சென்னை.. நல்ல சென்னை…

ஒரு வழியாக சென்னை ஐரோப்பா ஆகிவிட்டது, கூரை இல்லா பேருந்துகளை இயக்கி அந்த முன்னேறிய நாடுகளின் போக்குவரத்து தரத்தை சென்னை பிடித்துகொண்டது.

இனி சென்னையினை இப்படிபட்ட திறந்த கூரை பேருந்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுபயணிகள் பார்த்து ரசிப்பார்கள், அம்மா ஆட்சி என்றால் சும்மாவா?

இரு பேருந்துகளிலும் கூரை இல்லை என்ற அடிப்படை ஒற்றுமையினை மட்டும் பார்த்து, பஸ்ஸை தட்டி ஆர்பரித்து சென்னையினை ஐரோப்பாவாக்கிய பொற்கால நாயகி அம்மா என முழங்குவார்கள்.

பறக்கட்டும் பஸ் கூரைகள், தொடரட்டும் இந்த புரட்சி

Stanley Rajan's photo.
Stanley Rajan's photo.

உமா மகேஸ்வரன்….

ஆண்டு முழுவதும் யாருக்காவது படுகொலை அஞ்சலி செலுத்திகொண்டிருப்பவர்கள் யாரென்றால் உலகில் ஈழ தமிழர்கள் மட்டும்தான். பெரும்பாலும் செத்தவர்களில் பலபேர் புலிகளால் கொல்லபட்டிருப்பார்கள்.

அதே நேரம் புலிகள் அவர்கள் உறுப்பினர்களுக்காக அஞ்சலி செலுத்துவார்கள், அவர்கள் சிங்களனால் கொல்லபட்டிருப்பார்கள்.

ஏதும் புரியுமா என்றால் புரியாது, இதுதான் ஈழம்.

இதோ நாளை மறுநாள் உமா மகேஸ்வரன் நினைவுநாளாம், மனிதர் பெரும் திறமைசாலி, வெளிநாட்டு பயிற்சி நிரம்ப உண்டு, பிரபாகரனை ஒரு வகையில் பழக்கியவர் இவர், விடுதலை புலிகள் எனும் அமைப்பின் முதல் தலைவர் இவர்தான்

கொழும்பினில் ஒருவரை (அவரும் தமிழர்தான்) கொல்ல இருவரும் சென்றனர், சுட்டனர், அரை உயிரில் அவர் சொன்னார் உயரமாக ஒருவரும், குள்ளமாக ஒருவரும் சுட்டனர்.

அதாவது அபூர்வ சகோதரர்கள் கமலஹாசன் போல இருவரும் அலைந்தனர், உமா மகேஸ்வரன் உயரம் அப்படி.

Stanley Rajan's photo.

உமாமேஸ்வரன்

 

ஆரம்பத்தில் இவரின் புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தான் கமாண்டர், ஒரே உறையில் இரு கத்தி இருக்கமுடியாதல்லவா, பிரிந்துவிட்டார்கள். உள்ளூர பல காரணம் இருந்தாலும் பிரபாகரன் சொன்னது உமாவின் ஊர்மிளா காதல். (பின்னாளில் பிரபாகரனுக்கும் காதல் திருமணமே)சென்னை பாண்டி பஜாரில் இருவரும் சுட தெரியாமல் சுட்டி விளையாடியதெல்லாம் இன்னொரு வகை.

உமா மகேஸ்வரனின் அதிரடிகள் பிரசித்தி பெற்றவை, சென்னை விமான நிலைய சிங்கள விமான குண்டுவெடிப்பு கூட அவர் கைங்கரியம் என்பார்கள்.

இந்திரா இறுதிவரை ஏன் ஈழபிரச்சினையினை மிக கடுமையாக தயக்கமாக யோசித்துகொண்டே இருந்தார் என்றால் இவர் மாதிரியான ஆட்களின் போக்குத்தான். இவர்களால் ஒரு காலமும் ஈழம் நிம்மதியாக இருக்காது, இவர்களை நம்பி ஒரு நாட்டினை எப்படி உருவாக்கி கொடுக்கமுடியும் என்பதுதான் அவரின் தயக்கத்திற்கு காரணம்.

