சிவாஜி கணேசன் – நடிகர் திலகம்

முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகனின் நினைவு நாள்.

FB_IMG_1469070241280

நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர்.

நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார்.

அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு காட்டிற்று,

தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது.

எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் கொடுத்தான், எந்த மத துறவியும் கொடுக்காத சாந்தமான பாத்திரத்திலும் அவன் ஜொலித்தான், எல்லா மத துறவியாக அப்படியே பொருந்தினான்

கொடும் தீவிரவாதி முதல் கடமை தவறா காவல்துறை அதிகாரி வேடம் என அசத்தினான். வழக்கறிஞர் பாத்திரத்திற்கு இன்றுவரை பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கனவு

அந்த குட்டியானை நடையழகும், சிங்கத்தின் கர்ஜனையுமாய், புலியின் கம்பீரமுமாய் அவர் வலம் வந்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்கள்

அவராலே தான் சிவபெருமான், கர்ணன்,கட்டபொம்மன் முதல் , முதல் மரியாதை கிராமத்து வெகுளி மனிதர் வரை கண்முன் நிறுத்தபட்டது.

மகாகவி காளிதாஸில் அவன் ஆடுமேய்த்த அழகு, ஒரு கோனார் செய்யமுடியாதது, மக்களை பெற்ற மகராசியில் செய்யும் உழவு விவசாயி செய்யமுடியாதது, பிராமண வேடத்தில் அவர் சந்தியா வந்தனம் செய்யும் அழகில் அந்தணர்கள் அவுட். இவை எல்லாம் சிறுதுளிதான்.

பாகபிரிவினை படம் வந்தபின் ஒருவிழாவில் பார்த்துவிட்டு வெள்ளையன் சொன்னான், கதைக்கேற்ப ஒரு மாற்றுதிறணாளியினை டைரக்டர் நடிக்க வைத்திருக்கின்றார், அரங்கம் கை தட்டலில் அதிர்ந்தது.

இந்திய விடுதலை போராட்ட தலைவர்களாக வஉசி பாத்திரத்தினை காணும்பொழுது நாட்டுபற்று மேலோங்கும், அந்த வரலாறு கண்முன் வரும்.

சிந்துநதியின் மிசை நிலவினிலே என அந்த பாரதிபாடலில் வரும் சிவாஜிகணேசனில் மொத்த இந்தியாவையும் காணலாம், இன்றும் பாகிஸ்தானின் சிந்துநதியினை காணும்பொழுதெல்லாம் பாரதியும் கூடவே சிவாஜியும் நினைவுக்கு வராதவன் இந்திய தமிழனாக இருக்க முடியாது.

கொஞ்சம் தன் இமேஜினை காப்பாற்றிகொள்ளும் நடிகனாக, தந்திர நடிகனாக இருந்திருந்தால் இன்று ஆட்சிகட்டில் அவனுக்கு கீழேதான் இருந்திருக்கும்.

ஆனால் நடிப்பிற்கு துரோகம் செய்ய அவன் விரும்பவில்லை, குடிகாரன் முதல் சிகரெட் வரை கையிலேந்தி நடித்தான், பெண் பித்தனாக , கோமாளியாக , இரக்கமில்லாதவானக நடிக்க அவனுக்கு தயக்கமே இல்லை.

காரணம் அது அவன் வணங்கிய தொழில்.

அதுதான் அவனின் திரை பலம் மற்றும் ஒரே அரசியல் பலவீனம்.

திரையினை நிஜமென நம்பிய தமிழகத்தின் சாபக்கேடுதான் அந்த வளர்ப்புமகன் திருமணத்தில் ஓரமாக அவர் நின்றதும் அப்படியே இறந்தும் போனதும், இது தமிழக சிக்கல் விடுங்கள்.

ஆசிய ஆப்ரிக்க படவிழாவில் அவன் கொண்டாடபட்டான், அமெரிக்காவில் ஒருநாள் மேயராக அமரவைக்கபட்டான், சோவியத் யூனியன் அவனை உலகின் மிகசிறந்த கலைஞரில் ஒருவன் என்றது.

