சைமன் வாய் ராசி…

ஆனாலும் ஆயிரம் சொல்லுங்கள், அங்கிள் சைமன் வாய்ராசி யாருக்கும் வராது

புலிகள் பற்றி பேசினார் புலிகள் அழிந்தனர் , அல்லது புலிகள் அழிந்தபின் தான் பேசவந்தார், இப்போது இலங்கை மகா அமைதி.

சென்னை வெள்ளத்தில் உதவ மூங்கில் தெப்பம் அவர் கட்டும்போதே சென்னை வெள்ளம் வடிந்துவிட்டது

நேற்றுதான் பெண்கள் பாதுகாப்பிற்கு சட்டம் வேண்டும் என அவர் சொல்லும்போதே குற்றவாளி பிடிபட்டிருக்கின்றான்

# சூப்பர் வாய்ராசி அங்கிள் சைமன், எல்லாம் முடிந்தபின் பேசுகின்றீர்களா? அல்லது நீங்கள் பேசும்போதுதான் பிரச்சினை முடிகிறதா?

ஸ்வாதி கொலையாளி

மிக விரைந்து சுவாதி குற்றவாளியினை தூக்கியிருக்கின்றது தமிழக காவல்துறை, , இனி அவன் வாய்திறந்தால் பல உண்மைகள் வரும்.

அவனும் பொறியியல் பட்டதாரி, ஆனால் பாருங்கள் கொலைகுற்றவாளியாகத்தான் அவன் வாழ்வு இனிபார்க்கபடும், அவன் சகோதரி கதறிகொண்டிருக்கின்றாள், அவனை பெற்று வளர்த்து .

FB_IMG_1467525529781.jpg

படிக்கவைத்த ஒரே பாவத்திற்காக அவன் பெற்றோர்கள் பெரும் சிக்கலில் சிக்கி இருக்கின்றார்கள், காரணம் காவல்துறை விசாரணை பல கோணங்களில் பாயும்போது அவர்களும் விசாரிக்கடுவார்கள், பட்டே ஆகவேண்டும்

இதற்கெல்லாம் காரணம் இரண்டு, ஒன்று அவள் தன்னை காதலித்தே ஆகவேண்டும் என்ற அதிகார எண்ணமும், தனக்கு இல்லை என்றால் யாருக்குமில்லை என்ற கொடூர சிந்தனையும் தவிர வேறு ஒன்றுமில்லை, அவளுக்கொரு மனமிருக்கும் என்றோ, அவளுக்கொரு வாழ்க்கை கனவு இருந்திருக்குமென்றோ, அவள் பெற்றோரை எண்ணி பார்த்தாலோ இந்த கொடூரம் புரிந்திருக்கமாட்டான்

ஒரே அடிப்படை காரணம் பெண் என்பவள் ஒரு சொத்து, பெண் என்பவள் ஆண் அடைந்தே தீரவேண்டிய ஒரு பொருள் என அவன் சிந்தித்ததே, அதுதான் காரணம்.

மானிட வாழ்வின் தொடக்க காலத்தில் பெண்ணே அதிகாரமிக்கவள், பெண்ணே தெய்வம். அவள்தான் அதிகாரம், இன்றும் ஆதிகால தொடர்ச்சியாக உள்ள பழங்குடியினரிடம் அதனை நீங்கள் காணலாம்.

இன்றும் பெண் தெய்வங்கள் இருந்துகொண்டிருக்க அதுதான் காரணம். சுயவரம் என்பதன் அதன் தொடர்ச்சியே.

பின்னாளில் தான் ஆண்கள் அதிகாரம் பெற்று,பெண்களை அடக்கவும் மதங்கள் உருவாகவும் பெண்ணடிமை தனம் கூடிற்று, யூதமதமும் அதனிலிருந்து உருவான இஸ்லாம் கிறிஸ்தவம் என எல்லா மதமும் பெண்ணடிமை தனத்தை வலியுறுத்துவதே, மத்திய ஆசியாவிலிருந்து இறக்குமதியான ஆரியர் கலாச்சாரமும் அதுவே, கிழக்காசிய கலாச்சாரங்களும் அப்படியே

வீட்டை விட்டு வெளியே வர அவர்கள் அனுமதிக்கபடுவதில்லை, வாய்பேசும் ஆடுமாடுகளில் ஒன்றாகத்தான் அவர்களை உலகம் கருதிற்று, ஐரோப்பா உட்பட.

நாகரீக உலகில் அடிமைத்தனம் ஒழிக்கபட்டபின் பெண்ணுரிமை குரல்கள் எழும்பின, பெண்களுக்கு உலகில் வாக்குரிமை வழங்கபட்டே 100 ஆண்டுகள்தான் ஆகின்றது, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, பெண்கள் சுதந்திரமாக படிக்கவும், பணியாற்றவும் அவள் சொந்தகாலில் நிற்கவும் சூழல் வந்துவிட்டது.

எத்தனை பெண்ணியம், பெண்ணடிமைதனம், என பல குரல்கள் எழும்பினாலும், பெண்கள் தனியாக இவ்வுலகில் வாழும் சூழல் வந்தாலும் இன்னும் மாறாதது ஒன்று உண்டு

அது ஆண்களின் மனது

பெண்ணின் மனம் தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும், அவள் தனக்கான சொத்து என்றளவிலே இன்றளவும் ஆண் மனது சிந்தித்துகொண்டிருக்கின்றது, அந்த சிந்தனை மாற வேண்டும், பெண்விடுதலை என்பது பெண்களை சுதந்திரமாக வெளியே விடுவது அல்ல, மாறாக ஆண்களும் தங்கள் சிந்தனையினை மாற்றிகொள்வது.

இன்னொன்று தனக்கு இப்படி ஒரு அச்சுறுத்தல் இருக்கின்றது என்றால் அன்றே அப்பெண் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ சொல்லி இருக்கலாம், இது பிடிக்கவில்லை எனக்கு பயமாக இருக்கிறது என்றால் எந்த தந்தை காப்பாற்றமாட்டார்? ஒய் ஜி மகேந்திரனிடமும், எஸ் வி சேகரிடமும் சொல்லமுடியாது, ஆனால் தந்தையிடமும், தோழியிடமுமா? சொல்ல கூடாது?

இப்படி தன் உடல் அல்லாத இன்னொரு பெண்ணின் உடலோடு தன் முகத்தை பொருத்தி வன்மத்தில் ஒரு பெண் தூக்கில் தொங்கி இருக்கின்றாள், அந்த உடலுக்கு சொந்தகாரியே இவ்வுலகில் உயிரோடு வாழும்போது, இப்பெண் மாளவேண்டிய அவசியம் என்ன?

கல்வி முறை தொழிலுக்கான அறிவினை தருமே தவிர, வாழ்க்கைக்கான அறிவினை கொடுக்காது, மன நலத்தினை வளர்க்காது , அக்க்கால கல்விமுறை அதனை நிரம்ப கொடுத்தது, இக்கால கல்விமுறை இப்படி கொலைகாரர்ர்களை உருவாக்குகின்றது, மருத்துவர், வக்கீல், பொறியாளர் என பல கொலைகாரர்கள் உருவாகின்றார்கள்

மனநலம் வளர்ப்பதில் நம் சமூகம் தோற்றுகொண்டிருக்கின்றது. காதல் என்றால் என்ன என்றே தெரியாமல் காதலித்து இப்படி செத்துகொண்டிருக்கின்றனர்.

உண்மையில் அவளை அவன் மனதார காதலித்து, அவள் வாழ்வு செழிக்கவேண்டும் என நினைத்திருந்தால் இப்பாதகம் செய்ய துணிவானா?, இது வெறும் இனகவர்ச்சி, பருவகால மேகம், நிச்சயம் கடந்து போக கூடிய உணர்வு

எப்படியோ ஒரு நொடி உணர்ச்சி வேகம், இரு குடுமத்தினை தீரா சோகத்தில் தள்ள்விட்டது, வாழவேண்டிய தளிர்களில் ஒன்று மாண்டுவிட்டது, இன்னொன்று சிறையில் கிடக்கின்றது

இருவருமே பொறியாளர்கள் என்பதுதான் குறிப்பிடதக்கது,பெரும் சோகம் நெஞ்சை பிழியும் தருணம் இது.

காலையில் பார்ப்பவர்கள் எல்லாம் அவன் உங்க ஊரா சார்.. என கேட்பதிலே தலை குனியத்தான் வேண்டியிருக்கின்றது.

