பாலஸ்தீன் வழியில் ஈழம் அமையும் : திருமுருகன் காந்தி

பாலஸ்தீனத்தை குதறி வைத்திருக்கின்றது இஸ்ரேல், தனி பாலஸ்தீனம் சாத்தியமில்லை என்றுதான் அராபத் சுயாட்சிக்கே ஒப்புகொண்டு எல்லைகோடு வகுத்தார்.

அவருக்கு உலகவோட்டம் தெரிந்தது, எல்லைகளையாவது இஸ்ரேலை ஒப்புகொள்ளவைத்தது அவரின் பெரும் வெற்றி.

இந்த திருமுருகன் காந்தி இதோ சொல்கின்றார், பாலஸ்தீன் வழியில் ஈழம் அமையும். எப்படிபட்ட ஏமாற்றுவேலை இது.

பாலஸ்தீனத்தில் எல்லை பெற்று தந்தவர் அராபத், தொடர்ந்து போராட ஹமாஸினை விட்டுசென்றவரும் அவரே, அடிக்கடி அமெரிக்கா வரை பேச்சுவார்த்தைக்கு சென்று பாலஸ்தீன போராட்டம் அழித்தொழிக்கபடாமல் பார்த்துகொண்டது அவரின் சாமர்த்தியம்.

தனிநாடு அவர் பெறாமல் மறைந்திருக்கலாம், ஆனால் உலகநாடுகளில் பாலஸ்தீனத்திற்கு ஒரு அபிமானம் உருவாக்கினார், போராளி குழுக்களை எல்லாம் ஒருங்கிணைத்தார், குறிப்பாக மக்களை திரட்டி அவர் காட்டிய இண்டிபாதா எழுச்சி குறிப்பிடதக்கது.

அமெரிக்க அதிபருக்கு தற்கொலை குண்டு அனுப்பினார் இல்லை, இஸ்ரேலிய அதிபர்களை கொன்றார் இல்லை, அரபுலகில் துரோகங்களுகு இடையேயும் நட்பை உருவாக்கினார், இன்றளவும் காலித் மிஷல் போன்றவர்கள் இஸ்ரேலை மிரட்ட அந்த தொலைநோக்குதான் காரணம்

ஆனால் ஈழத்தில் என்ன நடந்தது?

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என ஜெயவர்த்தனே ஒப்புகொண்ட எல்லையினை புலிகள் கிழித்தாயிற்று, எல்லோரையும் பகைத்தாயிற்று , எல்லா மாற்றுபோராளிகளையும் ஒழித்துகட்டியாகிவிட்டது

போதாகுறைக்கு புலிகளும் மொத்தமாக பரலோகம் சென்றாயிற்று, இனி போராட யார் உண்டு? எங்கே இருக்கின்றது எல்லை கோடு?

அரபாத்தின் இண்டிபாதா எங்கே, பங்கருக்குள் ஒளிந்திருந்த இந்த தலமை எங்கே?, இது என்று மக்களை திரட்டி போராடிற்று? என்று மொத்த இலங்கை தமிழர்களையும் ஒரே கோட்டில் நிறுத்திற்று, ஒருகாலமுமில்லை. பின் எப்படி?

பாலஸ்தீனம் அமைய இன்று குரல்கொடுக்கும் நாடுகள் எத்தனை? அரசதந்திரிகள் எத்தனை?

ஈழம் அமைய சீமான், திருமுருகன் தவிர குரல் எழுப்புவது யார்? இவர்களால் இந்தியா தாண்டமுடியுமா? எம்மா ஏமாற்றுவேலை. எந்த நாடு உதவ தயாராக இருக்கின்றது?

பாலஸ்தீன வழியில் ஈழவிடுதலை சாத்தியம் என எவனாவது சொல்வான் என்றால அதனைவிட பெரும் மோசடி ஒன்றும் இருக்காது

எத்தனை ஒப்பந்தங்களை கடந்து வந்தது அது, ஈழ ஒப்பந்தம் என ஏதாவது ஒன்றை கண்டிருப்பீர்களா?

நார்வே அராபத்தின் மனிதநேயத்தை பாராட்டி அவருக்கு நோபல் வரை கொடுத்து மகிழ்ந்தது, பிரபாகரனை கண்ட நார்வே குழு தலைதப்பினால் போதும் என ஓடியது உலகறிந்தது.

