தெரசா மே …..புதிய இங்கிலாந்து பிரதமர்

டேவிட் கேமரூன் ராஜினாவினை தொடர்ந்தது அரசியல்வாதி தெரசா மே பிரிட்டன் பிரதமராக‌ பதவி ஏற்பு, இதனை தொடர்ந்து ஆபாச பட நடிகையான தெரசா மே என்பவருக்கு தவறுதலாக வாழ்த்துக்கள் குவிகின்றன.

அவரோ பெயர்தான் ஒன்று, நான் வேறு என சமாளித்துகொண்டிருந்தாலும் உலகம் விடுவதாக இல்லை, நீங்கள்தான், நீங்களே தான் என வாழ்த்தி கொண்டிருக்கின்றனர்,

அவர் மறுக்கவே, சிலர் அப்படியா? அதற்கென்ன அடுத்த பிரதமராக ஆக வாழ்த்துக்கள் என வாழ்த்திகொண்டே இருக்கின்றனராம்.

நல்லவேளையாக ராஜபக்சே எனும் பெயருடைய யாரும் தமிழகத்தில் இல்லை, இல்லாவிட்டால் ராஜபக்சேவினை அடித்து நொறுக்கினார் சீமான், வாழ்த்துக்கள் என கிளம்பிவிடுவார்கள்

ஆனாலும் அரசியல்வாதிக்கும், ஆபாச பட நடிகைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் உலகெல்லாம் இருக்கின்றார்கள்,

ஆம் உலகெங்கிலும்.

வங்கக் கடலினிலே மீன்கள் பிடிப்போம்..

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் வாரமிருமுறை மீன் பிடித்து கொள்ளும் இலங்கை அரசின் திட்டத்திற்கு யாழ்பாண மீனவர்கள் கடும் எதிர்ப்பு போராட்டம் , வட இலங்கையில் பதற்றம்

அங்கிள் சைமன் வேர் ஆர் யூ, எங்கிருந்தாலும் உங்கள் முகத்தில் நீங்களே கரிபூசிகொள்வது நல்லது

இந்த திருமுருகன் காந்தி, வைகோ, நெடுமாறன் இன்னபிற தமிழ்தேசிய வியாதிகள் எல்லாம் எங்கே போய் தொலைந்தீர்கள்? இந்த ஈழத்தவருக்காய் இந்திய தேசியகொடியினை எரித்த அந்த துரோகி எங்கே? பிடியுங்கள்.

அடேய் பொய்யர்களா?, அங்கே நோக்குங்கள் எவனாவது தமிழக மீனவர் என சொல்கின்றானா? எல்லோரும் இந்திய மீனவர் என நம்மை குறிக்க, நீங்களோ தொப்புள் கொடி, இன உறவு, தமிழினம் என சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கின்றீர்கள்.

அவர்கள் இலங்கையார்களாக இருக்கின்றார்கள், அதனை போல இங்குள்ள தமிழர்களை இந்தியராக இருக்கவிடுங்கள்.

(படத்தை பாருங்கள், நமது மீனவர்களை கைது செய்ய சொல்லி இலங்கை அரசிற்கு கோரிக்கை வைக்கின்றார்கள் இவர்களுக்காகத்தான் இந்த தேசவிரோத கும்பல் கத்திகொண்டிருக்கின்றது )

தனி தமிழ்நாடு அமைந்தால் ராமேஸ்வர மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கலாம் என அளந்துவிட்டவன், இதோ பார் யார் தடுக்கின்றார்கள், உண்மை பிரச்சினை என்ன?

நமது மீன்பிடிக்கும் வளங்களுக்கு முன்னால் அவர்களால் நிற்கமுடியவில்லை, பெரும் எண்ணிக்கை நம்மவர்களது, அந்த அச்சமே அவர்களுக்கு காரணம், ஆழ்கடல் மீன்பிடிக்கு தாவாமல் இது தீராது, முன்பே சொன்னோம்

உண்மையில் இது மத்திய அரசின் பெருவெற்றி, ஜெயாவோ கலைஞரோ இதனை செய்யவில்லை, மோடி அரசின் அட்டகாசமான வெற்றி இது, இலங்கையினை பணிய வைத்திருக்கின்றார்கள். கொண்டாடபடவேண்டிய செய்தி, ஆனால் சத்தமில்லை.

டெல்லி எந்நாளும் தமிழருக்கு எதிரி என சொன்னவன் எல்லாம் எங்கே? இதெற்கெல்லாம் ஒருவனும் வாய்திறக்கமட்டான்.

