சிதறல்கள்

அவ்வப்போது மலேசியாவில் வரும் சத்தம்தான், தமிழ் இளைஞர்களிடம் வன்முறை அதிகரிக்க தமிழ் படங்களை மலேசியாவில் அனுமதிப்பதுதான் காரணம் என்றொரு பேச்சு இருந்தது, கூடவே சின்னதிரை சீரியல் குடும்ப நேரத்தை சீரழிக்கின்றது என்ற முணுமுணுப்பும் இருந்தது

இந்த நிலையில் கபாலி வேறு வந்துவிட்டு ரத்த களறியினை காட்டிவிட்டதா? அது போதாதா?, மொத்தமாக தமிழ் படங்களை தடுக்கவேண்டும் என்றும், மொத்தமாக‌ வேண்டாம் வன்முறை ஆபாச படங்களை மட்டும் தடுப்போம் என்றும் மாறி மாறி பேசுகின்றனர்

முன்பு போல நல்ல தமிழ்படங்கள் மட்டும் இனி திரையிடபடவேண்டும் என சொல்லிகொள்கிறார்கள்

நல்ல படங்கள் என்றால், அவரின் படங்களை விட்டால் என்ன இருக்கின்றது? யார் அவர் எம்ஜிஆர் தான்

இனி மலேசிய தியேட்டர்களில் எம்ஜிஆரின் பிண்ணணியில் கேசுதாசின் குரல் ஒலிக்கலாம்

“ஒன்றே குலமென்று பாடுவோம், ஒருவனே தேவன் என்று போன்றுவோம்”


இந்திய தலையெழுத்து எப்படி மாறிவிட்டது?

எல்லா சுதந்திரமுள்ள‌ நாடாக இது மலரவேண்டும் என்றார் காந்தி

பாகிஸ்தான் இல்லா இந்தியாவாக மலர்ந்தால் போதும் என்றார் ஜின்னா

பஞ்சமில்லா இந்தியா மலரவைக்க போகின்றேன் என்றார் நேரு

வலுவான இந்தியா என்றார் இந்திரா

அறிவியில் இந்தியா என்றார் ராஜிவ்,

மண்டல் கமிஷன் இந்தியா என்றார் விபி சிங்

ஒளிரும் இந்தியா என்றார் வாஜ்பாய்

வேலைவாய்ப்புள்ள இந்தியா என்றார் மன்மோகன்

அதன் பின் இந்துக்கள் இந்தியா என்றது பிஜேபி

இப்போது தலித் இந்தியா என்கின்றார்கள்


 கைபர் வழியாக வந்த பிராமணர்கள் உயர்சாதியில் இருந்தவர்களுடன் சம்பந்தம் வைத்துதான் இங்கு அரசியல் உச்சம் அடைந்தார்கள்

சொல்பவர்கள் திமுக பக்தர்கள், கலைஞரினை கொண்டாடுபவர்கள்

கலைஞர் கூடத்தான் எல்லா சாதிகளிலும் சம்பந்தம் வைத்திருக்கின்றார், அவர் வீட்டுக்குள்ளே சமத்துவபுரம் உண்டு என்பது மட்டும் மறந்துவிடும் போலும்.

அடேய் சிந்தித்துவிட்டு பேசுங்கள், ஆண்ட பரம்பரை என்பது எப்படி பிராமணனுக்கு பொருந்தும்?,

இந்தியாவில் ஒரு பார்ப்பண மன்னனை , அவன் ஆண்ட நாட்டை காட்ட முடியுமா? (புராண கதைகளை தவிர)

இவர்கள் போகிற போக்கினை பார்த்தால் ராஜராஜ சோழன் எங்கள் சாதி என இதுவரை சொல்லாத ஒரே ஜாதியான பிராமணனையும் விரைவில் அந்த கோதாவில் இறக்கிவிடுவார்கள் போலிருக்கின்றது


 இன்று தினமணி நாளேட்டினை வறுத்தெடுக்கின்றார்கள், அவர்கள் எழுதியது தவறாக இருக்கட்டும், அல்லது தவறான விதமாக எடுத்துகொள்ளபட்டதாக இருக்கட்டும், விட்டுவிடலாம்

ஆனால் முன்பு மெட்ராஸ் பட விமர்சனத்திற்கு மதனுடன் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஞ்சித் எப்படி பதிலளித்தார், அம்முகத்தில் ஒரு புன்னகையுமில்லை, மதனை நேருக்கு நேர் பார்க்ககூட அவர் விரும்பவில்லை, முகத்தை ஒரு மாதிரி வைத்துகொண்டு டக் கென்று மறித்து , மறுத்து அவர் பேசிய விதங்களும் சில வெறுப்பினை அப்பட்டமாக காட்டின‌

மதனின் சாதி தேவையில்லை, ஆனால் மனிதரின் அனுபவமும் அறிவும் சால சிறந்தது என்பதில் சற்றும் சந்தேகமில்லை, அவரின் பரந்த சகல உலகதுறை அனுபவ அறிவின் முன்னால் நிச்சயம் ரஞ்சித் கத்துகுட்டி.

