இதுதான் காமராஜரின் வெற்றி. நிலைத்து நிற்கும் வெற்றி

எழுத்தறிவித்த இறைவன்

மனிதநேயமிக்க, ஏங்கி நின்ற எந்த சாதி குழந்தையானாலும் அந்த இந்திய குழந்தைக்காக கண்கலங்கிய, தமிழக குழந்தை கல்விக்காக பிச்சை எடுத்த, அந்த பெருமகன் காமராஜரின் பிறந்த நாள் (15-07-1903)

உறுதியாக சொல்லலாம், ஒரு ஜனநாயக நாட்டு அரசியல்வாதி எப்படி வாழவேண்டும், எப்படி ஆட்சி செய்யவேண்டும், எப்படி சிந்திக்கவேண்டும் என்பதற்கு அவர் ஒரு பெரும் இலக்கணம், அரிச்சுவடி.

தமிழகத்தில் தர்மனின் ஆட்சியை, சித்திரகுப்தனின் துல்லியத்தில் கொடுத்துகொண்டிருந்தார். ஆனால் எதிர்கட்சி திராவிட நரிகள் அவரை எதிர்த்தே அரசியல் செய்தன.

அதில் மூதறிஞர் ராஜாஜியும் சேர்ந்ததுதான் காலகொடுமை.
பெரியாரை தவிர யாரும் அன்று காமராஜருக்கு ஆதரவில்லை.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்தது, அவர்களுக்கு கஞ்சியும் ஊற்றியது என அந்த சாதனை ஒரு புறம்.

Stanley Rajan's photo.

இன்றும் எண்ணற்ற மக்களுக்கு சோறுபோடும் ஆவடி தொழிற்சாலை, திருச்சி பெல் கம்பெனி என முக்கியமானவற்றை தமிழகத்திற்கு கொண்டுவந்துவிட்டு, தேவிகுளம் பீர்மேடு மலைபகுதியை கேரளத்திற்கு கொடுத்து முப்போகம் விளையும் குமரிமாவட்டத்தை ராஜதந்திரமாய் தமிழகத்திற்கு சேர்த்தது மறுபுறம். இன்னும் ஏராளம்.

(பின்னாளில் இதற்கும் சாதி சாயம் பூசபட்டது. வரலாறு தெரிந்தவருக்கு தெரியும் விருதுநகர் நாடார்கள் தென்பகுதி நாடார்களோடு அக்காலத்தில் ஒட்டுவதே இல்லை)

இப்படி எல்லாம் சாதனைகளை செய்துவிட்டு அமைதியான அவர் வாழ்ந்த மாநிலத்தில்தான் இன்று மெட்ரோ ரயிலுக்கும், ஒற்றைகண் பாலத்திற்கும் விளம்பர சண்டை நடக்கின்றது, இன்னும் நடக்கும்.

சூது அறியாத, எதிர்கட்சிகளை முடக்க தெரியாத, கட்சிக்கு அள்ளிகொடுக்கும் கறுப்புபண முதலாளிகளை மிரட்ட தெரியாத, சினிமாவை அதன் இயல்பான நாடகமாக அப்பாவியாக எண்ணிய, பத்திரிகைகள் உண்மையை மட்டும் பேசும் என எண்ணிய அந்த தலைவனை,
இந்த தமிழகம் புறக்கணித்தது,

பொய்க்கும் வஞ்சகத்திற்கும் மயங்கியது.திராவிட கட்சிகளின் பொய்க்கே இலக்கணம் எழுதும் புரட்டுக்களில் அது காமராஜரை வீழ்த்திற்று. எல்லா பிரச்சினையும் காமராஜர் காரணமாம்.

இந்தி முதல் இதயகனி சுடபட்டது வரை எல்லா பிரச்சினையும் அவர்தான் என திராவிட கரம் நீண்டது.

வாட்ச் கூட கட்டாத அவருக்கு சுவிஸில் வங்கி கணக்கு இருப்பதாக சுவிஸ்கடிகாரம் அணிந்த கரம் நீட்டி சொல்ல, ஒப்புகொண்டது தமிழகம்.

தர்மனின் அரியணை சகுனிக்கு கிடைத்தால் என்னாகும்? அதுதான் இங்கு நடந்தது.

அவனின் இலவச கல்வியை இவர்கள் காசாக்கினார்கள்,

கஞ்சி ஊற்றி கல்வி கொடுத்தவன் அவன், குழந்தைக்கும் மது கொடுப்பது இவர்கள்.