காரணம் தமிழக ஊடகங்கள் அப்படி, தேசிய எண்ணங்களை வளரவிடாது அவை கிடக்கட்டும்

இந்த பொன்னார், தமிழிசையாவது இதனை தமிழகத்திற்கு எடுத்துசொல்லலாம் அல்லவா? அவர் குஷ்பூவினை கண்டித்து கொண்டிருக்கின்றார்,

தமிழகத்தில் பாஜக வளராமல் போவது இப்படித்தான். பின்னர் டெப்பாசிட் போகாமல் என்ன செய்யும்?

மிஸ்டர் தமிழ்தேசிய வியாதிஸ், ஒழுங்காக ஈழத்து யாழ்பாண தமிழ் மீனவர்களை கண்டிக்கின்றோம் என அறிக்கைவிட்டுவிட்டு ஓடிவிடுங்கள், சொல்லாமல் கூட ஓடலாம். அப்படி அறிக்கை விட்டால் ஈழதமிழருக்காய் உங்கள் பொய்யான ஓலம் கேட்டு செத்த முத்துகுமார் முதல் செங்கொடி வரை எல்லோர் ஆன்மாவிற்கும் மன்னிப்பு கேட்டுவிட்டு அறிக்கை படியுங்கள்.

இல்லாவிட்டால் ராமேஸ்வர மீனவர்கள் பெரும் கூட்டம்போட்டு, தமிழனுக்கு கிடைக்கும் வாய்ப்பினை தடுக்கும் யாழ்பாணத்தானை நீங்கள் கண்டிக்காததை சந்தேக கண்ணோடு பார்ப்பார்கள்

அப்படி நீங்கள் தமிழக மீனவர் துரோகி ஆவீர்கள், பின் உங்கள் உண்மை சுயரூபமான தமிழின துரோக முகம் வெளிப்படும்

இப்போதைக்கு தமிழக‌ மீனவ துரோகிகள் பட்டம் உங்களுக்கு வழங்கபட காத்துகொண்டிருக்கின்றது.

எப்படியோ ராமேஸ்வரம் பகுதியில் மோடிக்கு ஒரு வாக்குவங்கி திறக்கபட வாய்பிருக்கின்றது,

பாரத பிரதமராக செயல்பட்ட மோடிக்கு வாழ்த்துக்கள்.

இதனை மட்டும் செயல்படுத்திவிட்டு ராமேஸ்வரம் வாருங்கள்அன்று மிகபெரும் மக்கள் திரள் உங்களுக்காக காத்திருக்கும், நன்றியோடு

வந்தே மாதரம்.

இலங்கையில் இட ஒதுக்கீடு

ஈழ பிரச்சினைபற்றி பேசாதே, எல்லாவற்றையும் பொறுத்துகொண்டோம், ஆனால் தரபடுத்துதல் எனும் சட்டத்தை மட்டும் பொறுத்துகொள்ளமுடியவில்லை

அதாவது சிங்கள மாணவன் 200 புள்ளிகள் எடுத்தால் நாங்கள் 285 புள்ளிகள் எடுக்கவேண்டும், அரசு பணிகளிளிலும் சிங்களருக்கு அதிக வாய்ப்பு 60% மேல் கொடுக்கின்றார்கள், திறமைக்குத்தானே மதிப்புகொடுக்கவேண்டும்?, இது நியாயமா? தர்மமா? சொல்

இதனால் தங்கள் எதிர்காலம் பாதிக்கபட்டதாக கருதித்தான் ஈழ மாணவர்கள் ஆயுதம் தூக்கி எல்லாம் நாசமாயிற்று, இப்படி ஓரவஞ்சனை செய்யும் சிங்களனிடம் நாங்கள் என்ன எதிர்பார்க்கமுடியும் சொல்?

நான் சொன்னேன், அங்கே தரபடுத்துதல் என்றால் எங்கள் நாட்டில் இடஒதுக்கீடு, கல்வியில் தாழ்ந்துகிடக்கும் மக்களை இதனைவிட்டால் தூக்கிவிட என்ன வழி இருக்கின்றது?

