கபாலி : கருத்தரங்கு, விவாதம் ….

Stanley Rajan

ஒரு பெரும் புரட்டு எப்படி இருக்கும், எதையுமே மகா குறுகிய சுயநல புத்தியுடன் காணும் ஒருவரின் பார்வை எப்படி இருக்கும்.

இந்த திருமுருகன் எழுதியது போல இருக்கும்.

மலேசிய தமிழரில் பிரிவுகள் என்ன? எப்படி எல்லாம் ஒரு பிரிவு வாழ்கின்றது என்றெல்லாம் இவருக்கு தெரியுமா? எத்தனை அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மில்லியனர்கள் இருக்கின்றார்கள், எத்தனை கல்வி மான்கள், பன்னாட்டு நிறுவண பெரும் பொறுப்பில் எத்தனை தமிழர்கள்?

வாய்ப்பு கொட்டி கிடக்கும் தேசமது, கிட்டதட்ட 20 லட்சம் அந்நிய நாட்டினர் வேலை செய்வதாக ஆய்வு சொல்கிறதெனில் வேலை வாய்ப்பு என்ன?

இந்திய தமிழனை இங்குள்ள தமிழ் முதலாளிகள் படுத்தும் பாடென்ன? அவர்கள் படும் சிரமம் என்ன?

அந்த நாட்டை எப்படி எழுதுகின்றார் பார்த்தீர்களா? சரி தமிழனை ஒடுக்கும் நாடு சீனனை விடுமா? சீன சமூகத்திடம் ஒரு எதிர்குரல் உண்டா?

உச்சமாக சொல்கிறார் பாருங்கள், ரஞ்சித்தால் தான் ரஜினி இந்த படத்தில் தெரிகின்றாராம், இல்லை என்றால் படம் லிங்கா ஆகியிருக்குமாம், (இப்பொழுது பாபா ஆனது வேறு கதை)

இப்படி எல்லாம் எழுத எந்த மனசாட்சி உள்ளவனாலும் முடியாது, தன் நெஞ்சறிய பொய் சொல்லும் வகை இது

இவர்தான் ஈழதமிழருக்கு நீதிவாங்கி தரப்போகிறவன் நான் எனும்பொழுதுதான், அம்மக்களை பரிதாபமாக பார்க்க தோன்றுகிறது

நீங்களே படியுங்கள், கூடுமானவரை ஏதும் இல்லா இடத்தில் படியுங்கள், இல்லை எதனையாவது உடைப்பீர்கள் அல்லது முட்டி கொள்வீர்கள்

உதாரணம் , //ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினிக்கு நீண்ட நாளைக்கு பின் வந்திருக்கும் மிக மிக அரிய வாய்ப்பு இது, ஒரு வகையில் ரஜினி அதனை வீணடித்தும் இருக்கின்றார் //

சொல்லுங்கள் இது எல்லாம் என்ன ரகம்?

ரஞ்சித் 30 வருடம் அனுபவமுள்ளவரா? இல்லை ரஜினி அவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டாரா?

அந்த கொடூர காமெடி இதோ

பல விவாதங்களை ‘கபாலி’ திரைப்படம் உருவாக்கியிருக்கிறதெனில் அது, ரஜினியின் படம் என்பதற்காக அல்ல .அவ்வகையில் ஒரு இயக்குனராக தோழர் .ரஞ்சித் வெற்றியடைந்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் அவலம் பற்றி வந்த வெகுசில…
TAMILSNOW.COM

அண்ணன் Stanley Rajan அவர்களுக்கு ஒரு கடிதம்/பதிவு!

சினிமாவில்‬ எல்லாமே வர்த்தகம்!! எல்லா பிரச்சினைகளையும் காட்டி அப்படி இப்படி சம்பாதிப்பார்களே தவிர வேறு ஒன்றும் செய்துவிட முடியாது. புரட்சி எழுச்சி எல்லாம் சாத்தியமில்லை” -அண்ணன் ஸ்டான்லி ராஜன்

கே.பி.சுந்தரம்மபாள் மற்றும் டி.கே. பட்டம்மாள் போன்றோர் தேசப்பக்தி பாடல்கள் மூலமாக தானே இந்திய விடுதலை உணர்வை மக்களிடையே கொண்டு சேர்த்தார்கள். இவர்களின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு போராட்ட இயக்கங்களில் பங்குபெற்ற தொண்டர்கள் ஏராளம். அதன் மூலம் மக்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டது என்பதை மறுக்க முடியுமா? (கலையின் பெருமையை விளக்க இதைவிட ஒரு நல்ல உதாரணம் தேவையில்லை).

இருந்தாலும் உங்களோட எம்ஜிஆர்‬(MGR) மற்றும்  என்டிஆர்(NTR) போன்ற நடிகர்கள் எல்லாம் இங்க ஆட்சியை புடிச்சது பெண்ணிய விடுதலை பேசியா? ஈழ விடுதலை பேசியா? இல்லை புரட்சி பேசியா ? தனி நாடு கேட்டா? தமிழ் தேசியம் பேசியா? இல்லையே!!

இதெல்லாம் நடந்தது சினிமாவால்தானே??

