சிதறல்கள்….

பூலோகத்தின் சகலகுடிகளிடமும் இந்தியாவில் முதலீடு செய்ய திரட்டபட்டாயிற்று, அமேசான் காட்டு பழங்குடியினர் முதல் அண்டார்டிக்கா எஸ்கிமோக்கள் வரை அழைத்தாகிவிட்டது, இனி செல்ல கண்டமும் இல்லை, அழைக்க நாடுகளுமில்லை அதற்காக சும்மா இருக்கமுடியுமா?

செவ்வாய் கிரகத்தில் அந்நிய முதலீடு கவர பிரதமர் பயணம், கச்சகஸ்தானின் பைகானூர் தளத்திலிருந்து ரஷ்ய ராக்கெட்டில் கிளம்பினார் எனும் செய்தி விரைவில் வரலாம்.

வேற்றுகிரகவாசிகளின் பறக்கும்தட்டு இப்பொழுதெல்லாம் இந்தியாவில் தென்படாத காரணம் இதுதான், சிக்கிவிட்டால் அந்நிய கிரக முதலீடு செய்யுங்கள் பிடித்துகொள்வார்கள் எனும் அச்சம் அவர்களுக்கு இருக்கலாம்.


மதிமுகவின் புதிய சேனல் மதிமுகம் டிவி- வைகோ தொடங்குகிறார்

# ஏதோ 1500 கோடி என்றார்கள், அசைன்மெண்ட் என்றார்கள், அப்பொழுதே மருமகன் பெரும் கோடிகளில் டெக்ஸ்டைல் வாங்கிய சர்ச்சை வந்தது, அவர் வேறு என் ராஜதந்திரம் எப்படி என தனக்குதானே தட்டிகொண்டார்,

# இதோ வைகோ டிவிவேறு தொடங்க போகின்றாராம், கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரலாம்.

# எனினும் “மதிமுகம்” எனும் பெயருக்கு பதிலாக “சதிமுகம்” என வைத்தால் மிகசரியாக இருக்கும் என்று தேமுதிக நண்பர்கள் சொல்லிகொள்கின்றார்களாம்.

# அது என்னவோ தெரியவில்லை, தற்பொழுது விஜயகாந்தினை பார்க்கும்பொழுதெல்லாம் பருத்தி வீரனில் சீட்டுவிளையாடி தோற்றுவிட்டு கயிரோடு அலையும் டக்ளஸ் அண்ணன் நினைவுதான் வருகின்றது.


ஏதோ எவிடன்ஸ் குழுவாம், உண்மை கண்டறிவார்களாம், இதுவரை என்ன கண்டறிந்தார்கள் என்பது தெரியவில்லை, ஆனால் ஸ்வாதி கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து பொதுமக்கள் முன்னிலையில் அறிக்கை சமர்பிப்பார்களாம்

# அப்படியே ராமஜெயம் கொலைவழக்கினையும் இக்குழு கண்டறிந்து சொல்லும், சேலம் விஷ்ணுபிரியா போன்ற சிக்கலான வழக்குகளையும் இக்குழு இனி விசாரிக்க கோரலாம், எம்ஜிஆர் சுடபட்ட வழக்கினையும் விசாரிக்க கோருவோம்.

# ஆனால் தா.கிருட்டின வழக்கு, 3 பேர் தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் எரித்த வழக்கு, பொட்டு சுரேஷ் வழக்கு, போன்ற சிக்கலான வழக்குகளில் எல்லாம் இவர்கள் வாய்திறக்க மாட்டார்கள், எவிடன்ஸ்வாவது மண்ணாங்கட்டியாவது?

# வேலை வாய்ப்பில் தட்டுபாடான நாடுதான் இந்தியா, அதற்காக வேலை இல்லாதவர்கள் எல்லாம் காவல்துறை, நீதிமன்றதுறையின் வேலைகளை எல்லாம் எடுத்துகொண்டால் எப்படி? அது பல குழப்பங்களை விளைவிக்காதா? தடயங்களை குழப்பாதா?

# இதெல்லாம் அரசு துறையான காவல் துறை குறுக்கீட்டில், அதாவது அரசு பணியாளரை வேலைசெய்யவிடாமல் தடுத்தல், குழப்புதல் போன்ற பிரிவுகளில் வரும் குற்றமல்லவா?

