அம்மா ஆட்சியினை பழித்ததால்…

இனி பலபேர் யாரையாவது அடித்துவிட்டு, அம்மா ஆட்சியினை பற்றி தப்பாக பேசியதால் அடித்தேன் என கிளம்பிவிடுவார்களோ என பயமாக இருக்கின்றது,

இனி சொந்த பிரச்சினையில் அடித்துவிட்டு அம்மா ஆட்சியினை பழிக்க என்ன தைரியம் என சீறிவிட்டு வந்துவிடலாம், அது துண்டு பீடி, குவார்ட்டர் என என்ன பிரச்சினையாகவும் இருந்தாலும், அம்மா ஆட்சியினை பழித்ததால் அடித்தேன் என சொல்லிவிடலாம்

இன்னும் என்னென்ன விசித்திரங்களை எல்லாம் தமிழகம் காணபோகின்றதோ தெரியவில்லை, எதற்கும் எல்லோரும் ஹெல்மெட் மாட்டிகொண்டு நடமாடுவதுநல்லது,

அது விமான நிலையமாக இருந்தாலும் சரி, ரயில் நிலையமாக இருந்தாலும் சரி.

ஆனால் அதே டெல்லியில் உச்சநீதிமன்றம் அவதூறு வழக்கில் தமிழக அரசினை முறைத்த விஷயம் சற்றே ஆறுதளிக்கின்றது, ஏதும் சிக்கல் என்றால்

“அரசை விமர்சித்தால் முன்பு வழக்கு போட்டார்கள், இப்பொழுது கன்னத்திலே பளாரென்று போடுகின்றார்கள்” என வாதிடலாம்

நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கின்றது என நீதிபதி மனதிற்குள் நினைத்துகொள்வார்

நல்ல வேளையாக சீமானியரும், புலியரும், புதிதாக சம்பாதித்த ரஞ்சித் வெறியர்களும் என் அருகில் இல்லை

இருந்திருந்தால் என் கன்னம் என்ன ஆகி இருக்கும் 🙂 , அம்மாவை பற்றி பேசிய உன்னை விடுவோமா என பாய்ந்திருப்பார்கள், அதில் திமுகவினரும் உண்டு என்பதுதான் ஆச்சரியம்

இன்று உலக நண்பர்கள் தினம்

இன்று உலக நண்பர்கள் தினமாம்

முகநூலில் கிடைத்திருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களை சொல்லிகொள்கிறோம், இந்த விஞ்ஞா வீதியான‌ முகநூலில் மில்லியன் கணக்கான நபர்கள் உண்டு எனினும் நமக்கு நண்பர்கள் என வாய்த்தவர்கள் வித்தியாசமானவர்கள்

பெரும்பாலும் நாட்டுபற்றுள்ளவர்ர்கள், சாதி கடந்தவர்கள், ஓரளவிற்கு எது தர்மம் என அறிந்தவர்கள் , குறுகிய வட்டத்தில் தன்னை அடைத்துகொள்ளா பெரும் மனதிற்கு சொந்தகாரர்கள் எனது முகநூல் நண்பர்கள் எனும்பொழுது மனம் மகிழ்கின்றது.

சர்ச்சை செய்வார்கள், வாதம் செய்வார்கள், கடுமையாக விமர்சனம் செய்வார்கள். மறுநொடி அப்புறம்… என சகஜநிலைக்கு வந்துவிடுவார்கள்

பெரும் ஆச்சரியமாக இதில் 90% நண்பர்களை நான் நேரில் பார்த்ததே இல்லை, அதனால் என்ன?

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பின் ஆண்ராய்ட் வெர்ஷன் என சொல்லிவிடலாம்

அதுபோலவே நட்பில் உறுதி என்பது மட்டும் உண்மை

குறள்
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

பொருள்:
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

முகநூலில் எனக்கு கிடைத்திருக்கும் நண்பர்கள் இப்படியானவர்கள், ஒன்றுபட்ட எண்ணங்களே நம்மை எல்லாம் நட்பாக நிறுத்தியிருக்கின்றன.

நட்பு நாளின் வாழ்த்துக்கள் நண்பர்களே, கொண்டாடுவோம்

சிதறல்கள்

பாலாற்று தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை , இனியாவது விழிக்குமா அரசு : அன்புமணி சாடல்

அதாகபட்டது தாழ்த்தபட்ட சாதிக்காரன் காதல் திருமணம் செய்து சர்ச்சைகுரிய “தற்கொலை” செய்தால் அரசு தூங்கட்டும் என விட்டுவிடுவார், ஆனால், விவசாயி செத்தால் மட்டும் அரசினை விழிக்க சொல்வார்

எந்த சாதி விவசாயி என்பதை அன்னார் விரைவில் சொல்வார் என எதிர்பார்க்கலாம், பொதுவாக வன்னிய விவசாயிகளை தவிர யாருக்கும் இந்த அன்புமகன் வாய்திறப்பதில்லை


கர்நாடகாவில் இன்று பந்த், மகதாயி நதியினை மராட்டியத்துடன் பகிர்ந்துகொள்வதை கண்டித்து வாட்டாள் நாகராஜ் தலமையில் பந்த் ஆர்பாட்டம்

வாட்டாள் நாகராஜ் எனும் கன்னட வெறியருக்கு தண்ணி ராசி, எங்காவது நீரை பங்கிட வேண்டும் என்றால் பொங்கிவிடுவார். ஆந்திரா, தமிழத்தை தொடர்ந்து இதோ மகாராஷ்ட்டிரத்திடம் மல்லு கட்டுகின்றார்.

