இந்த தேசத்தின் அருமையும் அது கொடுத்திருக்கும் சுதந்திரமும்.

சொந்த நாட்டு தேசியகொடியினை எரித்தவன் எல்லாம் கொலை குற்றத்தை தானே விசாரிப்பது போல பேசிகொண்டிருப்பதுதான் கால கொடுமை.

தியாகு போன்ற தேசதுரோகிகளுக்கு மன்னிப்பு கொடுத்தது எவ்வளவு பெரும் தவறு என்பது புலனாகும் காலமிது, பெரும் குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்ட அவர்களை போன்றவர்களை எல்லாம் அன்றே பாரபட்சம் பார்க்காமல் தூக்கிலிட்டுருந்தால் இன்று இவனை போன்றவர்கள் எல்லாம் பேசுவார்கள்?

தமிழுக்கோ தமிழருக்கோ ஒரு துரும்பினை கூட செய்யாமல் வெறுமையாக தமிழர் மீட்பு, தமிழர் விடியல் என ஆங்காங்கே குண்டு வைத்து, டிவி டவர்களை உடைத்துகொண்டு, எதுவுமே ஆக்க தெரியாமல் அழிக்க மட்டுமே தெரிந்த அந்த கொடூரர்களின் தமிழக பிம்பங்களாக வலம் வந்த தியாகு, மாறன் போன்றவர்களை விட்டு வைப்பதுதான் இந்த திலீபன் போன்றவர்கள் இன்று காவல்துறைக்கே பாடம் எடுக்க காரணாம்.

இவர்கள் அழிக்க தெரிந்தவர்கள், சமூக அமைதி வரை கலைக்க பிறந்தவர்கள். ஆக்கத்திற்கானவர்கள் அல்ல.

ஒரு கொலை நடந்திருக்கின்றது, விசாரணை நடக்கின்றது. அதற்குள் அவன் குற்றவாளி இல்லை, இது அந்த சாதி பெண், இது இந்த சாதி கொலையாளி என வன்மம் பேசிகொண்டிருப்பது பெரும் அவமானம்.

இவர்கள்தான் சாதியில்லா தமிழ்தேசியம் பேசுவார்கள், தமிழர்கள் எல்லாம் சமம் என்றேல்லாமும் பேசுவார்கள், கொஞ்சமேனும் வெட்கமுமில்லை, சிந்தனையுமில்லை

யாராவது யாரைவாது கொன்றுகொண்டே இருக்கவேண்டும், இவர்கள் கொலைகாரனை ஆதரித்து பேசிகொண்டே இருக்கவேண்டும், இது மனநோயா? அல்லது காவல்துறை மீது பழிபோடும் வன்மமா என்றால் நிச்சயம் காவல்துறை மீதான வன்மமே அன்றி வேறல்ல, நமது காவல்துறையினை கேவலபடுத்தவேண்டும் என்றே இவர்கள் செய்யும் காரியங்கள் இருக்குமே அன்றி வேறுகாரணம் இருக்காது.

வழக்கினை நடத்தும் காவல்துறை அதிகாரிபோல இவனை போன்றவர்கள் பேசிகொள்ள யார் அனுமதி கொடுத்தது? என்ன அதிகாரம்?

கொலை விசாரணை நடக்கும்பொழுது அமைதிகாப்பதே சால சிறந்தது , இது ஒன்றும் முடிவு அல்ல. நீதிமன்றம் தான் ஒருவனை குற்றவாளியா இல்லையா என முடிவு செய்யும்

ஆனால் குற்றவாளியினை கண்டுபிடிக்கும் பணி காவல்துறையினது, அது ஒரு அரசு அமைப்பு. அது தன் பணியினை செய்யும்போது இப்படி குழப்ப இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?

இவர்கள் இந்த சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் செய்தது என்ன? ஒன்றுமே இல்லை. எங்கோ ஒரு அந்நிய தீவில் நடந்த சாவிற்கு ஒப்பாரி வைத்த இந்த ஜந்துக்கள் சொந்த நாட்டு மக்கள் சாவும்பொழுது அதுவும் வெட்டுபட்டு சாகும்பொழுது மகா பெரிய உத்தமர்கள் போல கருத்துசொல்வது வெட்ககேடு

ஒரு கொடூர இயக்கத்தின் தலைவனை பெரும் போராளி என்றும், அக்கொலைகாரனை தமிழின தலைவன் என்றும் சொல்லிகொள்ளும் இந்த தேசதுரோகிகள், இந்த ராம்குமாரினை நிரபராதி என சொல்வதில் என்ன இருக்கின்றது?

அந்த தியாகுவினை வெளியே விட்டிருக்க கூடாது, அவ்வளவு நடந்தும் தன்னை நம்பி தமிழ் போராளியாக தன்னை நம்பி வந்த (பின் இவரின் கட்டழகிற்கா அப்பெண் நம்பினாள் )
வெளியே தள்ளிய அவர், நடுதெருவில் நிறுத்திய அவர், இம்மாதிரியான அரைவேக்காடுகளை எப்படி எல்லாம் உசுப்பேத்துவார்.

தேசியகொடி எரித்த அன்றே இந்த திலீபன் மகேந்திரன் என்பவனை குடியுரிமையினை பறித்து நாடற்றவனாக்கி அனாதையாக உலகில் அலையவிட்டிருந்தால் தெரிந்திருக்கும்.

சொந்தநாட்டு கொடியினை எரித்தவனுக்கு எந்தநாடு அடைக்கலம் கொடுக்கும்?

இவனை போன்றவர்களை பேசவிடவே கூடாது, அதுவும் இந்த சூழலில் அறவே கூடாது, இவர்கள் பெரும் ஆபத்தானவர்கள். அமைதியான தமிழகமும், பலமான காவல்துறையும் எந்நாளும் இவர்களுக்கு எதிரியே

இவர்களை போன்றவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்கபடவேண்டும், அல்லது அந்த இலங்கை தீவிற்கே அனுப்பி இவன் போராளியாம், அவன் போராடுவது என சொல்லிகொள்வது உங்கள் நாட்டு பகுதி, இவன் இங்கிருந்தே போராடட்டும் என விட்டுவிடவேண்டும்.

அங்குபோய் சிங்கள கொடியினை எரித்துபார்க்கட்டும், சாம்பல் கூட மிஞ்சாது, எந்த சாம்பல் என சொல்லி தெரியவேண்டியதில்லை

அப்பொழுது தெரியும் இந்த தேசத்தின் அருமையும் அது கொடுத்திருக்கும் சுதந்திரமும்.