காமராசரை இழிவு படுத்தும் செயல்

காமராஜர் பிறந்தநாளை அவர்போலவே கேக் செய்து வெட்டி கொண்டாடினாராம் எர்ணாவூர் நாராயணண்.

FB_IMG_1468830612990

இந்த கொடூர கொண்டாண்டத்தை இன்னொரு சாதிக்காரன் செய்தால் இந்நேரம் தமிழக பொங்கி எழுந்திருக்கும், சொந்த சாதி என்பதால் தப்பித்தது

நாடி நரம்பெல்லாம் கத்தி, அருவாள், வெட்டு குத்து என பதியபட்ட ஒருவரால்தான் இம்மாதிரியான காரியங்களை செய்ய முடியும்.

காமராஜருக்கு இப்படி ஒரு அவமானம் தேவையா? அந்த சாதியில் பிறந்ததற்கு அவர் பட்ட அவமானம் போதாதா??

தேசியகொடிக்கு இப்படி நிகழ்ந்தால் அவமானம், ஆனால் அக்கொடிபோல புனிதமான தேசியவாதிக்கு நிகழ்ந்தால் அது பிரச்சினைகுரியது இல்லையா?

இந்த முன்னாள் நான்குநேரி தொகுதியின் முன்னாள்எம் எல் ஏவினை என்ன சொல்லலாம்.

தைரியமிருந்தால் முதல்வரின் பிறந்தநாளை இப்படி கொண்டாட முடியுமா? என கேட்டுவிட்டு ஓடிவிடலாம்.

இனி எவனாவது காமராஜர் சிலைக்கு எங்காவது அவமானம் என சொல்லிபாருங்கள், இந்த படத்தினாலே உங்கள் வாயினில் அடிவிழும்

இவ்வளவுதான் காஷ்மீரிய அறிவா?

அங்கிள் சைமன் சத்தமிட்டுவிட்டு பிரியாணி சாப்பிட சென்றுவிட்டார், இந்த பங்குனி 17 எனும் கும்பலின் அழிச்சாட்டியம் தாளவில்லை

அதாவது காஷ்மீர் மக்களை இந்தியா கொல்கிறதாம், தமிழராகிய இவர்கள் அவர்களுக்கு துணை நிற்கின்றார்களாம். இவர்கள் சொல்வதை கேட்டு இந்திய ராணுவம் காஷ்மீரை விட்டு ஓடிவிடவேண்டுமாம். காஷ்மீரை சுதந்திரமாக விடவேண்டுமாம், அது போராட்டமாம்.

அட பதர்களா, இவ்வளவுதான் காஷ்மீரிய அறிவா?

அது மூன்று நாடுகளால் பகிரபட்டுள்ளது, ஒரு பக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது, ஒரு பக்கம் சீனா, ஒரு பக்கம் இந்தியா.

உங்கள் வாதப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தபடவேண்டும் என்றாலே, காஷ்மீரை விட்டு பாகிஸ்தானும், சீனாவும், இந்தியாவும் வெளியேறிய பின்னர் தான் நடத்தமுடியும், பாகிஸ்தான் வெளியேறுமா? வாக்கெடுப்பிற்கு சம்பதிக்குமா?

உள்நாட்டில் வாக்கெடுப்பு வைத்தாலே இஸ்லாபாத் கூட மிஞ்சாது, அவர்கள் ஆட்சி அப்படி. சீனாவிற்கு தேர்தலே தெரியாது. அதன் அதிகார பீடம் அப்படி.

13770309_10206783612124010_6669107745104352184_n

ஆக உங்கள் கண்ணிற்கு தெரிவதெல்லாம் போராடும் உரிமை கொடுத்து, வாக்குரிமை கொடுத்து ஜனநாயக முறையில் தன் மாநிலமாக காஷ்மீரை ஆளும் இந்தியாதான் தெரியுமே அன்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரோ, சீன காஷ்மீரோ தெரியாது

குறைந்தபட்சம் காஷ்மீர் மக்கள் வீதிக்கு வரலாம், போராடலாம், கல் எறியலாம், ராணுவத்தை விலக்கு என கோரிக்கை வைக்கலாம், அதாவது தீவிரவாதியினை கொன்றால் கூட அவர்களால் குரலெழுப்ப முடிகிறது, அவ்வுரிமை இந்தியா கொடுத்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மாநில அரசு உள்ளது, முதல்வர் உள்ளார், சட்டம் ஒழுங்கு எல்லாம் உள்ளது. எல்லையோரம் என்பதால் சில பாதுகாப்பு நடவடிக்கை உச்சமாக இருக்கும் அவ்வளவுதான்.