தமிழகத்திற்கு எதிராக இவர் பேசிய பேச்சுக்கள் சாதரணமானவை அல்ல.

கன்னட மக்கள் ஒரு வகையில் வித்தியாசமானவர்கள், என்னதான் கன்னடர் நலம், கன்ன்ட வெறி என கத்தும் இம்மாதிரி சண்டியர்களை தெருக்கத்தலுக்கு மட்டும்
அனுமதிப்பார்களே தவிர

ஒரு போதும் ஆட்சிக்கு அல்ல.

அவ்வகையில் தனித்து நிற்கிறது கன்னடம்


 

இதுதான் ஆசிய ராணுவ நிலை

இந்திய ராணுவத்தினை பற்றி ஏதும் தெரியாமல், அல்லது சீன ராணுவத்தினை பற்றியோ அதன் புத்த எதிர்ப்பு பற்றியோ தெரியாமல் எப்படி உளறமுடியும் என்றால் இப்படித்தான்

v

அட மானிட பதரே, கொஞ்சமேனும் உலக ராணுவ நிலவரம் புரியுமா?

புத்தமதம சீன கம்யூனிச அரசுக்கு எதிரி, அவ்வளவுதான் திபெத்தை பிடித்தார்கள், அதையொட்டிய சில பகுதிகளில் வந்தார்கள், அருணாசல பிரதேசம் சர்ச்சை எல்லாம் அதனிலிருக்கும் பெரும் புத்தமடாலயம் பற்றியே

புத்தமதம் எழும் பட்சத்தில் சீன கம்யூனிச அரசு தூக்கி எறியபடும் எனும் அச்சமே அவர்களை இதனை செய்யவைத்தது, இன்றும் தலாய்லாமா மூலம் இந்தியா ஏதும் செய்யலாம் எனும் அச்சம் அவர்களுக்கு உண்டு

1962 யுத்தம் எதிர்பாராமல் நடந்தது, இந்தியா சுதாரிக்க கொஞ்சம் காலமானது, அதன் பிறகு எங்கே தாக்க வந்தார்கள் சொல்லுங்கள்?

சீன ராணுவம் அப்படி உலகில் எங்கே கிழித்தது?

ரஷ்யாவிடம் மங்கோலிய பகுதியில் அடிவாங்கியது, கொரிய போரில் அது இறங்கினாலும் முழுவெற்றி பெற்றதா?

அவ்வளவு ஏன் அதன் காலடியில் இன்றளவும் நான் தான் சைனா, நீ டூப்ளிகேட் என சவால் விடும் சின்ன நாடான தைவானை என்ன செய்தது சீனா?

கடந்த வருடம் தன் எல்லையிலிருந்த சீன கடற்படையினை விரட்டி அடித்தது வியட்நாம், என்ன செய்தது சீனா?

அவ்வளவு ஏன் வெள்ளையன் திரும்ப ஒப்படைத்த ஹாங்காங்கினை கூட அதனால் முழு நிர்வாகம் செய்ய முடியவில்லை, இன்னும் அது சுயாட்சியே, மீறி இணைக்க முயன்றபோது ஹாங்காங் மக்கள் பொங்கி எழ பின் வாங்கியதுதான் சீனா

ஜப்பானை மிரட்டிகொண்டே இருக்கின்றதே தவிர அடுத்த கட்டம் செல்ல சொல்லுங்கள், செல்ல மாட்டார்கள்

இதோ சர்வதேச தீர்ப்பாயம் வியட்நாம் தீவு விவகாரத்தில் செவிட்டில் அறைந்திருக்கின்றது, என்ன செய்துவிட்டது சீனா

அவர்கள் யோசிக்கின்றார்கள், யுத்தம் தொடங்கினால் நமது 40 ஆண்டுகால வளர்ச்சி அடியோடு நின்றுவிடும் என்பது அவர்களுக்கு தெரியாததல்ல‌

இந்தியாவோடு மோதினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும், ஷாங்காய் வரை நமது ஏவுகனைகள் தாக்கும், போதாகுறைக்கு வியட்நாமிலும் நமது பிரம்மோஸ் ஏவுகனைகளை நிறுத்தியாயிற்று