# சும்மா இருப்பவர்கள் எல்லாம் கொலை குற்றங்களை விசாரிக்க கிளம்பிவிட்டால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக தானே அர்த்தம்? பின் அரசு துறைகள் எதற்கு? இப்படியே ஆளாளுக்கு நாங்கள் விசாரிக்கின்றோம், நீதிவழங்குகின்றோம் என கிளம்பினால் இத்தேசம் என்ன ஆகும்?


 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி மீது நிலஅபகரிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

# எப்படி மருத்துவர் அய்யா? இந்த வழக்கிற்கும் உங்கள் வழக்கமான அறிக்கைபடி சிபிஐ விசாரணை கோரலாமா?

குமரி மாவட்ட துறைமுகம் …..

இங்கு Suhir Pal ஒரு நண்பர் மிக கடுமையாக வருத்தபடுகின்றார், அதாவது இணயம் எனும் குமரி துறைமுகம் கடற்படை தளமாக அமைக்கபடுகின்றதாம், இனி பெரும் ஆபத்து தென்னகத்திற்கு வருமாம், அன்னார் பதைபதைக்கின்றார்.

இவர் இவ்வளவு நாளும் அண்டார்டிக்கா பனிகரடியாக தூங்கிவிட்டு திடீரென வந்து என்னது? இந்திராகாந்திய கொன்னுட்டாங்களா? என கேட்டால் கூட இவ்வளவு ஆச்சர்யம் வராது.

விஜயநாராயண கடற்படை தளம், கூடங்குள அணுவுலை, மகேந்திரகிரி எரிபொருள் தளம், சற்று தள்ளி திருவனந்தபுரம் அருகே ராக்கெட் மையம் இன்னும் விரைவில் அமையவிருக்கும் குலசேகரபட்டின ராக்கெட் ஏவுதளம் எல்லாம் வந்த பின் அன்னார் திடீரென் வந்து இந்த துறைமுகத்தை எதிர்க்கின்றாராம்.

அதாவது ஏற்கனவே கடும் பாதுகாப்பும், ஆபத்தும் உள்ள திட்டங்களில் சிக்கியுள்ள பகுதி இது, பஞ்சாப் போல, ராஜஸ்தான், காஷ்மீர் போல எல்லையோர மாகாண சிக்கல் இது, முதலில் எதிர்த்திருக்கவேண்டிய நேரத்தில் அண்ணா வாழ்க, எம்ஜிஆர் வாழ்க, கலைஞர் வாழ்க, அம்மா வாழ்க என சொல்லிகொண்டும், ரஜினி கமலுக்கு போஸ்டர் ஒட்டியும் வாழ்ந்தாகிவிட்டது

இலங்கையில் அமைந்திருக்கவேண்டிய இந்திய தளத்தையும் புலிகள்,ஈழம், தனிதமிழ் , அமைதிபடை அட்டகாசம் என சொல்லி விரட்டியாயிற்று, பின் எங்கு அமையும்? இங்குதான் அமையும்.

அன்னாரின் கன்னியாகுமரி தொகுதிதான் அணுவுலை போராளி உதயகுமாரினை தோற்கடித்து, தூங்கும் தலைவன் பொன் ராதாகிருஷ்ணனை பாரளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தது, ஒருவேளை உதயகுமார் வென்றிருந்தால் இம்மாதிரியான திட்டம் மறுபரீசீலனைக்கு ஆகலாம். குறைந்தபட்சம் அணுவுலையாவது சிக்கலுக்கு வந்திருக்கும்.

தெற்கே இங்கிலாந்தின் டீகோ கார்சியா தீவிலிருந்து அமெரிக்க ஒப்பந்த காலம் முடிகிறது, அது இலங்கை அல்லது மால்த்தீவில் காலூன்றலாம், சீனாவும் அதே முயற்சியில் உள்ளது, அப்படி அமையும் பட்சத்தில் வலுவான கடற்படை தளம் தெற்கே தேவை, அதற்காக கல்கத்தா அருகேயோ குஜராத்திலோ கட்டமுடியாது, இங்குதான் கட்டமுடியும்

இணயம் மட்டுமல்ல இன்னும் பல திட்டங்கள் வரும், வந்தே தீரும், இதனை தவிர்க்கத்தான் 1987லே இந்தியா திட்டம் தீட்டிற்று