இந்திரா காலத்திற்கு பின் இவரின் போக்கு மாறியது, மாலத்தீவு முற்றுகை சர்ச்சைக்கு பின் இந்தியா எதிரியானார், மாலத்தீவின் எதிர்கோஷ்டியோடு இணைந்து அந்நாட்டின் ஆட்சியினை துப்பாக்கி முனையில் பிடிக்குமளவிற்கு தீவிர திட்டம் தீட்டினார். புலிகள் கூட சிந்திக்கா கோணம் அது.

அண்டை நாடு எனும் வகையில் இந்தியா தான் மாலத்தீவிற்கு உதவ முடியும், முன்னர் கொழும்பிலும் ஜேவிபி கலவரத்தை இந்தியாதான் அடக்கியது, அதனால்தான் இந்தியாவினை பெரும் எதிரியாக வரிந்து கட்டினார் உமா, இன்னொன்று இவரின் சம்மதம் கேட்டுத்தான் மாலத்தீவிற்கு உதவவேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இல்லை.

வங்கம் தந்த பாடம் என சம்பந்தம் இல்லாமல் சொல்லிகொண்டிருந்தார். எப்படியும் இந்தியா ஒரு கட்டத்தில் தீவிரமாக களமிறங்கும் என எதிர்பார்த்தார், அதனால் வங்கத்தில் நடந்த போரில் இந்திய ராணுவம் வங்கத்தை சீரழித்ததாக புத்தகம் எழுதினார், இன்னும் என்னவெல்லாமோ எழுதினார்

அப்புத்தகத்தின் தழுவல்தான் பின் பேரரிவாளன், நளினியின் சகோதரனும் சென்னையில் அமைதிபடை காலத்தில் புலிகளுக்காக அச்சிட்ட சாத்தானின் படைகள் எனும் இந்திய எதிர்ப்பு புத்தகம்.

அதாவது இந்தியா ஈழத்தின் எதிரி என்பது அவர் கொள்கை, இந்திய தலையீட்டினை அவர் எதிர்த்தார், தனியாக புளோட் இயக்கம் என ஒன்றை நடத்தியபோதும் இந்தியாவோடு எந்த பேச்சும் அவர் நடத்தவில்லை.

மாலத்தீவில் இந்திய படை அனுப்பபட்டு, அது மீட்கபட்ட பின் ராஜிவ் மீது இவருக்கு பெரும் வன்மம் இருந்தது என்பார்கள், ராஜிவின் குழந்தைகளை இவர் கடத்த திட்டமிருந்தார் என்பது வரை பகீர் செய்திகள் உண்டு, ராஜிவிற்கு முதல் அச்சுறுத்தல் இவர்தான்.

1989ல் மட்டும் இவர் சாகவில்லை என்றால், நிச்சயம் ராஜிவ் கொலைபழி இவர் மீதுதான் விழுந்திருக்கும். இந்தியா நமக்கு எதிரி என்ற இந்த முன்னாள் புலிதலைவரின் தாக்கமே பிரபாகரனிடம் இறுதிவரை இருந்தது

ஆனால் புலிகளின் தடையில் இவரும் சிக்கினார். கொல்லபட்டார், ஆனால் யார் கொன்றார்கள் என்று இன்றுவரை சர்ச்சை உண்டு, பொதுவாக இம்மாதிரியான கொலைகளுக்கு புலிகள் வாய்திறப்பதில்லை.

பிரபாகரனுக்கு இவர் தான் எல்லா விஷயங்களிலும் முன்னோடி, இந்திய எதிர்ப்பு உட்பட. அந்த எதிர்ப்பில் இறுதிவரை இருவரும் ஒன்றும் சாதிக்கவில்லை

ஈழமக்களிடம் இந்தியா பற்றி தவறான அபிப்பிராயங்களை முதலில் இவர்தான் பரப்பினார், அதுதான் பின்னாளில் அமைதிபடைக்கு எதிரான யுத்தமாக வெடித்தது

இந்தியாவினை எதிர்த்த முதல் ஈழதீவிரவாதிதான் இவர், பின்னாளில் அவர் வளர்த்தவர்களாலே கொல்லவும்பட்டார்.

பிரபாகரனுக்கும் இவருக்கும் உயரம் மட்டுமே வித்தியாசம், வேறு ஒன்றும் சொல்லமுடியாது.

ஐ எஸ் இயக்கமும் அகில உலக தீவிரவாதமும்….