இப்படி சம்பந்தமே இல்லாமல் பாலஸ்தீனத்தையும், ஈழத்தையும் ஒப்பிடுவார் என்றால் இவன் எவ்வளவு பெரும் மோசடியாளராக இருப்பார்?

இவர் சொல்வதற்கும் ஆம், அப்படித்தான், அதேதான் என சொல்கிறார்கள் பார்த்தீர்களா? அவர்களை சொல்லவேண்டும்.

அவர்களிடம் பாலஸ்தீனம் எங்கிருக்கிறது என கேளுங்கள், கொழும்பிற்கு தேற்கே என்பார்கள். இஸ்ரேலிய தந்திரமும் தெரியாது, பாலஸ்தீன பொறுமையான அணுகுமுறையும் தெரியாது, ஆனால் சொல்வது மட்டும் ராஜதந்திரி போல‌

திடீரென பவர்ஸ்டார் வந்து, எனது அடுத்த படம் ரஜினியின் கபாலியினை விட பெரும் வசூல் செய்யும் என்றால் என்ன செய்வோம், அப்படித்தான் திருமுருகன் காந்தியின் பதிவுகளையும் பார்த்து நகரவேண்டி இருக்கின்றது

பாலஸ்தீனத்தை பற்றி பேசினால், தோற்றதாக கருதபட்ட அராபத்தின் பெருவெற்றி பற்றி பேசவேண்டிவரும், அவர் அமைத்திருக்கும் அஸ்திவாரம் அப்படி. அராபத் இல்லாமல் பாலஸ்தீனம் இல்லை.

அப்படியே ஈழம் பற்றி பேசினால் புலிகளும், பிரபாகரனும் பற்றி பேசவேண்டும், இவர்கள் சீரழித்தவிஷயம் ஏராளம், தமிழீழமே நாடுகடந்துவிட்டது.

ஆக ஒப்பிட்டு பேசவேண்டியது அராபத்தையும், பிரபாகரனையும், ஆனால் அதனை செய்தால் பிரபாகரனை கழுத்தை பிடித்துகொல்லுவது போல எல்லோருக்கும் கோபம் வரும், அவ்வளவு காரியம் உண்டு, அராபதி எதிலெல்லாம் நுட்பமாக சாதித்தாரோ அதிலெல்லாம் தலைகீழாக கிடந்தார் பிரபாகரன்.

அதனால்தான் அன்னார் அதனை மறைத்துவிட்டு சும்மா பாலஸ்தீன், ஈழம், ஐ.நா எதனையாவது மேம்போக்காக சொல்லிகொண்டிருப்பார். யாராவது ஏமாந்துகொண்டும் இருப்பார்கள், அவர்கள் தலைவிதி அப்படி.

பாதுகாப்பில்தானே இவரால் இப்படி எல்லாம் பேசமுடிகின்றது…

ஒருவழியாக அங்கிள் சைமன் சத்தமே இல்லை, சாந்தனை இலங்கை சிறையில் அடையுங்கள் என புலம்புமளவிற்கு அவரின் மண்டியிடா மானம் மல்லாக்க படுத்துவிட்டது , மக்கள் ஆதரவு இல்லையாம் அவரே சொல்லிவிட்டார்.

ஆனால் திருமுருகன் காந்தி என்பவர் வழக்கம்போல புளுகு மூட்டையினை அவிழ்த்துவிடுகின்றார், அதாவது இந்திய ராணுவம் கொடூரமானதாம், அது இடிந்தகரையில் பெரும் சித்திரவதை செய்ததாம், அன்னார் புலம்புகின்றார்.

முதலில் இடிந்தகரையில் களமிரங்கியது ராணுவமே அல்ல, அது கடலோர பாதுகாப்பு படையும், முக்கிய தொழிற்சாலைகளுக்கான‌ சிறப்பு பாதுகாப்பு படைதான் களமிறங்கிற்று.

அதுவும் தானாக களமிறங்கவில்லை, முடியவும் முடியாது.

Stanley Rajan's photo.

அரசு கொடுத்த உத்தரவின் பேரிலேதான் பாதுகாப்புபடை களமிறங்கியது

உத்தரவு கொடுத்தது யார்? அல்லது அனுமதித்தது யார்? மாநிலத்தில் அன்று ஜெயா அரசு என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, இன்னொன்று அணுவுலைக்கு ஆதரவாகவே தமிழக அரசு நடந்துகொண்டதற்கு நீதிமன்ற வழக்குகளே சாட்சி.