தொழிற்சாலை எல்லாம் கொண்டுவந்தான் அவன், தொழிற்சாலைகளில் எல்லாம் சொந்த பங்கு வைத்திருப்பது இவர்கள்,

அணை எல்லாம் கட்டி விவசாயம் பெருக்கியன் அவன். தண்ணீர் தொட்டி கட்டிவிட்டு அதிலும் கமிஷன் அடித்துவிட்டு அது அணை என சொல்பவர்கள் இவர்கள்.

சொன்னால் சொல்லிகொண்டே போகலாம்.

இந்த தேசத்தை மனமார நேசித்த, இந்த மண்ணிற்காகவே வாழ்வினை அர்பணித்த அந்த உத்தம தலைவனுக்கு இந்த தேசம் கொடுத்தது என்ன?

வாழும் காலத்தில் இந்தியாவில் காந்தி,நேரு வரிசையில் வைக்கபட்டவர் அவர்.

நேருவிற்கு பின் கென்னடி,குருச்சேவ்,காமராஜ் என உலகம் ஒரு வரிசை வைத்திருந்தது.

ஐ.நாவின் உலக கல்வி பிரிவு அவரை உலகெல்லாம் சொல்லி சொல்லி கொண்டாடியது. சோவியத் ரஷ்யா உண்மையான மக்கள் போராளி என மாஸ்கோ மாளிகையில் பாராட்டு பத்திரம் வாசித்தது.

உலகமே அவரை கொண்டாடியது, அழைக்காத நாடில்லை, வணங்காத தலைவரில்லை.

இன்று….சத்தியமாக அதனை சொல்லும் பொழுதே நெஞ்சம் சகிக்கவில்லை.

சாதிகொலையாளிகளோடு அல்லது சாதிசங்க தலைவர்களுடன் அவரை ஒரே வரிசையில் வைத்து சுவரொட்டிகள் வைக்கின்றனர்.

சில வாழ்த்து சுவரரொட்டிகளில் அவர் சில மிருகங்களோடு நடுவில் இருக்கின்றார்.

அவர் பாரதபிரிவினைக்கு காரணமாய் வெறுத்த மதவாதிகளுடன் இன்று பிறந்தநாள் வாழ்த்து பேனரில் அவரையும் சேர்த்து வைத்திருக்கின்றார்கள். பெரும் கவனகுறைவுதான். காந்தியின் சீடனும், கோட்சேயின் கும்பலும் ஒரே வரிசையில் வரமுடியுமா?

உச்சமாக இன்று மனிதநேயமில்லா அமைப்பு என உலகால் முத்திரை குத்தபட்ட, புகழ்பெற்ற‌ பலகலைகழகத்தை ஆயுத குடோனாக்கிய, பல பேராசியர்களை இல்லாமல் செய்த, குழந்தைகளை பேனா கொடுக்காமல் துப்பாக்கி கொடுக்கும் அமைப்பு என்று ஐரோப்பவில் தடையே செய்யபட்ட அந்த புலிகள் அமைப்பின் தலைவரோடும் இன்று வரிசைபடுத்தபடுகின்றார்.

இதை எல்லாம் பார்த்த பின் “நாம்” ஏன் “தமிழராக” பிறந்தோம் என நாணி குனியவேண்டி இருகின்றது.

இந்திய அரசு காமராஜருகு ஏதாவது செய்யவிரும்பினால் இந்த மாதிரி கொலையாளிகளோடு அவர் படத்தை இணைத்து வெளியிடுவது “தேசதுரோகம்” என ஒரு சட்டத்தை கொண்டுவரலாம்,

சாதிகளையே நம்பி இருக்கும் தமிழக அரசிற்கு அது சாத்தியமில்லை.

அவர் சாதிகளையும், மதங்களையும் கடந்த மகான் வாழ்க்கை வாழ்ந்தவர், அவரின் உயரம் பெரிது.

அவர் எங்கள் சாதி என மார்தட்டுபவர்கள் கொஞ்சம் சிந்திக்கலாம்,

அப்படி உங்கள் சாதிக்கு அவர் என்ன செய்துவிட்டார்? அல்லது என்ன உழைத்துவிட்டார்? அந்த பள்ளிகளில் எல்லாம் உங்கள் சாதி மட்டும் படித்ததா? அல்லது அவர் கொண்டுவந்த‌ ஆலைகள் எல்லாம் உங்கள் சாதி நிரம்பி வழிந்ததா? அவரின் அமைச்சரவை எல்லாம் உங்கள் சாதிக்காரர்கள் நிரம்பி இருந்தார்களா?

ஒரே மகனாக பெற்றெடுத்த சொந்த அன்னைக்கும், தந்தையில்லா சகோதரிக்கும் கூட ஒன்றும் செய்யாமல் போனதை போலத்தான் உங்கள் சாதிக்கும் அவர் ஒன்றும் செய்யவில்லை.