ஐ எஸ் இயக்கத்தினை வளர்த்தவர்கள் யாரென்றால் சாட்சாத் அமெரிக்கா, சவுதி, துருக்கி போன்ற நாடுகள்தான். ஆனால் ஐஎஸ் இன்று ரத்தபலி எடுக்குமிடம் துருக்கியும், சவுதியும்தான்.

உச்சமாக சவுதியின் புனிதமான மதீனாவினை தாக்கியபின் உலக இஸ்லாமியரின் வெறுப்பிற்கு அது ஆளானது. உலகம் மொத்தமாக துருக்கி தலமையில் ஐஎஸ் இயக்கத்தை வேரறுக்க கிளம்பி இருக்கின்றது.

காரணம் இதுதான் தீவிரவாத அரசியல், ஒரு தீவிரவாத கும்பலை வளர்க்கவேண்டும் , அது தன்னை மீறி செல்லும்போது அழிக்கவேண்டும், அரசியல்தான் தேவை என்றால் உருவாக்கு, தேவை இல்லை ஆபத்து என்றால் அழித்துவிடு

உண்மையில் ஒரு தீவிரவாதியினை வளர்த்து, ஆயுதம் கொடுத்து கொல்ல சொல்ல தொடங்கிவிட்டால் அவன் கட்டுகடங்காமல் செல்வான், பின்னாளில் வளர்த்தவனே அவனை அழிக்கவேண்டும்

பஸ்மாசுரனுக்கு பயந்து சிவனே ஓடினார் அல்லவா? அப்படித்தான்.

பிந்ரன்வாலேயினை வளர்த்துவிட்டு பின்னாளில் உயிரை விட்டார் இந்திரா, புலிகளை வளர்த்துவிட்டு இந்தியா பட்டபாடு கொஞ்சமல்ல.

தாலிபான்களை , காஷ்மீரிய போராளிகளை வளர்த்துவிட்டு பெரும் ஆபத்தினை நித்தமும் சந்திக்கின்றது பாகிஸ்தான்.

பின்லேடனை வளர்த்துவிட்டு அமெரிக்கா பட்டபாடும், இன்று வடகொரியாவினை வளர்த்துவிட்டு சீனா படும் சிரமமும் கொஞ்சமல்ல,

தீவிரவாதம் என்பது குட்டிசாத்தான், அதனை இயக்கும் மந்திரவாதி ஏதாவது அதற்கு வேலை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும், அல்லாவிட்டால் அது எஜமானை கொல்லும், குட்டிசாத்தானாக இருந்தாலே ஆபத்தென்றால் அது அலாவுதீன் பூதமாக மாறினால் என்ன ஆகும்? உலகம் அதனைத்தான் கண்டுகொண்டிருக்கின்றது

காரணம் ஆயுதம் தூக்க வைப்பது எளிது, கீழே வைக்க யாரும் தயாரில்லை, அது ரத்த அழிவில்தான் முடியும், ஈழத்தில் முடிந்தது, இதோ சிரியாவில் முடியபோகின்றது

பெரும் ரத்த கடலில்தான் ஐஎஸ் இயக்கத்தின் முடிவுரை இருக்கும், முள்ளிவாய்க்கால் போலவே

ஆயுதம் தூக்க அல்ல, கீழே இறக்கவும் பெரும் தைரியம் வேண்டும், மக்களை நேசிக்க வேண்டும், வரலாற்றில் யாசர் அராபத்தும், பத்மநாபாவும் முத்திரை பதித்து நிற்பது இப்படித்தான்.

கிட்டதட்ட 30 நாடுகள் ஐஎஸ் இயக்கத்தை முடிக்க கிளம்பிவிட்டன, அமெரிக்கா, ரஷ்யா,சீனா, ஈரான் என எல்லா எதிரணியினரும் ஒற்றைபுள்ளியில் இணைந்திருக்கின்றனர், எல்லா எதிரிகளும் ஒரே சிந்தனையில், அதாவது ஐஎஸ் இனி இருக்ககூடாது என சிந்திக்கின்றனர், சரி அதாவது ஒரு அரசியல், எண்ணெய் வியாபாரம் etc..etc ..etc

ஆனால் புலிகளையும் அழிக்க இந்த 30 நாடுகளும் 2009ல் ஈழத்தில் குவிந்ததே ஏன்? இவ்வளவிற்கும் ஐஎஸ் அளவிற்கு சர்வதேச நாடுகளை புலிகள் பயங்கரமாக அச்சுறுத்தாத போதிலும் புலிகளை அழிப்பதில் ஏன் அவர்களுக்கு அவ்வளவு அக்கறை? ஏதோ காரணம் இருக்கவேண்டும் அல்லவா?

