அபத்த காணொளியும், அதற்கு பதிலும்….

 

இவரை போன்றவர்களுக்கு என்ன சிக்கல் என தெரியாது

ஊரோடு ஒத்துவாழ் என்ப்பார்கள், இது உலகம் எல்லா நாடும் எல்லா நாட்டோடும் ஒப்பந்தம் போடபட்டிருக்கும், அது பகைநாடுகள் என்றாலும் சரி, உறவுநாடுகள் என்றாலும் சரி.

இல்லை என்றால் தனியாக, ஒரு நாடு உறவும் இன்றி இன்னொருநாடு எப்படி வாழ முடியும்?

இவர் என்னமோ புதிதாக சொல்லவந்துவிட்டாராம், உலகமுழுக்க அமெரிக்காவிற்கு 38 ராணுவதளம் உண்டு, இந்தியா அமைக்க நினைத்தது இலங்கையில் ஒரு தளம் அவ்வளவுதான்.

ஒரு தீவுநாடு எனும் வகையில் பல பெரும் நாடுகள் அப்படி இலங்கையினை அணுகத்தான் செய்யும்

இந்தியா இல்லை என்றால், நிச்சயம் இன்னொரு நாடு வரும். வரட்டும்

ஆனால் அவைகள் எல்லாம் ஈழதமிழருக்காக பேசுமா என்றால் பேசாது, ஒரே ஒருநாடு உலகில் உண்டென்றால் அது இந்தியாதான்.

இது இவரைபொன்றோருக்கு பின்னர் புரியும்

இவை எல்லாம் சுத்த அபத்தங்கள் அன்றி ஒன்றுமில்லை, உண்மையில் இலங்கையின் பிரச்சினைக்கு காரணம் மேற்குலக வல்லரசுகளின் தலையீடு அன்றி வேறல்ல‌

இஸ்ரேல் கிபிர் விமானமும், ஐரோப்பாவின் நவீன கருவிகளின் கொடுப்பும் பற்றி இவர் வாய்திறந்தாரா? சீனா பற்றி சொன்னாரா? ஈரான், ரஷ்யா ஏன் சிங்களன் பின்னால் வந்தது?

நாம் மட்டும்தான் நெருங்குகின்றோமா, வேறு நாடுகள் இலங்கையினை நெருங்க நினைக்கவில்லையா?

இவர் சொல்வதெல்லாம் அபத்தங்கள்.

காஷ்மீர் பிரச்சினை..

காஷ்மீர் கலவரங்களை கண்டித்து பாகிஸ்தானில் பேரணி : நவாஸ் ஷெரீப் அறிவிப்பு

கிழிந்த கந்தலான அரை நிர்வாண உடை அணிந்த ஒருவன், சிறிய மை கறைபட்ட கோர்ட் சூர்ட் அணிந்தவனை கண்டு “சீ.. உன் உடையில் கறை, அசிங்கமாக இருக்கின்றது, உவ்வே..” என‌ பரிகசித்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கின்றது நாவஸின் செயல்பாடு.

பெரும் சீரழிவில் சிக்கி இருக்கின்றது பாகிஸ்தான்.

தீவிரவாத குண்டுவெடிப்பு நடக்கா நாளில்லை, சுடாத துப்பாக்கி இல்லை, கண்டிக்காத நாடு இல்லை, இந்நிலையில் இவர் இந்தியாவினை கண்டிக்கின்றாராம்.

இன்னும் வர்சிஸ்தான் தன்னை தனிநாடு என்றுதான் சொல்லுகின்றது, அங்கு பாகிஸ்தானின் சட்டம் எதுவும் செல்லுபடியாகாது, இதுதான் இவர்கள் லட்சணம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் உலகின் ஆபத்தான தீவிரவாதிகளின் சொர்க்கம் என்கிறது ஆய்வு, இவர் இந்தியாவினை க0ண்டிக்கின்றாராம், ஒருவேளை அவர்கள் காஷ்மீர் போல நமது காஷ்மீரும் முழு தீவிரவாத மாநிலமாக மாறவில்லை எனும் கோபம் இருக்கலாம்.

# சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் வாழமுடியாமல், அரபு உலகமெல்லாம்ய் ஓடி, சவுதியிலும், துபாயிலும் தலைமறைவாக வாழ்ந்தவர் எல்லாம் எமது நாட்டினை கண்டித்து அறிக்கை விட்டு, பேரணி நடத்துவதுதான் காலக்கொடுமை.

வேறு ஒன்றுமில்லை, முன்பெல்லாம் காஷ்மீரில் மூன்றாம் நாட்டு தலையீடுவேண்டும் (வேறு யாருமல்ல அவர்கள்தான்) என சொல்லிவந்த அமெரிக்கா, இப்பொழுதெல்லாம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என சொல்லதொடங்கி இருப்பதன் விளைவு.

இது, அப்படி உலகம் பார்க்கவிட மாட்டாராம் இவர், சரி உன் கையில் ஒரு காஷ்மீர் உண்டே என்றால் இவர் அங்கிள் ஸ்டைலில் சிரிக்கலாம்

மோடி உலகமெல்லாம் சுற்றுகின்றார், அடிக்கடி அமெரிக்கா பறக்கின்றார் என ஆயிரம் கிண்டல்கள் இருந்தாலும், காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்காவின் பார்வை மாறி இருப்பதை கவனித்துதான் ஆகவேண்டும்.

நல்ல விஷயங்களை மறைக்ககூடாது, வாழ்த்துக்கள் மோடி. நவாஸ் தலையினை பிய்க்க இதுதான் காரணம்,

இந்திய எதிர்ப்பு இன்றி அங்கு அரசியல் சாத்தியமே இல்லை.