எல்லை தகறாறுகள் எல்லா நாட்டிலும் உண்டு, ஆனால் ஒரு தயக்கம் சில நாடுகளுக்கு வரும், அதில் இன்னும் கையினை பிசைகிறது சீனா, இன்னும் அது நினைத்தவாறு அதனால் புத்தமத மூலத்தை தொடமுடியவில்லை

எமது ராணுவம் பெருமை மிகு ராணுவம், 1962ல் சிறுகுழந்தையாக அது இருந்தபொழுது சீனா அடித்திருக்கலாம், இன்றோ வளர்ந்விட்ட காளை அது

மிரட்டலிலே பாகிஸ்தான் இருக்காது, மோதினால் சீனாவும் பெரும் இழப்பினை சந்திக்கும்

இதுதான் ஆசிய ராணுவ நிலை

தைவானிடமும், வியட்நாமிடமும் கிழிக்க முடியாத சீனா, இந்தியாவில் கிழித்துவிடுமாம்.

Jai Hind

இதில் இவர் கக்கூசில் இருந்து அவருக்கு வந்த மலச்சிக்கலுக்கு இப்படி எல்லாம் யோசித்தால் மனிதருக்கு மலச்சிக்கல் மட்டுமல்ல வேறு ஏதோ ஒன்றும் சிக்கல் என முடிவிற்க்கு வரலாம்

பெண் உரிமை

சவுதியில் பெண் உரிமை எப்படி உள்ளது என சொல்லி தெரியவேண்டியதில்லை, கார் வோட்டவோ தனிமையில் நடக்கவோ அவர்களுக்கு உரிமை இல்லை,

அந்நாட்டு பெண்கள் குரலெழுப்பிக் கொண்டே இருக்கின்றனர்

தாலிபான்கள் மலைலாவினை கல்விக்காக கொல்லமுயன்றது உலகறிந்தது, இன்றோ அவர் பெரும் உதாரணமாக வளர்ந்து நிற்கின்றாள்.

இதோ ஈரானில் பெண்களுக்கு கட்டாய பர்தா அணியவைக்க கூடாது என ஆண்களும் போராடுகின்றனர், ஆண்கள் பர்தா அணிந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

எங்களுக்கு கல்வி வேண்டும், சுதந்திரம் வேண்டும் என ஆப்கானிய பெண்கள் கல்விசாலையில் குவிகின்றார்கள்

இந்து மதத்திலும் பெண்ணடிமை தனம் உண்டு, அடக்குமுறை உண்டு

அவற்றை எல்லாம் மதங்களை கடந்து கண்டித்து போராடிய , பெண் உரிமையும், பெண் கல்வியும் வேண்டுமென்று சொன்ன பெரியாரின் சிலையினை, ஷிர்க் ஒழிப்பு என்று சிலர் உடைத்து அவமானபடுத்தியிருக்கின்றார்களாம்

அன்பர்களே

மதங்களை விட மனிதநேயம் எவ்வளவு உயர்ந்தது, பெண்விடுதலை உயர்ந்தது என அவர்கள் உணர்ந்து அரேபியர்கள், ஆப்கானியர்கள் மாறி கொண்டிருக்கின்றார்கள்.

இங்கோ நிலை கற்காலம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது

இனி ஒரு காலத்தில் பெரியார் ஈரான், ஆப்கானிய எல்லையில் கொண்டாடபடலாம், அவரின் முக்கியத்துவம் அந்நாடுகளில் தெரியலாம்

இங்கோ ஷிர்க் என சொல்லி பெரியாரின் சிலையினை உடைத்து கொண்டே இருங்கள், அதனை மட்டும்தான் உங்களால் செய்யமுடியும்,

மாறாக பெரியாரின் கொள்கைகளை அல்ல ,

மத அடக்குமுறை உள்ள எல்லா இடங்களிலும் அவர் கொள்கை என்றும் தேவைபடும், வரும் காலத்தில் உங்கள் சந்ததிகளே உணரலாம், அவர் ஒருபோதும் தோற்பதில்லை.

பெரியாரின் சிலை ஷிர்க் ஒழிப்பு என அவமானபடுத்தபட்டது என‌ அங்கே போராடும் ஈரானிய இஸ்லாமியருக்கு , மலைலாவிற்கு தெரிந்தால் ஓடிவந்து அந்த சிலையினை கண்ணீரால் கழுவி சுத்தபடுத்துவார்கள்.

பெரியாரின் மதிப்புமதிப்பும், அவர் கொள்கைகளின் தேவையும் அந்த கண்ணியமிக்க‌ இஸ்லாமியருக்கு நன்றாகவே விளங்கி இருக்கின்றது.