இப்படி ஜனநாயகம் பேசும் இந்திய காஷ்மீரை பார்க்கும் நீங்கள், மக்கள் குரல்வளையினை பிடித்துவைத்திருக்கும் ஆசாத் காஷ்மீர் பற்றி, சீன காஷ்மீர் மக்கள்பற்றி துளியும் யோசிப்பீர்களா?

நல்லவர்கள் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை கண்டித்துவிட்டு, அவர்களை
வெளியேற சொல்ல்விட்டல்லவா இந்திய காஷ்மீர் பற்றி கவலைபடவேண்டும்?

காஷ்மீரில் 3ல் ஒரு பங்கு மக்கள் விடுதலை பெறவேண்டும், மீதி 2 பங்கு மக்களும் எக்கேடும் கெட்டுபோகட்டும் என்பதுதான் உங்கள் காஷ்மீரிய பாசமா?

தயவு செய்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அறிக்கை ஏதும் விட்டு தொலைத்துவிடாதீர்கள். தகறாறு நடக்கும் காசவினை தனிநாடு என சொல்லிவிட்டு மேற்கு கரையினை மறந்துவிடுவீர்கள், உங்கள் விலாசமான அறிவு அப்படி

இதனை பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் தீவிரவாதிகள் சொல்லமாட்டார்கள், காரணம் காஷ்மீர் தனிநாடு என்பதனை பாகிஸ்தானே ஒப்புகொள்ளாது, விடாது .

அப்படி நினைத்திருந்தால் ஆசாத் காஷ்மீரை என்றோ தனிநாடாக அறிவித்து இந்தியாவிற்கு சிக்கல் கொடுக்கும்.

உண்மையான காஷ்மீரிய போராளிகளுக்கு அது தெரியும், அதனால் அமைதி காப்பார்கள். பாகிஸ்தான் இருக்கும் காலம் வரை காஷ்மீரிய விடுதலை சாத்தியமில்லை.

அதனால் அங்கு போராட வருவதில் பெரும்பாலானோர் ஆபாகானிய கூலிபடையினர், பாகிஸ்தானிய தயாரிப்பு என்பதுதான் நிஜம். இந்தியா காஷ்மீரிகளை அடக்குகின்றது என்பதுதான் பாடமே தவிர, பாகிஸ்தானிய காஷ்மீர் பற்றி மூச்…

ஆக காஷ்மீர் என்பது அவர்களுக்கு ஒரு அரசியலே அன்றி வேறல்ல, அவர்களால்தான் இவ்வளவு அழிவும். தன் பகுதி காஷ்மீரை 1960களில் பொதுவாக்கெடுப்பு நடத்தவிடாமல் ஐநாவில் தடுத்த பாகிஸ்தானின் விளையாட்டு கொஞ்சமல்ல, அவ்வளவு பயம், யாருக்கு பிடிக்கும் அந்நாடு?

தன் பகுதி காஷ்மீரை விடுவிக்காத பாகிஸ்தான், இந்திய காஷ்மீர் மக்களுக்காக கவலைபடுகின்றதாம், சீன பகுதி காஷ்மீர் பகுதி பற்றி கவலைபடா பாகிஸ்தான், இந்திய காஷ்மீர் விடுதலைக்கு உதவுமாம்

எல்லாமே கள்ள ஆட்டம், இதி கள்ளர் திருமுருகனின் கும்பலும் புகுந்துகொண்டு ஆடுகின்றது. சீமானும் ஏதாவது வழக்கம்போல் காமெடி செய்வார்.சீமானும் ஏதாவது வழக்கம்போல் காமெடி செய்வார்.