அப்துல் ரகுமானின் கவிதை உண்டு, மரங்கள் சொல்லுமாம்
” மனிதர்களே
ஆயிரம் சிலுவைகளை நாங்கள் தருகிறோம்
ஒரு யேசுவை நீங்கள் தர தயாரா?”
அது இவர்களுக்கும் பொருந்தும், ஒரு காமராஜரை உருவாக்க உங்களால் முடியுமா?

அக்கவிதையின் படி ஒரே இயேசு, தமிழ்கத்தின் படி ஒரே ஒரு காமராஜர்.

அந்த உயரத்திலே அவரை வைத்துவிடுவோம், அந்த மாமனிதனுக்கு அந்த மரியாதையாவது கொடுப்போம்.
சதாம் உசேனின் பெருமை ஐ.எஸ் அட்டகாசத்தில் தெரிகின்றது, கடாபியின் பெருமை சீரழிந்த லிபியாவில் அப்பட்டமாக தெரிகின்றது, ஸ்டாலினின் அருமை ரஷ்யர்களுக்கு இப்பொழுதுதான் விளங்கிற்று.

அப்படியே சுயநல‌ கட்சிகளின் ஆட்சிகளின் தமிழகத்தின் நிலையில் காமராஜர் எப்பொழுதும் உயர மின்னிகொண்டே இருப்பார்.

அவ்வகையில் அவரை வீழ்த்தியதாக நினைத்துகொள்ளும் கட்சிகள் அவருக்கு செய்த பெரும் உதவி இது.

அவ்வகையில் அவரை வீழ்த்தி தான் சாமர்தியசாலி என நினைத்துகொண்ட கலைஞரும் அதனையே சிந்தித்துகொண்டிருப்பார்.

காமராஜர் ஆட்சி சரியில்லை என்றவர் அவரை விட சிறந்த ஆட்சியினையா கொடுத்தார்? காமராஜர் அடிக்கடி டெல்லிக்கு ஓடுகின்றார் என்றவர், அதன் பின் டெல்லி சென்றதே இல்லையா?

தமிழன் வாழவேண்டும் என கலைஞர் பெரும் ஆசைகொண்டிருப்பாரானால், காலம் வரை காமராஜரை ஆளவிட்டு இவர் பொறுமை காத்திருக்கவேண்டும்.

அப்படியானால் ம.கோ.ரா எனும் தலைவன் உருவாகி இருக்கமாட்டான், இன்றுள்ள தீரா தலைவலியும் கலைஞருக்கு உருவாகி இருக்காது

அவசர அவசரமாக காமராஜரை வீழ்த்தி கலைஞர் செய்த பெரும் தவறுகள் இவை.

தன் நீண்ட வாழ்நாளில் கலைஞர் செய்த பெரும் தவறு பகிரங்கமாக காமராஜரை எதிர்த்தது, வீழ்த்தியது

அந்த தவறுக்குத்தான் 93 வயதிலும் வருத்தபட்டுகொண்டிருக்கின்றார், இதுதான் காமராஜரின் வெற்றி. நிலைத்து நிற்கும் வெற்றி

அய்யா மருத்துவர் ராம்தாஸ் சொன்னாங்க….

பெரியார் ஆசைப்படி பள்ளிகளில் காமராஜர் வாழ்த்துப் பாடுக!: ராமதாஸ்

என்றாவது ஒருநாள்தான் உருப்படியாக பேசுவதாக சபதமெடுத்துள்ள மருத்துவர், இன்று உருப்படியாக பேசி இருக்கின்றார்.

பாடல் எல்லாம் கூட வேண்டாம், எல்லா பள்ளிகளிலும் அவர் படமும், எல்லா மாணவர்கள் மனதில் அவர் வாழ்வும் இடம்பெற்றால் போதுமானது

ஆனாலும் மருத்துவர் அய்யா மகா விவரமானவர், அப்படியும் காமராஜர் வாழ்வினை அரசியல்வாதிகள் பின்பற்றவேண்டும் என சொல்லவில்லை பார்த்தீர்களா?

அங்குதான் அரசியல்வாதியாக அய்யா நிற்கின்றார்

ஒரே தீ தானே…எரியட்டும்

ஆலய‌ தீபத்தில் எரிவதும் தீ தான், குடிசையினை எரிப்பதும் தீ தான் இரண்டும் ஒன்றாகுமா அங்கிள்?