அன்றைய உலகின் நடிப்பு சக்கரவர்த்தி மார்லன் பிராண்டோ வாய்விட்டு சொன்னான் “என்னை போல அவன் எளிதாக நடித்துவிடுவானே அன்றி, அவனை போல நடிக்க என்னால் ஒருபோதும் நடிகக்க முடியாது”

அப்படிபட்ட கலைஞனுக்கு மத்திய அரசு பெரும் விருதுகள் ஒன்றையும் அளிக்கவில்லை, ரிக்ஷாகாரன் படத்தில் எம்ஜிஆரின் சிறப்புமிக்க நடிப்பிற்காக ஒரு விருது வழங்கியது, அந்த படத்தினை எத்தனை முறை பார்த்தாலும் ஏன் கொடுத்தார்கள் என இன்றுவரை விளங்காது

உதட்டை சரித்து கொண்டு ஆஆஆ.. என இறுதிவரை முகத்தை காட்டினார் எம்ஜிஆர், மஞ்சுளா வரும் காட்சியில் மட்டும் முகம் மாறிற்று, மற்றபடி அது ஆஆஆ.. அந்த விருது வழங்கிய அதிகாரிகள் ரசனை அப்படி இருந்திருக்கின்றது

சிவாஜிகணேசனுக்கு அப்படியான விருதுகள் எல்லாம் இல்லை, பின்னாளில் பால்கே விருது வழங்கினார்கள், அது எப்பொழுது பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கிய பின் பிரான்ஸ் தூதரகம் சிரிக்கும் முன் வழங்கினார்கள்,

இது அரசியல், விட்டுவிடுங்கள்

பராசக்தி முதல் முதல்மரியாதை வரை அவர் நடித்த படங்கள் காலத்தால் அழியாதவை. எத்தனை எத்தனை வேடங்கள் எத்தனை அற்புதமான நடிப்பு

ஸ்டைல் எனப்பதும் ஒருவித தனித்துவத்திலும் அவர்தான் முன்னோடி, கவனித்துபார்த்தால் ரஜினி எல்லாம் பிச்சை எடுக்கவேண்டும். ஆலயமணி, திருவிளையாடல், மகாகவி காளிதாஸ் போன்ற படங்களில் நடையிலே பல நடை காட்டியவன்

அட நடை என்ன நடை சிகரெட் குடிப்பதிலே பல ஸ்டைல் காட்டினான், அதுதான் கிளாசிக். அந்த பலவகை வசன உச்சரிப்பிற்கும் அவர்தான் இலக்கணம்.

மிகசிறந்த வில்லன் நடிகரும் கூட, அந்நநாள் எனும் படத்தினை விடுங்கள், பாசமலரிலும், ஆலயமணியிலும் வந்துபோகும் சிலநொடி வில்லத்தனமான முகம் நம்பியார் அப்பட்டமாக தோற்குமிடம்.

இன்று என்னமோ நடிகர் நடிகைகளுக்குள் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜி என என்னவெல்லாமோ சொல்கின்றார்கள், ஆனால் மிக்சிறந்த கெமிஸ்ட்ரி இருந்தது என்றால் அது சிவாஜிக்கும் பத்மினிக்குமான கெமிஸ்ட்ரி. ஹிஸ்டாரிக்கல் கெமிஸ்ட்ரி

இந்த இருவருமே இன்று இல்லை.

மகா திறமையான நடிகன். ஆனால் ஒரு வட்டத்திற்குள் அடைத்துகொண்டது தமிழ் திரையுலகம். அதுதான் இங்குள்ள பெரும் சிக்கல். ரஜினி தவிப்பதும், கமல் கை பிசைவதும் அப்படித்தான். அதாவது உனக்கு இதுதான் பாதை, இப்படித்தான் நீ நடிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான் எனும் மாதிரியான நிலை

அப்படித்தான் உருக்கமான பாத்திரங்களில் நடித்த சிவாஜி பின்னாளில் சிக்கிகொண்டார். இதனை கேரள இயக்குநர் ஒருவன் சொன்னான்

“சிவாஜி எனும் யானையினை பட்டினி போட்டு கொன்ற பாவம் ஒருநாளும் தமிழக திரையுலகினை விடாது”

இதனைத்தான் அவன் இறந்த அன்று உலகமே சொல்லிற்று

ஆயிரம் கவிஞர்கள் தமிழில் இருந்தாலும் கம்பனின் இடம் என்றுமே நம்பர் 1. அவனின் வர்ணனைகள் அப்படியானவை, தமிழுக்கோர் அடையாளம் அது, அழகு அது.

அதனால்தான் இன்றுள்ள மூளை கிறுக்குள்ள முன்,பின்,இடை,கடை நவீனத்துவ‌ கவிஞர்களை எல்லாம் நம்மால் கவிஞர்கள் என சொல்லவே முடிவதில்லை, மார்டர் ஆர்ட் எனப்படும் பயித்தியகார ஓவியங்களுக்கும் ரவிவர்மனின், மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்களுக்கும் வித்தியாசமில்லையா?

