவர்களே பார்த்துகொள்வார்கள்

செய்யவேண்டிய காரியம் இதுதானே தவிர, அதனை விட்டுவிட்டு மீட்டே தீரவேண்டும் என்றால் எப்படி யாழ்பாண கரையோர தமிழ் மீணவன் விட்டுகொடுப்பான்? அவர்களும் அப்பக்கம் வரவேண்டுமா இல்லையா? அவர்கள் எங்கு செல்வார்கள்?

மீட்டு என்ன செய்யபோகின்றீர்கள் என்றால் மேற்சொன்ன காரியங்களை மட்டும்தான் செய்வார்கள், இதற்கு வலுகட்டாயமாக மீட்பது எளிதா? அல்லது ஒப்பந்தபடி உரிமைகளை பாதுகாப்பது எளிதா?

எளிதான காரியம்தான் ஆனால் செய்யமாட்டார்கள், அல்லது செய்யவிட மாட்டார்கள், காரணம் எல்லாம் அரசியல்

திண்ணையில் படுத்தாவது திராவிட நாடுகாண்போம் என்ற கழகத்தின் வம்சம் இது, இப்பொழுது திராவிடநாடு எங்கே? என கேளுங்கள், இப்போது வீடுகளில் திண்ணை இல்லை அதனால் கைவிட்டுவிட்டோம் என்பார்கள்

கச்சதீவு ஒப்பந்தபடி நமக்கு சில உரிமை உண்டு, அதனைத்தான் வலியுறுத்திபெறவேண்டுமே தவிர, மொத்தமாக எங்களுக்கு கிடைத்தால்தான் சரியாகும் என்பது பிரச்சினை வளர்க்கும் அரசியலே அன்றி வேறல்ல.

என் முகநூல் அனுபவத்திலே நான் மிகவும் ரசித்த காமெடி இதுதான்

என் முகநூல் அனுபவத்திலே நான் மிகவும் ரசித்த காமெடி இதுதான்

அதாகபட்டது நணபர் Sanjay Athreya என்பவர் 1990ல் பத்மநாபா கொல்லபட்டதும், ஜெயகாந்தன் பேசிய வீடியோவினை பகிர்ந்திருக்கின்றார், அதில் மபொசி, வாழப்பாடி ராமமூர்த்தி என பலரும் பேசியிருப்பர், அதர பழசான வீடியோ அது, ராஜிவ் கொலைக்கும் முந்தையது.

இதனை பார்த்துவிட்ட சில புலி அடிமைகளோ, சீமானியர்களோ இப்படி வழக்கமான ஆதிதமிழ் வாழ்த்துடன் வாழ்த்தியிருக்கின்றார்கள்

“டேய் ஜெயகாந்தா, வந்தேறி பயலே, விரைவில் இருக்குடா உனக்கு, ஏய் மபோசி உனக்கு தமிழன்னா யார்னு தெரியுமா? … முவனே, உங்க அம்மா தமிழச்சியாடா? போராட்டம்ணா உனக்கு என்னெண்ணு தெரியுமா?,

டேய் ஜெயகாந்தா, தமிழன் நாடு அடைந்தவுடன் உனக்கு இருக்குடா. உன்னை விடவே மாட்டோம்…..”

என மிரட்டல் வேறு

“தமிழக உறவுகளே இந்த இரு கிழவன்களின் முகவரியினை கொடுங்கள், விட கூடாது

நண்பர்களே இவர்கள் இருவரின் வீட்டுமுன்னால் மனிதவெடிகுண்டாக வெடிக்க நான் தயார்

முதலில் இவர்கள் முகநூலை முடக்குங்கள், இவர்கள் போராட்டத்திற்கு ஆபத்தானவர்கள்

முதலில் பத்மநாபாவினை புலிகள் கொன்றதற்கு இந்த கிழவர்களிடம் ஆதாரம் கேளுங்கள், விடாதீர்கள், உறவுகளே அவன் வீட்டிற்கு படையெடுங்கள்”

என கோரிக்கை வேறு, இதில் எவனோ ஜெயகாந்தனை முகநூலில் கண்டிருக்கின்றானாம். இவர்களுக்கு ஏதடா முகநூல் கணக்கு???

# ஜெயகாந்தன் மறைந்து ரொம்பநாள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடதக்கது, தமிழரின் தனிபெரும் அடையாளமான, சோவியத் யூனியன் தமிழரின் சொத்து என அறிவித்து தடையற்ற விசா வழங்கி கவுரத்திருந்த ஜெயகாந்தனை அறியாத் இவர்கள், அட அவர் மறைந்ததை கூட அறியாத இவர்கள்தான் “தமிழ் போராளிகள்”

# சரி, மபொசி யார்? தனிதமிழ் இயக்கம் நடத்தியவர், திருத்தணி தமிழகத்தோடு இணைய போராடியவர், சென்னை இன்று தமிழகத்தோடு இருக்க அவர்தான் காரணம், அவரின் தமிழ்பற்று போற்றதக்கது, சிலப்பதிகாரத்திற்கு அவர் ஒரு நடமாடும் விளக்கம், பெரும் தமிழறிஞர், குமரி மீட்பிலும் அவர் பங்கு உண்டு,

Stanley Rajan's photo.
Stanley Rajan's photo.