எதனை அணையவிடாமல் பார்ப்பீர்கள்? எதனை அவசராமக அணைப்பீர்கள்

கபாலீஸ்வரர் கோயில் விளக்கில் எரியும் ஜோதியினை உங்கள் கட்சி அலுவலக கூரையில் ஏற்றி இரண்டும் ஜோதிதான், வெளிச்சம்தான் என்றால் ஒப்புகொள்ளவேண்டும் சரியா அங்கிள்? அணைக்க ஓடினால் பிய்த்துவிடுவோம்.

ஒரே தீ தானே…எரியட்டும்

போராட்டம் எது, ஆயுதம் தாங்கிய அதி தீவிரவாதம் எது என்று கூட தெரியாத இவரை எல்லாம் என்ன சொல்வது?

முன்பு ராஜபக்சேவினை ஹிட்லர் என்றான், பின் ஹிட்லரை வழிகாட்டி என்றான். அதாவது இவனுக்கு ராஜபக்சேவும் வழிகாட்டி

இன்று காந்தியும் தீவிரவாதி என்கிறான், அப்படியானால் கோட்சே யார் என்று கேளுங்கள், அவனும் தீவிரவாதி என்பார்.

இன்னும் புத்தனும், இயேசுவும், நபிபெருமானும் , அய்யா வைகுண்டரும், நாராயணகுருவும் தான் பாக்கி, அவர்களை எல்லாம் என்று தீவிரவாதிகள் என சொல்லபோகின்றாரோ?

Stanley Rajan's photo.

பெரும்பாலான காஷ்மீரிகளின் கனவு நாயகன் அயத்துல்லா கோமேனி, அவர்கள் வீட்டுபடங்களை அவர்தான் அலங்கரிப்பார். அமெரிக்காவிற்கு இறுதிவரை சிம்ம சொப்பணமாக இருந்தவர் அவர், அவரை பற்றி ஏதும் சொன்னானா என்றால் சொல்லமாட்டார், அவரை போல புரட்சி செய்யுங்கள் என சொல்வானா நிச்சயம் மாட்டான்.

காரணம் அது வேறுமாதிரி சிக்கலை கொண்டுவரும் என்பது அங்கிளுக்கு தெரியும். தொலைத்துவிடுவார்கள்

இப்பொழுதெல்லாம் அமெரிக்கா காஷ்மீரிலிருந்து விலகுகின்றது, முன்பெல்லாம் அதில் மூன்றாம்நாடு தலையிடவேண்டும் என சொன்ன அது, இப்பொழுதெல்லாம் அது இந்திய உள்நாட்டு பிரச்சினை என ஒதுங்குகின்றது.

அந்த அமெரிக்காவின் அறிக்கை கண்டித்து எவனாவது பேசுவானா என்றால் பேசமாட்டான், காஷ்மீர் இந்தியாவின் பகுதி என அமெரிக்கா எப்படி ஒப்புகொள்ளலாம் என ஒரு சத்தம் வந்திருக்கும்? நிச்சயம் வராது

ஒருவன் ஏன் இந்தியா காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தவில்லை என குதிக்கின்றான். அடேய் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானிடம் உண்டு, இன்னொருபகுதி சீனாவிடம் உண்டு அவர்களும் வரவேண்டும் வாக்குபதிவு நடத்த, ஆனால் பாகிஸ்தான் வராது ஏன்?

பிரிவினையின்போது குஜராத்தின் ஜுனாகத் இஸ்லாமிய மக்கள் நிறைந்தது, இந்தியாவா பாகிஸ்தானா என வாக்கெடுப்பு நடந்தபோது அம்மக்கள் இந்தியா பக்கமே நின்றனர், அன்று ஓடிய பாகிஸ்தான் ஒருகாலமும் வாக்கெடுப்பிற்கு வராது

இன்றைய பாகிஸ்தானில் ஒரு வாக்கெடுப்பு நடத்த சொல்லுங்கள், எத்தனை மாநிலங்கள் அத்துகொண்டு ஓடும் என தெரியும், பலுசிஸ்தான், வர்சிஸ்தான் உட்பட‌

ஆக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் , சீன அக்சாய் சின் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தாமல் (நடத்தி பாருங்கள், தேர்தலே வேண்டாம் என இந்தியாவிற்குள் வந்துவிடுவார்கள்) இந்திய பகுதியில் மட்டும் நடத்து என்றால் எப்படி?

அதாவது அங்கிளுக்கு வெளியே ஆயிரம் சிக்கல், உள்ளே போய் இருந்தால் ஏதாவது சீன் காட்டலாம், ஆனால் பரிதாபம் யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை, அந்த கோபத்தில் ஏதோ பிணற்றிகொண்டிருப்பார். ஈழபிசினசும் தேர்தலுக்கு பின் காற்றுவாங்கிவிட்டது, 6 பாதுகாவலர் கூட சொல்லாமல் ஓடிவிட்டார்கள்.

இவருக்கு பிடித்திருப்பது ஒருவகை வியாதி, மருந்தில்லை என்ன செய்யலாம்?

இந்தோணேசிய தீவுகளில் கொண்டுவிட்டு, இதுதான் உன் அண்ணன் பூமி , சிங்களனும் இந்தியாவும் எல்லாரையும் அழித்தாகிவிட்டது, இனி நீனே ஆண்டுகொள் என விட்டுவிடலாம்.

வெற்றி வெற்றி இனவிடுதலை, புரட்சி வென்றது என ஓலமிட்டு ஆளில்லா காட்டிற்குள் பேசிகொண்டே இருப்பார். அவருக்கென்ன பேசவேண்டும், ஏதாவது சம்பந்தமில்லாமல் பேசிகொண்டே இருக்கவேண்டும்

அதுதான் அவர் பாஷையில் புரட்சி.

விரைவில் சுவாதிக்கு வீரவணக்கம் செலுத்தி, ராம்குமாரினை போராளி என்பார் நமது அங்கிள், அதுதான் சீமானிசம்.

சிலுவையில் அறையபட்டவன் எல்லாம் இயேசுவா? சுட்டுகொல்லபட்டவன் எல்லாம் காந்தியா?

என்னைய்யா உன் சித்தாந்தம்?

நாங்க நெருப்புடா நெருங்குடா பாப்போம்…

புலிகளை ஒழித்த அமெரிக்காவில் இருந்துகொண்டு, தடை விதித்த ஐரோப்பாவில் இருந்துகொண்டு, அங்கிள் சைமனை விரட்டிய கனடாவில் இருந்துகொண்டு, ஈழ அகதிகளை விரட்டும் ஆஸ்திரேலியாவில் இருந்துகொண்டு

புலிகளை அழிக்க சொல்லி சிக்னல் காட்டிய நார்வேயில் இருந்துகொண்டும்

இன்னும் புலிபெயரை சொன்னாலே பிடித்து இலங்கையிடம் ஒப்படைக்கும் கிழக்காசியநாடுகளில் இருந்துகொண்டு கவனமாக இந்தியாவினை திட்டிகொண்டிருக்கின்றார்கள்.

அரேபிய நாடுகளும் சிங்கள அரசுக்கு செய்த உதவிகள் கொஞ்சமல்ல, அங்கிருந்தும் இந்தியாவினைத்தான் சீமானிய குஞ்சுகள் சாடுகின்றன‌.

அவ்வளவு தைரியம் இருந்தால் அவர்களை பார்த்து “ஏய் எமது எதிரிகளே..உங்கள் நாடு சிதறட்டும், உடையட்டும், ஈழம் மலருட்டும்” என தோள்தட்டலாம் அல்லவா?

செய்யமாட்டார்கள், செய்தால் என்ன நடக்கும் என அவர்களுக்கு தெரியும்

அட இலங்கையினையாவது பேசலாம் அல்லவா? ம்ஹூம் எதிர்காலத்தில் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கிவிட கூடாது எனும் முன் ஜாக்கிரதையும் இருக்கின்றது.

இந்தியாவினை சாடுகின்றார்கள். காஷ்மீரில் ஒன்று என்றால் கடும் மகிழ்ச்சி. காஷ்மீர் பிரியுமாம், அப்படியே வடகிழக்கு மாகாணம் பிரியுமாம், தமிழ்நாடு பிரியுமாம், ஈழம் மலருமாம்.

அதனையே அமெரிக்காவில் கருப்பின இளைஞன் சுட்டுகொல்லபட்டபொழுது, பிரான்சில் தீவிரவாதிகள் தாக்கும்பொழுது சொன்னால் என்ன?

தென்சீன கடலிலிருந்து விரட்டபட்ட சீனாவினை பார்த்து சொன்னால் என்ன? ஹாங்காங்கினை இன்னும் தன் முழுகட்டுபாட்டில் கொண்டுவர முடியாது தவிக்கும் சீனாவிடம் இப்படி ஈழமும் ஆகும் என சொன்னால் என்ன?

அடிக்கடி மோதிகொள்ளும் அரேபிய குழுக்களை பார்த்து சொன்னால் என்ன? சொல்ல முடியுமா?

உய்க்குர் தீவிரவாத தலைவர் போராளி என்றும், தலாய்லாமா போராளி என்றும் சீன தூதரகத்தில் ஒரு மனுகொடுங்கள் பார்க்கலாம்.