எங்கள் நாட்டில் கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை ஆதரித்துவிட்டு , உங்கள் நாட்டில் கண்டிக்க எமக்கு என்ன உரிமை இருக்கின்றது,
சரி மலையக தமிழர் ஈழத்தோடு இணைந்த தனிஈழம் ஒருவேளை உருவாக்கபட்டிருந்தால் அம்மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பீர்களா

காரணம் அவர்கள் வறியவர்கள், பின் தங்கியவர்கள். சபிக்கபட்ட வாழ்வு அவர்களுடையது. , அவர்கள் சக உதிரம் , அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கபட்டிருக்குமா? சம்மதித்திருப்பீர்களா என்றேன்

நீ துரோகி, தமிழின துரோகி . நீ எல்லாம் சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு என சொல்லும் வந்தேறி பெரியார் கும்பலை சார்ந்தவன், உனக்கு ஒன்றும் புரியாது, தமிழன் வலி புரியாது என சொல்லி ஓடிவிட்டது

இதே தான் இங்குள்ள உணர்வாளர்களும், இந்திய இட ஒதுக்கீடு மிக சரி, மதிப்பெண் எல்லாம் மண்ணாங்கட்டி, தாழ கிடப்பவன் எத்தனை மதிப்பெண் எடுத்தால் என்ன? அவனுக்கு மேற்கல்வி வேண்டும், வேலை வேண்டும்.

ஆனால் சிங்கள இட ஒதுக்கீடு பெரும் தவறு, மதிப்பெண்தான் முக்கியம் இல்லாவிட்டால் ஓர‌வஞ்சனை, இனதுரோகம்.

திரை உலகமும் அரசியலும்

தமிழ் திரையுலகில் எத்தனையோ பெரும் இயக்குநர்கள் இருந்தார்கள், இன்னமும் இருக்கின்றார்கள். அவர்களின் முத்திரை மகத்தானது, காலத்திற்கும் நிற்க கூடியது

அவர்கள் சினிமாவினை சினிமாவாக பார்த்தார்கள், சொல்ல வந்த சமூக யதார்த்தத்தை சினிமாவில் மட்டும் காட்டினார்கள், வெளியே மூச், ஒரு சத்தம் இருக்காது.

பீம்சிங், பாலு மகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் போன்றோர் அதில் முக்கியமானவர்கள், எங்காவது இவர்கள் சர்ச்சைகுரிய பேச்சுக்கள் பேசினார்கள் என காணமுடியுமா?

ஆனால் ஒருபடம் எடுப்பதற்குள் இன்றுள்ள இயக்குநர்கள் போடும் ஆட்டமும், பேசும் பேச்சும் சகிக்கவில்லை.

சீமானின் அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல, சிறுவயதிலே புனேக்கு படிக்கவந்த பாலுமகேந்திரா ஈழபோராளி என்றும் சைக்கிளில் சென்று குண்டு வீசியவர் என்றும் அவர் இறந்த அன்றே (இறந்த பின்புதானே புளுக முடியும் ) புளுகியவர் சீமான், அவர் அப்படித்தான்.

இன்று வெற்றிமாறன், பா.ரஞ்சித் போன்றவர்கள் எல்லாம் பேசும் பேச்சுக்கள் என்னவோ அவர்கள் ஹாலிவுட் ரேஞ்சிக்கு சாதித்துவிட்டதை போல இருக்கின்றது

அதுவும் பா.ரஞ்சித் எடுத்தது 2 படம்தான், அதுவும் வெற்றி என சொல்லமுடியாது, மூன்றாம் படம்தான் கபாலி, பாபா, குசேலன் எல்லாம் ரஜினி படங்கள்தான்

அதற்குள் இவர் பெரும் புரட்சியாளர் போல தலித் அரசியல் பேசுகின்றார், அவருக்கு ஆமாம் போட ஒரு கூட்டம். அவர் என்னமோ அம்பேத்கர் என ஒருவன் சொல்லிகொண்டிருக்கின்றான்.

சுஜாதாவிற்கு அடுத்து தமிழக கண்ட பெரும் அறிவாளியும், எழுத்தாளருமான மதன் அவர்களிடம் இவர் உரையாடியபோதே அது அப்பட்டமாக தெரிந்தது, மதனின் உயரம் நிச்சயம் மகா உயர்ந்தது

பெரியாரும், அம்பேத்கரும் நாடகங்களிலும், சினிமாவிலுமா அரசியல் பேசினர், திருமாவளவன், மாயாவதி, கன்சிராம் எல்லாம் சினிமாவிலா பேசினார்கள்?

ஏகபட்ட புரட்சியாளர்களை கண்டுவிட்ட சினிமாவில் கண்டுவிட்ட தமிழகம், இப்பொழுது தலித் புரட்சியாளரை சினிமாவில் கண்டுகொண்டிருக்கின்றது.

தலித் மக்களுக்கான உரிமைகளை சினிமாவில்தான் பெற்றுகொடுக்க முடியுமா?

