சிதறல்கள்

வைரமுத்து சொன்னது அப்படி ஒன்றும் பெரிய தவறு அல்ல, உலகம் சொன்னதை அவரும் சொன்னார் அவ்வளவுதான்

கபாலி மிகபெரும் வெற்றி என சொன்ன ரஜினியினை விடவா நெஞ்சார பொய் சொல்லிவிட்டார் வைரமுத்து?

கபாலி வெற்றி என ரஜினி சிரித்துகொண்டே சொல்லும்போது மறைந்த மனோரமாவின் நினைவு வந்து தொலைக்கின்றது


அப்துல் கலாம் என்ன பிராமணரா? அவர் எல்லாம் உச்சம் தொடவில்லையா? இதுபோன்ற எத்தனை அடையாளங்கள் தமிழகத்தில் உண்டு, அவர்கள் எல்லாம் சாதியால் முன்னேறினார்களா?

சிவநாடார் தொட்டிருக்கும் உயரம் என்ன? இன்னும் உழைப்பால் பலர் உயர்ந்த நாடு இது, அம்பானி முதல் திநகர் சரவணா ஸ்டோர் வரை சாதியால் உயர்ந்தார்களா?

எத்தனை பெரும் இயக்குநர்கள் உள்ள தமிழகம் இது, இவர்கள் எல்லாம் ஜாதியால் உயர்ந்தார்களா? இளையராஜாவும், ரகுமானும் ஜாதியால் உயர்ந்தார்களா, சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் ஜாதிதான் கூட வந்ததா?

இதோ விகடன் டிவியில் ஜாதி இல்லாமல் நான் இந்த நாட்டில் என்ன கிழிக்க முடியும்? எங்கு சென்றாலும் ஜாதி வரும் என பெரிய சர்ச்சையின கிளப்பிகொண்டிருக்கின்றார் ரஞ்சித்.

அப்படி சாதி பார்த்து இயங்குவதல்ல இந்திய யதார்த்தம், அப்படி பார்த்தால் பல அடையாளம் முத்திரை பதித்திருக்கமுடியாது, காமராஜர் எல்லாம் வெளிவந்தே இருக்கமுடியாது. உண்மையும் கூட‌,

ஒன்று மட்டும் புரிகின்றது, மனிதர் போட்டுகொண்டிருக்கும் வட்டம் மிக சிறிது, மிக மிக குறுகிய பார்வை. இந்த உலகினையே சாதிய பார்வையினால் பார்க்கும் ஒரு வகை வன்மம்

பாருங்கள் மனிதர் என்னவெல்லாமோ பேசுகின்றார், யார் மைக்கினை பிடுங்கி கொண்டு ஓடுகின்றார்கள் என தெரியவில்லை

ரஜினி இனி வாயினை திறந்து ஜாதி பார்த்து இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என வாயினை திறந்து சொல்லாதவரை இவர் நிறுத்தமாட்டார்.

ரஜினி என்ன‌ ஜாதி பார்த்தா வாய்ப்பு கொடுத்தார்?


தாயிடம் கோபித்துக் கொண்டு செல்லும் பிள்ளையைப் போல, நானும் 15 ஆண்டுகள் வனவாசம் சென்றேன், திரும்பி விட்டேன் : அதிமுகவில் இணைந்த‌ கருப்புசாமி பாண்டியன்

கருப்பு ஆடுகளுக்கு அடைக்கலம் கொடுத்த திமுக ஒரு பசுமையான வனமாகவே இருக்கட்டும், ஆனால் அந்த வனத்தில் இருந்த சுதந்திரம் அம்மா கண்பார்வையில் கிடைக்குமா? என்பது வேறு விஷயம்

ஒரு வழியாக கலைஞருக்கு நெல்லையில் தொல்லை தீர்ந்தது, ஆனால் அதிமுகவிற்கு இனிதான் தொடங்குகின்றது, சும்மாவே நெல்லை அதிமுக அரசியல் புரியாது, இனி எப்படியோ??


