ரஜினி தனித்து நிற்பது இதில்தான்

FB_IMG_1467270728160நினைத்தாலே இனிக்கும் படம் அக்கால சிங்கப்பூர் மலேசியாவில் படமாக்கபட்டபொழுது ரஜினி எதிர்காலம் தெரியாத தமிழக புதுமுக நடிகர்.

அன்று கமலஹாசன் தான் டாப், ரஜினியிடம் ஆட்டோகிராப் வாஙக கூட யாரும் வரவில்லை என்பார்கள்.

இன்று கபாலிக்காக கிழக்காசியா காத்துகொண்டிருக்கின்றது, மலாய் மொழியில் மொழிமாற்றபடும் முதல் படமாம், பொதுவாக மலாய், சீன மக்களுக்கும் அவரை பிடிக்கின்றது, குறிப்பாக குழந்தைகளுக்கு

மலேசியாவில் படமாக்கபட்ட படம் அது, என்பதால் கூடுதல் சந்தோஷமாம், ஏர் ஏசியா நிறுவணம் ரஜினி படத்தை விமானத்திலே பொறித்திருக்கின்றது.

ஐரோப்பாவின் மிகபெரும் திரையரங்கில் படம் வெளியிடபடுகின்றதாம், உலகின் மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யபடுகின்றதாம்.

மூலவர் வரும்ப்பொழுது சிறு சாமிகளின் ஆட்டம் அடங்கும் என்பார்கள், அப்படி என்னதான் தலை, தளபதி, தறுதலை, இம்சை, என பலர் இருந்தாலும் ரஜினியின் இடம் மகத்தானது.

மனிதரிடம் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும், ஏற்றுகொள்ள கூடியது ஒன்றுதான், அது அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, நிம்மதியினை இழக்கவேண்டும் என்றோ அவர் நினைப்பதில்லை, தனக்குரிய எல்லை எது என்பதை அறிந்திருக்கின்றார், அதில் நம்பர் 1 ஆக நின்றுகொண்டே இருக்கின்றார்.

உண்ண ஒன்றும் இல்லாமல் இருப்பதன் பெயர் விரதம் அல்ல பட்டிணி, பெண்களே இல்லா தீவில் கடைபிடிப்பது பிரம்மசரியம் அல்ல, ஆனால் அறுசுவை உணவு முன்னால் இருந்தும் தொடாமல் இருப்பதுதான் விரதம், உலக அழகிகள் எல்லாம் வரிசை கட்டும் இடத்தில் கண்களை திருப்புவதுதான் பிரம்மசரியம்.

அப்படி தன் முன்னால் பெரும் அரசியல் வாய்பிருந்தும், அதனை தொடாமல் ஒதுக்கி வைப்பதுதான் கட்டுப்பாட்டின் உச்ச கட்டம், அது தான் ரஜினி.

இன்னொன்று மேக் அப் இல்லாமல், டை அடிக்காமல் எந்த நடிகனும் எளிதில் வெளிவரமாட்டான், அதில் மகா முதன்மையானவர் எம்ஜிஆர். சாகும் பொழுது கூட அவரின் உண்மை முகம் தெரியாமல் மேக் அப் அவரை காத்தது.

ஆனால் விருது வாங்கும் விழாவிற்கும் மொட்டை தலையுடனும், கலைந்த தாடியுடனும், இஸ்த்ரி செய்யபடாத உடையுடன் அவர் செல்வதுதான் அவரின் இயல்பினை வெளிகாட்டுகின்றது,

இதுதான் நான், இப்படித்தான் நான் என தைரியமாக உலகிற்கு சொல்ல முடிகின்றது, ஆனாலும் அவருக்கான மார்கெட்டில் ஒரு சதம் குறையவில்லை.

ஒரு தமிழ்நடிகருக்கு இவ்வளவு பெரும் வரவேற்பு உலகெல்லாம் இருப்பது பெரும் விஷயம். எப்படி சாத்தியம் என்றால்? அவர் கைகாட்டும் இடமான வானத்தை பார்த்துகொள்ளவேண்டியதுதான்.

மனிதரிடம் ரசிப்பது ஒரே விஷயம்தான், அது முதல்வர், பிரதமர் , உலக தலைவர் என யாரை பார்த்தாலும் இருக்கும் அதே சிரிப்புதான், சின்ன குழந்தையினை , ரசிகனை பார்த்தாலும் அவர் முகத்தில் காணமுடியும், எல்லோரையும் என் ரசிகர்கள் என ஒரே தரத்தில் வைக்கும் அந்த சந்தோஷம் தான் அவர் கண்களில் மின்னும்

ரஜினி தனித்து நிற்பது இதில்தான்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து காணாமல் போய்கொண்டிருக்கும் நடிகர்களும் , இயக்குநர்களும் இப்போது அதே வானத்தினைத்தான் பார்த்துகொண்டிருப்பார்கள்.

படம் விரைவில் வரலாம் என்கின்றார்கள் , ஏதோ டான் கதை என்கின்றார்கள், உரிமை போராட்டம் என்கிறார்கள், எப்படியோ பல நாடுகளில் அது வெளியிடபடுகின்றது.

# ஆனால் அது ஒருவேளை வன்முறை படமாகவும், வெளிநாடுகளில் தமிழர் அடக்கி வைக்கபடுகின்றனர் , உரிமை மறுக்கபடுகின்றனர் என்பதை போன்ற சித்திரம் இருக்குமானால் படத்தினை தூக்கி கடலில் போடவும் அந்நாடுகள் தயங்காது.

நாட்டின் நற்பெயர் அவர்களுக்கு முக்கியம்.

# அது ரஜினி படமாக இருந்தாலும் சரி, ஜாக்கிசான் படமாக இருந்தாலும் சரி.

(நான் மிக ரசித்தது அவரின் ஒரு பேச்சுதான், 2007களில் தமிழ் திரையுலகம் இறுதிபோரில் கலைஞரை கிழித்துகொண்டிருந்த போராட்டத்தில் பேச வந்தார் ரஜினி

“30 வருஷமா சண்டை போட்டு போராடுறீங்க, இன்னும் ஜெயிக்க முடியலண்ணா தோல்விய ஒத்துகிட்டு சமாதானமாக போக வேண்டியதான, இதுல ஏன் இவ்வளவு பேர் சாகணும்”

அவர் சொன்னது புலிகளையா? அல்லது சிங்கள ராணுவத்தையா? என இறுதிவரை தலையினை பிச்சிகொண்டிருந்தேன், ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் புரியவே இல்லை.

ஹா..ஹா..ஹா என சிரித்துகொண்டேன், அது தான் ரஜினி பன்ஞ்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s