இதனை சொன்னால் நான் வந்தேறி, தமிழின துரோகி.

துஷ்டனை கண்டால் தூர விலகு , கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பார்கள், மாறாக பயன்படுத்திகொண்டு விலக்கிவிடலாம், அது சாமார்த்தியம், தந்திரம் என நினைத்தால் அதற்கு பெரும் விலை கொடுக்கவேண்டும்

உள்ளூர் கூலிபடை முதல், சர்வதேச தீவிரவாதம் வரை அதுதான் நியதி.

இவ்வளவு தூரம் கவனிக்கபடுவோம் என கனவிலும் கொஞ்சமும் நினைக்கவில்லை

அங்கிள் சைமனின் அட்டகாசம் எல்லை மீறி போகத்தான் சில விஷயங்களை பகிர ஆரம்பித்தோம்.

உலக நடப்புகளுக்கும், ஈழபோராட்டத்திற்கும் பெரும் சம்பந்தம் உண்டு, சோவியத் யூனியன் எனும் மாபெரும் வல்லரசு உடைந்தபின் எப்படி எல்லாம் இவ்வுலகம் பாடாய் படுகின்றது, எதிர்க்க ஆளில்லா ஒற்றை துருவ அரசியலில் சதிராட்டத்தில் ஒரு ரத்தபுள்ளிதான் ஈழபடுகொலைகள் என்பதைத்தான் சொன்னோம்,

சீமானின் பேச்சுக்களில் அளவுக்கு மீறி பொய் இருந்தது, அதனை மீறி பெரும் ஆபத்தும் இருந்தது.

மன்மோகன்சிங் நினைத்திருந்தாலே தடுக்கமுடியாத யுத்தம் 2009, அதனை நடத்தியது இந்தியாவும் அல்ல, அப்பொழுது அமைதியாக இருந்த கலைஞர் குற்றவாளியும் அல்ல (ஈழவிவகாரத்தில் மட்டும்).

யார் எம்மை கவனித்தார்களோ இல்லையோ, பெரும் முண்ணணி இணையதள பத்திரிகை கவனித்திருக்கின்றது, எமது பதிவினை அவர்களின் இதழில் பகிர்ந்திருக்கின்றார்கள்.

அதனை மறைத்து இந்தியாதான் எதிரி என மே17ல் வங்க கடலில் மெழுகு பிடித்த அன்று எழுதபட்டது அது. தமிழக பத்திரிகைகள் வெளியிடாத எமது தகவல்களை, வெளிநாட்டு தமிழக பத்திரிகை வெளியிட்டுருப்பதுதான் வியப்பு.

இவ்வளவு தூரம் கவனிக்கபடுவோம் என கனவிலும் கொஞ்சமும் நினைக்கவில்லை

எமது எழுத்தையும் மதித்து பகிர்ந்த அவர்களுக்கு நன்றி சொல்லலாம், துணையாக வரும் அனைவருக்கும் நன்றி ,

மகிழ்ச்சி , இந்த எளிய சாமான்ய எழுத்துக்களையும் அவர்கள் அங்கீகரித்ததில் ஒரு சின்ன மன நிறைவு ,

அது அவர்களின் பெருந்தன்மையாக கூட இருக்கலாம். நிச்சயம் அப்படித்தான் இருக்கமுடியும்

மே 17 | ilakkiyainfo

பிரபாகரன் – கட்ட பஞ்சாயத்து தலைவன்

ராஜிவ் காந்தியுடனான சந்திப்பின் பொழுது முதலில் தமிழீழம் அல்லாத முடிவிற்கு வரமாட்டேன் என சீன் காட்டினான் பிரபாகரன், முடிந்தால் அடைந்துகொள் அது உன் திறமை,
ஆனால் எங்களின் முடிவு இது என ராஜிவ் சொல்ல,

பின் சட்டென்று என்னை நம்பிய போராளிகளை கைவிடமாட்டேன், அவர்களை பராமரிக்க மாதம் 50 லட்சம் வேண்டுமென்றான், இல்லை என்றால் இப்போதே சயனைடு கடிப்பேன் என்றான், தன்னை நம்பிய போராளிகளை விடுவதை விட சயனடை கடித்து சாவது மேல் என்றான், கோயபல்ஸ் வைகோவும் இதனை சொல்லி இருக்கின்றார்.