அந்த மதனை ஒரு மாதிரி, பிடிக்காதவர் போல‌ ரஞ்சித் அந்த பேட்டியில் புறக்கணிக்க காரணம் என்ன? இருவருக்கும் தனிபட்ட பகை சாத்தியமே இல்லை

மதன் நெடுங்கால ஊடக வாசி, அவரின் சென்னை அனுபவமும், அவர் பார்க்கும் பரந்த பார்வையும் வேறுமாதிரியானது, கொண்டாடபடவேண்டிய ஒரு தமிழர் மதன், மாற்றுகருத்தே இல்லை,

பின்னர் ஏன் அப்படி? அன்று சில அபத்தமான ரஞ்சித்தின் கருத்துக்களை கடந்து சென்றது நிச்சயம் மதனின் பெருந்தன்மை

அதனை எல்லாம் பற்றி பேசமாட்டார்கள், தினமணி அய்யரை மட்டும் பொளந்து கட்டுவார்கள்.


பாகுபலி 2 எப்போது ரிலீஸ் என கிளம்பிவிட்டது ஒரு கூட்டம், அப்படித்தான் கிளம்புவார்கள், கட்டப்பா ஏன் பாகுபலியினை கொன்றான் என விடைகாண போகின்றார்களாம்

அப்படியே இந்த ரணகளத்திலும் மலேசிய போலிசிடம் சரண்டரான கபாலி ரஜினி, 2ம் பாகத்தில் வெளிவருவார் என நம்பிகொண்டிருக்கின்றார்கள் சிலர்

இதனை ரஜினியிடம் சொல்லி பார்த்தால் தலைதெறிக்க ஓடுவாரா மாட்டாரா?


“சினிமாக்காரர்கள் என்பவர்கள் வர்த்தக சூதாடிகள், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நல்லுணர்வுகளை நாசப்படுத்தி, அவர்களின் சொந்த வாழ்க்கையையே சினிமாத்தனப்படுத்தி, பொய்மையில் மூழ்கடித்தே சம்பாதிப்பவர்கள்

தங்கள் சொந்த மக்களின் மனமும், தரமும், குணமும், பண்பும் சீரழிவது குறித்து, இந்தப் பண வேட்டைக்காரர்களுக்கு, கொஞ்சமும் உறுத்தல் இல்லை.

அப்படிப்பட்ட உள் உறுத்தல், அவர்களறியாமல், அவர்களுக்குள் ஏற்படும் போது தான், புராணம், தமிழ்மொழி, கற்பு, பெண்மை, கடமை, தியாகம், தர்க்கம் மற்றும் கலை போன்ற ஆர்ப்பாட்டமான பெரிய வார்த்தைகளை, லாப வேட்டை கருதி, பொய்யாக பிதற்றி, அந்த கேவலத்திலேயே மக்களை சிந்திக்கவும் வைக்கின்றனர்,

இது மகா ஆபத்தானது ” : ஜெயகாந்தன்

(இதில் இப்பொழுது பெண்ணடிமை, சாதி பிரச்சினை, அரசியல் என சில விஷயங்களை சேர்த்துகொள்ளலாம் )

முகநூலில் மல்லுகட்டி நிறபவர்களை கண்டால் ஜெயகாந்தனின் இந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றது

வர்த்தக சூதாடிகள் இப்படி மக்களின் அடிப்படை உணர்வுகளில்தான் சம்பாதிக்கின்றார்கள்.

நிச்சயமாக ஜெயகாந்தன் ஒரு ஞானி.