கபாலி‬ போன்ற திரைப்படங்களால் சமூகத்தில் அதைப்பற்றிய ஒரு விவாதத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைப்பது, வசனம் எழுதுவது, காட்சிகள் அமைப்பது. குறியீடுகளை பயன்படுத்துவது, படம் எடுப்பது எல்லாம் இரஞ்சித்தின் விருப்பம். சில நாட்களுக்கு முன்பு, நீங்கள் இலங்கைப்பிரச்சினையைப்பற்றி மட்டும் தான் நான் எழுத வேண்டும், இதை எழுதக்கூடாது அதை எழுதக்கூடாது என்று பிறர் சொல்கிறார்கள் என்று கூறினீர்களே அதைப்போன்றுதான்..!! அவருக்கு பிடித்ததை அவர் செய்கின்றார். ரஞ்சித்தின் படைப்பை விமர்சிப்பது உங்கள் விருப்பம் என்றால் உங்களை விமர்சிப்பது அதாவது உங்கள் கருத்துக்களை விமர்சிப்பது என் விருப்பம் என நினைத்து இதை பதிவிடுவிறேன் தவறாக எண்ண வேண்டாம்.

சினிமாவால் எதையும் செய்ய முடியாது, அது வணிக நோக்க முடையது என்று கூறும் நீங்களே சில நாட்களுக்கு முன்பு இதிலிருந்து முரண்பட்டு “கண்ணதாசன்‬, நம்மை உலக நாடுகளுக்குள்ளும், அழகான சோலைகளுக்குள்ளும், பண்டைய செய்யுள்களுக்கும்,இந்து மத ஞானத்திற்குள்ளும் அழைத்துச்சென்றார்” என்று ஏன் கூறினீர்கள்!! எப்படி அவரால் உங்களை அழைத்து செல்ல முடிந்தது? அது பொய்யா? உண்மையென்றால் சினிமாவால்/கவிதைகளால் சந்தோஷத்தை மட்டும் தான் நம் மனதில் ஏற்படுத்த முடியுமா? புரட்சியையோ, சமூக நீதியையோ குறைந்தது அதைப்பற்றிய ஒரு விவாதத்தையோ வெகுஜன சினிமாவின் மூலம் ஏற்படுத்த முடியாது என்று நீங்கள் கூறுவது சரியா என்பதை நீங்கள்தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!!

‪‎கவிதைகளால்‬ கண்ணதாசனால் இதைச்செய்யமுடியுமென்றால்,
எம்ஜிஆரால்‬ முதலமைச்சராக முடியுமென்றால்,
விஜயகாந்தால்‬ அரசியல் கட்சி தொடங்கி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சி தலைவராக முடியுமென்றால், பல நடிகர்கள்‬சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்களாக முடியுமென்றால்,
ரஜினி‬ சாதாரண பேருந்து நடத்துனராக இருந்து இன்று இந்தியாவில் மிகப்பிரபலமாக மனிதராக முடியுமென்றால்,
இரஞ்சித்‬ ஏன் இது போன்ற திரைப்படங்களை இயக்கக்கூடாது ?
அவர் நினைத்தது நடக்கும், நடக்காது என்பதைக்கூற நீங்கள் ஒன்றும் ஜோதிடர் இல்லையே சகோ!!

அவருடைய திரைப்படம் தமிழகத்தில் இன்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை நீங்களே அறிந்திருப்பீர்கள்! அவர் நினைத்த விவாதத்தை இங்கு மக்களிடையே ஏற்படுத்திவிட்டார் அவர் ஜெயித்துவிட்டார்.. இங்க இருக்கும் நிறைய பெருஷ மனுஷங்களோட முகத்திரையை கிழிந்துள்ளதிலிருந்து அது நிரூபணம் ஆகியிருக்கிறது!!

இது_மாதிரியெல்லாம்_படம்_எடுத்தால்_ரஞ்சித்_காணாமல்_போய்விடுவார்_என்று_கூறுகிறீர்கள்‬. அப்படி கூறுவதும் அவர் மீதுள்ள அக்கறை‬ தான் என்றும் கூறினீர்.

இதை நான் முரண் என்று தான் கூறுவேன். உதாரணமாக ஒரு குழந்தை மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டுமானால், பழகும்போது கீழே விழும் அடி படும். குழந்தைக்கு அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களின் மீதுள்ள அக்கறையின் காரணமாக பெற்றோரே அக்குழந்தை மிதிவண்டி ஓட்டுவதை தடுப்பது, அவர்களின் அக்கறையே குழந்தையின் சுதந்திரத்தை/விருப்பத்தை தடுப்பது போலாகும். ரஞ்சித் நினைப்பதை செய்யவிடுங்கள். அவர் அடிபட்டு கற்றுக்கொள்ளட்டும்.

அப்படி அவர் அடிபட்டு காணாமல் போனால் போகட்டும் வெளிச்சம் தரும் ஒரு மெழுகுவர்த்தியாக. அதுவும் வெற்றி தானே?? . அப்படி நடந்தால் இந்த சமூகத்தில் சாதிய பாகுபாடு இன்னும் ஒழியவில்லை என்பது உறுதியாகிவிடும் அல்லவா? அது ஒரு புரட்சியை முன்னெடுக்காவிடிலும் குறைந்தது “இப்ப எல்லாம் யாரு சாதி எல்லாம் பாக்குறாங்க சார்னு” பேசுற வசனமாச்சும் இல்லாமல் போக்கட்டும்… இந்த சமூகம் சாதிய சமூகம்தான்!! சாதிய அடிப்படையிலான வன்முறைகளும், ