கொடூரக் கொலைகள்

மேட்டூர் அருகே 7 வயது குழந்தை கற்பழித்து கொலை

# சுவாதி கொலையினை விட 100 மடங்கு கொடூரமான விஷயம் இது, ஆனால் அது சென்னையும் அல்ல, கொல்லபட்ட இடம் ரயில் நிலையமும் அல்ல,வெட்டுபட்டு செத்தாலும் இனி சென்னையில் அதுவும் பொதுஇடத்தில்தான் சாகவேண்டும்

# குழந்தைகளுக்கு இந்த நாட்டில் இவ்வளவுதான் பாதுகாப்பும் சட்டமும் என்றால் வருங்காலம் செழிக்குமா? மேலைநாடு என்றால் இந்நேரம் தேசம் அலறி இருக்கும்.

# இங்கோ ராம்குமார் கைதுகுறித்து ஆளுக்கொரு புலனாய்வு கதை சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அக்குழந்தையினை நினைக்க நேரம் ஏது?

# இவ்வகை குற்றவாளியினை பெரு நகரத்தில் பொது இடத்தில் கதற கதற கொல்லாமல் விட கூடாது, இவனைபோன்றவர்களை மிருகம் கூட இனத்தில் சேர்க்காது, சாத்தான் கூட நரகத்தில் சேர்க்காது.

விவேகானந்தர் – நினைவு நாள்

 

இந்த தேசம் கண்ட பெரும் ஞானியும், தேச பற்றினை தூண்டிவிட்ட பெரும் கணலுமான விவேகானந்தரின் நினைவுநாள் இன்று

இளம் வயதிலே பொங்கிவிட்ட ஞானம், கூர்மையான அறிவு, நெஞ்செல்லாம் துணிவு, வாக்கினில் ஒரு தீர்க்கம் என பெரும் சூரியனாக வலம் வந்தவர் அவர்.

பாரதி முதல் பலபேர் வரை அவரின் உரையிலே எழும்பினார்கள், அவரின் வார்த்தை உந்துசக்தியிலே இயங்கினார்கள்.

FB_IMG_1467795720954

உண்மையில் இந்திய தேசிய எழுச்சியினை அவர்தான் தொடங்கி வைத்தார், முதன் முதலாக இத்தேசம் பெரும் எழுச்சிபெறும் என முழங்கியதும் அவரே.

மதநெறி கடலளவு உண்டே தவிர, மதவெறி என்பது அவரிடம் துளியுமில்லை.

எல்லா மதத்தையும் அடியாழம் வரை சென்று படித்தவர். அதனால்தான் சிகாகோ மாநாட்டில் மற்ற மதங்களை எல்லாம் காட்டி நீங்களெல்லாம் பெண்களை அடிமையாக வைத்திருக்கும்போதும் எமது கலாச்சாரத்தில் மனைவி தவிர மற்ற பெண்களை எல்லாம் “தாயே…” என்றுதான் எம் தேசத்தார் அழைப்பார்கள் என அவரால் முழங்க முடிந்தது.

அவரின் ஞானத்திற்கு சில உவமை கதைகளே போதும், பைபிளின் இயேசுவிற்கு பின் உலகம் கண்ட அற்புத உவமைகள் அவை.

மதவகை மாநாட்டில் கலந்து கொண்டு இந்து என்பதனை மதமாக சொல்லாமல், இந்நாட்டின் கலாச்சாரமாக சொல்லிசிறப்பு செய்த பெரும் தேசபக்தன் அவர்.

துறவிக்கு அவர் இவ்வுலகில் பெருமகன் இயேசுவிற்கு பின் பெரும் எடுத்துகாட்டு, துறவு வாழ்க்கைக்கு இலக்கணமிட்டவர்.

இந்நாளில் இந்த நாட்டின் இளைஞர்கள், தேசபக்தி ஊறவேண்டும் என்றால் படிக்கவேண்டிய பாடம் இவரின் அறிவுபூர்வமான போதனைகளே

மதம், இனம், மொழி என அழிச்சாட்டியம் செய்யும் யாரும், விவேகானந்தரை ஒரு முறை படித்துவிட்டால் இந்த தேசத்தை பெரும் அபிமானத்தோடு நேசிக்க தொடங்குவார்கள்.

பள்ளிகளில் சர்க்கஸ் வித்தை காட்டும் யோகாவும், புரியாத சமஸ்கிருதத்தை விட மகா முக்கியமானது விவேகானந்தரின் போதனைகள், எல்லா மாணவர்களும் ஒரு நாளில் 10 நிமிடமாவது அவரை படித்தால் போதும்

அவர் சொன்ன புதிய பாரதம், வலுவான பாரதமாய் அமையும்

உலகமே பணிந்து வணங்கிய அவரை பெற்ற இந்த திருநாட்டை வாழ்த்தி வணங்கி விவேகானந்தரை நினைவு கூர்வோம்

இன்று அவருக்கு நினைவுநாள்

இந்த தேசம் கண்ட் பெரும் ஞான சூரியன்களில் சந்தேகமே இல்லாமல் முதலிடம் அவருக்கே.

“வீர இளைஞர்களே இந்த நாடு பெரும் முன்னேற்றமடைய நீங்களே வழி, நீங்களே நம்பிக்கை.

இந்த நாட்டு முன்னேற்றம் தேரை நகர்த்த அதன் சக்கரமாக மாறுங்கள், ஆக்கபூர்வமான பணிகளால் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடு படுங்கள்

இந்த அன்னை நாடு பெரும் வளர்ச்சிபெற்று, உலகிற்கே ஒளிவீசும் தியாக நாடாய் திகழும் பெரும் உருவம் என் கண்ணில் தெரிகின்றது”

இப்படி நாட்டினை பற்றி பெரும் கனவோடும், நம்பிக்கையோடும் வாழ்ந்த அவரை ஒரு மதவாதியாய் பார்ப்பவர்கள் நிச்சயம் ஒரு மண்ணும் தெரியாதவர்கள், இந்நாட்டின் வெற்று சுமைகள்.

அவரை தேசபிமானியாகவே காண வேண்டும், அவர் அப்படித்தான் வாழ்ந்தார், அப்படித்தான் முழங்கினார். அவரை மாணவர்கள் மத்தியில் மட்டும் பதிய வையுங்கள் இந்த தேசம் பின்னாளில் பெரும் மாறுதலை சந்திக்கும்.

இந்த தேசம் முழுமையும் சுற்றி வந்த ஆண்மீக சூரியன் அவர். முக்கடலின் குமரியில் அந்த தவதிருமகனுக்கு நினைவாலயம் அமைந்துவிட்டது, அது பாராட்டுகுரியது.

அப்படியே சிகாகோ உலக சமயமாநாட்டை உலுக்கி எடுத்துவிட்டு அவர் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த இடம் தமிழக பாம்பன் அருகே உள்ள ஒரு கடற்கரை, காரணம் ராமநாதபுரம் மன்னர்தான் அவரை அனுப்பி வைத்தார், அந்த நன்றிக்காக தமிழகத்திற்கு அந்த பெரும் பெருமையினை கொடுத்தார் விவேகானந்தர்.

இன்று அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டபட்டிருக்கின்றது, அது நிச்சயம் பெரும் வரலாற்று மண்டபம், அவ்விடத்தில் பெரும் வரலாற்று புகழ் சொற்பொழிவு அவரால் நிகழ்த்தபட்டது

இப்படியாக தமிழகத்திற்கும் விவேகானந்தருக்கும் உள்ள தொடர்பு பிரிக்கமுடியாதது, தமிழகம் பெரும் ஆண்மீக பூமி என்பதில் பெரும் கருத்துகொண்டிருந்தார் விவேகானந்தர்.

இந்த தேசத்தின் மிக சிறந்த குடிமகனின், ஞான திருமகனின், அவதார பெருமகனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வதில் கண்ணோரம் நீர் துளிர்க்கின்றது

மனமோ எமது நாட்டிலும் ஒரு பிரபஞ்ச யோகி , நாட்டுபற்று சன்னியாசி உதித்திருக்கின்றான் என்பதனை நினைத்து மகிழ்வுகொள்கின்றது

அவரது தேசம்பற்றிய போதனையே இந்நாட்டின் மாணவர்களுக்கு தேசபற்றின் பாலபாடம் என்பது மட்டும் உண்மை.

