கபாலி அதிர்வுகள்…

இனி வரும் கபாலி  செய்திகள் இந்த பதிவில்  சேர்க்கப்படும்…

This slideshow requires JavaScript.


22-07-2016

ஒரு வழியாக கபாலி ரிசல்ட் வர ஆரம்பித்துவிட்டது, வைகோவால் விஜயகாந்திற்கு சனி என்றால், ரஞ்சித்தால் ரஜினிக்கு ஜன்னி.

படம் பார்த்து வந்தவர்கள், உலககோப்பையினை தவற விட்ட இந்திய அணி போல மகா சோகமாகிவிட்டார்கள்.

சொன்னால் ஆதாரம் இருக்கின்றதா என்பார்கள், ஆதாரம் தானே இன்னும் கொஞ்சநாளில் வரும்

நஷ்ட ஈடு கேட்டு ரஜினியிடம் விநியோகிஸ்தர்கள் கோரிக்கை, கோர்ட்டுக்கு செல்ல முடிவு, என விரைவில் வர இருக்கும் இன்ன பிற அழிச்சாட்டியங்களில் நீங்களே தெரிந்துகொள்ளலாம்

திருத்துனா திருந்திர ஆளா நீ.. என ரஜினி வீட்டில் அர்ச்சனை விழலாம் 🙂

‪#‎வெறுப்புடா‬………………


“தமிழன் எங்கே போனாலும் அடிமையா இருக்கணுமா, அவன் கோர்ட் சூட் போடுறது பொறுக்காதா??.

நான் உழைப்பாளி, உழைப்பேன் முன்னேறுவேன் (சீன இனம், ஜப்பானிய இனம் எல்லாம் உழைக்க தெரியாததா? )

நான் கோர்ட்போ டுவேண்டா, முன்னுக்கு வருவேண்டா, பொறுக்கலணா சாவுடா…” இப்படி ஒரு வசனம் கபாலியில் இருப்பதாக சொன்னார்கள், அது சர்ச்சையினை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்

அப்படி தமிழன் கோர்ட் போட்டு அதனை கண்ட மற்ற இனமெல்லாம் சாக வேண்டுமென்றால், உலகில் என்றோ மற்ற இனமெல்லாம் அழிந்து தமிழினம் மட்டும் வாழவேண்டி இருந்திருக்கும்

உலகில் அப்படி கேட்க வேண்டிய தமிழன் மலையக தமிழன், கேட்டிருக்க வேண்டிய இடம் ஈழதமிழரிடம்.

அந்நாளைய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் யாழ்பாண தமிழரிடம் தான் இப்படி கேட்டார்கள், கவனியுங்கள் கேட்டதும் தமிழன், கேட்கபட்டதும் தமிழனிடத்தில்.

ஆனால் கபாலி ரஜினி ஒரு சீனனிடம் கேட்டுகொண்டிருக்கின்றாராம், இதுதான் சினிமா, இருப்பதை மறைத்துவிட்டு இல்லாததை காட்டும் சினிமா

இது இயக்குநரின் பன்ச் என ஒரு கூட்டம் சொல்லிகொண்டிருக்க, கோர்ட் சூட் போட‌ தமிழனை யார் தடுத்தார்கள்?? என உலகம் தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது.

இந்த வசனம் எப்பொழுது சொல்லபட்டிருக்கவேண்டும்? காலம் எவ்வளவு மாறிவிட்டது, எல்லாம் மாயை.

இனி அடுத்தபடத்தில் “தமிழன் கார் வைத்திருப்பது பிடிக்கல, தமிழன் ஏரோபிளேன் ஏறுவது பிடிக்கல..” என அடுத்த பன்ஞ் இயக்குநர் வைத்தாலும் வைக்கலாம்.

ஐரோப்பாவில் கபாலிக்கு தமிழகர்கள் வரவேற்பாம், சரி இதே கதையினை இலங்கை தோட்ட தொழிலாளி கதையாக வைத்து, அவனை ஈழ தமிழன் அடக்கி வைத்ததாக ஒரு படமெடுத்து இதே ஐரோப்பாவிற்கு அனுப்பட்டும், யார் பார்க்கின்றார்கள் என பார்க்கலாம்,

இவ்வளவிற்கும் உண்மை கதை அது, ஆனால் ஈழதமிழர் பார்ப்பார்கள் என நினைக்கின்றீர்கள். உண்மையில் நாங்க கோர்ட் சூர்ட் போடுறது பிடிக்கல இல்ல என்ற வரிக்கு உரிமையானவர்கள் அவர்கள்தான், அந்த அபலைகள்தான்.