எத்தனை பிரபல இயக்குநர்கள் உண்டு, மத ரீதியான, சாதி ரீதியான மேடைகளில் அவர்களை பார்ததுண்டா?

(பாரதிராஜாவினை விடுங்கள், சிஷ்யன் சீமானை கண்டே முகத்தை மூடிகொண்டிருக்கின்றார்)

இளையராஜா என்றாவது சாதி அரசியல் பேசி பார்த்துண்டா, அவர் செய்யாத சாதனைகளா?

ஆஸ்கர் வரை வென்றுவிட்ட ஏ.ஆர் ரகுமான் என்றாவது மத அரசியல் பேசி பார்ததுண்டா, அம்மாதிரியான மேடைகளில் அவரை கண்டதுண்டா?

எத்தனை கோடீஸ்வர தயாரிப்பாளர்கள் ஏவிஎம் போல இருந்தார்கள், எத்தனை இயக்குநர்களை உருவாக்கியவர்கள் அவர்கள் , அவர்கள் எல்லாம் ஒருவார்த்தை பேசி யாரும் பார்த்ததுண்டா?

எத்தனை கபாலியும் வரலாம், பாஷா வரலாம்

ஆனால் பாவ மன்னிப்பு, பாலும் பழமும், முள்ளும் மலரும், முந்தானை முடிச்சு, அவள் அப்படித்தான், மூன்றாம் பிறை, உதிரிபூக்கள், அஞ்சலி, நாயகன், சுந்தர காண்டம் முதல் மரியாதை போன்ற முத்துக்கள் வருமா?

ஒரு காலமும் வராது, இவர்களால் அப்படியான படங்களை ஒரு காலமும் கொடுக்கவும் முடியாது

கொடுத்தவர்கள் ஒருகாலமும் வாய்திறந்து பேசுவதுமில்லை

அமைதியான திறமைசாலிகள்தான் தமிழ்சினிமாவில் காலம் காலமாக நிலைத்திருக்கின்றார்கள், முத்திரையிட்டார்கள்

கால காற்றினால் உயரபறக்கும் துரும்பு, நிலைத்து நிற்கும் கோபுர கலசத்தின் மீது பறப்பதால் உயர்ந்தது ஆகிவிடாது.

நிறைகுடம் நீர் தளும்பல் இல்.

அறுவடை நாள் : 1986 தமிழ் திரைப்படம்

தமிழ் திரையுலகின் மிக சிறந்தபடங்களில் ஒன்று அறுவடை நாள், யதார்த்தமான வில்லன், அழகான நெல்லை வயல்கள், மனதை கதைக்குள் கொண்டுவரும் இளையராஜாவின் மாய இசை என சகலமும் கலந்த அற்புதமான படம் அது.

aruvadai

நாயகி பல்லவிக்கு அன்றே 40 வயது இருப்பதற்கான உடல்வாக்கு எனினும் முகத்தில் தெரியவில்லை, அவரும் அழகாகத்தான் தெரிந்தார், வடிவுக்கரசி நடிப்புக்கும் அரசி.

கதை என்ன? ஒரு கொடூர பண்ணையார், அவருக்கு வெள்ளந்தியான மகன். ஆனால் பண்ணையார் தன் கண்ணசைவில் மகனை ஆட்டிவைப்பவர், மகன் சொந்தமாக‌ ஒரு பருக்கை கூட உண்ணமுடியாது. இதில் ஒரு சீரியசான பெண்ணின் காதல் புகுந்து எல்லாம் சோகம், சாவு, அழுகை. உருக்கமான படம்.

இந்த உருக்கமான கதையினை வேறுமாதிரி சொன்னால், அதாவது கதையினை அப்படியே வைத்து கேரக்டர்களின் குணத்தை மட்டும் மாற்றினால்,

பண்ணையாரை பொறுப்புள்ள அப்பாவாக மாற்றி, ஹீரோயினை அறுவடை நாள் ஹீரோ போல வெள்ளந்தியாக மாற்றி, எல்லோரையும் நல்லவர்களாக காட்டினால் பாசம், சிரிப்பு, காமெடி வகையறா

சந்தோஷ் சுப்பிரமணியம் படம் ரெடி.

இப்படி கதைக்குள் கதை உருவி காவியம் படைக்கின்றது, தமிழ் கூறும் நல்லுலகம்.

காஷ்மீர்……..

காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பா சரி, ஆனால் முதலில் செய்யவேண்டியது என்ன?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்திவிட்டல்லாவா இங்கு வரவேண்டும்.