 

 

 

யாருடா நீ – “உங்களில் ஒருவன்” ?

தமிழ் அங்கு தான் பிறந்தது, உலகின் மிக தொன்மையான நாகரீகம் அங்குதான் ஆதிச்சநல்லூரில் உறங்கிகொண்டிருக்கின்றது

பாரதி முதல் வஉசி வரை கொடுத்தது அந்த மண்தான், வெள்ளையன் கோட்டை கட்டிய சென்னையினை விட, அவனை ஓட விரட்டிய பூலித்தேவனும், கட்டபொம்மனும் பிறந்த மண் இது

ஒரு காலத்தில் தமிழக இலக்கிய உலகமே அங்குதான் இருந்தது அகத்தியர் காலம் முதல் வையாபுரிபிள்ளை, இன்னும் ஏராளமான தமிழ் அறிஞர்கள் காலம் வரை நெல்லையே தமிழின் இருப்பிடம், வசிப்பிடம்.

குற்றால குறவஞ்சி முதல் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் உருவான வரலாறு நெல்லைக்கு உண்டு,

பழக்க வழக்கங்களிலும், தனி தன்மையினை காப்பதிலும், பழமைகால தொடர்பிலும் அக்கால அறிவிற் சிறந்த யாழ்பாணத்துடன் பெரும் தொடர்பு கொண்டது எமது நெல்லை மண். தமிழகத்தில் மற்ற எந்த மாவட்டத்திற்கும் இல்லா சிறப்பு அது.

அதனால்தான் தமிழில், அறிவில், கல்வியில், தன்மான உணர்வில் யாழ்பாணமும் நெல்லையும் இன்றுவரை உலகில் தனித்து தெரிகின்றன.

கல்வியில், வீரத்தில், அறிவியலில், பக்தியில், பத்திரிகையில். சினிமாவில்
தொழில் வரிசையில், விவசாயத்தில் மிக சிறந்த இந்த நெல்லை மண்ணைவிட இன்னொரு மண்ணை தமிழகத்தில் காட்டிவிடுங்கள், காட்டிவிட்டு பேசுங்கள்

எவனோ எவளையோ எதற்காகவோ வெட்டிவிட்டான் என்றால் மொத்த நெல்லையரும் காட்டுமிராண்டிகள் என சொல்ல நீர் யார்?

சிங்கார சென்னையின் இன்றைய வளர்ச்சிக்கு அவர்களும் ஒரு காரணம், சென்னையில் நெல்லையர்களின் முத்திரை அப்படியானது,

இந்த மாபெரும் தேசத்திற்கும் அவர்களின் பங்களிப்பு சீக்கியர்களுக்கு அடுத்து குறிப்பிடதக்கது, மகேந்திரகிரி ராக்கெட் தளம், கூடங்குள அணுவுலை, விஜயநாராயண கடற்படை தளம் , தூத்துகுடி துறைமுகம்எ ன பல வகை கேந்திர முக்கியத்துவங்களை கடும் உயிர் ஆபத்துகளுக்கு இடையில் தாங்கி நிற்கும் பகுதி அது.

தூத்துகுடியால் இம்மாநிலம் அள்ளும் பணம் கொஞ்சமா?

மற்ற மாவட்டத்துக்காரர்கள் எல்லாம் கொலையே செய்யவில்லையா? சமீபத்தில் சென்னையில் 10 பொதுமக்களை வெட்டிய ரவுடிகளுக்காக, சரிகா ஷா கொலைக்காக இன்னும் பல மர்ம கொலைகளுக்காக நாங்கள் என்ன சென்னையினை தனியாக பிரிக்க சொன்னோமா?