மகிந்த ராசபக்சே

FB_IMG_1469772240484

பொதுவாக யுத்ததில் பெரும் வெற்றி ஒரு ஆட்சியாளரின் மமதையினை அதிகரிக்கும் என்பார்கள், வங்கப்போரின் வெற்றிக்கு பின் இந்திராவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன‌

இலங்கையில் ராஜபக்சேவும் அப்படித்தான் இருந்திருக்கின்றார், யாரும் பெறமுடியாதவெற்றி பெற்றாகிவிட்டது, இனி அசைக்க யாருமில்லை என்றளவில் அவரது குடும்பத்தாரின் மோசடிகள் எல்லை மீறி இருக்கின்றன, ஆடிமாத காற்றாக ஆர்பரித்திருக்கின்றார்கள்

ஆனால் அடுத்து வந்த அரசு போட்டு தாக்குகின்றது, குடும்பத்தார் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதியபடுகின்றன, உச்சமாக அவரின் மகன் கைதுசெய்யபடும் சூழல் உருவாகியுள்ள்ளது.

நமக்கு தெரியும், ராஜபக்சேவினை தமிழக மூலை முடுக்களில் எல்லாம் தெரியசெய்தவர்கள் வைகோசீமானியர், ம்ம்மேஏஏ என கத்தும் ஆட்டு மந்தை என பலர். அவர்கள்தான் தமிழகத்தில் ராஜபக்சேவினை பிரபலபடுத்தியவர்கள்

அடிக்கடி ராஜபக்சே தண்டிக்கபடவேண்டும் என சீறுவார்கள், இப்பொழுது சத்தம் குறைவு

சரி ராஜபக்சே என்ன செய்கிறார், அவருக்கு இன்னமும் வலுவான மக்கள் பலம் உள்ளது, தமிழர் மத்தியிலும் அவருக்கு பெரும் ஆதரவு உண்டு, அவரோ தண்டி யாத்திரை செல்கிறார், கண்டி முதல் கொழும்பு வரை வைகோ ஸ்டைலில் நடைபயணம்

அது இலங்கை ஸ்டைல், சிங்கள பாணி. ஏதும் சிங்கள மக்களை திரட்டவேண்டுமென்றால் அங்கே இப்படித்தான் கிளம்புவார்கள், முன்பு ஜெயவர்த்தனே கடைபிடித்தார்.

ஆக அவர் ஒருசிக்கலும் இன்றி அட்டகாசமாக அரசியல் செய்கிறார், வைகோவின் ராஜ தந்திரம் வென்று அவரும் செட்டிலாகிவிட்டது, சீமானும் இயற்கை விவசாயம் செய்ய கலப்பை பிடித்தாகிவிட்டது

நமது சந்தேகம் எல்லாம் ராஜபக்சே தண்டிக்கபடவேண்டும் என சீறியவர்கள், ராஜபக்சே குடும்பத்தார் போல தமிழக ஊழல் வாதிகளும் தண்டிக்கபடவேண்டும் என என்றாவது கேட்டதுண்டா? நிச்சயம் மாட்டார்கள்

லைக்கா எனும் நிறுவணத்திற்காக விஜயின் கத்தி படத்தினை கத்தி கத்தி தடுத்த தமிழர் அமைப்புகளையும் காணவில்லை, இனி அந்த லைக்கா அதிபர் சுபாஷ்கரன் சென்னை வந்து ரஜினியோடு அடிக்கடி போஸ் கொடுப்பார், எந்திரன் 2.0 எனும் அடுத்த நாடக தயாரிப்பாளர் அவரே.

ஒரு சத்தம் வந்தது அல்லது வரும், வராது. அதே சுபாஸ்கரன் தான் ராஜபக்சேயோடு கைகுலுக்கிய அவரே தான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரஜினியினை சீண்டும் நாம் தமிழர் மந்தை கூட இதனை சொல்லாது, காரணம் தலைவர் அங்கிள் சைமன் லைக்கா என்றால் மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கின்றார்.

காரணம் ராஜபக்சே சுபாஷ்கர வியாபார உறவு அப்படி, அதனால் வியாபாரியான அங்கிளும் கப்சிப்

சொல்லமுடியாது இனி லைக்கா வெற்றிவிழாவிற்கு ராஜபக்சே சிறப்பு விருந்தினராக வந்தாலும் சத்தமிருக்காது

ரியோ 2016 ஒலிம்பிக்ஸ் ஆரம்பம்

FB_IMG_1469765034155

அடுத்த வாரம் தொடங்க உள்ளது ஒலிம்பிக் போட்டி, உலகமெல்லாம் கடும் பரபரப்பு, எல்லா நாட்டு அணிகளும் இறுதிகட்ட தயாரிப்பில் தீவிரமாக உள்ளன‌

அமெரிக்காவோ மீண்டும் முதலிடம் பிடிக்கும் வேட்கை, சீனாவிற்கு தக்க வைத்துகொள்ளும் வெறி, குட்டி நாடுகளான ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு முதல் 10 இடங்களுக்குள் வந்தே விடவேண்டும் என்ற கடும் பதைபதைப்பு