இதனை எல்லாம் அவர்களும் சொல்லமாட்டார்கள், தமிழக தமிழிசையும் பொன்னாரும் கூட சொல்லமாட்டார்கள்.

காங்கிரஸ்காரன் என முத்திரை குத்தபடும் நாம் சொல்லிகொள்ளும் நிலையில் இருக்கின்றது நிலை

யார் ஆண்டால் என்ன அயோத்தி (ஆமாம் அதேதான்) நன்றாக இருக்கவேண்டும் என்பார்கள். அப்படி இந்நாடும் நன்றாக இருக்கட்டும்.

பிரான்ஸில் நடப்பது….?

சனி உச்சத்தில் இருக்கும் நாடு பிரான்ஸ், ஆயிரம் பொருளாதார சிக்கல்களில் தற்போது தீவிரவாதம் கடும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூட்டினை கட்டுபடுத்தினால், இதோ ஒருவன் டிரக் ஏற்றி மக்கள் கூட்டத்தின் மீது ஓட்டுநர் பயிற்சி எடுத்திருக்கின்றான், 100 மக்கள் பலி.

download

பிரான்ஸ் சுதந்திரமான எண்ணம் கொண்ட நாடுதான் ஆனால் இப்பொழுதெல்லாம் இந்த தீவிரவாதிகளுக்கு தூபம் போடுபவர்களை கடுமையாக கண்காணிக்கின்றனர், அதன் சாயல் தமிழகத்தில் தெரிந்தது

எப்படி? அங்கிள் சைமனுக்கு பெரும் காணிக்கை அங்கிருந்துதான் வந்தது, அதனை பார்த்தபின்புதான் அங்கிள் எழுச்சியுரை, புரட்சி வெல்லும் என்றேல்லாம் பேசுவார். தற்போது வரத்து குறைவு . அங்கிளும் சாந்தனை இலங்கை சிறைக்கு அனுப்புங்கள் என சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்.

காந்தியும் புர்ஹான் வாணியும் ஒன்று என சொன்ன அங்கிளுக்கு, இதோ பிரான்ஸில் 100 பேரை கொன்ற தீவிரவாட்தியும் பிரான்ஸ் சிந்தனையார்கள் ரூசோ மற்றும் வால்டரும் ஒன்று என சொல்லமுடியுமா?

வால்டர் ருசோவின் கருத்துக்கள் பிரன்ஞ் புரட்சிக்கு காரணமானது, சொல்லமுடியுமா அங்கிளால்

சரி ஐரோப்பாவில் இருக்கும் சீமான் தம்பிகளாவது காஷ்மீர் கலவர இந்தியாவினை கண்டிக்கின்றேன் என கிளம்பமுடியுமா? பிரான்ஸ் மக்களே போட்டுதள்ளுவார்கள்

# அதனால் இதனில் எல்லாம் அங்கிள் புரட்சி வெல்லும் என்றேல்லாம் பேசமாட்டார், பேசினால் நிதி நின்றுபோகும், அவர்களே ஓடிவந்து வாய்பொத்துவார்கள்.

துருக்கியில் நடப்பது என்ன?

கொஞ்சம் ஆசியாவிலும் கொஞ்சம் ஐரோப்பாவிலும் கிடக்கும் நாடு துருக்கி, ரஜினிகாந்த் அழுவது போல அங்கும் ஏற்றுகொள்ள்மாட்டார்கள், இங்கும் ஏற்றுகொள்ளமாட்டார்கள், ஆனால் சும்மா சொல்லகூடாது வரலாற்றில் மிக முக்கியமான இடம் அதற்குண்டு, வரலாற்றில் துருக்கியின் பாதிப்பு முக்கியமானது

ஆனால் மனதளவில் தாங்கள் ஐரோப்பியராகவே உணர்வார்கள், மதம் தவிர‌

வரலாறினை விடுங்கள், தற்போதைய சிரிய யுத்தத்தை அடுத்து உலக நாடுகள் அதனை கொண்டாடின‌, அதன் அமைவிடம் அவ்வளவு முக்கியமானது, பிரிட்டன் வெளியேறிய பட்சத்தில் ஐரோப்பிய யூனியனில் அதனை இணைக்கும் முயற்சி நடந்தது.

ஆனால் இன்று ராணுவ புரட்சி, மறுப்பு, முறியடிப்பு, குழப்பம் என இன்று அவர்களுக்கு குழப்பமான நாள். இன்னும் முடிவு தெரியவில்லை

து.jpg

ஆனால் முதலில் ராணுவம் புரட்சி செய்ததாகவும், பின் அதிபரின் குரல்கேட்டும் மக்கள் தெருவிற்கு வந்ததால் ராணுவம் வாபஸ் ஆனதாகவும் குழப்பமான தகவல்கள் வருகின்றன.

இவ்வளவுநாளும் இல்லா இந்த குழப்பத்திற்கு காரணம், புதிதாக பலம் பெற்றிருக்கும் துருக்கி உளவுதுறையும் அது ஆடும் ஆட்டமும் என்கின்றனர் நிபுணர்கள்.

பார்க்கலாம், ஒருவேளை துருக்கி ராணுவம் ஆட்சி அமைத்தால் புரட்சி வாழ்க என தமிழகத்தில் சத்தம் வராது, ஆனால் ஒருவேளை மக்களுக்கு மரியாதை செலுத்தி 1989 ரஷ்ய ராணுவம் போல அது பின்வாங்கி இருந்தால் அவ்வளவுதான், எங்கே? இங்கே தமிழகத்தில்தான்

“புரட்சியில் வென்றிருக்கும் துருக்கி மகளை வாழ்த்துகிறோம், இதே போன்ற ஒரு பெரும் புரட்சி தமிழகத்திலும் வரும் என்பதனை தெரிவித்துகொள்கின்றோம்” என ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள்