ராணுவம் இல்லா ஈழத்தில் மொத்தமும் சாதி சண்டை போட்டு அழிவதற்கா?

யாழ்பாணத்தில் ஆடிமாத திருவிழாக்கள் பிரசித்திபெற்றவை, என்ன இருந்தாலும் தமிழர் அல்லவா? கூடவே படித்த தமிழர்கள் வேறு அதனால் தமிழகத்தை விட சாதிகொடுமை அதிகம்..

ஒரு கோயிலில் தமிழக கண்ட தேவி போல சர்ச்சை, தேரிழுப்பதில் கலவரம் ஈழத்து டாக்டர் கிருஷ்ணசாமி என‌ யாரும் உண்டா இல்லையா என தெரியாது , ஆனால் வருட கணக்கில் நிறுத்தவில்லை, உடனே இழுத்தாக வேண்டுமாம், ஆனால் யார் இழுக்கவேண்டும் என்பதில் அடிதடி. காரணம் சாதி

சிங்கள அரசு நடவடிக்கை ஏதும் எடுத்தால் என்ன ஆகும்? ஐயகோ தமிழரை கொல்கிறார் பாரீர், என சைமனும் தி.முருகனும் பொங்குவார்கள் அல்லவா, அதனால் சிங்கள அரசு இப்படி யோசித்து, நாங்களே தேர் இழுப்போம் என்றது

சிங்கள ராணுவத்தார் ஆகம விதிப்படி சட்டை இல்லாமல் தேர் இழுத்திருக்கின்றனர், திருவிழா அமைதியாக நடந்திருக்கின்றது

முன்னமே நல்லூர் கந்தசாமி ஆலய திருவிழாவில் வானிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர் தூவிய நிகழ்வும் நடந்தது, இதெல்லாம் இங்கு பேசமாட்டார்கள், அவர்கள் அமைதியானால் மகிழ்வானால் ஒற்றுமையானால் இவர்களுக்கு பிடிக்காது.

இந்த சாதி பிரச்சினைதான் ஈழபோராளிகுழுக்கள் தங்களுக்குள் மோதி அழிய பெரும் காரணம் என்பார்கள் அனுபவஸ்தர்கள்.

ஈழம் அமைய வேண்டுமானால் போராளி வேண்டாம், அமைதிபடையினை அனுப்பாதீர்கள், துப்பாக்கிகள் தேவையில்லை

Stanley Rajan's photo.

 

மாறாக பெரியார் கொள்கைகளை அனுப்புங்கள், அவர் போதனையினை பரப்புங்கள் என்ற ஒரு சிந்தனையாளனின் குரல் மறுபடியும் காதோரம் ஒலிக்கின்றது

அங்கிள் சைமன், திருமுருகன் காந்தி எல்லாம் தாங்களாக மன்னிப்பு கேட்டு ஓடிவிடுவது நல்லது, இல்லை என்றால் உங்கள் சாதியினை தெரிந்துகொண்டு அவர்களாகவே உங்களை ஓட அடிப்பார்கள்

அதனால் இருவரும் உங்கள் பரிவார அமைப்புகளுடன் கொழும்பு சென்று அங்கு இருக்கும் அமைதிபடை வீரர்களுக்கான நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ஓடிவிடுவது நல்லது, இல்லையேல் இன்னும் கிழிக்கபடுவீர்கள்

இதுதான் ஈழத்தில் சிங்களபடை நடத்தும் அட்டூழியமா, இதற்குத்தான் சிங்கள ராணுவத்தை யாழ்பாணத்தில் இருந்து வெளியேற சொல்கின்றீர்களா? எதற்கு

ராணுவம் இல்லா ஈழத்தில் மொத்தமும் சாதி சண்டை போட்டு அழிவதற்கா?????

ஈழம் பாய்ஸ், பெரியாரையா தமிழனில்லை என சாடினீர்கள்? பாருங்கள் அவர்தான் இன்றும் என்றும் ஈழத்தின் முதல் தேவை