கம்பனின் இடம் அப்படியானது

அப்படி தமிழ்கலைத்தாயின் ஒரே மகன் சிவாஜி கணேசன். அவரின் நினைவுநாளில் அவருக்கு நினைவாஞ்சலி செலுத்தலாம்

அவர் இறந்த அன்று , இறுதி ஊர்வலத்தில் மரத்தில் இருந்து ஒருவன் கத்தினான், “ஒரே ஒரு நடிகன் இருந்தான் அவனும் செத்துவிட்டானே…” என ஒரு திசைபார்க்க கத்திகொண்டிருந்தான்

அவன் கத்திய திசையில் இன்றைய இம்சைகள் எல்லாம் நடந்துகொண்டிருந்தன.

தமிழ் உள்ள காலம் வரை கம்பன் நிற்பது போல, தமிழ்திரை உள்ள காலம் வரை சிவாஜி கணேசன் நிலைத்து நிற்பார் தலைமுறைகளை தாண்டி.

அவரின் கடைசி முத்திரையான தேவர் மகனில் கமலஹாசனின் சட்டையினை இழுத்து கேட்பார் “என் மகன என்கூடவே வச்சிபாக்கணும்கிற ஆச என்க்கு மட்டும் இருக்காதா??…”

அந்த உருக்கத்தில் தந்தை பாசம் அப்படி வழியும்.

அக்காட்சியினை காணும் வெளிநாட்டு வாசி எவனும் தந்தையினை நினைத்து அழாமல் இருக்கமுடியாது,

அதுதான் சிவாஜியின் வெற்றி

சிதறல்கள்

மாயாவதியினை பாஜக எம்பி அவமானமாக திட்டிவிட்டாராம், அருண் ஜெட்லி மன்னிப்பு கேட்கும் அளவிற்கு சென்றிருக்கின்றது நிலமை, திட்டியது நமது கிராமபுறங்களில் கொட்டும் வசவு சொல், நிச்சயம் சொல்ல கூடாத சொல், ஒரு ஆளும்கட்சி எம்பி அதனை சொன்னது அவரின் பண்பாட்டு முதிர்ச்சியினை காட்டுகின்றது அவ்வளவுதான்

ஆனால் இதனை போல ஆயிரம் கடும் சொல், வேதனைகளை, வக்கிரமான சொற்களை தாண்டித்தான் பெரியார் போராடினார், இன்றோ ஊடகம் உச்சத்தில்இ ருக்கின்றது,

விஞ்ஞான ஜாலத்தில் தகவல் நொடிக்குள் பாக்கெட்டுக்கு வருகின்றது ஒரு வார்த்தை பேசி முடிக்குமுன் அது உலகெல்லாம் தெரிகின்றது,

மாயாவதிக்கு ஆதரவு பெருகுகின்றது

ஆனால் பெரியார் காலத்தில் என்ன இருந்திருக்கும்? அவரின் போராட்டமும், ரணமும் எவ்வளவு கொடுமையானதாக இருந்திருக்கும்?

நினைத்தாலே மலைக்கவைக்கும் தைரியமும், உறுதியும் அவரிடம் இருந்தாலன்றி அது சாத்தியமில்லை

பாஜக இம்மாதிரியான சர்ச்சைகளில் சிக்கும்போதெல்லாம் அவரின் முகம் வந்தே போகின்றது,

இந்த நாகரீக உலகத்திலே இந்த கேள்வி கேட்பவர்கள், பெரியாரை என்னவெல்லாம் கேட்டிருப்பார்கள்?

எப்படிபட்ட பெரும் நெருப்பாரினை தனி மனிதனாக தாண்டி இருக்கின்றார் அந்த ஆச்சர்ய மனிதர்.?


புரட்சி, தலித்தியம், இன விடுதலை, போராட்டம் எல்லாம் படமெடுக்க இந்தியாவில்தான் அதுவும் தமிழகத்தில்தான் சாத்தியம்.

பல‌ நாடுகள் இம்மாதிரியான குழப்பங்களை கொஞ்சமும் சகிக்காது,

உலகெல்லாம் தமிழர்கள் அடக்கி வைக்கபட்டிருப்பது போலவும், அதிலும் தலித் அரசியல் இருப்பதாகவும், அங்கெல்லாம் போராட்டங்கள் நடப்பதாகவும் காட்டபட்டால் அந்த அரசுகள் காட்சிகளை வெட்டி எறிய தயங்காது.

வரும் தகவல்களை பார்த்தால் டைட்டில்கார்டும், வணக்கம் எனும் முடிவு ஸ்டில்லும்தான் பலநாடுகளில் தெரிய வாய்ப்பு இருக்கின்றது.


 

இந்திய ராணுவத்தை கூலிப்படை என சொன்ன சைமன்

இந்திய ராணுவத்தை கூலிப்படை என சொன்ன சைமன் எனும் சீமானை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்நாட்டை காக்கும் அந்த தெய்வங்களை கொச்சைபடுத்திய இந்த எச்சையினை இந்திய தேசிய குடிமக்கள் அனைவரும் கண்டிக்க கடமைபட்டுள்ளார்கள்.

ஈழத்தில் பிரபாகரன் மணலாற்றில் சுற்றி வளைக்கபட்ட நிலையிலும், கொல்வதற்கான உத்தரவு எமக்கு இல்லை என சொல்லி தயங்கி நின்றது எமது ராணுவம், அது கூலிபடையா?

எது கூலிபடை?

கூலிக்கு சினிமா எடுப்பதும், கூலிக்கு ஈழதமிழனுக்காக மாரடிப்பதும் கூலியே அன்றி, உயிர் கொடுத்து தேசம் காக்கும் தியாகம் ஆகாது.

இது மிக கடுமையாக கண்டிக்கதக்கது, அந்த ராணுவத்தின் பாதுகாவலில் ஹாயாக சென்னையில் அமர்ந்துகொண்டு இப்படி மானமுள்ளவன், அறிவுள்ளவன் பேசுவானா?

எமதருமை கடற்படையே, அப்படியே இவரை இலங்கையில் விடுங்கள், அங்கே தெரியட்டும் இந்திய ராணுவத்தின் அருமை.

அது எப்படி சைமன்,?, ராஜிவ் அனுப்பிய அமைதிபடை, சோனியா நடத்திய இறுதி யுத்தம், கலைஞர் கொடுத்த ஒத்துழைப்பு

ஆனால் காஷ்மீரில் நடப்பது மட்டும் கூலிப்படை தாக்குதலா?

2009ல் கைது செய்யபட்டால் உங்களை கைது செய்தால் கலைஞர் அரசு, இனி கைது செய்தால் அது கூலிபடையா?

என்னய்யா இப்படி நடுங்குகின்றீர்?


காஷ்மீரை ஆக்கிரமித்து, பொதுமக்கள் மீது இந்திய ராணுவம் வன்முறை வெறியாட்டம் , புர்கானை கொன்றது கூலிபடை என சீமான் கண்டனம்

# நாம் சொல்லவில்லை, எல்லாம் முடிந்த பின் வந்து ஒப்பாரி வைப்பதுதான் அங்கிள் அரசியல் இலக்கணம் என்று, இதோ எல்லாம் முடிந்ததும் வந்துவிட்டார், வரவேண்டிய நேரத்திற்கு ஒரு நாளும் வரமாட்டார்.

தமிழகத்தில் கொடியன்குளம் படுகொலைகள் , தாமிரபரணி ஆற்றில் பலபேர் சாகடிக்கபட்டபொழுதெல்லாம் அங்கிள், ஈழத்தில் சிங்களபடைகளுடன் மோதிகொண்டிருந்ததால் குரல் எழுப்பமுடியாமல் போனது வரலாற்றுறுக்கொடுமை.

மேலவளவு படுகொலைகள், இன்னும் கவுரவ கொலைகள் எல்லாம் நடக்கும் தமிழகத்தில் என்ன நடந்தாலும் அங்கிளுக்கு கவலை இல்லை, ஆனால் தமிழகம் தாண்டி யாராவது செத்தால் அங்கிள் சும்மா விடமாட்டார்.

அப்படியும் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள மற்ற இரு நாடுகளையும் விட்டுவிட்டு இந்திய பகுதியில் இருந்து மட்டும் வெளியேறவேண்டுமாம்.

மட்டகிளப்பினை ஈழமாக அறிவித்துவிட்டு, யாழ்பாணத்தை சிங்களனுக்கு கொடுத்துவிடலாம் என்பது போலத்தான் இதுவும்.

அது என்ன அங்கிள் கூலிப்படை? வெளிநாட்டு கூலிக்காக அடைக்கலம் கொடுத்த நாட்டின் தலைவரை கொன்றது போன்ற கூலிபடையா? .

இது ராணுவம், எமது பெருமை மிகு ராணுவம்.

ஏதோ பயம் அங்கிளுக்கு, நாளையே தூக்கி உள்ளே வைத்தால், என்னை சிறைபடுத்தியது கூலிபடையே அன்றி ஜெயலலிதா அரசோ, மோடி அரசோ அல்ல என சொல்லிகொள்ளலாம் அல்லவா? அந்த எச்சரிக்கை

சொந்த தமிழின போராளிகளை கும்பல் கும்பலாக புலிகள் கொன்றபோது அமைதியாக படமெடுத்துகொண்டிருந்தவன் எல்லாம் காஷ்மீரில் மனிதநேயம் பேசவந்ததுதான் கொடுமை.

வெரி பன்னி பொலிட்டிசியன்.