வழக்கமாக காங்கிரஸ் சோனியா, கலைஞர் என சொல்லும் இவர்கள் இம்முறை இந்திய அரசு என கவனமாக சொல்வார்கள், மோடி என்பதெல்லாம் நினைவு வராது.

அடேய் அல்லக்கைஸ், இப்படித்தான் இலங்கையில் மலையக தமிழரினை சேர்க்காமல் ஈழதமிழருக்கு மட்டும் தனிநாடு கேட்டு ஒரு பச்சிலையும் பிடுங்காமல் எல்லாம் அழியவிட்டீர்கள்

இன்று காஷ்மீருக்கு வந்துவிட்டீர்களா?

பாகிஸ்தான் அரசையும், சீன அரசையும் கண்டித்துவிட்டு இந்த பங்குணி 17 படம் பிடியுங்கள் மங்குணிகளா

எப்படி அய்யா அது? இப்பொழுது ஈழவிடுதலை என்றால் யாழ்பாணம் மட்டும் தனிநாடு, அல்லது கச்சதீவு மட்டும் தனிநாடு என்றால் ஏற்றுகொள்ளமுடியுமா?

அப்படி நீங்கள் சொன்னால் உலகம் உங்கள் மனநிலையினை பரிசோதித்து கீழ்பாக்கம் அனுப்பாதா?

அப்படி மற்ற இரு பகுதிகளையும் விட்டு விட்டு இந்திய காஷ்மீரை மட்டும் கவலைபடுவீர்களால் உங்களை எல்லாம் மார்கழி மாத காஷ்மீரிய டால் ஏரியில் கோவணத்தோடு மூழ்கடிக்கவேண்டாமா?

ஒரு பிரச்சினை என்றால் என்ன காரணம், எது மூலம் என தெரியாதா? உங்கள் குருட்டு சிந்தாந்தபடி ஒருவேளை இந்தியா அம்மாநிலத்திலிருந்து விலகினால் என்ன நடக்கும்?

பாகிஸ்தானும் சீனாவும் விடுமா? அமுக்கி கொல்லும். நாம் எவ்வளவோ சமாளித்து ஒரு வானியினை கொன்றோம், அவர்களோ காஷ்மீரையே சிவப்பாக்கிவிட்டு சத்தமில்லை என்பார்கள்.

அப்பொழுது நீங்கள் என்ன சொல்வீர்கள்? இந்தியா காஷ்மீரில் தலையிட்டு அப்பாவிகளை காப்பாற்றவேண்டும் என வீதிக்கு வருவீர்கள்.

அதனைத்தான் என் தேசம் இன்றே செய்துகொண்டிருக்கின்றது.

இனி மீட்பு, விடுதலை, என கொடி பிடிப்பதாக இருந்தால் கடலுள் மூழ்கிய பூம்புகார் மீட்பு என சென்று பிடியுங்கள், உலக தொல்பொருள் அமைப்பாவது பதிலளிக்கும்.

 

திருமுருகனின் மறுமுகம் கிழிந்து கொண்டிருக்கின்றது

வினவு தளம் திருமுருகன் காந்தியினை தணலாக‌ புட்டு புட்டு வைக்கின்றது, உமர் நைனின் வாக்குமூலம் இன்னமும் பெட்ரோலை வீசுகின்றது.

லாட்டரி மார்ட்டின் எனும் பெரும் சர்ச்சகுரியர் உண்டு, ஏராளமான வழக்குகளும் அவர் மீது உண்டு. அட அவ்வளவு ஏன் அவருக்காக தமிழக அரசுகள் கொண்டுவந்த சட்டங்களே உண்டு (லாட்டரி ஒழிப்பு, நில மோசடி சட்டங்கள்) என்றால் அன்னாரின் ஆட்டம் எப்படி இருந்திருக்கும்.