இதோ 29 ராணுவ வீரர்களுடன் விமானம் காணாமல் போயிருக்கின்றது, தீவிரமாக தேடுகின்றார்கள். அவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் பரிதவிக்கின்றனர்

செயற்கை கோளினால் தேடியும் பயனில்லை, 3 நாளாக தேடுகின்றார்கள், அச்சம் மேலோங்குகின்றது, சதி வேலையா? அல்லது ஏதும் காரணமா என தேசம் அஞ்சுகின்றது

ஆனால் இதனை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் கபாலி, ரஞ்சித் என பேசிகொண்டிருக்கின்றான் அல்லவா அவன் தான் தமிழன்,

நிச்சயம் தமிழன். இந்தியன் அல்ல, இவர்களுக்காக அந்தமான அருகில் ஒரு தீவில் தனி நாடு அமைத்து கொடுத்தே தீரவேண்டும்

அங்கு ராணுவம் கட்டுவானோ, சட்டமன்றம் கட்டுவானோ இல்லையோ நிச்சயம் தியேட்டர்கட்டி ரசிப்பான், ரசிக்கட்டும்


காஷ்மீர் இளைஞர்களை வன்முறையில் தூண்டி விடுகிறது பாகிஸ்தான்: மெஹபூபா குற்றச்சாட்டு

ம்ம்ம்மே….. 17 எனும் ஆட்டுமந்தை கூட்டமும், அங்கிள் சைமனின் அடிப்பொடிகளும் இதனை கவனிப்பது நல்லது

காரணம் சொல்வது காஷ்மீரிய மாநில முதல்வர், மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட முதல்வர், அவர் பாகிஸ்தானை சாடுகிறார் என்றால், இந்திய ராணுவத்தை ஆதரிக்கின்றார் என பொருள்,

அதாவது பாகிஸ்தானிய தலையீடு இல்லை என்றால் இந்திய ராணுவம் ஏன் நிற்கவேண்டும் என மறைமுக பொருள்.

உங்களுக்கு இதெல்லாம் புரியாது எனினும், இனியாவது புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள்

தமிழ் தேசியம் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து

உலகெல்லாம் தமிழருக்கு பெரும் அவமானம் நிலவுவது போலவும், உலகெல்லாம் அவன் அடிபட்டுகொண்டிருப்பது போலவும் பலர் பேசிகொண்டிருக்கின்றனர், உண்மையில் நிலை என்ன?

வெள்ளையன் காலத்தில் உலகெல்லாம் கொண்டுசெல்லபட்டனர் தமிழர், அதுவும் பெரும்பாலும் அடித்தட்டு தமிழர் கொஞ்சம் மேல்தட்டு + யாழ்பாண படித்த தமிழர்

வெள்ளையன் காலம் வரை சிக்கல் இல்லை, ஏன்? அன்று தேர்தல் இல்லை, அரசியல் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, வெள்ளையன் வைத்ததே நீதி, சட்டம் எல்லாம். அவனும் படிப்பிற்கும் திறமைக்கும் முக்கியத்துவம் கொடுத்தான், அவது அதிகார அரசியலுக்கும் அது அவசியம்.

அவனும் சில விஷயங்களில் விஷ வித்துக்களை விதைத்தே வைத்திருந்தான்.

சுதந்திரம் கொடுத்து அவன் மூட்டை கட்டிய பின்னரே, இம்மாதிரியான சிக்கல்கள் தொடங்கின, எதில் தொடங்கின? நிச்சயமாக தேர்தலில், அதுவும் வாக்கு அரசியலில்

காரணம் பெருவாரி மக்கள் வாக்கு இல்லாமல் ஒரு மக்களாட்சி அமைய முடியாது, வாக்கு முக்கியம் அதற்கு பெரும்பான்மை மக்களை பகைக்க முடியாது, அதனால் என்ன செய்தாகள்? மக்கள் தொகை அடிப்படையில் நலதிட்டங்களை பகிர்ந்தளித்தார்கள்

இலங்கையில் ஈழதமிழர் வெறும் 13%, மலேசியாவில் தமிழர் வெறும் 8% அப்படியானால் மற்ற இனத்தவர் எண்ணிக்கையினை நீங்களே கணித்துகொள்ளுங்கள், இப்போது பிரச்சினை எப்படி வரும்?

நூறு வேலைகளில் இலங்கையில் 13 வேலை ஈழமக்களுக்கு செல்லும், மலேசியாவில் 8 வேலை செல்லும் அப்படித்தானே? அப்பொழுதுதானே சிக்கல் வராது, 65% மலாய் மக்கள் எனின் அவர்களை அரசு சமாளிக்கவேண்டாமா? இருக்கும் வேலைகளை எல்லாம் இவர்களுக்கே கொடுத்துவிட்டு சும்மா இருக்குமா? பின்னர் எந்த பெரும்பான்மை இனம் வாக்களிக்கும்?