பணம் கொடுக்க சம்மதித்து முதலில் கொடுத்துபார்த்த இந்தியா, அவன் டிமாண்ட் இன்னும் அதிகரிக்கவும், மற்ற குழுக்களிடம் பேச கூடாது, நான் மட்டுமே ஈழதமிழர் பிரதிநிதி எனக்கு இந்தியா கப்பம் கட்டவேண்டும் என மிரட்ட, இந்தியா பணியவில்லை

அதன் பின்னர் தான், அமைதிபடையினை எதிர்த்தான், ராஜிவினை கொன்றான் பிரபாகரன்,

என்னை நம்பிய போராளிகளை காக்கவே அமைதிபடை எதிர்த்தேன், ராஜிவினை கொன்றேன் என்றெல்லாம் பேசிய பிரபாகரன் 2009ல் என்ன செய்தான்

எல்லா போராளிகளையும் அம்போ.. என விட்டுவிட்டு பெருங்காட்டிற்குள் தப்பி ஓட திட்டமிட்டான். அவன் சயனைடு கடிக்கவுமில்லை, நம்பி வந்த எந்தபோராளியினை காக்கவும் இல்லை, இதனை தமிழினி தன் வாக்குமூலத்தில் அழுத்தமாக பதிந்திருக்கின்றார்.

இதுதான் பிரபாகரன், அவனுக்கு தேவை பணமும் கொஞ்சம் ஆயுதமும் அவனுக்கொரு அடியாள் கூட்டமும். ஒரு கட்டபஞ்சாயத்து கும்பல் தலைவன் தான் அவன்.

சிதறல்கள்..

பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் சீமானின் ‘நாம் தமிழர் கட்சி’ கூடாரமொன்றை அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் கடுமையாக கோபபட்டு குற்றஞ்சாட்டினார்

# அதே கோபத்திலில்தான் கலிங்கபட்டி கோபாலும், திருட்டு முருகன் காந்தியும் இருக்கின்றார்கள், அடுத்தமுறை அங்குகோபாலும், முருகனும் அடுத்தடுத்து ஸ்டால் அமைப்பார்கள், அதற்கடுத்த வருடம் அக்கா வீரலட்சுமியின் ஸ்டாலும் அமையலாம். தமிழீழத்தை நாடு கடத்தி சென்றவரின் கோபம் இன்னும் அதிகமாகும்
,
# ஒரு காலத்தில் ஈழபோராட்டத்தின் ஒரே பிரதிநிதி நாங்கள் என்றன புலிகள், இன்றோ வசூல் பிரிப்பதில் ஏன் இத்தனை கோஷ்டி, நாங்கள் மட்டுமே பிரிப்போம் என்கிறார் முன்னாள் புலி. விரைவில் வசூல் தகராறில் அங்கிள் சைமனின் கோஷ்டி அடிவாங்க போகும் நாள் தொலைவில் இல்லை.

 

இன்னும் காஷ்மீரிய துப்பாக்கி சூட்டையும், அந்த கலவர சூழலையும் கண்டித்து அங்கிள் சைமன் இன்னும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே ஏன்?

காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீரின் யாசின் மாலிக்கினை தமிழகத்திற்கே அழைத்து வந்து இந்தியாவிற்கே சவால்விட்ட அங்கிள், இப்பொழுது மகா மவுனமாக இருப்பது எப்படி?

ஒருவேளை நேபாளம் வழியாக, தொப்பி அணிந்து, மீசை எடுத்து கருப்பு கண்ணாடி போட்டு காஷ்மீருக்குள் நுழைந்துகொண்டிருப்பாரோ? இந்திய ராணுவம் குறுகுறுவென்று வேறு பார்த்து தொலையுமே..

# அன்னார் வாய்திறப்பாரா இல்லையா தெரியாது, ஆனால் யாசின் மாலிக்கோடு அங்கிள் இருக்கும் படம் காஷ்மீரெங்கும் பேனராக பரவுகின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன, இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அதனை கண்காணிக்கின்றது, அதாவது சீமான் தங்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பார் என காஷ்மீரிய மக்கள் நம்புவதாக அவை கருதுகின்றன‌

# இனி அங்கிள் அடிப்பார் பாருங்கள் பல்டி, அப்படி ஒரு வேகம் இருக்கும்