ஆனால் கலைஞர் பாவம், இவரின் தயாரிப்பான இளைஞன் படத்திற்கு வசனம் எழுதி 45 லட்சம் பெற்றுகொண்டபின்புதான் இவர் பெரும் மோசடியாளார் என தெரிந்து ஒதுங்கிகொண்டார். பாவம் அவர் எல்லாமே பின்னர்தான் அவருக்கு புரியும், அப்பாவி,

மார்ட்டின் ஒரு பெரும் பொருளாதாரா குற்றவாளி என்பது சிக்கிம் அரசு முதல் எல்லா மாநில அரசுகளுக் சாட்டியிருக்கும் குற்றசாட்டு.

தமிழக கட்சிகளையம், அரசுகளையும் அவர் கட்டுபடுத்திய காலமும் இருந்தது,

ஆனால் தென்னகம் வாழ் மகாதேவன் அளவிற்கு அவருக்கு நுட்பமில்லை, அவ்வகையில் திருச்செந்தூரின் இரண்டாம் கடவுளின் சாமர்த்தியம் வேறு.

இரு கட்சிகளும் கைவிட்டபின் அன்னார் தேசிய கட்சியினை நெருங்கிபார்த்தார். காங்கிரஸ் உஷாரானது அனுமதிக்கவில்லை. அதனால் தமிழக பாரதிய ஜனதாவில் தன் மனைவி லீமா ரோசினை ஊடுருவவிட்டு பார்த்தார், அதுவும் நடக்கவில்லை, மதவாதம் ஒழிக என வந்துவிட்டார்.

அதன் பின் அவரே தன் மகன் டைசன் மூலம் தொடங்கியதுதான் தமிழர் விடியல் கட்சி. எல்லா மாநிலங்களும் நீதிமன்றத்தில் மார்ட்டின் மீது ஒப்பாரி வைக்க, அன்னாரோ தமிழர்களுக்காக கட்சி வைத்து ஒப்பாரி வைத்தார்.

அந்த ஒப்பாரியில்தான் நீனும் ஒலமிடு என சொல்லி திருமுருகனுக்கு 50 லட்சம் கொடுத்தாராம்.

மே 17 இயக்கத்திலிருந்து விலகி இருக்கும் உமர் நைனும் இதனையே சொன்னது குறிப்பிடதக்கது.

ஈழத்தில்தான் ரவுடிகளும், சமூக விரோதிகளும் போராளிகள் என கிளம்பினர், 1983களில் கிட்டதட்ட 30 குழுக்கள் தங்களை போராளிகள் என சொல்லிகொண்டனர் என்கிறது வரலாறு

போராட்டம் என்றால் அதன் பெயரில் மக்களிடம் பணம் பறிக்கவேண்டும், கொள்ளை இடவேண்டும் அதுவே போராட்டம் என கொள்கை வைத்திருந்தவை அவை.

நாங்கள் ஈழம் வாங்கி தருகிறோம் என அவை சம்பாதித்தது கொஞ்சமல்ல, பின்னாளில் ஈழப்போராளிகளை இந்தியா அணுகியபோதும் அதனைத்தான் சொன்னார்கள்,

பின் இந்தியா பொறுக்கி எடுத்து 4 குழுக்களுக்கு உதவியது.

அதுவும் 4 பேர் இந்திய பணத்தை பங்கிட்டுகொள்வதனால் தானே பணம் குறைகிறது, 3 பேரை அழித்துவிட்டால் மொத்த இந்திய பணமும் நமக்குதானே என சிந்திக்கவைத்து சர்வமும் நாசமாகவும் போய்விட்டது.

அப்படி பட்ட போராளிகள் தமிழகத்திலும் உருவாகி இருக்கின்றனர் என்பதுதான் மகா வேதனை.

திருமுருகனின் மறுமுகம் கிழிந்து கொண்டிருக்கின்றது.

இன்னும் யாரெல்லாம் வந்து அங்கிள் சைமன் பரவாயில்லை என சொல்லவைத்துவிடுவார்களோ என அச்சம் இருக்கின்றது.

துருக்கி – என்ன நடந்தது?