அங்கெல்லா அப்படி வாய்திறக்க முடியுமா விடுவார்களா?

காஷ்மீர் விடுதலை என்றால் அப்பகுதி காஷ்மீர் எல்லாம் பாக்கிஸ்தானுடம், சினாவுடனும் இருக்கட்டும், இந்திய காஷ்மீர் மட்டும் விடுதலைபெறட்டும் என்றால் எப்படி?

குஜராத்தின் ஜுனாகத் பகுதியில் முன்பு வாக்கெடுப்பு நடந்தது இஸ்லாமிய பகுதிதான், ஆனால் இந்தியாவோடு இணைந்தனர், அன்று ஓடிய பாகிஸ்தான் அதன் பின் வாக்கெடுப்பிற்கு வரவே இல்லை

ஆக காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த, பாகிஸ்தான் முதலில் ஆசாத் காஷ்மீரை விட்டு வெளியேறட்டும், சீனா அக்சாய் சின்னை விட்டு வெளியேறட்டும், அதன் பின் பேசலாம்

நடக்குமா?

அவர்கள் அப்பகுதி காஷ்மீரை அடக்கி ஆக்கி வைத்திருக்கும் சீரழிவிற்கு இந்தியா காஷ்மீர் எவ்வளவு பரவாயில்லை

இந்த தூண்டலுக்கு பெரும் காரணம் பாகிஸ்தான், அதுதான் முதல் காரணம்

அது காமராசர் காலம்… ஓர் நினைவலை

பீஷ்மரின் வரலாற்றினை சொல்லும்பொழுது அவரை வீழ்த்திய அர்ச்சுணனின் பெயர் வராமல் முடிக்கமுடியாது.

காமராஜரை பற்றி சொல்லும்போது அவரை பாடாய்படுத்திய கலைஞரைபற்றி சொல்லாமல் எப்படி தவிர்க்கமுடியும்?

அண்ணா பொதுவாக காங்கிரசை சாடினார், தனிபட்ட முறையில் காமராஜரை அவர் ஒருவார்த்தை சொன்னதில்லை, இவைதான் திராவிட கொள்கைகள் என எதனையோ சொல்லிகொண்டிருந்தார்.

ஆனால் தனிபட்டமுறையில் காமராஜரை குறிவைத்து அரசியல் செய்தவர் கலைஞர், காமராஜரை அவர் வசைபாடியது கொஞ்சமல்ல, எவ்வளவு கீழ்தரமாக எல்லாம் விமர்சித்தார் என்பது வரலாற்றில் பதிந்த ஒன்று.

முதல்வரோ பக்தவச்சலம், ஆனால் கலைஞர் அக்காலமெல்லாம் கேவலமாக வசைபாடிகொண்டிருந்தது காமராஜரை, காரணம் ஏழைபங்காளன் எனும் காமராஜரின் இமேஜினை அடித்து நொறுக்கினால், மிக எளிதாக ஆட்சியினை கைபற்றலாம் எனும் தந்திரம், அதுதான் அதேதான்.

எம்ஜிஆரை சுட்டது ராதா, இருவருமே அன்று கலைஞரின் நண்பர்கள். ஆனால் காமராஜர் ஆட்சியில் சுடபட்ட எம்ஜிஆர் என பெரும் புரட்டினை வெளியிட்டு அரசியல் லாபாம் பார்த்தது யார்? பரங்கிமலை தொகுதியில் அப்படித்தான் எம்ஜிஆர் வென்றார், கழகம் ஆட்சிக்கு வந்தது.

இந்த வெற்றிக்கு பரங்கிமலை ஜோதி தியேட்டரில் வரும் லாபம் எவ்வளவோ பரவாயில்லை.

விருதுநகரில் காமராஜரை எதிர்க்கவேண்டாம் என அண்ணா சொல்லியும் பணபெட்டியோடு ஓடியது யார்? வெற்றிவிழா கொண்டாடியது யார்?

அண்ணாவிற்கு பின் கலைஞரின் அட்டகாசம் இன்னும் கூடிற்று, மிக கடுமையான முறையில் எல்லாம் அவரிடமிருந்து விமர்சனங்கள் வந்தன , கிழவனுக்கு எதற்கு முதல்வர் ஆசை என்றவர்தான் கலைஞர்,

93 வயதில் முதலமைச்சர் பதவியினை தவறவிட்டிருக்கும் கலைஞர்.

காமராஜர் தோற்ற போது பெரிதும் வருந்தினார் அண்ணா, கலைஞரிடமோ பெரும் மகிழ்ச்சி தென்பட்டது, அன்று அவரின் ஒரே வருத்தம், காமராஜரை வென்ற சீனிவாசனை ஓரங்கட்டுவது எப்படி? இதுதான் கலைஞர்.

பாராளுமன்ற  தேர்தலின்போது நாகர்கோவில் சந்திப்பில் இதுதான் ஏழைபங்காளன் காமராஜரின் சொந்தவீடு என அவரின் வாடகை வீட்டினை காட்டியது யார்?

காமராஜர் கண்ணீர் விட்ட காலம் அது.

இதனை எல்லாம் கடந்துதான் மிசாவில் காமராஜரை பலிகொடுக்க, நீங்கள் ஆளுங்கள் என அழைத்தார் கலைஞர், எவ்வளவு பெரிய அனுபவசாலி காமராஜர். இது தன்னை இந்திராவுடன் மோதவிடும் பகிரங்க முயற்சி என கண்டுகொண்டு ஒதுங்கினார். அப்படி இந்திரா காமராஜரை மோதவிட காத்திருந்த நரி அவர்.

சொல்வார்கள், காமராஜர் இறந்தபின் ஓடிவந்தார் கலைஞர், யார் செத்தாலும் வருவார், அழுவார். காரணம் செத்தவர்கள் எழுந்து இங்கு ஏன் வந்தீர் என சொல்வதில்லை.

தமிழ்நாடு வளம்பெற இன்னும் 10 ஆண்டுகள் காமராஜர் ஆளவேண்டும் என்றவர் பெரியார், அண்ணா ஆண்டது 1 வருடம் மட்டுமே, கலைஞர் நினைத்தால் காமராஜருக்கு வழி விட்டிருக்கலாம், தமிழக நலன் முக்கியமென்றால் அதனைத்தான் செய்திருக்கவேண்டும்

மாறாக கள்ளுகடை திறந்து பெரும் அழிவிற்கு வழிகோலினார் கலைஞர், இந்த எம்ஜிஆர், ஜெயா எல்லாம் அந்நதியிலிருந்து பிரிந்த கிளைகள். மூலம் கலைஞரே

உச்சமாக காமராஜரை எதிர்த்து அரசியல் செய்த காலத்திற்காக வெட்கபடுகிறேன், வேதனைபடுகிறேன் என்றெல்லாம் கலைஞரே கொஞ்சகாலம் முன்பு பகிரங்கமாக சொல்லி இருந்தார், அப்படி இருக்கும்பொழுது

ஏய் கலைஞரை எப்படி நீ சொல்லலாம் என ஜால்ராக்கள் ஓசை எழுப்புகின்றன.

இவர்கள் எல்லாம் ஒன்று முத்துவேலருக்கு தூரத்து சொந்தமோ அல்லது தயாளு அம்மாள் வேலைகாரிக்கு நெருங்கின சொந்தமாக இருக்கலாம் அல்லது என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாத கலைஞர் பக்தியாக இருக்கலாம்.

கடவுள் மீதான நம்பிக்கையினை கேள்விகேட்பதுதான் பகுத்தறிவே அன்றி, கலைஞர் மீதான கேள்விகளை அப்படியே புறந்தள்ளி அவரை அப்படியே நம்புவதுதான் உடன்பிறப்புக்களின் பகுத்தறிவு

அறிவாலயம் சொல்லி கொடுத்திருக்கும் பகுத்தறிவு புரட்சி அப்படி.

வாழ்க அவர்களின் நம்பிக்கை, வளர்க அவர்கள் பகுத்தறிவு.

காமராஜர் ஆட்சி சரியில்லை என்னிடம் கொடுங்கள் பொற்கால ஆட்சி தருகிறேன் என்றவர் கலைஞர், அதன் பின் 5 முறை முதல்வரானார். எக்கால ஆட்சி கொடுத்தார்? பொற்காலமா? கற்காலமா?

சொல்லுங்கள்

காமராஜர் ஆட்சியினை விட கலைஞர் ஆட்சி சால சிறந்தது என உங்களால் வாய்விட்டு சொல்லமுடியுமா? சொல்ல முடியிமென்றால் மனசாட்சியே உங்களுக்கு இல்லை என பொருள்.

முடியாதல்லவா? பின்னர் ஏன் காமராஜரை குறை கூறி, ஆட்சிக்கு வந்து 5 முறை அரியணை கண்டபின்னும் அவரின் சாதனையினை கலைஞரால் நெருங்கமுடியவில்லை, மதுகடை இல்லாமல் ஆளமுடியவில்லை?