ஜிம்னாஸ்டிக்கிலும், போல் வாட் போன்ற போட்டிகளின் பதக்கங்களை குத்தகைக்கு எடுத்திருக்கும் ரஷ்யாவிற்கு ஊக்க மருந்து தடை, மிக சில வீரர்களே பங்கு பெறலமாம், பொறுமிகொண்டிருக்கின்றார் புடின்

இப்படி உலகமே எதிர்நோக்கி இருக்க, இங்கு எவனும் தீபாவளி கொண்டாட்ட வருவானோ என எல்லா உளவு அமைப்புகளும் களமிறங்கவிட்டன,

வளரும் நாடான பிரேசில் இப்போட்டியினை சிறப்பாக‌ நடத்தி தன்னை உலகிற்கு நிரூபிக்க கடும் பிரயத்தனத்தில் உள்ளது, அதன் விமான நிலையங்கள் நிரம்பி வழிகின்றன‌

(நமக்கோ சென்னை விமான நிலையம் 66வது முறை நொறுங்கி இருக்கின்றது.)

இப்படி உலகமே பிரேசில் பக்கம் திரும்பி நிற்க, எல்லா நாட்டு மீடியாவும் அதில் குவிந்திருக்க, தமிழக மீடியாக்களின் தலைப்பு செய்தி என்ன தெரியுமா?

“விஜய் அமலா பால் ஏன் பிரிந்தார்கள்?” “விவாகரத்தின் காரணம் என்ன விளக்குகின்றார் விஜய்”, என ஏக அழிச்சாட்டியங்கள், வாழ்க தமிழ் ஊடகம்

இனி போட்டி தொடங்கும், ஐரோப்பியர்களும் கிழக்காசியர்களும் பின்னி எடுப்பார்கள், நாம் வழக்கம் போல பார்த்துகொண்டே இருப்போம்.

முன்பே சிக்கல்தான், இப்பொழுது மாட்டுகறி உண்ண கூடாது என பல அழிச்சாட்டியம் செய்யும் இந்த தேசத்திலிருந்து எப்படி பலமான வீரர்கள் வருவார்கள்?

இந்திய துணைகண்டம் என்பது மிக சரியான வார்த்தை, உலகத்தில் ஒருபோதும் ஒட்டாத, அதனைபற்றி கவலைபடாத நாடு இது

இப்பொழுதும் பாருங்கள், சில நாட்டுபற்றாளர்களின் கவனம் பாகிஸ்தான் எத்தனை பதக்கம் எடுத்தது என்பதிலே தான் இருக்கும, அதனை தாண்டி யோசிக்க மாட்டார்கள். அவர்கள் கவலை அது.

ரஜினி : அவர் அவராகவே இருப்பார்

ரஜினியின் சில தந்திரங்கள் மகத்தானவை, எந்த முத்திரையும் தன் மீது படியாமல் பார்த்துகொள்வதில் அவருக்கு அவ்வளவு அக்கறை. அப்படித்தான் கலைஞரை வாழ்த்துவார், கலைஞரை பாராட்டுவார், இளங்கோவனுடன் டீ குடிப்பார், மோடிபுடன் யோகா செய்வார்

இப்படி எல்லாவற்றிலும் மகா கவனமாக இருக்கும் ரஜினி, தனக்கு தலித் அனுதாபி எனும் ஒரு முத்திரை கபாலியோடு கபாலத்தில் குத்தபடுமோ என உணர்ந்து அவசரமாக சோ ராமசாமியினை கபாலி பார்க்க அழைத்திருக்கின்றார்

இதுவரை எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்த ரஜினி என்றாவது இப்படி பெரும்பிரமுகர்களை ஸ்பெஷல் ஷோவிற்கு அழைத்திருக்கின்றாரா என்றால் அழைத்திருக்கின்றார், அப்பொழுதெல்லாம் டைரக்டரும் அருகில் இருப்பார்.

ஆனால் சோவினை அழைத்தது இதுதான் முதல் முறை, இன்னொரு முக்கிய‌ விஷயம் இயக்குநர் ரஞ்சித் அழைக்கபடவில்லை, ஒருவேளை அழைக்கபட்டிருந்தால் சோ அருகே ரஞ்சித் அமர்ந்து படம் வெளிவந்திருந்தால்? நிச்சயம் அழிச்சாட்டியம் தாங்காது

இன்னொன்று சோ ரஜினி படங்களும் காட்சிகளும் இணையமெங்கும் வலம் வருகின்றன அல்லது வர வைக்கபடுகின்றன‌

சோ வினை பற்றி தெரியுமல்லவா? அவரை அழைத்தால் மொத்த பிராமண சமூகத்தையும் அழைத்ததற்கு சமம். ஆக ரஜினி எதனையோ சொல்ல வருகின்றார், கலைஞரை அடிக்கடி சீண்டும் சோ வும் கலைஞர் போலவே வீல் சேரில் வந்திருக்கின்றார் என்பது ஒரு வகை மேட்சிங், இருவருமே வில்லாதி வில்லன்கள்

பொதுவாக சோ வின் பார்வை வித்தியாசனாமது, அவரது ஈழக்கோணம் சரி, புலிகளை குறித்து முதன் முதலில் 1986களில் தமிழகத்தில் எச்சரித்த ஒரே நபர் அவர்தான், பின்னாளில் அது மிக சரி என புலிகளே காட்டினர்.