ஆதலால் கோர்ட் சூட் போட்ட தமிழரே உலகத்தாரை பொறாமையால் சாகடிப்பீர் என்பதுதான் கபாலியின் கதை கருவாம்.

‪#‎ரஜினிக்கு‬ சோதனையான காலம், சும்மாவே ஆடுவார்கள், இதோ அவரே கொள்ளிகட்டையினை கொடுத்து முதுகு சொரிய சொல்லியிருக்கின்றார்.


எவ்வளவு அழகான நாடு இது, எப்படிபட்ட ரசிக்கதக்க இடங்கள் , பிரமாண்ட கட்டங்கள் இருக்கும்போது அதை எல்லாம் ஏன் கபாலியில் காட்டாமல் சில பக்கங்களை மட்டும் காட்டியிருக்கின்றார்கள் என அங்கலாய்கின்றார் ஒரு மலாய் நண்பர்

நமக்கென்ன தெரியும், கேட்டால் கதை என்பார்கள் அவசியமில்லை என்பார்கள்,நண்பர் சொல்வதை பார்க்கும்பொழுது கதையோட்டம் இப்படி இருக்கலாம்

அதாவது நாயகனில் எப்படி பால்தாக்கரே மறைக்கபட்டு , வேலுநாயக்கர் பாத்திரம் போராளியாக உருவாக்கபட்டு தாராவி மட்டும் காட்டபட்டதோ,

அப்படி சில சர்ச்சைகளை தவிர்த்து தமிழர் பகுதி கேங்க்ஸ்டரிசம் பற்றிய படமாக இருக்கலாம் போலும்.

நாயகனின் இன்னொரு காப்பி என்கின்றார்கள்,

அதாவது நாயகனின் கடைசி காட்சியிலிருந்து முன்னோக்கி சென்றால் அது கபாலி என்கிறது ஒரு பட்சி


கபாலி ரஜினி கூடவே வருபவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி தலைவரின் சாயலில் இருக்கின்றாரா? அல்லது அவரே தானா என ஒரு கும்பல் ஆராய்சி செய்து வருகின்றதாம்

தாடி மீசை கண்ணாடி உடை என அச்சு அசலாக பொருந்துவதாக சொல்லிகொள்கின்றார்கள்


கபாலி படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் சில‌ மலேசிய ரசிகர்கள் சொல்லும் விதம்தான் பகீர் என்கிறது, பொதுவாக இவர்கள் சூப்பர், ரொம்ப சூப்பர் என சொன்னபடங்கள் என்ன தெரியுமா?

“குருவி”, “மாலை நேரத்து மயக்கம்”, “இரண்டாம் உலகம்” இன்னும் சில சிம்பு படங்கள், ஒரு சிலர் சாகசம் கூட பிரசாந்துக்கு இன்னொரு ஜீன்ஸ் என்றார்கள்.

சகாப்தம் சகாதேவன் கூட விஜயகாந்தினை முதல்வராகும் சக்தியுள்ளவர் என்ற வகையில் சிலர் சொன்னதுண்டு.

அப்படியே கபாலியும் “வெரி நைஸ்..” என சொல்லும்பொழுது மனசுக்குள் திகிலடிக்கின்றது

இந்த நண்பர்கள் சூப்பர் என சொல்லும் படங்களை பார்க்காமல் தவிர்த்துவிடுவதுதான் வழக்கம்

ஆனால் கபாலி என்பதால்எதற்கும் இரண்டுநாள் கழித்து பார்ப்போம் என முடிவுசெய்தாயிற்று.

காரணம் எவ்வளவு பெரிய ஹிட் என்றாலும், எந்த மொழிபடம் என்றாலும் 1 வாரத்திற்கு மேல் எந்த தியேட்டரிலும் ஓடாது,

எல்லோருக்கும் வேலையும் இருக்கின்றது, ஓய்வினை கொண்டாட சினிமா தாண்டிய விஷயங்களும் இருக்கின்றது.


கபாலிக்கு வரிசலுகை, மகிழ்ச்சியில் படகுழு

கபாலி படத்திற்கு வரிசலுகை கொடுக்கும் மாநிலத்தில்தான் கல்விகடன் கட்டமுடியாமல் ஒரு மாணவனும் தற்கொலை செய்திருக்கின்றான்

நிதி அமைச்சர் பற்றாகுறை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாராம், 500 மதுகடைகளை அடைத்ததால் வருமானம் இழப்பு என அழுகை

இப்பக்கம் பெரும் பணம் புரளும் தொழிலுக்கு வரிசலுகை. ஏன் வரிவிதித்து வசூலித்தால் என்ன? இதனை எல்லாம் நாம் கேட்க கூடாது.

கிரானைட், கனிம மணல் எல்லாம் பற்றி பேச்சே இல்லாமல், 500 கடை போச்சே என்றுதான் அமைச்சர் அழுகின்றார.

இந்த லட்சணத்தில் இதனை தனிநாடாக வேறு ஆக்க வேண்டுமாம், அப்படி ஒருவேளை நடந்தால் உலகம் மொத்தமும் பெரும் வேடிக்கை நிறைந்த நாடாகத்தான் இந்த தமிழ்நாட்டினை பார்த்துகொண்டிருக்கும்.

அமேசான் காட்டிலிருநது கூட பழங்குடி மக்கள் வந்து பார்த்துவிட்டு சிரித்துசெல்லும் அளவிற்கு நிலமை விபரீதமாகமாகலாம்.


 

21-07-2016

கசிவுக் காட்சி

கபாலி கசிவு காட்சியில் கைநாட்டு வைக்கும் ரஜினி எப்படி இங்கிலீஷ் புத்தகம் படிக்கிறார்? என கிள்ம்பிவிட்டார்கள்.

அட பதர்களா? சிறையிலிருந்து வருபவனிடம் அடையாளத்திற்கு கைரேகை வாங்காமல் ஆட்டோகிராப்பா வாங்குவார்கள்? இது கூட தெரியாதா?

சிறையிலிருந்து வரும்போது நேரு, காந்தி எல்லாரும் கூடத்தான் கைநாட்டு இட்டார்கள்

எவனாவது விஸ்வரூபம் கிளைமாக்ஸ்லில் இப்படி ஓவனை கவிழ்த்தால் அணுகதிவீச்சை கட்டுபடுத்தமுடியுமா? அபத்தம் இல்லையா? என கேட்டானா? அதெல்லாம் கேட்கமாட்டான், அதெல்லாம் அந்த சிசிலியம் எல்லாம் புரியவும் புரியாது,

அது என்ன தசவாதாரம் படத்தில் அந்த விஷ கிருமி பெட்டி பற்றி ஏதும் சந்தேகம் எழுப்பினானா? அந்த குளிர்வெப்பநிலையிலிருந்து எடுக்கபட்டபின் சிதம்பரம் வரும் வரை கிருமி வாழ்வது சாத்தியமா?

அதனால் கனத்த அமைதியோடு கமல் பெரிய மேதையப்பா, சும்மா சொல்ல கூடாது என சொல்லிவிட்டு சென்றுவிடுவான்.

இவர்களுக்கு அப்படிபட்ட படங்கள்தான் சரி, புரியாமலே பார்த்து கைதட்டி கொள்வான்.

இன்னும் எத்தனை கபாலி அழிச்சாட்டியம் வரபோகின்றதோ தெரியவில்லை


கபாலி என்ன கபாலி, ரஜினியின் கிளாசிக் படங்களில் முதல் 5 படங்களுக்குள் வருவது முள்ளும் மலரும்.

ரஜினி எப்படிபட்ட மகத்தான நடிகன் என சொன்னபடம் அது.

கிளைமேக்ஸில் அண்ணை மீறி சென்ற தங்கை நொடிபொழுதில் ஓடிகதறி சென்று அண்ணனே பிரதானம் என குடும்பத்துக்காக காதலை தூக்கி எறிகின்றாள், அந்த பாசத்தை உணர்ந்த ரஜினி தங்கையின் காதலை சேர்த்து வைக்கின்றார்.