காவல்துறை தன் திறமையினை காட்டி இருக்கின்றது, 5 நாட்களுக்குள் வேறு குற்றவாளியினை தேடுவது போல் இவனை விட்டுவிட்டு, மகா ரகசியமாக இவனை தூக்கியிருக்கின்றது, வாழ்த்துக்கள்

இதனை போலவே விரைவில் ராமஜெயம் குற்றவாளிகளும் தூக்கட்டு நம் பெருமை மிகு காவல்துறை தன் உயர்ந்த திறமையினை நிருபீக்கட்டும்

சல்யூட் சார்


பெரும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் கொலை செய்யலாம், அல்லது பெரும் ரகசியத்திற்காக அரசியல்வாதிகளின் கூட்டாளிகள் கொலை செய்யபடலாம், அந்த வழக்கு தூங்கும் அல்லது தூங்க வைக்கபடும், 200 சாட்சிகள் கூட பல்டி அடிப்பார்கள் அது விசாரணை, அது நீதி, நியாயம்.

வைரவேல் காணமல் போன சோகத்தில் மேலாளர் செத்தபின் தானாக தூக்குபோடுவார், வாக்கிங் செல்லும் அரசியல்வாதி தலைசுற்றி மிக சரியாக அரிவாள் மீது 4 முறை விழுந்து சாவார், இது போன்ற பல மர்மான தற்கொலைகள் நடந்த தமிழகம் இது.

அப்படி இல்லை என்றால் ஆடி காரில் வந்து யாரையாவது தூக்க வேண்டும், அப்படி செய்தால் ஆடி காரினைத்தான் கைது செய்வார்கள், 20 ஆடுகளுக்கு பதில் 200 கோடிகள் ராம்குமார் வீட்டில் இருந்தால் கூட இந்நேரம் அந்த அரிவாளைத்தான் கைது செய்திருப்பார்கள்,

அதனை விட்டு விட்டு ஏழை வீட்டில் பிறந்துவிட்டு இந்நாட்டில் கொலை செய்ய ஆசைபடலாமா அய்யா..

இரு தங்கைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனையும், தாயின் கண்ணீரும், அவனுக்காக ஓட்டுவீட்டை கூட மாற்றாமல் வாழ்ந்த அந்த தந்தையின் தியாகமும், கொஞ்சம் கூட பாதிக்காத அவன் மனதினை, ஒரு பெண்தான் பாதித்தாள் என்றால், அவளுக்காக அரிவாள் தூக்கும் அளவிற்கு சென்றுவிட்டான் என்றால்

அவள் சொன்னபடியே நிச்சயம் அவன் நிச்சயம் தேவாங்கு தான்.

அந்த அரிவாளை பார்த்தபின்னும், ஓங்கிய பின்னும் அவன் சிந்திக்கவில்லை, இவளை வெட்டுவதற்கு பதில் வாழைக்காய் வெட்டியோ, ஆட்டிற்கு தழை வெட்டியோ தன் குடும்பத்தை காப்பாற்றி இருக்கலாமே. சுவாதி குடும்பமும் காப்பாற்றபட்டிருக்கும்,

கொஞ்சமேனும் சிந்திக்காத அவன் தேவாங்கினை விட நிச்சயம் மோசமானவன்.


FB_IMG_1467797500916

பாலும் பழமும் படத்தில் ஒருவர் எம்.ஆர் ராதாவிடம் அசிஸ்டெண்டாக‌ பச்சிலை இடித்துகொண்டிருப்பார், படத்தில் அவர் பெயர் தேவாங்கு, தலைவர் தயாரிக்கும் லேகியத்தின் பெயர் தேவாங்கு ராக்கெட் லேகியம் ,

சிவாஜி கணேசனிடம் , தனக்கே உரித்தான ஸ்டைலில் சொல்லுவார் தமிழின தேசிய தலைவர் மேதகு எம்.ஆர் ராதா

“தேவாங்கு ராக்கெட் லேகியம்மு ஒண்ணு தயார் பண்றேன், சாப்பிட்டா அப்பிடி மேலேயும் கீழேயும் போய்ட்டு போய்ட்டு வரலாம்…”

சுவாதி கொலையாளிக்கு நீதிபதி என்ன தண்டனை அந்த ராம்குமாருக்கு கொடுக்கபோகின்றார் என்பது வேறுவிஷயம், ஆனால் ஒரு நாளைக்கு 4 முறை இந்த தேவாங்கு ராக்கெட் லேகியம் காமெடியினை பார்க்கவைத்தால் அதுவே பெரும் தண்டனை

கூடவே அந்த டயலாக்கினினை சொல்ல வைத்தால் நன்றாக இருக்கும் “தேவாங்கு ராக்கெட் லேகியம் சாப்பிட்டால் நுங்கம்பாக்கம் டு புழல் ஜெயில் போய்ட்டு போய்ட்டு வரலாம்.