உண்மை இப்படி இருக்க, ஒரு பெரும் புலம்பலை இந்திய ராணுவத்தின் மீது இறைக்கின்றார் திருமுருகன், இந்திய ராணுவம் அப்படி கடுமையானது, அது பிரிட்டிஷ் தயாரிப்பு, அதற்கு இரக்கமே இல்லை, அது பொல்லாதது என்றெல்லாம் அள்ளிவிடுகின்றார்

ராணுவம் என்பது கடுமையானதுதான், எல்லா நாட்டு ராணுவமும் அப்படித்தான் பழக்கபட்டிருக்கும், அது ஒன்றும் வந்து தடவி உணவூட்ட அன்னை தெரசா சபை அல்ல, மக்களை மகிழ்விக்க சினிமா சங்கமோ அல்லது கரகாட்ட கோஷ்டியோ அல்ல‌

அது மிக இறுக்கமான அமைப்பு, அப்பொழுதுதான் அதனால் உக்கிரமாக சண்டையிட்டு எதிரியினை விரட்டமுடியும், அமைதி நிலைநாட்ட இயலும்

ஆனால் நமது ராணுவம் பாகிஸ்தான், ஈரானை போல சொந்தமாக ஆட்சிக்கு வருவது அல்ல, மாறாக ஆட்சியாளர்களின் அங்குசத்திற்கு கட்டுபடும் யானை, எய்துவிட்டு அவர்கள் திரும்ப அழைத்தால் வரும் அர்ச்சுணனின் பிரம்மாஸ்திரம்

ஆக கட்டளை இட்டவர்களைத்தான் இவர் குற்றம் சொல்லவேண்டுமே தவிர பாதுகாப்பு படையினை அல்ல.

இவர் ஒருவேளை கொலை சம்பவத்தில் அரிவாளின் கூர்மை, வலிமை கண்டு அதனை பிடித்து சிறையில் அடைத்துவிட்டு குற்றவாளியினை விட்டுவிடுவார் போலும், இவர் இடிந்தகரை சம்பவத்தை அப்படித்தான் சொல்கிறார்.

என்ன மனிதர் இவர்?

தைரியமாக ஜெயலலிதா ஆட்சியில் கூடங்குளம் போராட்டகாரர்கள் மீது பாதுகாப்புதுறையினரை ஏவியது கண்டிக்கதக்கது என சொல்லி பார்கட்டும் பார்க்கலாம்

சொல்லமாட்டார் மாறாக வேறு ஏதோ பிரிட்டிஷ், அது இது என சம்பந்தம் இல்லாமல் உளறிகொண்டிருப்ப்பார்.

யாரும் இவர்மேல் கல் எறிந்தாலும் கல்லைத்தான் பிடித்து கடிப்பார் போலும், அப்படித்தான் இருக்கின்றது இவரின் செயல்பாடுகள்.

இதனை நம்பிகொண்டும், ஆமாம் ராணுவம் பொல்லாதது என சொல்ல ஒரு கூட்டம்.

ஒவ்வொரு நொடியும் எல்லையில் மரணத்தை எதிர்பார்த்துகொண்டு, ஒவ்வொரு நாளும் விடிந்தபின்புதான் தன் இருப்பினை உணர்ந்துகொண்டு இந்நாட்டு மக்களை பாதுகாக்கும் அவர்களை, பனியிலும் மழையிலும் சிக்கி மக்களை காக்கும் அவர்களை சொல்ல எப்படி மனம் வரும்?

அந்த பாதுகாப்பில்தானே இவரால் இப்படி எல்லாம் பேசமுடிகின்றது,

யார் உத்தரவிட்டது என சொல்ல தைரியமும் இல்லை, நாட்டை பாதுகாப்பவர் மீது நன்றியுமா இல்லை?

இவர் சொல்வது படி ஒரு வாதத்திற்கு சொன்னாலும், அந்த வெறிபிடித்த ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்திலா இந்நாட்டில் வாழ்ந்துகொண்டும், பேசிகொண்டும் இருக்கின்றார் இவர். சீ சீ….

அப்படி இந்த ராணுவம் கொடுக்கும் பாதுகாப்பான வாழ்கை வேண்டுமா? சல்மான் ருஷ்டி போலவோ, நஸ்ரிமா தஸ்ரின் போலவோ நாட்டைவிட்டு கிளம்பி சென்றுவிடவேண்டாமா? தயாரா?