இந்த அற்புதமான மகேந்திரனின் கதையினை திருடி மலையாளத்தில் பாசில் சுட்ட அப்பம்தான் “அன்னியத்த புராவு”, தமிழில் காதலுக்கு மரியாதை

தமிழனிடம்ருந்தும் மலையாளி நிறைய திருடியிருக்கின்றான்.

Stanley Rajan's photo.

20-07-2016

என் பிடிவாதம் ரஜினிக்குப் பிடித்தது! – இயக்குநர் ரஞ்சித்

அது இருக்கட்டும், படம் மக்களுக்கு பிடிக்குமா இல்லையா என தெரிய 2 நாள்தான். மக்கள் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான்.

இப்படி அதிகம் பேசியே தன் அடையாளத்தை இழந்தவர் பாரதிராஜா என்பது குறிப்பிடதக்கது.

ஜாதிவாரி அடையாளங்களை முதலில் எடுக்க ஆரம்பித்து அந்த கலாச்சாரத்தை தொடங்கியது பாரதிராஜா தான், இன்று அவர் தனக்குரிய இடத்தினை எட்டமுடியாமல் போனதற்கு அதுதான் காரணம்.

அவ்வழியேதான் இவரும் செல்கிறார், ஜாதி மட்டும் வேறு.


படத்தின் டிக்கெட் விலை கூடுதலாம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையாம், கபாலியினை தடை செய்யாமல் தமிழகத்தில் அமைதி வராதாம் : இப்படி ஒரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது

இருமாதம் முன்பு ஒரு வோட்டின் விலை என்ன என்பது அரவகுறிச்சிலே தெரிந்தது, அந்த விற்பனைக்காக இவர்கள் யாரும் குதிக்கவில்லை என்பது தெரிந்ததே

டிக்கெட் அதிகம் என்றால் பார்க்காமல் செல்வது மக்கள் விருப்பம், அப்படி அரசின் விதிமுறைகளை மீறியதென்றால் அது அரசின் கட்டுபாட்டு உரிமை.

அதனை விட்டு கபாலி டிக்கெட் அதிகவிலை என்பவன் தினமும் டாஸ்மாக்கில் கொள்ளைவிலையில் பீர் வாங்கி குடித்துவிட்டே புலம்பிகொண்டிப்பவனே

உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை?, ரஜினி அவர் தொழிலை ஒழுங்காக செய்தார் அவ்வளவுதான்.

இதில் அவரையே சாட என்ன இருக்கின்றது?


18-07-2016

படங்களின் ஆடியோ வெளியீடு, டிரைலர் வெளியீட்டிற்கு தானு செய்யும் ஆர்ப்பாட்டம் உலகறிந்தது.

அதுவும் ரஜினி படம் என்றால் அது பெரும் அமர்க்களமாக இருக்கும், கலைஞர் வரை அழைப்பார்கள், பெரும் பிரபலம் எல்லாம் கலந்துகொள்ளும் விழாவாக அது அமைந்திருக்கும்,

பலர் அழைக்காமலே சென்று கலந்துகொண்டிருப்பார்கள்.

ஆனால் ஏழை திருமணம் போல ஆர்ப்பாட்டமே இல்லாமல் பாடலும், டிரைலரும் வெளியிடும்போதே கொஞ்சம் பொறி தட்டிற்று.

ஏன் இவ்வளவு எளிமையாக செய்திருக்கின்றார்கள் என்றால் இன்னொரு கோணமும் இருக்கலாம், அதாவது விழா என்றால் சிலரை பேசவிடவேண்டும், டைரக்டர் அதில் முக்கியமானவர்

சாதாரண பேட்டியிலே கம்பு சுற்றும் டைரக்டர், ரஜினி மேடை என்றால் விடுவாரா? எனும் அச்சமும் இருந்திருக்கலாம்

உறுதியான தகவல் இல்லை எனினும், ரஜினி தலை தப்பினால் போதும் என பறந்திருக்க வாய்ப்பு உண்டு.


 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s