::இந்த உலகிற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்த நாடு துருக்கி, ஐரோப்பியர்களை சிலுவைபோரினில் விரட்டி, அவர்கள் ஆசியாவில் காலூன்றதவாறு 400 ஆண்டுகாலம் காத்த பெரும் வல்லரசு அது. ஐரோப்பியரை கடல்வழியே அலையவிட்டது, வாஸ்கொடகாமா கடலில் அல்லாடும்போது நிச்சயம் துருக்கியரை சபித்துகொண்டேதான் அலைந்திருப்பார்.

இன்று 65% மக்கள் இஸ்லாமியர் எனினும் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள், ஐரோப்பியர் போன்ற மனநிலை அது. அதனால்தான் சிரிய அகதிகள் துருக்கிக்கி சென்றார்களே அன்றி சவுதி போன்ற பணக்கார அரபு நாடுகளுக்கு அல்ல

அதனால்தான் இஸ்லாமிய நாடுகளிலே பெரும் ராணுவபலம் கொண்ட துருக்கி ராணுவத்தை வீதிகளில் முடக்கி விரட்டி இருக்கின்றார்கள். மக்களாட்சியின் மகத்துவம் மக்களுக்கு தெரிந்திருக்கின்றது

அதே நேரம் எதனை செய்ய கூடாது என துருக்கி ராணுவத்தினருக்கும் தெரிந்திருக்கின்றது

மக்கள் மிக விழிப்பாய் இருக்குமிடத்தில் காட்டாட்சி சாத்தியமில்லை என்பதனை உலகிற்கு சொல்லி இருக்கின்றது துருக்கி

அடிபட்ட பாம்பாய் சீறும் துருக்கி அரசு, அமெரிக்காவில் வசிக்கும் அரச எதிர்ப்பாளர் ஒருவரை ஒப்படைக்க கேட்கின்றது, கீரிசில் வசிக்கும் ராணுவ ஆதரவாளர் 10 பேரை ஒப்படைக்க மிரட்டுகின்றது, அவர்களும் ஒப்படைக்கபடபோகின்றனர். தன் நாட்டுக்கு எதிரானவர்கள் எங்கும் வசிக்கமுடியாது என பகிரங்கமாக மிரட்டுகின்றது துருக்கி

இதே போலத்தான் 1984ல் சென்னையில் பிடிபட்ட பிரபாகரனை ஒப்படைக்க சிங்கள கேட்டது, இந்திராவின் இந்தியா அதனை மறுத்தது அப்படி ஒப்படைத்திருந்தால் இன்று அங்கிள் சைமன் கார் வாங்கமுடியாது, திருமுருகன் காந்தி உலக மானிட நேயராக மாறமுடியாது, வைகோவிற்கு டிவி கிடையாது எல்லாம் கியாஸ் தியரி.

அதன் பின் அடுத்த நாட்டில் இருந்துகொண்டு தன்நாட்டுக்கு எதிரானவர்களை, தன்நாட்டில் குழப்பம் விளைவிப்பவர்களை பற்றி இலங்கை கருத்து ஏதும் கூறாது, தனியாக அழும். ஆனால் ஐநாவில் பாகிஸ்தான் வளர்த்துவிடும் தீவிரவாதம் பற்றி, அந்நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை தாருங்கள் என இந்தியா கேட்கும் போதெலாம் இலங்கை வாய்பொத்தி சிரிக்கும்

துருக்கியின் நிலைப்பாடு இப்பொழுது இலங்கையில் எதிரொலிக்கின்றது

விரைவில் இந்தியாவில் இருக்கும் இலங்கை எதிர்ப்பாளர்களை தாருங்கள் என அவர்கள் குரலெழுப்பலாம், உலகோடு ஒழுக இந்தியாவும் யோசிக்கலாம். இல்லாவிட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கேட்கும் உரிமையினை இந்தியா இழந்துவிடும்,

இலங்கை கேட்கலாம் அல்லவா? எவ்வளவு நேரமாகும்?

அதற்காகத்தான் வைகோ இப்பொழுது மகா அமைதி, சீமான் அமைதிபடை 2ல் அருவியில் குதித்ததுபோல் தலைமறைவு, திருமுருகன் காந்தியின் இந்திய எதிர்ப்பு, சர்வதேச திடீர் மனிதநேயம் போன்ற நிலைகள்.