 

கார்கில் வெற்றி தினம் : கம்பீரமாய் வீர வணக்கம் செலுத்துவோம்

போராளிகள் என்ற பெயரில் பாகிஸ்தானிய ராணுவம் கார்கிலை ஆக்கிரமித்து மொத்த காஷ்மீரையும் விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டபொழுது பாகிஸ்தானை விரட்டி காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று

அப்படி அந்த கார்கிலை மீட்க தேவைபடும் ராணுவம் அதன் பின் அப்பக்கம் செல்ல கூடாதாம், செல்லாவிட்டால் என்ன ஆகும் அதேதான் அதே ஊடுருவல் ஆக்கிரமிப்பு, அதே சண்டை.

Stanley Rajan's photo.

இப்படி காஷ்மீரை இந்திய ராணுவம் காப்பதன் பெயர்தான் ராணுவ ஆக்கிரமிப்பாம், இதனை சொல்ல கூட்டமும், பேரணிகளும் வேறு

இதனை எல்லாம் இங்குள்ள மனித நேய போராளிகளுக்கு தெரியுமா என்றால் தெரியும், பின்னர் ஏன் சாடுகின்றார்கள் என்றால் அப்படி காஷ்மீரிலிருந்து பின் இந்தியாவிலிருந்தே இந்திய ராணுவத்தை விரட்டிவிட்டால் இத்தேசம் உடையுமாம், ஈழநாடு, திராவிட நாடு, தனி தமிழ்நாடு எல்லாம் கிடைக்குமாம்

சரி அந்த எல்லைகளை எப்படி காப்பீர்கள், ராணுவம் அமைத்துதானே ஆகவேண்டும் என்றால் சத்தமே இருக்காது, அவர்கள் அப்படித்தான் ஏதாவது அர்த்தமில்லாமல் பேசுவார்கள்

கார்கில் மீட்பில் பலியான எமது வீரர்களுக்கு பெரும் அஞ்சலி செலுத்தி, இந்நாளை நினைவு கூர்வோம்

வெள்ளிபனிமலை மேலுலவுவோம்.. என வரிகளுடன் கம்பீரமாய் வீர வணக்கம் செலுத்துவோம்

வந்தே மாதரம்…ஜெய் ஹிந்த்

கபாலி : ரஜினி படம் பெரும் வாய்ப்பு.. ஒரே வாய்ப்பாக கூட இருக்கலாம்

ரஜினி எனும் பெரும் பிம்பம் மூலம் சொன்னால் வெளிநாட்டு தமிழரின் வலி தெரியும், சமூக அக்கறையினால் ரஞ்சித் அப்படி படம் எடுத்தார், அவர் தலித் போராளி, அவர் பெரும் புரட்சியாளர், ரஜினி மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தும் வெளிநாட்டு மக்கள் வலியினை சொல்கிறார்,

ஆனால் நீ எப்படி அவரை விமர்சிக்கலாம்?, நீ பார்ப்பணன் சந்தேகமே இல்லை, சாதி வெறியன் என்றெல்லாம் சொல்கின்றார்கள்

ரஜினி படம் பெரும் வாய்ப்பு, ஒரே வாய்ப்பாக கூட இருக்கலாம், அதிலும் வெளிநாட்டு தமிழர் பிரச்சினையினை பேசவந்தது நல்லது

ஆனால் பேசவேண்டிய மகா முக்கியமான மலையக மக்கள் பிரச்சினை இருக்க, தமிழக அமைதியினை குலைத்துகொண்டிருக்கும் ஈழ பிரச்சினையின் மறைக்கடிக்கபட்ட அல்லது தலித் என்பதால் ஒதுக்கபட்ட மலையக மக்களை பற்றி பேசி இருக்கலாம் அல்லவா?

மொத்த தமிழகமும் இந்நேரம் கொண்டாடிகொண்டிருக்காதா? இப்படி எல்லாம் தமிழக தலித் வம்சம் இலங்கையில் அடக்கபட்டது என உண்மை தெரிந்திருக்காதா?

உண்மையில் கபாலி வசனங்கள் அம்மலையக தமிழருக்கு உரித்தானவவை, கோட் சூட் போன்ற சமாச்சாரங்கள் அவர்களுக்கும் ஈழ தமிழருக்கும் உரியவை, கடைசியில் சீனன் பேசும் பேச்சு கூட ஈழ சாயலே

ரஜினி மட்டும் மலையக மக்கள் தலித் பிரதிநிதியாக “சிங்களனும் எங்கள வாழ விடல, ஈழ தமிழனும் வாழ விடல, சொந்த தமிழ்நாடும் எங்களுக்காக குரல் எழுப்பல‌

வாழ்வும் விடாம, சாகவும் விடாம நாங்க ஏன் இந்தபாடு படணும், தலித்தா பொறந்து இலங்கை வந்தது தப்பாடா..நாங்களும் தமிழன்டா..எங்கள ஒதுக்கி வச்சிட்டு என்னடா ஈழம் தனிநாடுண்ணு எப்படிடா பேசுறீங்க..” என கேட்டிருந்தால் அது பெரும் மாற்றம் பேசும் படமாக அமைந்திருக்கும், கொண்டாட பட்டிருக்கும்

ஆனால் ஈழ தமிழரரிடமிருந்து கண்டனம் வரும், அது சாதி எதிர்ப்பு கண்டனமாக மட்டுமே இருக்கும், அந்த ஆண்ட பரம்பரை வசனங்கள் நிச்சயம் அவர்களுக்கே பொருந்தும்

நாய்கள் அடிபட்டால் கூட குரல் கேட்கும் தமிழகத்தில் அவர்களுக்கான குரல் கேட்காது, கேட்டால் யாழ்பாண ஆண்ட பரம்பரை குரல் அதனை அடக்கும், அதாவது அந்த முணகலை விட பெரும் குரல் எழுப்பும், அந்த ஒப்பாரியில் சிலர் இந்தியா, ஈழம், தமிழ, தொப்புள்கொடி என முழங்க அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே தெரியாது

ஆனால் இருக்கின்றது, பெரும் துயரம் அங்கே உறங்குகின்றது. கத்தி கத்தி ஓய்ந்துவிட்ட துயரம் அது, இனி வடிக்க கண்ணீர் இல்லா கண்கள் அவர்களது.

ஆக மலையக தமிழன் படமெடுத்தால் லாபம் இல்லை என்றேதான் மறைத்துவிட்டு பணமிருக்கும் மலேசிய தமிழன் பிரச்சினைபற்றி படமெடுத்திருக்கின்றார்.

இந்த வணிக நோக்கில் படம் வந்தபின் மலேசிய தமிழர் என்னை வாழ்த்துகின்றனர் என சிரிப்பு வேறு

பணம் இருக்கும் தமிழனின் பிரச்சினை உலகெல்லாம் தெரிய வேண்டும், பணமில்லா ஏழை மலையக தலித் தமிழனின் பிரச்சினை மலையிலே மடிய வேண்டும் என்பதுதான் தலித் கொள்கை போராட்டமா?

இதனைத்தான் நான் சொல்லவந்தேன், அவர் போராளி, தலித் எல்லாம் அல்ல‌

மாறாக அம்பேத்கர், சே குவேராவினை இடம் பார்த்து விற்க தெரிந்த ஒரு வியாபாரி, சரியாக குறி வைத்திருக்கின்றார், ஆனால் ஓவர் புரட்சியும் ஆர்வகோளாறும் பிசக வைத்துவிட்டன‌

உண்மையில் அம்பேத்ர், சே பற்றி பேசும் மனிதநேயமுள்ள கலைஞனாக இருப்பவனுக்கு மலையக தலித் தமிழர்தான் முன் வருவர்.

வாக்கு அரசியலுக்கு தமிழக தலித் மக்கள் நினைவுக்கு வருவது போல, ரஞ்சித்திற்கு படமெடுக்கவும் கருத்து புரட்சி பேசவும் மலேசிய எஸ்டேட் தொழிலாளர்கள் கிடைத்திருக்கின்றார்கள்,

பிடிக்க அம்பேத்கர் படம் கிடைத்திருக்கின்றது

குறுகிய பார்வையும், முதலாளித்துவ லாப வெறியுமே அவரிடம் ஓங்கி தெரிகின்றன‌

த‌லித் பிரச்சினை சிக்கலானது, நிச்ச்யமாக தமிழக கதைகளை எடுத்தால் சிக்கல் சரி, மலையக தமிழரை தொட்டாலுமா சிக்கல்?