இனி கபாலி பற்றி என்ன எழுதி மலேசிய தமிழர்கள் நிலை பற்றி சொல்லபோகின்றாரோ தெரியவில்லை பார்க்கலாம்.

மொத்தத்தில் ரஜினி யார் மூலமாக தன் தலித் அரசியல் முத்திரையினை நீக்க முயல்கின்றார் என உலகம் கண்டுகொண்டிருக்கின்றது, இதுதான் ரஜினி, மனிதர் மிக சிறந்த நடிகர் மட்டுமல்ல, சில விஷயங்களில் இப்படியான ரசிக்கதக்க வில்லனும் கூட‌

ரஜினிக்கென்ன, நாளையே அறிவிப்பு கொடுத்தால் போயஸ் கார்டன் முழுக்க இயக்குநராக குவிவார்கள், ஒரு படத்தில் ஜமீந்தாராக வந்து ஏழைகளுக்கு சொத்து எழுதி வைத்தால் முடிந்தது பிரச்சினை, டக்கென்று எழும்பி விடுவார்

அந்த வேகம் தான் ரஜினி, அவர் அவராகவே இருப்பார்.

ஆனால் ரஞ்சித் அப்படி அல்ல, இன்னொரு நெருப்பாற்றினை நீந்தி கடக்கவேண்டும். அதில் அவரோ அல்லது அவரின் தனிதன்மையோ காணாமல் போகலாம்

கபாலியை ஏன் விமர்சித்தோம்?

கபாலியினை ஏன் விமர்சித்தோம் என்றால், ரஞ்சித் மீதுள்ள வன்மம் அல்ல, மாறாக அவர் மறைத்த விஷயங்கள் ஏராளம்

மலேசியா அற்புதமான நாடு, மூன்று இனங்களும் கலந்து வாழும் நாடு, வரலாற்றினை கவனியுங்கள் சிங்கப்பூர் தனிநாடாகும் போது ஒரு சொட்டு ரத்தம் சிந்தி இருக்கும்? உலகில் எங்காவது அப்படி பிரிவினை உண்டா?

அந்த பெரும் மனதிற்கு சொந்தக்காரர்கள் அவர்கள், அப்படி ஒரு மனம் எந்த இனத்திற்கு வரும்? சிங்கள்ன், யூதன், வெள்ளையன், ம்ம் ஹூம்.. யாருக்கும் வராது

இன்றும் இரு நாடுகளும் பகை அல்ல, ராணுவ குவிப்புகள் அல்ல, ஏவுகனைகள், அணுகுண்டுகள் இம்சைகள் இல்லை, எப்படி அமைதியாக வாழ்கின்றார்கள்

காரணம் பரந்த மனமும், விட்டுகொடுக்கும் பண்பும், உழைத்தால் வாழலாம் எனும் வாழ்க்கை தத்துவமும் அப்படி வாழ வைக்கின்றன. மலாய் மக்களின் பெரும் பரந்த மனம் அவர்களின் புன்னகை போலவே அழகானது, விசாலமானது

இட ஒதுக்கீடு முறை கொண்டுவந்தார்கள், காரணம் வறுமையும் அறியாமையும் அவர்களிலும் உண்டு , மக்களாட்சியில் பெரும்பான்மை இன ஆதரவு இல்லாமல் ஆட்சி சாத்தியமில்லை

அப்படி வந்ததில்தான் 7% மக்கள் தொகை கொண்ட இந்தியருக்கு குறிப்பிட விகிதமே கொடுக்க முடியும், அதிலும் பஞ்சாபியர், தெலுங்கர், மலையாளி என எல்லா இனமும் உண்டு ஆக தமிழர் என்பவர்கள் இவர்களோடு சேர்ந்த இந்தியரே

இதில் கல்வி கற்ற தமிழர் நல்ல பணிகளில் உண்டு, உழைத்து மேல் எழும்பிய தமிழர் உண்டு. சீன இனம் கேட்கவே வேண்டாம் அசாத்திய உழைப்பில் பிரமாண்டமாக எழும்பி இருக்கும் இனம அது.

இப்படி பல வாய்ப்புள்ள அழகிய தேசத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையினை படமாக்குவேன், அதிலும் பல உண்மைகளை மறைத்து தலித்தியம் பேசுவேன், மக்கள் புறக்கணிக்கபட்டதை போலத்தான் காட்டுவேன் என்றால் விமர்சனம் செய்யமாட்ட்டார்களா?