அதாவது இலங்கையில் இந்திய ராணுவதளம் அமையபெற்றால் இந்த எண்ணிக்கை குறையும், அமைதிபடை அனுப்பபட்டது அந்த காரணத்தை குறிவைத்தே தான், இதனை உணர்ந்த அன்னிய சக்திகளின் தூண்டல்தான் இந்திய ராணுவத்தின் மீதான கற்பழிப்பு பழியும் விரட்டலும்

நாட்டின் பாதுகாப்பு தேவை மிக கட்டாயம், அதுவும் அணுவுலை பகுதிகளுக்கும் விண்வெளி ஆராய்சி மைய நிலையங்களுக்கு அருகே அது மிக அவசியம்.

ரோடு, ரெயில் எல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் விடலாம், இணயம் போலவே கேரளத்தின் கொச்சி போன்ற பல பகுதிகளுக்கும் பாதிப்பு உண்டு

உங்களுக்கு என்னவேண்டும்? எல்லா தளங்களும் பஞ்சாபிலும், காஷ்மீரிலும், ராஜஸ்தானிலும் அமையவேண்டும், அவர்கள் எல்லாம் சாக வேண்டும், நாமெல்லாம் அமைதியாக வாழவேண்டும், அப்படியே தந்திரமாக இலங்கையில் நுழைந்தாலும் தமிழனை இந்தியா கொல்கிறது என ஒப்பாரி வைக்கவேண்டும்

அதாவது அவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள், பிழைக்கதெரியாதவர்கள், தமிழர்கள் மட்டும் விவரமானவர்கள் அப்படியா?


சுஹிர் பால் பதிவு

குமரி மாவட்டம் இனயம் என்ற இடத்தில் வரவிருப்பது வர்த்தக துறைமுகம் இல்லையாம், கடற்படை துறைமுகமாம்

இலங்கையில் சீனா போன்ற நாடுகள் தங்களது தளங்களை அமைக்கும் போது, இந்தியா பதிலடி கொடுப்பதற்கு ஒர் கடற்படை துறைமுகம் தேவையாம்

அதற்காக தான் வர்த்தக துறைமுகம் என்று குமரி மாவட்ட மக்களை ஏமாற்றி, இந்த போர்தளத்தை அமைக்கிறதாம் மத்திய அரசு.

கடற்படை போர்தளமும் தேவையானது தான். ஆனால் மிக அடர்த்தியாக மக்கள் வாழும் குமரி மாவட்டத்தில் கப்பற்படை தளம் அமைப்பது மிக மிக முட்டாள்தனமே.

(மக்கள் நெருக்கம் அதிகமில்லாத கடற்ப் பகுதியை தேர்ந்தெடுத்து, அந்த பகுதியில் வசிக்கும் ஒருசில மக்களையும் பாதுகாப்பான பகுதியில் குடியமர்த்தி தான் இப்படிபட்ட திட்டங்கள் நிறைவேற்றபட வேண்டும் )

ஒருவேளை இத்தளத்தில் போர்க்கப்பல்களை இந்தியா குவிக்கும் போது, எதிரி நாடுகள் இந்த தளத்தை நோக்கியே தாக்கும்.

மிக நெருக்கமாக வாழும் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் பகுதி மக்கள்களின் நிலமை???????????

கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் வாழ் மக்களே உஷார்

நிச்சயமாக இனயத்தில் வரவிருப்பது வர்த்தக துறைமுகமல்ல…

உங்கள் சிந்தனைக்கு :-

1,குமரி நெல்லை திருவனந்தபுரம் பகுதிகளிலிருந்து என்ன பொருள்கள் கப்பல் கப்பலா ஏற்றுமதியாக காத்திருக்கிறது?

2, கப்பல் கப்பலா இறக்குமதி செய்வதற்கு பொருள்கள் தேவைபடுகின்ற கம்பெனிகள் இங்கு உள்ளனவா?