அந்த வணிக நோக்கத்தில்தான் இவர் தலித் போராளி முகம் காட்டுகிறார் அன்றி வேற‌ல்ல

தமிழக தலித் பிரச்சினையும் சொல்லவில்லை, இந்திய தலித் பிரச்சினையும் சொல்லவில்லை, உண்மையில் அடக்க பட்டிருக்கும் மலையக தலித் தமிழரின் துயரமும் சொல்லபடவில்லை,

ஆனால் வியாபார வாய்ப்புள்ள மலேசிய கதை மட்டும் சொல்லபட்டிருக்கிறதென்றால் இதனை நீங்களாகவே புரிந்துகொள்ளவேண்டுமே தவிர சொல்லி அல்ல‌

உண்மையான தலித் மக்கள் போராளியாக, வெளிநாட்டு தமிழரின் துயரினை பதிவு செய்பவர் இப்படியா செய்வார்? செய்துவிட்டு ஏதோ பெரும் சாதனை செய்தது போல பேச்சு வேறு, உண்மையில் இவரின் பார்வை மகா குறுகியது.

அவ்வளவுதான், இனி நடப்பதை காலம் சொல்லும்.

அதனை விட்டுவிட்டு ரஞ்சித் உண்மையான தமிழிய தலித்திய போராளி என நீங்கள் நம்புவதும் ஒன்றுதான், திராவிட கட்சிகள் எல்லாம் பெரியாரிய கொள்கைகளை பின்பற்றுகின்றன என நம்புவதும் ஒன்றுதான்

எல்லாம் வியாபாரம், அம்பேத்கரையும் அதில் கொண்டு வந்துவிட்டார்கள் அவ்வளவுதான்.


Soman Raja : மலையக மக்கள்ன்னா யார் ப்ரோ?

அடடா, மலைக்கு மேல் உள்ள மக்கள் எல்லாம் மலையகத்தார் என சிலர் சொல்வார்கள் .

கேட்டுகொள்ளுங்கள், எனக்கு தெரிந்து இலங்கை மலையகம் எனும் மலைபகுதி தோட்ட தொழிலாளர்கள்.


 

ஈழபோராட்டத்தில் மறக்கமுடியாத பெயர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்

ஈழபோராட்டத்தில் மறக்கமுடியாத பெயர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்

முதன்முதலில் ஆயுதம் தூக்கியதும் இவர்களே, நீதிமன்றத்தில் ஒரே தீவில் இரு நாடு ஏன் சாத்தியமில்லை? என உலக அரசியல் பேசியதும் இவர்களே

வெலிக்கடை சிறையில் இவர்கள் இருக்கும் போது, அதுவும் அவர்களை மீட்க அதிரடி திட்டம் டெலோவால் வகுக்ககட்டபொழுது முந்திகொண்டு ராணுவத்தினரை தாக்கி பெரும் கலவரத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் ஆட்டம்.

Stanley Rajan's photo.

கொஞ்சம் தாமதித்திருக்கலாம் அவர்கள் வெளிவந்திருப்பார்கள் எனும் சொல்லுக்கு, அவர்கள் வெளிவந்தால் என்ன நடந்திருக்கும் என்பது இன்னொரு கேள்வியாகும்

காரணம் வங்கிகொள்ளையில் தேடபட்டு இந்தியா தப்ப முயலும்போது பிடிபட்டார்கள். காட்டிகொடுக்கபட்டார்கள் என்பது உண்மை

அந்த குழுவில் பிரபாகரனும் அன்று இருந்தார், சபாரத்தினமும் இருந்தார்

சபாரத்தினம் குட்டிமணியினை சிறை உடைத்து காப்பாற்ற முடியுமா என சிந்தித்துகொண்டிருந்த பொழுது, , பிரபாகரன் முந்திகொண்டு கலவரத்தை தொடங்கியது இன்றளவும் சந்தேகமே.

அன்றைய கொதிநிலை அப்படி இருந்தது, தங்க துரை சிங்களர்களின் பெரும் குறியாக இருந்தார். இனி ஒரு சிங்களன் கொல்லபட்டாலும் கொழும்பு தமிழர் பகுதி எரியும் என இனவாதிகள் கொக்கரித்த நேரமது, வாய்ப்பினை எதிர்பார்த்தே இருந்தார்கள்.

அந்த புலிகளின் தாக்குதலில் அது பகிரங்கமாக வெடித்தே கலவரம் தொடங்கியது, கொஞ்சம் தாமதித்திருக்கலாம் என்பார்கள்.

அந்த திருநெல்வேலி தாக்குதலில் செல்லகிளி கொல்லபட்டதும் சர்ச்சையே, காரணம் சிங்கள ராணுவ வீரர்கள் திருப்பி தாக்கவே இல்லை என்பார்கள்

உச்சமாக தான் வாசித்த 18 மாவீரர் உரையிலும் குட்டிமணி, தங்கதுரை பற்றி பிரபாகரன் ஒரு வார்த்த்தை சொன்னதுமில்லை, அவர்களை பற்றி எங்கும் பேசியதாகவும் தெரியவில்லை

ஆக ஈழபோராட்டம் என்றால் பிரபாகரனும், போராளிகள் என்றால் அவருக்காக செத்தவர்களும் எனும் அளவிற்கு மாற்றாபட்டிருக்கின்றது வரலாறு, இருக்கட்டும்

ஆனால் கொழும்பு நீதிமன்றத்தில் தங்கதுரை ஆற்றிய முழக்கம், சே தென் அமெரிக்காவில் முழங்கிய பேச்சுக்களுக்கு சற்றும் குறைந்ததல்ல, அவரின் அந்த இறுதி பேச்சு அவ்வளவு அர்த்தமிக்கது

மார்ட்டின் லுத்தர் கிங், பகத்சிங் போன்ற புகழ்பெற்ற முழக்கம் அது,

எங்காவது அதனை நீங்கள் கேட்கமுடியுமா? முடியாது, என்ன பேசினார் என்றாவது தெரியுமா? ஒரு சீமானிய குஞ்சுகளுக்கும், ம்ம்ம்மேஏஏஏ 17 என கத்தும் செம்மறி கூட்டத்திற்கும் தெரியாது, இவர்கள் தான் இந்தியா, கலைஞர், சோனியா என பேசிகொண்டிருப்பார்கள்

இதுதான் ஈழபோராட்டம் ! , அதனை தமிழக உணர்வாளர்கள் தாங்கி பிடிக்கும் முறை!!

இன்று அவர்களின் நினைவு நாள், அந்த மாவீரர்களை நினைத்து கொள்ளலாம்

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதிவேண்டும் என கொடிபிடிப்போர் யாரும், 1983 ஜூலை கலவரங்களுக்கு நீதிவேண்டும் என்றோ, அன்று கொல்லபட்ட 10,0000 பேருக்கு மேலான தமிழருக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றோ கேட்கமாட்டார்கள்

இது ஒரு வகையான அரசியல், இதில்தான் சிங்களன் தப்பிகொண்டிருக்கின்றான். உண்மையில் சிங்கள அரசு செய்த பெரும் கொடூர இனபடுகொலை இதுதான். ஆனால் யாரும் கேட்கமாட்டார்கள்.

இதனை பற்றி எல்லாம் பேசினால் நான் துரோகி

உண்மையில் சிங்களனை தண்டிக்க விரும்பினால் இவர்களின் படுகொலையிலிருந்தே தான் தொடங்க வேண்டுமே தவிர, முடித்து வைத்த முள்ளி வாய்க்காலில் அல்ல.


 புலிவால் பிடிப்பவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும், இப்படித்தான்
சிறை உடைப்பு சம்பவம் இலங்கையில் நடக்கவே இல்லையா?

ஆமாம் எத்தனையோ முறை சிங்கள படைகளை முடக்கி, சில இடங்களில் புலிகளுக்கு உதவியாக சிங்களனை தாக்கி திருப்பி அனுப்பிய அவன் முட்டாள்தான்

இந்தியா உதவியின்றி ஈழமக்கள் உரிமை பெறுவது சாத்தியமில்லை என் சொன்ன அவன் முட்டாள்தான்

அவனை போலவே இந்தியாவுடன் உறவாடிய எல்லோரும் முட்டாள்கள்தான். நீங்களும், பிரபாகரனும் சீமானும் மட்டுமே அறிவாளிகள்

ஒரு பெரும் கொலை நடக்கும் இடத்திலும் போட்டோகிரபர் சகிதம் போஸ் கொடுத்து மொத்தமாக மாட்டிய அவர்களும் பெரும் அறிவாளிகள்.


“அரசியல் வசனங்களை அறிந்தே பேசினார் ரஜினி” : இயக்குநர் ரஞ்சித்

“அரசியல் வசனங்களை அறிந்தே பேசினார் ரஜினி” : இயக்குநர் ரஞ்சித்

இனி கிளம்பிவிடுவார்கள் ராமதாஸ், யுவராஜ் ,வாண்டையார் வகையராக்கள். அவர்களுக்கும் ஏதாவது செய்து தங்களை நிருபிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.

சில நாட்களில் கிளம்புவார்கள், அல்லது மிக சரியாக ரோபோ 2 வரும்பொழுது எங்களுக்கும் காட்டவேண்டும், நாங்களும் அனுமதித்தால் தான் வெளிவரவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வார்கள்

இது இப்போதைக்கு ஓயாது போல் இருக்கின்றது, சந்தடி சாக்கில் அரசு 1000 மதுகடைகளை கூடுதலாக திறந்தாலும் சத்தம் வராது

இந்த களபேரங்களில் சினிமா துறையிலிருந்து ஒரு சத்தம் அல்லது கருத்து, அட ரஞ்சித்த வளர்த்துவிட்ட வெங்கட் பிரவுவின் தரப்பிலிருந்து ஒரு ஆதரவு அல்லது எதிர்ப்பு அல்லது ஒரு வார்த்தை வந்திருக்கும்?

வராது, ஒருகாலமும் வராது, அதுதான் தமிழ் திரையுலகம்

வடிவேலு எனும் பெரும் கலைஞனே ஓட விரட்டபட்டு இன்று மூலையில் வைக்கபட்டபின்பு, ரஞ்சித் எல்லாம் எம்மாத்திரம்?

எங்கோ, எதிலோ பெரும் அரசியல் ஒளிந்து கிடக்கின்றது, சிக்கி இருப்பவர் ரஜினி என்பது மட்டும் புரிகின்றது.

இம்மாதிரியான சர்ச்சைகளில் கமலஹாசனுக்கு பெரும் அனுபவம் இருக்கின்றது, இப்படி ஒரு சிக்கல் வந்தால் அவர் அனாசயமாக தாண்டுவார், அவர் கெத்து அப்படி

ரஜினி அதில் ஹிஹிஹிஹிஹிஹி……..

பறவையினை பறக்கவிடு, வாழ்வா சாவா என அது முடிவு செய்யட்டும்

அற்புதமான பாடல்களை எழுதிய வாலியிடம் ஒரு மேடையில் கேட்டார்கள், இப்படி கவி மழை கொட்டும் நீங்கள் “எப்படி சமைஞ்சது எப்படி” என மகா ஆபாசமாக எழுதியது ஏன்?

அவர் அவருக்கே உரித்தான பாணியில் சொன்னார்

“இங்கு நான் தமிழை தாலாட்டும் தாய்
அங்கே எலும்புக்கு வாலாட்டும் நாய்”

பாய்ஸ் படத்தில் சர்ச்சையான வசனத்திற்காக சுஜாதா எனும் யானையினையே மண்டியிட வைத்த திரையுலகம் அது, ரஞ்சித் எல்லாம் அதன் முன் தூசு

அதுதான் சினிமா, அங்கு எல்லாமே வர்த்தகம், எல்லா பிரச்சினைகளையும் அப்படி இப்படி காட்டி சம்பாதிப்பார்களே தவிர, வேறு ஒன்றும் செய்துவிட முடியாது. புரட்சி, எழுச்சி எல்லாம் சினிமாவால் சாத்தியமில்லை

காரணம் பெரும் பணம் கொட்டபடும் இடம் எது, எடுத்தே தீரவேண்டும் என்ற சூதாட்ட எண்ணம் இருக்கும் அவ்வளவுதான், இயக்குநர் எனும் குதிரையினை நம்பி பந்தயம் கட்டுவார்கள்

அந்த குதிரை நன்றாக ஓடவேண்டும் என்பதுதான் சினிமா எதார்த்தமே தவிர , கடிவாளம் அணியமாட்டேன், ஜாக்கி சுமக்க மாடேன், கிரவுண்டுக்குள் நான் விருப்பபட்ட இடத்திற்கத்தான் ஓடுவேன் என்றால் யார் பணம் கொட்ட தயாராவார்கள்?

அடுத்தவன் பணத்தில் செய்வதல்ல புரட்சி

பெரியார் சொந்த பணத்தில் செய்தார், அம்பேத்கர் தன் கல்வியால் செய்தார், இன்னும் பலர் கால் நடையாய் நடந்து செய்தனர்

அம்பேத்கர் மேட்டுகுடியில் பிறக்கவேண்டும் எனும் ரஞ்சித்தின் பேட்டி வாய்விட்டு சிரிக்கும் நகைச்சுவை

பாரதியார் யார்? அம்பேத்கரை உருவாக்கிய பிராமண ஆசிரியர் யார்? பரோடா மன்னர் யார்? ராஜராம் மோகன்ராய் யார்? இந்திய சாதிமுறையினை சாடிய அன்னிபெசன்ட் வெளிநாட்டு மேட்டுகுடிதான், சாதி முறைகளை சாடி தனிமதம் சமைத்த புத்தனும் மேட்டுகுடி, மகாவீரர் மேட்டுகுடி

நிலமை மிஞ்சும் போது காலம் தோறும் காக்க‌ அவதாரம் வருவார்கள்,பைபிளின் மோசஸ், பகவான் கிருஷ்ணனும், தென்னகத்து வைகுண்டரும் அப்படியே,

ஆக தாழ்த்தபட்ட மக்களை கைதூக்கிவிட பல மேட்டுகுடிகளில் பலர் ஏற்கனவே பிறந்துவிட்டார்கள், இன்னும் பிறப்பார்கள் , அதுதான் உண்மை அதுதான் யதார்த்தம்

100 வருடத்திற்கு இருந்த நிலை என்ன? இன்றிருக்கும் நிலை என்ன? எவ்வளவு முன்னேற்றம்?, உண்டா இல்லையா?

இளையராஜா தொட்டிருக்கும் உயரம் என்ன? மறுக்க முடியுமா? அவர் என்ன தலித் இசை மட்டும் கொடுத்தாரா?

சினிமா என்பது வேறு மாதிரியானது, பணம் சம்பாதித்து கொடுக்கா எந்த கலைஞனும் புறக்கணிக்கபடுவான், கொள்கை புரட்சி எல்லாம் அங்கே சாத்தியமில்லை

எம்ஜிஆர் சில திராவிட கொள்கைகளை கொண்டிருப்பதாக சொல்லிகொள்வாரே அன்றி, அவர் படத்தில் நாயகி கோவிலுக்கு செல்வதோ, தாய் பக்தியில் உருகுவதோ அனுப்பபட்டிருக்கும், அவரே இஸ்லாமியராக, கிறிஸ்தவராக, புத்த குருவாக பாடிகொண்டிருப்பார்

காரணம் சினிமாவில் சில அனுசரிப்புகள் தேவை

அதனையன்றி, நான் இப்படித்தான் என் படம் இப்படித்தான் என்றால் தாரளமாக சொல்லிகொள்ளலாம்

ஆனால் நம்பி பணம் கொடுக்க யார் வருவார்கள், கோடிகளை கொட்டி புரட்சி செய்யவா படம் எடுக்க வருவார்கள்?

பாரதிராஜா தன் படங்களில் பிரச்சினையினை தன் சமூகத்திற்கு இடைபட்டதாகத்தான் வைத்திருப்பார், நாயகன், வில்லன், ஊர் என சகலமும் ஒரே ஜாதியாக காட்டி இருப்பார், கமல ஹாசனின் தேவர் மகன், விருமாண்டியும் அப்படியே

அதாவது என் சாதியிலும் மகா அயோக்கியன் உண்டு என சொல்லபடும் கதை அது, ஒப்புகொள்கின்றார்கள். புரட்சி கருத்துக்களோ , உரையாடலோ, ஆண்ட அடிமை வசனமோ அதில் இருக்காது, அப்படங்கள் ஜெயித்தன.

வைத்திருக்கின்றார் வசனம், “பறவையினை பறக்கவிடு, வாழ்வா சாவா என அது முடிவு செய்யட்டும்”

என்ன இது பசுமாட்டினை காட்டில் சென்று விட்டுவிடுவோமா? பிராய்லர் கோழிகளை காட்டில் மேய விடலாமா? வீட்டின் எருமை மாடுகளை களக்காடு மலையில் சென்று விட்டுவிடலாமா?

வண்டலூர் சாலையினை மூடிவிட்டு , குழந்தைகளை வீரப்பன் காட்டிற்கா அழைத்து செல்லமுடியும்? ஒரு யதார்த்த வசனம் வேண்டாமா?

கொஞ்சம் தீவிரமான கோளாறு அன்றி இப்படி எழுத முடியாது. என்ன தலித்துக்களுக்கு உரிமை இல்லை, எல்லா துறையிலும் அவர்கள் இருக்கின்றார்கள், முன்னேறுகின்றார்கள், இதோ இவரும் படமெடுக்கும் அளவிற்கு வந்திருக்கின்றார்

என்ன பெரிய அடக்குமுறையினை கண்டுவிட்டார்கள்?, காலம் மாறிவிட்டாலும் பழம் காலத்தையே நினைத்து கொண்டிருந்தால் எப்படி?

உழைப்பு சமூகத்தை மாற்றும், சில சாதிகள் அப்படித்தான் வியாபாரத்திலும், கல்வியிலும், உற்பத்தியிலும் கால்பதித்து எங்கோ செல்கின்றன, கடுமையான உழைப்பால் வந்தவை அவை

அதனை விட்டு ஒரு காலத்தில் எங்களை அடித்தார்கள் தெரியுமா? என அடிபட்ட காலத்திலே நின்று புரட்சி, எழுச்சி, என பேசிகொண்டிருந்தால் ஒரு மண்ணும் நகர்ந்திருக்காது

இது சினிமா, சர்ச்சைகுள்ளான நடிகரையே நடிக்க வைக்க ஆயிரம் முறை யோசிப்பார்கள்

சந்திரபாபு போன்ற மாமேதைகள் சரிந்தது அப்படித்தான், வடிவேலு அப்படித்தான்

நடிகன் நிலையே அப்படி என்றால் லகானை பிடிக்கும் இயக்குநரை எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?

இவர் புரட்சி, தலித் எழுச்சி எல்லாம் தனியாக இயக்கம் கட்டி செய்தால் சரி, அவர் விருப்பம். ஆனால் அடுத்தவன் காசில் செய்ய தயாரிப்பாளர் அனுமதிக்க மாட்டார்.

அட கபாலி ஏன்? கொடியன்குளம் கலவரம், வாச்சாத்தி சம்பவம், மேலவளவு படுகொலை, தமிழ்நாட்டு தர்மபுரி இளவரசன் கதையோ, உடுமலை பேட்டை சங்கள் கதையோ வைத்து தலித் அரசியல் படம் எடுக்க தெரியாதா? முடியுமா என்றால் முடியும்? ஆனால் சிக்கல் ஆகும் என்பது அவருக்கு தெரியும்

அதனால் மலேசிய கதையினை சொல்லி ,அதில் புரட்சி சொல்லி ரஜினியினை குப்புற தள்ளியாயிற்று, இனி பிஜி, மொரிஷியஸ், வெஸ்ட் இண்டீஸ் என உலகெல்லாம் செல்லமுடியுமே தவிர, தமிழக சாதி பிரச்சினைகளை அன்னார் பேசுவாரா என்றால் பேசமாட்டார்

இதனால்தான் இவரை சாடவேண்டி இருக்கின்றதே அன்றி வேறல்ல, அதாவது இவர் தலித் பிரச்சினைகளை வைத்து உலகெல்லாம் சம்பாதிக்க நினைக்கிராரே அன்றி அதற்கான போராளி அல்ல, அப்படி நினைத்திருந்தால் சினிமாவிற்குள் வரமாட்டார்

சினிமா ஊடகம்தான், ஆனால் பல சிக்கல் உள்ள ஊடகம்.

ரஞ்சித்தின் அடுத்த கட்டம் மீது உனக்கு பொறாமையா என்கின்றார்கள், எதற்கு? அடுத்த கட்டம் என ஒன்று சினிமாவில் இருந்தால்தானே அவருக்கு?

இவர் கபாலியில் செய்ததே தவறு, அதனை நியாபடுத்தி பேட்டிகொடுத்தது இன்னும் தவறு

இனி இவரை பற்றி சொல்ல ஒன்றுமில்லை, கொஞ்சநாளில் அவராகவே காணாமல் போய்விடுவார், அல்லது தன்னை மாற்றிகொள்வார்

சினிமா என்பது விஞ்ஞான அரசியல் , அதில் கலைஞரை போல அரசியல் செய்யலாமே தவிர,

பெரியார் போல புரட்சி எல்லாம் செய்ய முடியாது.அதற்குத்தான் பெரியார் அரசியலுக்கு வரவே இல்லை

Stanley Rajan's photo.