எல்லா விஷயத்தையும் காட்டிவிட்டல்லவா இன்னொரு முகத்தை காட்டவேண்டும்?

இந்நாட்டில் வரதட்சனை இல்லை, அரசு கல்வி கடனுக்கு ரெடி இன்னும் ஏராளமான வசதிகள் உண்டு, ஒரே விஷயம் பெற்றோற் பிள்ளைகளின் வாழ்வினை நிர்மானிக்க முடியாது

அதாவது அவர்களின் தலைவிதியினை அவர்களே முடிவுசெய்கின்றார்கள், இதுதான் யதார்த்தம்

இவ்வளவிற்கும் போதை பொருள் இருந்தால் கடும் தண்டனை என வைத்திருக்கும் நாடு இது, அந்நாடு அதில் கடுமையாக இருக்கின்றது

இதனை எல்லாம் எப்பக்கமாவது நீங்கள் அப்படத்தில் காண முடிந்ததா?

அம்பேத்கர் என்றால் யார் என இவர்களுக்கு தெரியுமா? அவ்வளவாக தெரியாது, ஆக கோட் வசனம், ஆண்ட பரம்பரை எல்லாம் வலிந்து திணிக்கபட்ட வசனங்களே

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எல்லா விஷயங்களையும் தொட்டு செல்வார் மணிரத்னம், கொழும்பில் தமிழ் இலக்கிய கூட்டம் நடக்கும், அதாவது இப்படியும் சில தமிழர்கள் அமைதியாக வாழ்கின்றார்கள், ஆனால் வடக்கே ஒரு தமிழ் குழந்தையின் தாய் என்ன பாடுபடுகின்றாள்

அக்குழந்தை போராளிகளில் ஒன்றாய் வாழவேண்டிய பெண் சென்னையில் வளர்ந்ததால் எப்படி ஒப்பிட்டு பேசுகின்றாள் என்பதில் தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தில் மொத்த வலியும் புரியும். அகதி முகாம் ரணம் புரியும் இன்னும் என்னவெல்லாமோ புரியும்

ஆனால் ரஞ்சித் அப்படி பரந்து பார்க்காமல், மிக மிக குறுகிய வட்டத்தில் காட்டிய படம் அது. எல்லா விஷயங்களையும் காட்டிவிட்டு இப்பக்கம் வந்தால் எப்படி இருந்திருக்கும்?

சீனர், பஞ்சாபியர், வங்கத்தவர், மலையாளி, தெலுங்கள் என எத்தனை இனங்கள் உண்டு, அவர்கள் வாழவிலையா? அடிமைகள் நாங்கள் என ஓலமிட்டார்களா? கேட்டதுண்டா? இதனை எல்லாம் சொல்லி இருக்கவேண்டாமா?

ஆக தமிழன் மட்டும் அடிமையா என்ற வசனம் எல்லாம் வியாபாரம் அல்லவா?

அதனைத்தான் சொன்னேன், அதற்கு எனக்கு கிடைத்தது சாதி வெறியன், பிராமண அடிவருடி, தலித் வளர பிடிக்காதவன் இன்னும் ஏராளம்

கொடுமையாக சீன பெருஞ்சுவர் அளவிற்கு நீண்ட கடிதங்கள்

நான் கம்பனுமல்ல‌… நீங்கள் சடையப்பனுமல்ல

நண்பர்கள் என சொல்லிகொண்டவர்களின் ஜாதி வெறி அப்பட்டமாக தெரியும் நேரமிது, எனக்கு ஜாதி பற்றி பெரும் பிம்பமெல்லாம் இல்லை, நானும் அடக்கபட்ட சூத்திர சாதியே, அடக்குதல் என்றால் விரட்டி விரட்டி அடக்குதல் எனும் ஒருவகை வன்மத்தால் அந்நாளில் விரட்டபட்ட சாதி

ஆனால் அன்றைய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் ஏக மாறுதல் உண்டு, உலகமயமாக்கம் எனும் இக்கால கட்டத்தில் எல்லோருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்கின்றது, வாழ நினைத்தால் வாழலாம் எனும் கனவு கனியும் காலம்

யாரும் யாரையும் நம்பி இருக்கவேண்டிய நிலை இல்லை, இப்படி எல்லாம் சாதி பேசுபவர்கள், வெளிமாநிலம் சென்றால் தமிழன் எனவும் அதே வெளிநாடு சென்றால் இந்தியன் எனவும், இன்னும் தாண்டி ஐரோப்பா சென்றால் ஆசிய கருப்பன் எனவும்தான் அழைக்கபடுவார்கள், நானை செவ்வாய் சென்றால் பூமிக்காரன் என்பார்கள்

ஆக மிக உயர்ந்த சிந்தனையும், பரந்த மனமுமே ஒருவனுக்கு வேண்டுமே தவிர, குறுகிய சுயநல சாதி வெறி அல்ல, அதனால் ஒன்றையும் கிழித்துவிட முடியாது.