 

அவர் மறைந்ததை கூட அறியாத இவர்கள்தான் “தமிழ் போராளிகள்”

# இப்படி ஜெயகாந்தனையும், மபொசியினையும் அறியாத இந்த பதர்கள்தான் இன்று “தமிழ் உணர்வாளர்களாம்”

மறக்க நினைத்தாலும் காதோரம் இந்த வரிகள் ஒலித்துகொண்டே இருக்கின்றன‌,

“டேய் ஜெயகாந்தா, வந்தேறி பயலே, விரைவில் இருக்குடா உனக்கு, ஏய் மபோசி உனக்கு தமிழன்னா யார்னு தெரியுமா? …

தமிழன் இல்லாத நீங்கள் எப்படி தமிழின போராட்டம் பற்றி பேசலாம்..டேய் த்தா.. போராட்டம்னா என்ன தெரியுமாடா… சிந்தனைனா என்ன தெரியுமாடா..டேய் மபொசி தமிழன்னா யார் தெரியுமாடா, தமிழ்நாடுன்னா என்ன தெரியுமாடா?

மேதகு பற்றி தெரியுமா? வீரம் தெரியுமா? மானம் தெரியுமா? ஏய் கிழட்டு வந்தேறிகளா, தமிழ்நாடு தமிழருக்கே. தமிழ்பேச தெரியுமா உங்களுக்கு? தமிழருக்கு நீ கிழித்தது என்ன கிழவா? என்ன தெரியும் உனக்கு?

உங்க அம்மா…..அக்கா…அடுத்த வீட்டுக்காரி, சமையல்காரி, பால்காரி…வேலைக்காரி………………..”

மறக்கமுடியாமல் சிரித்துகொண்டே இருக்கின்றேன் , அவர்கள் இறந்துவிட்டார்கள் என்றால் நம்ப கூட இவர்கள் தயாராக இல்லை.

சுப்பிரமணியன் சாமி என்பவரால் இந்த நாடு ஒரு நன்மையினையும் ஒரு காலமும் அடையாது

இந்த சுப்பிரமணியன் சாமி என்பவரால் இந்த நாடு ஒரு நன்மையினையும் ஒரு காலமும் அடையாது

ஏதோ ஒரு அந்நிய சக்தி இவரை நடத்திகொண்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை

உச்சமாக இந்த தேசத்தின் பெரும் அச்சாணியான ரிசர்வ் வங்கி கவர்ணர் மீதே இவர் பாய அனுமதித்தது யார் என்பது மட்டும் தெரியவில்லை, இதன் தாக்கம் பெரிய பொருளாதார வீழ்ச்சியாக அமையலாம்.

எல்லா நாடுகளும் பெரும் வீழ்ச்சியினை சந்திக்கும் நேரத்தில், பிரிட்டனே என்ன செய்யலாம்? பவுண்டின் எதிர்காலம் என்ன? என தவிக்கும் வேளையில்வேளை, ஆனானபட்ட சவுதி அரேபியாவே அரோம்கோ எனும் உலகின் நம்பர் 1 பணக்கார கம்பெனியில் தனது பங்குகளை விற்று நாட்டை வழிநடத்தும் நிலைக்கு தள்ளபடும் இந்நேரத்தில், சீனா தன் பணமதிப்பை குறைத்துகொண்டுள்ள இந்த காலகட்டத்தில்

முக்கியமான‌ ரிசர்வ் வங்கி பொறுப்புடன் சு.சாமியினை மோதவிடுவது நல்லதல்ல, இதன் பின்னால் ஏதும் பெரும் சதி இருக்கலாம்.