யாருக்குத்தான் கொள்கை இல்லை, இதோ ஐஎஸ் இயக்கத்திற்கும் உண்டு, துருக்கி அரசை கண்டித்து போராளி அல்பத்தாதி வாழ்க என சொல்லமுடியுமா?

முடியாதல்லவா? பின்னர் ஏன் இந்தியாவினை மட்டும் சாடுகின்றீர்கள்

அடேய் மங்கி பாய்ஸ். எத்தனை கலவரங்களை, களரிகளை தாண்டி சிலிர்த்துநிற்கும் தேசம் இந்த இந்தியா, உடையுமா? நடக்குமா?

# நாங்க நெருப்புடா நெருங்குடா பாப்போம்…

# போராளி கல்பனா அக்கா ஒப்புகொண்ட படி நீங்கள் பொசுங்குனா பொசுங்குற கூட்டம் , வரலாறு அதனைத்தான் சொல்கிறது.

யாருக்கும் நியாயமில்லை, காவிரியில் நீருமில்லை..

ஆனி மாதம் முடிந்து ஆடி தொடங்கபோகின்றது, இன்னும் மேட்டூர் அணை திறந்த செய்திவரவில்லை. கொஞ்ச வருடங்களாகவே அணை திறக்கபடவுமில்லை சத்தமுமில்லை.

அந்த வழக்கு அங்கே மாற்றபட்டபின் எல்லாம் அமைதி, எவனோ ஒருவர் காவேரியினை வைத்துகொள், அம்மாவினை விடுதலை செய் என வேலூர் பக்கம் பேனர் வைத்த காமெடி எல்லாம் நடந்தது, முதல் தமிழின துரோகி அவர்தான்.

இதே கலைஞர் அரசு என்றால் எல்லா விவசாய சங்கங்களும் கொடிபிடிக்கும், எதிர்கட்சிகள் எல்லாம் விசிலடிக்கும், வைகோ, ராமதாஸ், திருமா எல்லாம் காவேரி கரையில் நெல் பயிரிட்டிருக்கும் விவசாயிகளாக கதறிதுடிப்பார்கள்.

சீமானோ என் பாட்டன அருள்மொழிதேவன் காலத்தில்…என கதறி துடிப்பார்.

ஜெயலலிதா என் ஆட்சியின் நான் எடுத்த நடவடிக்கைகள் என பட்டியலிடுவார்

இவர்கள் இங்கு குதிக்க, அப்பக்கம் கன்னட சீமான் வாட்டாள் நாகராஜ் காவேரி அணைகளை சுற்றி குச்சிபுடி நடனமாடுவார், ஏக அழிச்சாட்டியம் நடக்கும். இன்றோ சத்தமில்லை

இந்த ஆனி,ஆடி மாதத்தில் காவேரி வறண்டு கிடக்க கூடாது, அப்படி கிடந்தாலும் இந்த அமைதி கூடாது.

ஆச்சரியமாக விவசாய சங்கங்களும் மகா அமைதி, முல்லை பெரியாற்று வழக்கின் வெற்றிக்கு அவைகள் பெரும் விவசாயிகளான அமைச்சர் பெருமக்களை வைத்து நடந்த்திய வெற்றிவிழாவிலிருந்து அவைகள் இன்னும் வெளிவரவில்லை

ஆக கட்சிகள் மட்டுமல்ல, பல சங்கங்கள், விவசாய அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், சூழியல் அமைப்புக்கள் எல்லாம் கூட அம்மா ஆட்சியில் ஒருவித அரசியலும், கலைஞர் ஆட்சியில் ஒருவித அரசியலும்தான் செய்கின்றன‌

யாருக்கும் நியாயமில்லை காவிரியில் நீருமில்லை..

எமது பயமெல்லாம் இனி காவேரி நீரும் தமிழக அஞ்சலகங்களில் கிடைக்கும் என்ற அறிவிப்பு வந்துவிட கூடாது என்பதுதான்,

வந்துகொண்டிருக்கும் அறிவிப்புகளை கண்டால் பயம் இன்னும் கூடுகின்றது

வரலாற்று கொடும் மத திரிபுகள்

அடிக்கடி ஒருவித வரலாற்று கொடும் திரிபுகள் வரும், இப்பக்கம் இயேசு இந்தியாவில் பிறந்தார் என்பார்கள், இயேசு புத்தமத விசுவாசி என்பார்கள், விடுவார்களா கிறிஸ்தவர்கள்? இந்தியாவே ஒருகாலத்தில் கிறிஸ்தவநாடு தெரியுமா? என போட்டு தாக்குவார்கள், எப்படி என கேட்டால் அலெக்ஸாண்டர் வந்தபொழுது அப்படித்தான் இருந்தது என்பார்கள்

அலெக்ஸாண்டர் காலத்தில் இயேசுவே பிறக்கவில்லை என்றால், நீ மட்டும் பிறந்தாயோ போடா என்பார்கள், மகா விசித்திரமானவர்கள்.