அது கலைஞரின் தோல்வியா இல்லையா? அதற்கு பதில் சொல்லமுடியுமா?

ஹிஹிஹிஹிஹி அது வந்து… என சமாளிக்கலாம்

உங்கள் மனசாட்சிக்கு தெரியாததையா நாம் எழுதிவிட முடியும்?


காமராஜர் ஒரு தேசியவாதி, அந்த தேசிய கட்சிதான் தமிழகத்திற்கு நல்லாட்சி தந்தது.

இன்றுவரை தமிழகம் கண்ட ஆட்சிகளில் அதுதான் பொற்கால ஆட்சி என்பதை மறுக்கமுடியாது.

திராவிட, தமிழ்தேசிய குறுகிய மனப்பான்மை கொண்ட சுயநல கும்பல்களால் ஒருகாலும் தமிழகத்தில் நல்லாட்சி தரமுடியாது என்பதும் வரலாற்று உண்மை.

தமிழகத்திற்கு தமிழன் முதல்வரை கொடுத்த ஒரே கட்சி காங்கிரஸ், கொடுக்க முயன்று தற்போது தோற்றுவிட்ட கட்சி பாஜக‌

ஆக தமிழ்நாட்டிற்கு தமிழன் முதலமைச்சராக ஒரு தேசிய கட்சியினை ஆதரித்தால் போதுமானது என்பதுதான் விஷயம்

இதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம், அட்டகாசம் அழிச்சாட்டியம், பரபப்புக்கள். காட்டு கத்தல்கள்

அங்கிள் கோஷ்டிக்கு தமிழ் முதல்வர் வேண்டுமென்றால் இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம் 🙂


கலைஞருக்கும் காமராஜருக்கும் இருந்த உறவு தெரியாமல் விமர்சிக்கின்றாயா என்கிறார் ஒருவர்

இது கலைஞரே கண்ணாடியினை கழற்றிவிட்டு வாய்விட்டு சிரிக்கும் காமெடி

ஒரே ஒரு உதாரணம், காமராஜர் முதலமைச்சர் பதவிக்கு ஆசைபட்டு தெரு தெருவாய் அலைகிறார் என முதல்வர் கலைஞர் சொல்லி தொலைக்க, காமராஜரிடம் பத்திரிகையாளர்களும் கேட்டார்கள்

ஒருநாளும் கோபபடாத காமராஜர் அன்று சீறி சொன்னார்,

“அவனெல்லாம் உட்கார்ந்துவிட்ட பின்னால் அந்த நாற்காலிக்கு நான் ஆசைபடுவணாண்ணேன்…அதுக்குள்ள மரியாதை போச்சுண்ணேன்”

இதுதான் காமராஜர் மனதில் கலைஞருக்கு இருந்த இடம்.

கலைஞர் அரசியல்வாதி ஆயிரம் சொல்வார்

அன்று “அண்டங்காக்காய், எருமை மாடு, கருவாடு விற்ற குடும்பம், திருமணத்திற்கு லாயக்கற்ற ஆண்மை குறைந்தவர்” என்றெல்லாம் விளாசிவிட்டுத்தான், இன்று வருந்துகிறேன், வேதனைபடுகிறேன், எனக்கும் அவருக்கும் உள்ள் உறவு ஆழமானது என்றெல்லாம் சொல்வார்.

இவர்களுக்கு அறிவு எங்கே போனது?

காமராஜருக்கும் கலைஞருக்கும் பெரும் உறவு இருந்ததாம் 🙂

பெரியாருக்கும் காமராஜருக்கும் இருந்ததை ஒப்புகொள்ளலாம்

கலைஞருக்கும் காமராஜருக்கும் உறவு இருந்தது என்பது, ஹிட்லருக்கும் மகாத்மா காந்திக்கும் ரகசிய உறவு இருந்தது என்பதற்கு ஒப்பானது.