# இந்திய பணம் இன்னும் வீழ்ச்சி கண்டால் அதாவது டாலருக்கு எதிராக 70ஐ தாண்டினால் இந்தியா திவாலானதாக அறிவிக்கபடும், தற்போதைய மதிப்பு 67.4

# தக்காளி என்ன? விரைவில் உப்பே கிலோ ரூ.500க்கு விற்கபடலாம், பண மதிப்பு குறைந்தால் அதுதான் நடக்கும்..அரிசி கிலோ 5 ஆயிரம், முட்டை 1000 ரூபாய்

# மிகைபடுத்துதலில்லை இந்தோனேசிய, ஜிம்பாப்வே நாடுகளில் இதுதான் நடந்தது.

# மதிப்பிழந்துவிட்ட இந்திய ரூபாய்களை வைத்து என்ன செய்ய? ஒன்று அதனை எரிக்கலாம் அல்லது பிச்சைக்காரனுக்கு 2 லட்சம் பிச்சை போட்டேன், கோயிலுக்கு காணிக்கை 10 லட்சம் போட்டேன் என பெருமையாக சொல்லிகொள்ளலாம்

# அன்றும் சொல்வார்கள் பார்த்தீர்களா? மோடி ஆட்சியில் பிச்சைகாரனுக்கு கூட லட்சக்களில் பிச்சை கிடைக்கின்றது, எல்லா மக்கள் கையிலும் கோடி கோடியாக பணமிருக்கின்றது, எல்லா மக்களையும் கோடீஸ்வரர்களாக மாற்றியது மோடி அரசு, மோடி மேஜிக்

ரமலான் நோன்பு…

தேர்தலை அண்மித்த ரமலான் மாதம் என்றால் தமிழக அரசியல்வாதிகளுக்கு இஸ்லாமிய நண்பர்கள் மீது பாசம் பொங்கி பாலாய் வழியும்.

முக்காடு போட்டோ அல்லது குல்லா போட்டுகொண்டோ நோன்பு துறப்பு நிகழ்வில் அசத்துவார்கள், கையில் நோன்பு கஞ்சி கோப்பையும் கரண்டியுமாக போஸ் கொடுப்பார்கள், இஸ்லாமிற்காக முகமது நபிக்கு பின் அதிகமாக உழைத்தது எங்கள் கட்சிதான் என்பார்கள், இன்னும் ஏராளமான அக்கப்போர் காட்சிகள் அரங்கேறும்

தேர்தல் சமீபத்தில் நடந்து தொலைந்தபடியால் வெற்றி மயக்கத்தில் சிலரும், தோல்வி கலக்கத்தில் பலரும் இருப்பதால் இந்த நோன்பு துறப்பு நிகழ்வில் அவர்களை காண முடியவில்லை.

கடந்த ஆண்டு இந்தியாவில் இஸ்லாமியரே இல்லாததால் உஸ்பெக்கிஸ்தான் சென்று இஸ்லாமிய மக்களோடு ரமலான் நோன்பு துறந்து வரலாற்று சிறப்பு பெற்றார் மோடி, இந்த வருடம் எந்தநாட்டிற்கு செல்வாரோ தெரியாது, சத்தமில்லாமல் “திருப்புடா வண்டிய..” என நவாஸ் ஷெரிப் வீட்டிற்குகு சென்றாலும் செல்லலாம்.

சரி அவரை விடுங்கள், தமிழக அரசியல்வாதிகளுக்கு என்ன ஆயிற்று?

# மொத்தமாக துறந்தே விட்டார்களா?

குறு குறு செய்திகள்

என்ன செய்வதாக உத்தேசம் மிஸ்டர் வைகோ?, நடிகர் கார்த்திக்கை ஏதாவது ஒரு மாநகராட்சிக்கு மேயராக்கினால் எப்படி இருக்கும்?


# தெறிக்க விடலாமா?

ரொம்ப நாளைக்கு பின் “தெறி” படம் சிக்கல் இல்லாமல் ரிலிசானது பற்றி அண்ணனே கொஞ்சம் நிம்மதியானார், அது தேர்தல் நேரம் என்பதால் தப்பித்தனர் தந்தையும் மகனும்

>> இதோ கிளம்பியாயிற்று, இனி அடுத்த 5 வருடம் விஜய்படம் சிக்கலில்லாமல் வருமானால் அதுதான் பெரும் அதிசயம்

# தலைவா படசிக்கலின் போது அண்ணன் விஜய் அழுது அழுது “அம்மாஆஆஆஆஆ..” என கெஞ்சிய வீடியோ மறக்ககூடியதா?, அது நினைவு வந்தால் அண்ணன் இப்படித்தான் சொல்வார்,

>> சங்கத்த‌ உடனே கலைங்கடா……………………

Stanley Rajan's photo.
——————–

“மரிய சூசையின் காதல்’னு ஒரு கதை எழுதி வெச்சிருக்கேன். இயேசு கிறிஸ்து காதலிச்சார்னா எப்படிக் காதலிப்பார்ங்கிறதை பற்றிய கதை அது ” : – இயக்குநர் மிஷ்கின்

# மிஷ்கின் ஒரு மாதிரியான இருட்டுமனிதர் என்பது அவர் படங்களையும், கண்ணாடியும் பார்த்தாலே புரியும், ஆனால் இயேசு கிறிஸ்துவினை காதலிக்க வைப்பார் என யாரும் நினைக்கவில்லை, இன்னும் இயேசுவை சண்டை காட்சி, டூயட், பஞ்ச் டயலாக்,காமெடி எல்லாம் செய்யவைப்பார் போலிருக்கின்றது.