நெடும் காலமாகவே தாமஸ் என்ற இயேசுவின் சீடர் இந்தியா வந்தார் அல்லது வரவில்லை என சர்ர்சை உண்டு, எப்படியோ சென்னையில் அவர் கொல்லபட்டார், அவர் உடல் சாந்தோமில் உள்ளது என தற்போது ஒரு நம்பிக்கை

ஆனால் ஒரு நண்பர் திருவள்ளுவர்தான் அந்த தாமஸ் என்ற தொமையார் என அதிரடி காட்டுகின்றார், அய்ய்யோ கொடுமை, இன்னுமா இந்த பூமி சுற்றவேண்டும்???

இயேசுவிற்கு பின்னான காலத்தில் பரிசுத்த ஆவி இயேசுவின் சீடர்களை மேற்கு நோக்கித்தான் செல்ல பணித்தது என்பது பைபிள் வரி, இன்னொன்று தாமஸ் எழுதிய நற்செய்தி ஒன்று உண்டு, பல சர்சைகளும் அதிலுண்டு, அதனால் அதனையும் அதோடு அவரைபற்றிய தகவலையும் பைபிளிலிருந்து எடுத்துவிட்டார்கள்.

Stanley Rajan's photo.

திருவள்ளுவர்

Stanley Rajan's photo.

புனித தோமைய்யர்

இயேசுவின் காலத்திற்கு பின் அவர் எங்கு சென்றார் என பைபிள் ஒன்றும் சொல்வதுமில்லை, அவர் எந்த கடிதமும் யாருக்கும் அதாவது சபைக்கோ மற்ற சீடர்களுக்கோ எழுதியதாக தகவலுமில்லை.

இன்று நேற்று அல்ல, அரேபிய கேரள தொடர்புகள் நெடுங்கால தொன்மை வாய்ந்தவை, சாலமோன் அரசர் காலத்திலே அது பிரசித்தி பெற்றது, ரோமையர் ஆட்சியில் பாலஸ்தீன் பந்தாடபட்டபொழுது பெரும் யூதர்கள் கொச்சிக்கு வந்தார்கள் என்றால் எப்படிபட்ட தொடர்பு இருந்திருக்கவேண்டும்?

கேரள கொச்சிவாழ் யூதர்களுக்கும் பாலஸ்தீன யூதர்களுக்கும் போக்குவரத்தும் அன்றே இருந்தது, உண்மையில் என்ன நடந்திருக்கலாம்?,

முதலில் கிறிஸ்தவம் யூதர்களுக்குத்தான் போதிக்கபட்டது, அப்படி கொச்சி யூதர்களை தேடி வந்த தாமஸின் சீடர்கள் பரப்பிய கிறிஸ்தவம் தாமஸ் கிறிஸ்தவம் என அறியபட்டிருக்கலாம், காரணம் இன்றும் கேரளாவில் சிரியன் கிறிஸ்தவம் என பல பிரிவுகள் உண்டு, அதனால் இவர் சீடர்கள் அறிவித்த கிறிஸ்தவம் தாமஸ் கிறிஸ்தவம் என அறியபட்டிருக்கலாம்

இன்னொன்று தாமஸ் ஆப்கனில் பிரசிங்கித்ததாகவும், அவர் இறந்தபின் அவரின் சீடர்கள் அவர் எலும்பினை எடுத்துசென்றதாகவும் ஒரு தகவல் உண்டு.

ஆக தாமஸ் இந்தியா வந்தாரா? என்பதே பெரும் சர்ச்சை, அவரின் சீடர் யாரும் வந்திருக்கலாம். இதில் அவர் திருவள்ளுவர் என்பது எப்படி பொருந்தும்?

“இந்திரனே சாலுங் கரி” “மாலடி சேர்ந்தார்” “எழுபிறப்பும் ஏமாப்புடைத்து” போன்ற திருக்குறள் வரிகள் சொல்வதென்ன? இன்னும் ஏராளமான இந்துமத அடையாளங்கள் அதில் உண்டு. சமண தாக்கமும் உண்டு எனினும் அது சொல்லும் போதனைகளில் அது இந்து மத நூலே.

பைபிளின் சீரக் ஆகமம், இன்னும் உலகின் பல ஞான நூல்களும், திருகுறளும் ஒரே வகையிலான ஞான ஓசைகளை ஒலிப்பதை கேட்கலாம், இவை எல்லாம் ஒரு பெரும் உயர்ந்த ஞான வெளிப்பாடே அன்றி வேறு அல்ல.