3, அவ்வாறு சிறு தேவைகள் இருந்தாலும் அருகாமையில் தூத்துகுடி துறைமுகம் மற்றும் மிக அருகாமையில் விழிஞ்சம் துறைமுகங்கள் உள்ளனவே

4, ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
மதுரை To திருவனந்தபுரம் இரட்டை இரயில்வே சாலையை நிறைவேற்ற நிலம் கையகபடுத்த முடியாத அரசு, (இது நிறைவேறினாலே சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து எளிதாகும்)

காவல் கிணறு To களியக்காவிளை நான்கு வழிச் சாலையை நிறைவேற்றிட நிலம் கையகபடுத்த முடியாத அரசு.

குமரி மாவட்ட மக்களுக்கு பயனளிக்காத, குமரி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற
இனயம் துறைமுக திட்டத்தை அவசரமாக கொண்டு வர முயல்வது ஏன்?-

காஷ்மீரில் நடப்பது என்ன?

காஷ்மீரில் கடும் கொடும் ராணுவ அட்டகாசம் நடப்பது போலவும், அம்மக்களை வாழவிடாமல் வதைப்பது போலவும், இந்திய ராணுவம் கொடுமையின் உச்சம் எனவும் சிலபேர் எழுதிகொண்டிருக்கின்றார்கள்.

கொஞ்சம் சிந்திக்கவேண்டும், பாகிஸ்தான் கூட்டாளி ஹூரியத் தலைவர்கள் முதல் அங்கிள் சைமனின் கூட்டாளியான யாசின் மாலிக் வரை எத்தனையோ பேர் அங்கு உண்டு, அவர்களை எல்லாம் விட்டுவைத்த ராணுவம் புர்கானை மட்டும் கொன்றது ஏன்?

kashmir-clashes-afp_650x400_41468212123

புர்கான் எனும் தீவிரவாதி சுட்டுகொல்லபட்டதிற்கு 100 பக்கத்திற்கு பொளந்துகட்டும் ஊடகங்கள், அங்கே எல்லையில் கொத்துகொத்தாக உயிரழக்கும் இந்திய வீரர்களை பற்றி, காயமடைந்து அங்கம் இழந்த அவர்களை பற்றி எல்லாம் ஒரு வார்த்தை கூட எழுதாதது, அல்லது பெட்டி செய்தியோடு விட்டுவிடும்.

அப்படி கடும் ராணுவ நெருக்கடி என்றால், அம்மக்கள் அங்கே வசிக்கமுடியுமா? கிளம்பிவிட மாட்டார்களா?. அப்படி எத்தனை லட்சம் பேர் பாகிஸ்தான், நேபாளம், சீனா,ஆப்கன் என கிளம்பி இருப்பார்கள்? ஒருவரை காட்டுங்கள்?

காரணம் அந்த நாடுகளைவிட இங்கே நன்றாகத்தான் வாழ்கிறோம், என்ற எண்ணம்தானே காரணம், அட அடுத்த நாடு வேண்டாம், மற்ற மாநிலங்களுக்காவது அகதியாக சென்றிருக்க்வேண்டுமல்லவா? செல்லவில்லையே ஏன்?

அவர்களை நன்றாகத்தான் இந்நாடு வாழவைத்துகொண்டிருகின்றது, சில அந்நிய சக்திகளின் தூண்டுதலால் சில பிரச்சினைகள் வரலாமே தவிர, வாழ விடாத இந்திய கட்டுப்பாடு எல்லாம் அங்கே இல்லை, அதுதான் யதார்த்தம்.

உயிர்வாழ முடியவில்லை அல்லது இந்நாடு பிடிக்கவில்லை என்றால் என்றோ கிளம்பி இருப்பார்கள், ஏன் செல்லவில்லை? அவர்களுக்கு இங்கே வாழமுடிகின்றது, அப்படி பெரும் ஆபத்து இருப்பதாக அவர்கள் கருதவில்லை.

# இந்த புர்கானை பிடித்துகொண்டு இங்கே சில தமிழ்தேசிய வாதிகள் இந்திய ராணுவம் மிக பயங்கரமானது , காஷ்மீரில் இந்தியா அட்டகாசம், ஈழத்தில் இப்படித்தான் அழித்தனர் என ஒப்பாரி வைக்கின்றார்கள், இவர்களின் கேடு கெட்ட ஆசை என்ன? இங்கும் ரத்த ஆறு ஓடவேண்டும், அதில் நீந்தி இவர்கள் கரையேரவேண்டும் என்பதனை தவிர ஒன்றும் இருக்கமுடியாது.