ஆனாலும் துருக்கி மக்களும், அந்த ஜனநாயகத்தை மதித்த துருக்கிய வலிமை மிகு ராணுவமும் பெரும் மதிப்பிற்குரியவர்கள்.

“இலங்கையின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு”: பொய்யான தகவல் தரும் நூல்

“இலங்கையின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு”, இப்படி ஒரு மகா பொய்யான நூலை எழுதியிருக்கின்றார் ஒருவர், இப்படி மகா அபத்தமாக எழுதிவிட்டு கொஞ்சமேனும் வெட்கமே இல்லாமல் விடியோ வேறு வெளியிட்டு முகநூலில் விட்டிருக்கின்றார்.

விவரம் தெரிந்தவர்கள் வெறுப்புடன் அவர் முகம் பார்க்க அவரே வழிசெய்கிறார். அவ்வளவும் உளறல், புலி, நெடுமாறன், வைகோ, சீமான் எல்லோரையும் தமிழகம் கைவிட்ட கோபம் அந்த முகத்தில் தெரிகின்றது.

அப்படி இந்தியா என்ன ஆக்கிரமித்தது என்றால்? எல்லா இலங்கை சந்தை, விவசாயம்,மீன்பிடி, மூக்குபொடி வரை இந்தியா ஆக்கிரமித்துவிட்டதாம். இன்னும் விடாமல் பிடித்துகொண்டும் இருக்கின்றதாம்.

விளக்கவேண்டுமானால் ஏராளம் விளக்கலாம், ஆனால் ஒரே ஒரு விஷயம் போதும் அன்னாரின் பொய் பலூனை உடைக்க.

1950களில் மலையக தமிழரை யாழ்பாணர்+சிங்களர் விரட்டும்பொழுது இந்த தேசம் என்ன இலங்கையினை மிரட்டியதா? 1974ல் கச்சதீவினை கொடுத்தது யார்? தன் நாட்டு நிலத்தை விட்டுகொடுத்ததுதான் ஆக்கிரமிப்பா?

தமிழர் மீதான கலவரம் கட்டுகடங்காமல் போக, ஓடிவந்து அன்னை இந்திரா உதவியதன் பெயர் ஆக்கிரமிப்பா?. போராளிகளுக்கு எல்லாம் பயிற்சியும் உணவும் கொடுத்தன் பெயர்தான் ஆக்கிரமிப்பா?

போரில் கடந்த 30 வருடமாக வந்த ஈழமக்களை, சொந்த மக்கள்போல அரவணைத்து வைத்திருப்பதன் பெயர் ஆக்கிரமிப்பா?

ஆக்கிரமிப்பு என்றால் என்னவென்று தெரியுமா?. அன்னார் சொல்லிவிட்டார், திரிகோணமலையில் 100 ஏக்கர் பரப்பில் இந்திய எண்ணெய்குடோன் உள்ளது, பெரும் ஆக்கிரமிப்பு. அட பதரே, எல்லா நாடுகளும் இன்னொரு நாட்டில் அப்படி பாதுகாப்பு குடோன் வைக்குமே. ஈரானுக்கு இந்தியாவில் கூட குடோன் உண்டே, அது என்ன ஆக்கிரமிப்பா?

அந்த திரிகோணமலை குடோனுக்கு இந்தியா கொடுக்கும் விலை என்ன? இலங்கையின் வருமானம் என்ன? சும்மாவா கொடுக்கின்றது இலங்கை?

இந்திய முதலாளிகள் இலங்கையில் தொழில்நடத்துகின்றார்களாம், அன்னார் கொதிக்கின்றார். அட நாதாரிபயலே மகின் விமானமும், ஏர் லங்கா விமானமும் இலங்கை பயணிகள் கப்பலும் இந்தியா வரவில்லையா? இலங்கை தேயிலை தோட்டம் என்ன இந்திய முதலாளி கையிலா உள்ளது.
அங்கிள் சைமனே எப்படி பகிரங்கமாக சொன்னார், “தமிழகத்தில் தொழில்நடத்தும் சிங்களன் பற்றி எனக்கு தெரியும், குறி வைத்திருக்கின்றேன்..”