 —–

1987ல் வடமாராட்சியில் இந்தியா தலையிட்டு புலிகளை காப்பாற்றி யுத்தம் நிறுத்தியதில் ஜெயவர்த்தனே கடும் அப்செட், கூடவே அறவே விருப்பமில்லா இந்தியா ஒப்பந்தத்தை ஏற்றும்கொள்ளும் போது வாய்விட்டு சொன்னார்

“இந்தியா செய்ததை மன்னிக்கின்றேன், ஆனால் மறக்கமாட்டேன்”

சிங்கள இனம் கொதிப்பின் உச்சத்தில் இருந்தது, ராஜிவ் கொழும்பில் இறங்கும்பொழுது இந்திய வலியுறுத்தலில் ஊரடங்கு சட்டத்தில்தான் ராணுவ மரியாதை கொடுக்கபட்டது

ஆத்திரத்தின் உச்சத்தில் விஜயதமனி எனும் கடற்படை வீரன் கொலைதிட்டமும் வைத்திருந்தான், அதாவது அவன் ராஜிவினை அடிக்க, மற்ற இரு வீரர்கள் துப்பாக்கி முனை கத்தியால் ராஜிவினை குத்தி கொல்லவேண்டும் , காரணம் அணிவகுப்பில் தோட்டா கொடுக்கபடாது.வெறும் துப்பாக்கி மட்டுமே

ஆனால் அடிபடாமல் ராஜிவ் தப்பியதும், அதனை தொடர்ந்து பாதுகாலர்கள் சூழ்ந்துகொண்டதும் உயிர்தப்பினார் ராஜிவ்

அப்படி யாரை எதிரி எவன் கருதினாரோ அவனிடம் இருந்து தப்பினார்,ஆனால் எவனை அந்த சிங்கள எதிரியிடமிருந்து காப்பாற்றினாரோ அந்த பிரபாகரனால் கொல்லபட்டார் ராஜிவ்

இதுதான் புலிகள், சிங்களனை விட மகா மோசமானவர்கள்

பர்ஹான் வானியைச் சுட்டுக் கொன்றதை ஏற்க முடியாது : சீமான்

காஷ்மீரில் தீவிரவாதி பர்ஹான் வானியைச் சுட்டுக் கொன்றதை ஏற்க முடியாது : சீமான்

இவரை யார் ஏற்றுகொள்ள சொன்னார்கள்? இவர் என்ன காஷ்மீர் முதல்வரா?

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த அவனை சுட்டுகொன்றிருக்கின்றது ராணுவம், அப்படியே அந்நிய நாட்டு தீவிரவாதி படத்தினை பிடித்தலையும் இவரும் சில கண்காணிப்பு வளையத்தில் வந்திருப்பார் அல்லவா?

உள்நாட்டில் யாரெல்லாம் காஷ்மீர பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், இன்னும் தெரிவிப்பவர்கள், யாரையெல்லாம் பிடித்து சாத்தவேண்டும் என்பது தேசிய பாதுகாப்புதுறைக்கு தெரியாததல்ல, இதில் அங்கிள் பெயரும் உண்டு

சும்மாவே யாசின் மாலிக்கினை வலிய அழைத்து வந்து மாட்டிகொண்டார். ஆர்வகோளாறு

அந்த முன்னெச்செரிக்கையில் பாதுகாப்பிற்காக சொல்லத்தான் செய்வார்,காஷ்மீர் போல தமிழகத்திலும் பலபேரை ராணுவத்தால் கொல்லவைத்து பெரும் பதற்றம் உண்டாக்கலாம் எனும் ஆசை நாசமாய் போனதில் அங்கிள் கடும் அப்செட்

விலைவாசியினை உயர்த்திவிட்டால் எல்லோரும் கோடீஸ்வரர்கள்

இந்தியாவில் 2.36 லட்சம் பேர் கோடீஸ்வரர்கள்: ஆய்வறிக்கை தகவல்

# ஒரு செண்ட் நிலம் கிராமங்களிலே 5 லட்சம் வரை விலைபோகிறதாம் , அதனடிப்படையில் 2.30 லட்சம் கோடீஸ்வரர்கள் எல்லாம் இந்தியாவில் உண்டு என்பது சாதாரண விஷயம். எனக்கு தெரிந்தே சில கிராமம் முழுக்க கோடீஸ்வரர்கள்தான் வாழுகின்றனர், எல்லாம் விலைவாசி, இந்திய ரூபாய் தன் மதிப்பினை வைகோ வேகத்தில் இழந்ததால் உயர்ந்தவிலையன்றி வேறுகாரணமில்லை.