மலேசியாவில் சீன சமுகம் 20% மேல் உண்டு, 1% ஐரோப்பிய வம்சமும் உண்டு, அவர்கள் எல்லாம் உழைப்பில் வாழ்பவர்கள், ஒரு நாளும் ஒரு குரலும் அவர்கள் எழுப்பியதில்லை, வய்ப்புக்களை பயன்படுத்தி முன்னேறிகொண்டிருக்கின்றார்கள்.

இவ்வளவிற்கும் சீன நாட்டின் சீனர்களின் தொப்புள்கொடி உறவோ, அந்த பிண்ணிபாதுகாப்போ அவர்களுக்கு இல்லை, உழைப்பு, அயராத உழைப்பு அவர்களை பாதுகாக்கின்றது.

இம்மாதிரியான மக்களாட்சியில் அப்படி உழைத்தும் வாழலாம், வீணாக அரசினை ஏன் எதிர்பார்த்துகொண்டிருக்கவேண்டும் என்பது அவர்கள் சிந்தாந்தம், இருக்கும் வாய்ப்புக்கள் அப்படி.

மக்களாட்சியில், வோட்டு அரசியல் ஏற்படும் சிக்கல்கள் இவைகளே தவிர தமிழனை திட்டமிட்டு ஏமாற்றும் செயல்கள் அல்ல, வெள்ளையன் ஆண்டுவிட்டு சென்ற எல்லா நாடுகளிலும் இருக்கும் சிக்கல், எல்லா பெருவாரி சிறுபான்மை இனங்களுக்கும் இருக்கும் சிக்கல்.

அமெரிக்காவில், தென்னாப்ரிக்காவில் இன்னும் உலகின் பலநாடுகளில் இது உண்டு.

ஒரே மொழிபேசும் நாடுகள் கூட இப்பிரச்சினைகளால் பிரிந்து கிடக்கின்றன, மொழி ஒரு தேசத்தை ஒருங்கிணைக்கும் என்றால் சீனா, தைவான். வடகொரியா தென் கொரியா , சூடான் தென் சூடான் என ஏராளமான நாடுகள் ஒரே மொழி பேசி பிரிந்துகிடக்கும் நாடுகள் உண்டு, மொழி தேசியம் ஒருங்கிணைப்பினை உருவாக்கும் என்பதெல்லாம் மாயை

தெலுங்கான ஆந்திரா பிரியவில்லையா?

ஆக தமிழ்தான் பிரச்சினை, தமிழன் என்பவந்தான் அடிமை என்பதெல்லாம் வீண் சர்ச்சையும், இயலாமையினை அதன் மீது மறைத்துகொள்ளும் வேடமே அன்றி வேறல்ல.

இதே மலேசியாவின் நீதிபதிகளாக, பெரும் அரசு அதிகாரிகளாக தமிழர்கள் இல்லையா? அரசு கொள்கைகளுக்கு ஏற்ப தமிழருக்கு மக்கள் தொகை விகிதாச்சர அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கபட்டுகொண்டே இருக்கின்றது,

அது அல்லாது உழைத்து உருவான நம்பர் 1 பணக்காரன் தமிழன், ஏர் ஏசியா நிறுவணர் ஒரு மலையாளி இவர்கள் எல்லாம் இந்நாட்டில் சாதிக்கவில்லையா? தமிழன் என்றவுடன் விரட்டினார்களா?

கல்வியும், உழைப்பும் எல்லா இனத்தையும் வாழ வைக்கும்பொழுது தமிழனை மட்டும் கைவிட்டு விடுமா?

உச்சமாக வறுமையுற்ற இனத்தை முன்னேற்ற இந்தியாவில் இட ஒதுக்கீடு இல்லையா? எதற்காக? நாம் செய்யலாம், அந்த நாடுகள் செய்ய கூடாதா?

நாம் என்ன திறமை பார்த்தா மக்களுக்கு வாய்ப்பு வழங்குகின்றோம், இந்தியாவில் அதுவா நடக்கின்றது? கோட்டா முறை இல்லை என சொல்லுங்கள், மனசாட்சி இருந்தால் சொல்லுங்கள்

இந்தியா செய்தால் புரட்சி, அவர்கள் செய்தால் தமிழர் முடக்கமா? உரிமை பறிப்பா?

நமது தாழ்த்தபட்ட சாதிகளை போலவே அறியாமையிலும், ஏழ்மையிலும் இருந்தவை, இருப்பவவை அந்நாட்டு பெரும்பான்மை இனம். வறுமையும் போராட்டமும் அவர்களுக்கும் உண்டு, சிங்களனில் உண்டு, மலாய் இனத்தவரில் உண்டு.

வறுமை எல்லா இனங்களிலும் உண்டு, தமிழரிடம் மட்டுமில்லை. அவர்களிடமும் உண்டு.

ஆக சில சர்ச்சைகள் எல்லாம் வாக்கு வங்கி அரசியலால் வந்த சிக்கலே அன்றி, தமிழன் மட்டும் திட்டமிட்டு முடக்கபடுகின்றான், தமிழனுக்கொரு நாடில்லாமல் இதற்கு தீர்வில்லை என எவனாவது சொலவானால் அது சரியான தீர்வே அல்ல‌

அப்படி தமிழருக்காக தனிநாடு அமைந்தாலும் என்ன நடக்கும்? கொஞ்சநாளில் இதே இட ஒதுக்கீடு மண்ணின் மைந்தருக்கு முன்னுரிமை என கிளம்பிவிட மாட்டார்களா?

அப்பொழுது இதே போல தமிழர் எல்லா நாட்டிற்கும் ஓடி செல்லத்தான் செய்வார்கள், இவர்களால் அவர்களை வைத்து அரசியல் செய்யமுடியுமே தவிர காப்பாற்ற முடியுமா?

ஈழ அகதிகளும், போரில் வாழ்வினை தொலைது வறுமையில் அங்ககீனர்களாக வாழும் முன்னாள் போராளிகளுமே அதற்கு பெரும் சாட்சி.

அல்லது என்ன செய்வார்கள்? ஒரு உரிமையும் கொடுக்காமல் காட்டாட்சி நடத்தியதே பர்மீய ராணுவம், அப்படி ஆக்கி வைப்பார்கள். முன்பு ஈழத்தை புலிகள் அடக்கி வைத்ததை போல‌

இதுதான் இவர்கள் சொல்லும் தமிழ் தேசியம் எனும் பெயரில் கட்ட பஞ்சாயத்து.

இலங்கையின் முதல் குடிமகள் தமிழச்சி

இலங்கை அதிபர் மைத்ரி சிரிசேனாவின் மனைவி யாழ்பாண தமிழ்பெண். அதாவது இலங்கை தேசத்தின் முதல் குடிமகள் ஒரு தமிழச்சி, அதுவும் ஈழ தமிழ்பெண்

எங்கிருந்தாவது அவர் ஒரு தமிழின துரோகி, சிங்களவனை மணந்தவள் மானமிக்க தமிழச்சியாக இருக்கமுடியாது என சத்தம் வருகின்றதா? வராது.

அங்கிளின் பாய்ஸ், ம்ம்மேஏஏஏஏஏ ..  17 எனும் ஆட்டு மந்தை இயக்கம் போன்றவர்களுக்கெல்லாம் இன்னும் சரியாக தெரியாது போல (அவர்களுக்கு எதுதான் ஒழுங்காக தெரியும்), தெரியும் பட்சத்தில் இவர்கள் முழக்கம் எப்படி இருக்கும்?

Stanley Rajan's photo.

குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குவது போல இருக், தமிழருக்கு தனி உரிமை கொடுக்கா மைத்ரிபாலாவிற்கு தமிழ்பெண் மட்டும் வேண்டுமா? நல்ல மானமுள்ள சிங்களன் என்றால்……  என பலவாறு முழ்ங்குவார்கள்.

மைத்ரிபாலாவின் மனைவி ஜெயந்தி கம்யூனிஸ் கோட்பாடில் ஈடுபாடு கொண்டவர், அதில் ஈர்க்கபட்ட மைத்ரிக்கும் அவருக்கும் காதல் மலர்ந்திருக்கின்றது, இருவருமே மார்க்ஸ்,லெனின், சே குவேரா போன்றோரை நேசிப்பவர்கள்

நமக்கு கவலை என்னவென்றால், அங்கிள் சைமன் மட்டும் 2005ல் இருந்தது போல மார்க்ஸ் பேரனாகவோ, சே வின் டிசர்ட் போட்ட தம்பியாகவோ இருந்திருந்தால் இந்நேரம் மைத்ரிபாலா தம்பதியரின் பாடி கார்டாக மாறி இருப்பார், ஆனால் என்ன செய்ய அதன் பின் பிரபாகரனின் தம்பியாக மாறி, அதனையும் துறந்து இன்று நம்மாழ்வாரின் தற்காலிக சீடராகிவிட்டார்.

ஆனாலும் மைத்ரி பெருந்தன்மையானவர், இந்நாளளவும் யாழ்பாண தமிழச்சியினை மணந்த தமிழன்நான் என எங்கும் வோட்டுக்காக ஒருவார்த்தை சொன்னதாக தெரியவில்லை, அங்கு நிற்கிறார் மனிதர்