சரி இலங்கை குடிமக்களான ஈழதமிழர் இந்தியாவில் தொழில் செய்யவில்லையா? அது யார் லைக்கா சுபாஷ்கரன்? அவர் என்ன மதுரைக்காரரா? அவர் எடுக்கும் தமிழ்படம் என்ன? ஐங்கரன் நிறுவணம் யாருடையது? சென்னையில் படமெடுக்கவில்லையா? இது என்ன ஆக்கிரமிப்பா?

மலையக தமிழரான முத்தையா முரளிதரன் எனும் இலங்கை கிரிக்கெட் வீரர் சென்னையில் முதலீடு செய்யவில்லையா? சரி, இலங்கை எதிர்கட்சி தலைவர் சம்பந்தனின் வீடு சென்னையில் இல்லையா? இதுதான் ஆக்கிரமிப்பா

இறுதியில் ஒன்று சொன்னார் பாருங்கள், சப்தநாடியும் அடங்கிவிட்டது. அதாவது அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் கூட வியாபார ஒப்பந்தம் இல்லையாம்.

அட பொய்யரே, இலங்கையில் பெப்சி,கோக், மெக்டொனால்ட் , கேஎப்சி என அமெரிக்க உற்பத்தி இல்லையா? அது கிடைக்கவில்லையா?. அமெரிக்க ஆயுதம் சிங்கள ராணுவத்திடம் இல்லையா? ஒப்பந்தம் இல்லாமல் அவை எப்படி இலங்கையில் நுழையும்?

காக்கா தூக்கிகொண்டு போட்டதா?

அரேபியாவில் சுற்றுசூழல் பாதிப்பு என எண்ணெய் எடுக்காமல் விட்டுவிட்டார்களா? ஆப்ரிகாவில் சுரங்கதொழில் நின்றுவிட்டதா? ஒரு நாடு தன்நாட்டின் கனிம வளங்களை விற்காதா? இந்தியாதான் காரணமா? இதெல்லாம் பெரும் பொய் இல்லையா?

ஆக உலகநாடுகள் எல்லாம் செய்தால் அது வியாபாரம், ஆனால் இந்தியா செய்தால் ஆக்கிரமிப்பா

ஐஎஸ் இயக்க கொடூர தாக்குதல்களை விட, எபோலா காய்ச்சலை விட மகா பயங்கரமானவர் இந்த புத்தகத்தை எழுதி இருப்பவர்.

சொல்வதெல்லாம் பொய்.


 18-07-2016

ஜேர்மன் அரசாங்கத்தின் சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

# இது இலங்கையில் ஜெர்மன் ஆக்கிரமிப்பாக இருக்குமோ?


 19-07-2016

ஹம்பாந்தோட்ட துறைமுக மேம்பாட்டு பணியினை சீனா தொடரும் , சவுதி அரசுடன் இலங்கை பணியாளர்கள் தொடர்பாக ஒப்பந்தம். பிரிட்டனின் புதிய அதிபர் தெரசே மேயினை சந்திக்க சிரிசேனா திட்டம்.

அட என்னய்யா இது?, ஜெர்மன், சிங்கப்பூர், சீனா, சவுதி , பிரிட்டன் என‌ தொடர்ந்து இலங்க்கையினை ஆக்கிரமித்தால் என்ன அர்த்தம், அந்த தோழர் பாலனை எங்கே?

“உலக ஆக்கிரமிப்பில் இலங்கை” என ஒரு புத்தகம் எழுத வேண்டாமா? கூப்பிடுங்கள் அவரை

இந்தியா மட்டும் ஆக்கிரமிக்கும் இலங்கையினை, மற்ற நாடுகள் எப்படி ஆக்கிரமிக்கலாம் ,

எங்கே அந்த இலங்கை தேச பக்தர்?


சிங்கப்பூர் இலங்கை இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. வர்த்தகம், கலாச்சாரம் உட்பட பல விஷயங்கள் தொடர்பானாது

# இது இலங்கையில் சிங்கப்பூர் ஆக்கிரமிப்பாக இருக்கலாம்