# கொஞ்சநாளாக அடங்கி கிடந்த கிறிஸ்தவ அமைப்புகளுக்கு வேலை வரும் நேரமிது, இப்பொழுதும் பாருங்கள் மிஷ்கின் பின்னால் இருப்பது ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்புகள், எல்லாம் பாஜக மத அரசியல் என ஒரு கூட்டம் ஒப்பாரி வைக்கும்

# அவர்கள் அப்படித்தான் யோசிப்பார்களே தவிர இயேசுவினை கேவலபடுத்தியே தீரவேண்டும் என வெறியோடு ஹாலிவுட்டில் அலையும் யூதனுடைய வேலையாக இருக்கலாமோ என யோசிக்கமாட்டார்கள், டாவின்சி கோட் முதல் பல வழிகளில் இயேசுவினை முடிந்தவரை இழிவுபடுத்துவது அவர்கள்தான்.

# எப்படியோ மிஷ்கின் ஒரு பரிவார கும்பல் என கிறிஸ்தவர்கள் கிளம்பினால், இல்லை இவர் யூத இலுமினாட்டி என சொல்ல நமக்கும் ஒரு பாயிண்ட் ரெடி.

ஆப்கனுடன் உறுதியான உறவு

ஆப்கனுடன் உறுதியான உறவு: சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்

# 1989க்கு முன்பு வரை இந்திய ஆப்கன் உறவு நன்றாகத்தான் இருந்தது, அதன் பின் குழப்பமான ஆப்கன் அரசியலும் ஆளாளுக்கு ஆண்ட தீவிரவாதிகளும் அந்த உறவினை குழப்பினர், உச்சகட்டமாக பின்லேடனின் மறைமுக ஆட்சியில் ஏர் இந்தியா விமானம் கடத்தபட்டு படுபயங்கரவாதி ஒருவனை “கைவீசய்யா கை வீசு, காந்தகார் போகலாம் கைவீசு..” என விடுவித்ததும் இந்திய‌ கருப்பு பக்கங்கள# ஆனால் அமெரிக்க கட்டங்களை பின்லேடன் இடித்துவிளையாட கிளம்பியபின்பு காட்சிகள் மாறின, ஆப்கன் நிலை மாறிற்று, இந்தியா அங்கே மறுபடி காலபதித்து சாலை பணிமுதல் அணை வரை கட்டிகொடுக்கின்றது

# இந்தியாவின் பொதுநலத்திலும் சுயநலம் இருக்கலாம், அங்கிருந்து பாகிஸ்தானை கண்காணிக்கலாம், பாகிஸ்தான் காஷ்மீருக்குள் எட்டிபார்ப்பது போல நாம் பலுசிஸ்தானில் உற்று பார்க்கலாம், தீவிரவாதம் கட்டுபடும் ஏர் இந்தியா கடத்தல் போன்றவை தடுக்கபடலாம், ஏராளமான விஷயம் உண்டு

# இதனை போலவே 1989வரை இலங்கையினை மிரட்டிய இந்தியா, அங்கு பயங்கரவாதம் ஒழிக்கபட்டவுடன் யாழ்பாண விளையாட்டரங்கு சீரமைப்பு, பலாலி விமான நிலைய சீரமைப்பு என புகுந்து அங்கும் தன்னை பலபடுத்திகொள்கின்றது

# இப்படியாக பயங்கரவாதத்தினை அண்டை நாடுகளில் முறியடித்து, நல்ல நட்புறவினை உருவாக்கி தீவிரவாத அச்சுறுத்தல் இல்ல்லாத இந்தியாவாக மாறிகொண்டிருக்கின்றது இந்தியா.

# ஒருகாலத்தில் இந்தியாவில் அடித்த கொள்ளையினை கொண்டுதான் ஆப்கனில் காஸ்னி அல்லது கஜினி நகர அணைகட்டினை கட்டினான் கஜினியின் முகமது என்பது வரலாறு, அவனது அரசுகுறிப்பு அதனைத்தான் சொல்கிறது, இலங்கை 1955 வரைக்கும் கிட்டதட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான பொருளாதார பலத்தினை கொண்டிருந்த பணக்கார நாடு.

# இன்றோ இந்தியா இவர்களுக்கு உதவிகொண்டிருக்கின்றது , ஒரே காரணம் அவர்கள் தீவிரவாதத்தால் கடுமையாக சீரழிந்தார்கள், நாமோ ஒற்றுமையிலும், சகோதரத்துவத்திலும் மிக அமைதியாக வளர்ந்து கொண்டிருக்கின்றோம்.