காமராஜர் என்ன சாதித்தார் என கேட்பவர்கள்

திராவிட கட்சி அரசுகள் என்ன கிழித்தன‌ என பேசத்தொடங்குங்கள்

ஊரெல்லாம் பள்ளி கட்டி, பிச்சை எடுத்து சோறுபோட்டவன் காலத்தையும்

எல்கேஜிக்கே நன்கொடை 2 லட்சம் கொட்டிவிட்டு, யூனிபார்ம் காலணி யினை பள்ளியில் வாங்கிவிட்டு, கல்விக்கு தனியாக டியூசன் அனுப்பும் இந்த காலத்தையும் ஒப்பிட்டுபார்த்துவிட்டு பேசுங்கள்

ஊரெல்லாம் மின்சாரம் கொடுத்தது அவன், மின்சார வெட்டினை காட்டியது இவர்கள்

தன் தாய்க்கு கூட தனியாக இல்லாமல் குடிநீர் குடிநீர் குழாயினை பொதுவாக வைத்தவன் அவன் . தன் குடும்பத்தாருக்கெல்லாம் நாட்டில் பங்குகொடுத்தவர்கள் இவர்கள், குடும்பம் இல்லையா? தத்தெடு அது சகோதரியோ வளர்ப்பு மகனோ அல்லது மொத்த குடும்பமோ போதும்.

அணைகட்டுவது முதல், சாலை வரை அரசே செய்து ஊழலுக்கு வழி இல்லாமல் செய்தவன் அவன் கிரானைட் மணல் வரை தனியார் விற்றுகொள்ளலாம் என சொன்ன இக்காலத்தை காணுங்கள்

ஊழலை அறிமுகபடுத்தியது யார் என புரிந்துவிட்டு பேசுங்கள்

மதுவிலக்கினை வைத்தது யார்? மதுவினை ஆறாய் ஓடவிட்டது யார் என பேசுங்கள்

இந்த திரைப்படத்தினை கட்டுக்குள் காமராஜர் வைக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? செயதாரா? செய்திருந்தால் சினிமா இப்படி பெரும் பிம்பமாக தமிழகத்தில் வளர்ந்திருக்குமா?

ஆனால் சினிமாவினை வைத்து ஆட்சியினை பிடித்தது யார்? அவரா?

விட்டுகொடுத்தல் இல்லாமல் அரசியல் இல்லை, தேவிகுளம் பீர்மேடை இழந்தாலும் முப்போகம் விளையும் குமரியினை தமிழகத்திற்கு தரவில்லையா?

அவர் காலம் வரை காவிரிபிரச்சினை , முல்லை பெரியாறு சர்ச்சை என கேள்விபட்டதுண்டா?

பரம்பிகுளம் ஆழியாரை கொண்டுவந்தது யார்?

இன்னும் காமராஜர் ஒன்றும் கிழிக்கவில்லை எல்லாம் கலைஞர்தான் கிழித்தார் என சொல்வீர்களானால் விதண்டாவாதத்திற்குத்தான் பேசுகின்றீர்கள் என பொருள்

இந்தி எதிர்ப்பில் ஊரை திரட்டி 64 பேரை பலிகொண்ட பின் என்ன நடந்தது? தமிழகம் இந்திபடிக்கவில்லை ஆனால் முரசொலிமாறனின் குலகொழுந்து இந்தியில் பாராளுமன்றத்தில் பேசவில்லையா?

காமராஜரை எதிர்க்க செய்யபட்ட பெரும் பிம்பம் அது, மற்ற மாநிலங்களில் எல்லாம் அப்படி போர் நடந்ததா? மலையாளமும், கன்னடமும், தெலுங்கும் அழிந்தேவிட்டதா?

மொழியினை வளர்க்க, மொழிபற்றை காட்ட‌ இன்னொரு மொழியினை எதிர்த்துதான் செய்யவேண்டுமா?

உண்மையில் அன்று காமராஜரை எதிர்க்க தகுந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, ஊழலும் இல்லை எல்லாம் சுத்தமான அமைச்சர்கள்

கிடைத்த ஒரே வாய்ப்பு இந்தி எதிர்ப்பு, 64 பேர் சாவுக்கு காரணமான சம்பவம் அது, ஆனால் பலன் யாருக்கு?

என்னை மீறி இந்தி வராது என சொன்ன காமராஜரை பழிசுமத்தி வீண் பிம்பம் காட்டியது கலைஞர் & கோ

பொதுவாக தெய்வம் நின்றுதான் கொல்லும்

அன்று காமராஜரை திட்டமிட்டு இல்லா பொய் எல்லாம் சொல்லி வீழ்த்தினார் கலைஞர் அது ஒரு காலம்

இன்று சம்பந்தமே இல்லாமல் ஈழ பிரச்சினையில் அவரை வறுத்தெடுக்கின்றார்கள், இதுவும் ஒரு காலம்

செய்த தப்புகளுக்கு தப்பிய கலைஞர், செய்யா தவறுகளுக்கு பழிசுமந்தலைகிறார்.

இது தெய்வத்தின் தீர்ப்பு , முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.