நெல்லையும் தூத்துகுடியும் அதன் மக்களும் இந்த தேசத்திற்காக ஆற்றிவரும் பெரும் சேவைகள் கொஞ்சமல்ல,

எங்களை பிரித்துவிட சொல்ல நீர் யார்? காட்டுமிராண்டிகளிடம் வாழமுடியாது என ஓடிவந்த குமரி மக்களையே அணைத்துகொண்டு இன்றுவரை அமைதியாக வாழ்ந்து வருபவர்கள் நாங்கள்,

இவர் யாரென்று தெரியாது, மொத்த நெல்லை தூத்துகுடி மக்களை காட்டுமிராண்டி என முத்திரை குத்தும் இவரை மிக விரைவில் நண்பர்கள் கண்டுபிடிப்பார்கள்.

அன்று நெல்லையின் முக்கியத்துவம் பற்றி இவருக்கு கதற கதற காதில் கற்பிப்போம்.

உப்பு முதல் இவர் அணியும் ஜவுளி வரை நெல்லையர் பங்கில்லாமல் இவரால் தமிழகத்தில் வாழ முடியுமா?

என்னது “உங்களில் ஒருவனா” சீ சீ இருக்கவே முடியாது, எங்களில் ஒருவன் இப்படி பைத்தியகாரதனமாக உளரமாட்டான்.

நீர் கீழ்பாக்கம் சென்று இப்படி சொல்லலாம் மிக சரியாக பொருந்தும்.

ஜாக்கிச்சான்

இன்றைய உலகில் சர்வ சக்தி வாய்ந்த நடிகர் ஜாக்கிசான், உலகின் பெரும் செல்வாக்கு பெற்ற நடிகர், அதனை விட நல்ல மனிதர் என்ற பெயர் உண்டு. நடிகர்களில் இனி ஒருவன் அவர் அளவு சம்பாதிப்பதிப்பென்பது 50 ஆண்டுகள் கழித்து கூட கனவிலும் நடக்காதது.

ஆனால் சோகமான புத்திரபாக்கியம்.

FB_IMG_1467796773123

தவறான சேர்க்கையினால் அவன் போதை பழக்கத்தில் சிக்கிவிட சீன அரசு அவன்மேல் நடவடிகை எடுத்தது, அவர் நினைத்திருந்தால் அதனை வேறுமாதிரி அரசியல் செய்து சீன அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, என் மகன் குற்றமற்றவன் என பெரும் பிரளயம் செய்திருக்கலாம், உலக நாடுகளே ஓடி வந்திருக்கும்.

ஆனால் அவர் என்ன செய்தார்?

“இந்நாட்டிற்கு நல்ல குடிமகனை தராத என்னை மன்னித்துவிடுங்கள், அவனை நல்ல சீன குடிமகனாக வளர்க்க நான் தவறிவிட்டேன்” என மன்னிப்பு கேட்டு தன் சொத்துக்களில் பெரும்பாலவவற்றை அனாதை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டார்.

“என் மகன் தான் உருப்படவில்லை, இன்னொரு நல்ல சீன குடிமகன் உருவாகட்டும்..”

அவரையும் , அற்புதம்மாளையும் ஒப்பிட்டு பாருங்கள்.

நாட்டுபற்று என்றால் என்ன என்பது தெரியும், சாதாரண போதை வழக்கிற்கும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்பவர் அவர், தன் மகனின் தேசவிரோத கும்பல் தொடர்பு தெரிந்தும் இன்னமும் குற்றமற்றவன் என சொல்லிகொண்டிருப்பவர் இவர்.

ஜாக்கிசானின் உறவினர்கள் கூட ஒன்றும் சொல்லவில்லை ஆமோதித்தார்கள், ஆனால் அற்புதம்மாள் பின்னால் செல்பவர்களின் அழிச்சாட்டியம் தாளவில்லை, இப்போது சின்ன சாந்தன் எனும் அந்நிய நாட்டு தாயினை சேர்த்துகொண்டார்கள்.

ஏன் ராம்குமாரின் தாய் தமிழச்சிதானே, எவனாவது பேசினானா? இவ்வளவிற்கும் தமிழக தமிழச்சி. இதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது

சல்யூட் ஜாக்கிசான், இப்படி குடிமக்கள் இருந்த பின் சீனா ஏன் வல்லரசாக உலகை மிரட்டாது?