# விலைவாசி உயரும் வேகத்தில் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் 100 கோடி கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகிவிடுவார்கள், இதுதான் பணக்கார இந்தியாவினை உருவாக்கும் திட்டம்,

விலைவாசியினை உயர்த்திவிட்டால் எல்லோரும் கோடீஸ்வரர்கள்.

கங்கை நீர் அஞ்சலகங்களில் விற்பனை

கங்கை நீர் அஞ்சலகங்களில் விற்பனை : மத்திய அரசு அறிவிப்பு

# இதே இந்தியாவில் எத்தனை லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை, எவ்வளவு கிராமங்கள் குடிநீருக்காக படாத பாடு படுகின்றன. இன்னமும் குடங்களை சுமந்துகொண்டு அலையும் அபலைகள் நகரங்களிலும் கிராமங்களிலும் எத்தனை கோடி.

# அவர்களுக்கெல்லாம் குடிக்க நீர்வசதி செய்துதராமல் கங்கை நீரை தபால் அலுவலகங்களில் விற்கும் விசித்திரத்தை என்ன சொல்ல? நாடு எங்கே செல்கிறது?

# இன்னும் கங்கை நீர், திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், பழனி அபிஷேகபால், கல்கத்தா காளி பிரசாதம் இவை எல்லாம் விற்கும் ஸ்டால்களாக தபால் நிலையத்தை மாற்றுவார்கள்.

# இனி இந்திய தபால் நிலைய முத்திரையாக அனுமார் படம் இடம்பெறலாம். எப்படியோ கங்கையினை இந்தியா எங்கும் அழைத்து வந்த இரண்டாம் பகீரதன் என மோடியிம் தவம் செய்யும் படத்தோடு தபால்நிலையங்கள் ரெடி.

# மாநில அரசு டாஸ்மாக் தீர்த்தம் விற்கின்றது, மத்திய அரசு கங்கை தீர்த்தம் விற்கின்றது. தண்ணீர் அரசியல் இன்னும் என்னெவெல்லாம் செய்யுமோ.

மொத்தத்தில் வாக்களித்த மக்களுக்கு தண்ணி காட்டுகின்றார்கள்.

தாது மணல் அரசுடமை….. என்ன ஆச்சு?

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தாதுமணல் அரசுடமையாக்கபடும் , புதிய கொள்கைகள் வகுக்கபடும் என்றார்களே? ஏதும் செய்தி உண்டா?

மணற்பாற்கடலில் பள்ளிகொள்ளும் அந்த மகாதேவனே புதிய புதிய தாதுமணல் கொள்கைகளை வகுத்துகொண்டிருக்கலாம்.

இதனை எல்லாம் பற்றி நாம் பேசகூடாது, வழக்கம்போல சாலை, பாலம், கட்டடம் என்பதோடு நிறுத்திகொள்ளவேண்டும்.

யாரோ இங்கு திருமுருகன் காந்தி எனும் உலக உத்தமன் காவல்படை 2012ல் இடிந்தகரையில் நடத்திய அராஜகத்தை கண்டித்து எழுதியதை பகிர்நதிருக்கின்றார்கள், காவல்படை என்பது நடனகுழுவா? அல்லது கரகாட்ட கும்பலா?

எல்லா நாட்டு ராணுவமும் அப்படித்தான் இருக்கும், அப்படி இருந்தால்தான் ராணுவம்.

ஆனால் அந்த காவல் அமைப்பு இந்திய யதார்த்தபடி சட்டத்திற்கு கட்டுபட்டது , ஆட்சியாளர்களின் அங்குசத்தில் அடங்கும் யானை அது.

ஆட்சியாளர்கள் எப்படி உருவாவார்கள்? மக்கள்தான் உருவாக்குவார்கள்

கடந்த தேர்தலில் உதயகுமார் வாங்கிய வாக்குகளிலே மக்களின் பொறுப்பு தெரிகின்றது,

அது உதயகுமாரின் தோல்வி அல்ல, மாறாக யாரையோ அமரவைத்து, வாருங்கள் எங்களை அடித்துகொல்லுங்கள் என தனக்குதானே மக்கள் வைக்கும் சூனியம்

அதனைத்தான் சாடவேண்டுமே தவிர ராணுவத்தை அல்ல. திருமுருகன் காந்திபோன்றவர்கள் இப்படி அம்பை நோவார்களே தவிர, எய்தவனை அல்ல, எய்தவனை உருவாக்கியது யார்? நாமே.

இன விடுதலை இதுதானா?

“நான் இலங்கையின் குடிமகன் என்பதால், என்னை அந்த நாட்டுக்கே அனுப்பி வைத்துவிடுங்கள்’ என மத்திய உள்துறை அமைச்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் ராஜிவ் கொலையாளி சாந்தன்

# என்னது? இலங்கை குடிமகனா? அங்கிள் சைமனும், திருட்டுமுருகன் காந்தியும் இதனை கேள்விபட்டால் உன்னை கொன்றுவிட்டு சயனைடு கடிப்பார்கள் தெரியுமா?

# 7 தமிழர், ஏழு தமிழர் என அவர்கள் என்ன கத்து கத்திக்கொண்டிருக்கின்றார்கள், கொஞ்சமேனும் இரக்கமில்லாமல் இலங்கை குடிமகன் என்கிறீர்? அதெல்லாம் முடியாது, நீர் தமிழர் தொப்புள்கொடி உறவு, இலங்கை குடிமகன் என்றெல்லாம் ஏற்கமுடியாது

# எத்தனை போராட்டம், செங்கொடி வரை எத்தனை சாவு, எதற்காக? நீர் இலங்கை குடிமகன் என சொல்வதற்கா? முடியாது நீர் தமிழர். அவ்வளவுதான் இங்கு சிறை இருந்தே இருந்தே தீரவேண்டும்.

———

சாந்தனின் உணர்வினை மதித்து அவரை இலங்கை சிறைக்கு மாற்றவேண்டும், அங்கே அவர் உறவினர்களை காண வாய்ப்பு கிடைக்கும் : சீமான்

# அங்கிளுக்கு ஏதோ ஆகிவிட்டது, இதுவரை 7 தமிழர் விடுதலை, இன விடுதலை , படையெடுப்பு, சிறையுடைப்பு என முழங்கியவர், இப்போது சிறையினை மட்டும் மாற்றுங்கள், அவனை வெளியே விடவேண்டாம் என முணகுகின்றார்.

# சிங்களன் ஆபத்தானவன், கொலைகாரன், சிங்கள பகுதியில் ஏராளமான தமிழர்களை காணவில்லை , இலங்கை சிறையில் தமிழருக்கு பாதுகாப்பில்லை என சொன்ன அங்கிள்தான் இப்போது சாந்தனை இலங்கை சிறைக்கு மாற்றவேண்டும் என்கிறார்

என்னாச்சி அங்கிளுக்கு……. முகத்தை தடவி வழக்கமான முறைப்புடன் அங்கிள் வானத்தை பார்த்து இப்படி பேசிக்கொண்டிருக்கலாம்.

” என்னாச்சி… ரொம்ப ஓவரா பேசினேன்..கூட்டம் வந்தது ..தேர்தல்ல நின்னேன்…. டெப்பாசிட் போச்சி….ஓஓஓ அம்மா ஆட்சியா….பேசினா மிடில் ஆபிளிகேட்டாவிலே அடிவிழுமே..அங்க மோடியா வாயிலே சுட்டுருவாங்களே.. ..சரிசரி கலைஞர் ஆட்சி வந்தால் எல்லாம் சரி ஆயிரும்

…..
….

” என்னாச்சி… ரொம்ப ஓவரா பேசினேன்..கூட்டம் வந்தது ..தேர்தல்ல நின்னேன்…. டெப்பாசிட் போச்சி….ஓஓஓ அம்மா ஆட்சியா….பேசினா மிடில் ஆபிளிகேட்டாவிலே அடிவிழுமே..அங்க மோடியா வாயிலே சுட்டுருவாங்களே.. ..சரிசரி கலைஞர் ஆட்சி வந்தால் எல்லாம் சரி ஆயிரும்

என்னாச்சி……………….

# நடுவுல கலைஞர் காங்கிரஸ் ஆட்சி காணொம்.