இது உழைக்க வாய்ப்புள்ள காலம், இன்னொன்று நாம் எல்லோருமே வளரும் வர்க்கம், அதனால்தான் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கின்றோம், உலகம் அப்படி ஆகிவிட்டது,

காலத்திற்கேற்ப வாழவேண்டும் அதனை விட்டு பழங்கதைகளை பெசினால், உங்களுக்கு மட்டுமா? எங்களுக்கு பேச விஷயம் இல்லையா? புரட்சி, விடுதலலை, அடக்கப்ட்டோர் முன்னேற்றம் என சொல்ல தெரியாதா?

வேண்டாம்

காரணம் அது தேவை இல்லா காலம், வீணாண சர்ச்சைகளையும் அர்த்தமில்லா குழப்பங்களையும் அது கொண்டுவரும், அதனை வைத்து அரசியல் செய்யலாமே தவிர வேறு ஒன்றும் அல்ல‌

என்னை சாதி வெறியன், குழப்பவாதி என நினைத்தால் நினைத்து கொள்ளுங்கள், ஈழம் பற்றி மட்டும் எழுத நான் என்ன கதிர்காமத்திற்கு நேர்ந்துவிட பட்டவனா?

பிடிக்கவில்லை என்றால் நகர்ந்துவிடலாம் அல்லவா? உங்களை போலவே நானும் சிந்திக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி?

இதோ என் தாத்தா செருப்பினை கையிலேந்தி நடந்த அக்கிரகாரத்துல் என்னால் ஷூ போட்டு நடக்க முடிகின்றது, அங்கே வீடும் வாங்கி நடுத்தெருவில் கருவாடும் காயவைக்க முடிகின்றது என்றால் காலம் மாறி இருக்கின்றது என்றுதான் பொருள், இதில் நான் ஷூ போட்டது அரசியல் என சொல்லமுடியுமா?

திறமை உள்ளவர்கள் ஒருநாளும் சாதிய போர்வையில் , சிறுபான்மை போர்வையில் தன்னை அடைத்துகொள்ள மாட்டார்கள், திறமை அவர்களை உயர்த்தும்

தலித் மக்களின் வலியினை பாரதி கண்ணம்மா படம் அழுதமாக சொன்னது என்றால் அதிலென்ன தவறு கண்டீர்கள்?

எல்லாவற்றையும் சாதிய கண்ணோட்டத்ததோடு பார்த்தால் உங்களுக்கு கிளிண்டன் பிராமணனாகவும், சதாம் உசேன் தேவராகவும்தான் தெரிவார், பில்கேட்ஸ் நாடாராக தெரியலாம்

லெனின், மாவோ போன்றார் தாழ்த்தபட்டவராக தெரியலாம்.

என்ன பைத்தியக்ரமான சிந்தனை இது

சிவாஜி கணேசன் பெரும் உச்சம் பெற சாதி உதவிற்றா? இவ்வளவிற்கும் அவர் சொந்த சாதிகாரனன தேவர் பிலிம்ஸ் அவரை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை?

இப்படி சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம்

திறமையுள்ள யாருடைய முன்னேற்றதை இங்கு சாதி தடுத்தது? சொல்லுங்கள், நாங்களும் திரையுலகம் அறிவோம்

ஒடுக்கபட்ட இனத்தின் அவருக்கும், மேட்டுகுடியான சுஜாதாவிற்கும் பெரும் நட்பு இருந்திருக்கின்றது, இருவருமே உச்சம் தொட்டிருக்கின்றார்கள், யாழ் தாழ்திருக்கின்றார் அல்லது தாழ்த்தப்ட்டிருக்கின்றார்?

நேற்று அப்துல் கலாம் நினைவுநாள், தாழ்த்தபட்ட மீணவ குப்பத்துக்காரரான அவருக்கும் மேட்டுகுடி சுஜாதாவிற்கும் நல்ல நட்பு இருந்திருக்கின்றது, இருவருமே உச்சம் தொட்டிருக்கின்றார்கள்

பாரதியாரின் இறுதி நாட்களில் அவருக்கு துணை யார்?, காமராஜர் ஜாதி வைத்தா அகில இந்திய காங்கிரசினை ஆட்டி வைத்தார்?

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே , அதாவது நல்லவர்கள் எல்லா ஜாதியிலும் உண்டு

மனதை விசாலமாக்கிகொண்டு, பர்ந்த சிந்தனையோடு பதில் எழுதுங்கள், இல்லாவிட்டால் சென்றுவிடலாம்.

உங்கள் மகிழ்ச்சிக்காக எழுத நீங்கள் எட்டயபுரம் ஜமீனும் அல்ல, நான் பாரதியும் அல்ல,

நீங்கள் சடையப்பனுமல்ல நான் கம்பனுமல்ல‌