இப்படி திருவள்ளுவர்தான் தாமஸ் என்றால், வாசுகி யார்? தாமஸ் திருமணம் செய்தவரா? அட பதர்களா, வள்ளுவன் வரலாரே இன்னும் சரியாக தெரியாதே, அவன் தெற்கே கன்னியாகுமரி பக்கம் வசித்தவன் எனும் வாதம் வேறு உண்டே, இதில் அவன் எப்படி மயிலாப்பூர் வாசிஆனார், அவன் எப்படி தோமையார் ஆனார்?

தாமஸ் என்பவன் யார்? அங்கே பாலஸ்தீனத்தில் கடற்கரையில் மீன் பிடித்துகொண்டும், அவ்வப்போது ரோமையரை எதிர்த்து கலகம் செய்த ஒரு கலகக்காரன், யேசுவினை சந்தித்தபின் அவன் மாறினான்.

அவன் எப்படி பூனூல் சூடும் தமிழ் பிராமணாக மாற முடியும்?

அங்கிள் சைமனை போல பலர் கிளம்புவார்கள், முன்பு தேவகலா என்பவர் இப்படித்தான் இந்தியா தோமா வழி கிறிஸ்தவநாடு என ஒன்றை எழுதி வாங்கிகட்டினார், அது சாத்தியமே இல்லை என்பது தெளிவாகிவிட்டது

இடையில் மயிலாப்பூரில் கண்டெடுக்கபட்ட செப்பு கிறிஸ்தவ ஏடுகள் மிக தொன்மையானவை என பரபரப்பினை ஏற்படுத்தின, ஆனால் அது போலி என்றபொழுது மொத்த கிறிஸ்துவ துறவிகளும் மகா அமைதி ஆனார்கள்.

இது இவர்களாக கிளப்பிவிடும் அபத்தங்கள், கொஞ்சமேனும் யோசிக்காத தன்மையின் வெளிப்பாடுகள்

எப்பொழுதும் ஞானிகள் ஒரேபோல் யோசிப்பார்கள், இயேசு சொன்னார் “குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழமாட்டார்களா?” அதாவது நல்ல குரு இல்லாதவன் எப்படி நல்வழி அடையமுடியும் என்பதன் உவமை அது.

அதனை நம் திருமூலர் இப்படி சொன்னார்

”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே”

பாடலின் அர்த்தம் புரிகின்றதா? இல்லாவிட்டால் தமிழ்படித்துவிட்டு வரலாம், புரியும்.

இயேசுவும், திருமூலரும் ஒரே உவமையினை கையாண்டிருக்கின்றார்கள், திருமூலரின் சிவபக்தி சொல்லி தெரியவேண்டியதில்லை

ஆனால் இந்த விளம்பர கிறிஸ்தவர்களிடம் இதனை சொல்லுங்கள், அப்படியா? ஒருவேளை திருமூலர் இயேசுவின் சீடர் அருளப்பராக இருக்கலாம் அல்லவா என கண்ணை சிமிட்டுவார்கள்.

கிறிஸ்தவம் வேறு பாதை, இந்துமதம் வேறுபாதை, திருகுறள் இந்துமதமும், சமண தாக்கமும் நிறைந்த ஒரு ஞான நூல்

அதனை விட்டுவிட்டு இந்தியா வராத தாமஸை திருவள்ளுவர் என் சொல்வீர்களாயின், கொஞ்சநாளில் வள்ளுவர் கோட்டமும், குமரி கடற்கரையும் “எழுப்புதல் கூட்டம்”. “ஆவியில் அவிய வைத்தல் கூட்டம்” என பெரும் அழிச்சாட்டியத்தில் சிக்கும், பின்பு கடலுக்கு கூட பொறுக்காது ஜாக்கிரதை

நானும் கிறிஸ்தவன் தான், அதற்காக இம்மாதிரியான பெரும் பொய்களை அங்கீரித்துதான் நான் கிறிஸ்தவ “ஊழியம்” செய்யமுடியுமென்றால் நான் கிறிஸ்தவனாகவே இருக்கவே முடியாது, கிறிஸ்து யேசு அதனை விரும்புவதே இல்லை.

இந்த அட்டகாசங்களை ஒரு கிறிஸ்தவனாக கண்டிக்கின்றேன், பெருமகன் யேசு பாணியில் சொல்வதென்றால் “இப்படி எல்லாம் கிளப்பிவிடுபவர்களே உங்களுக்கு அய்யோ கேடு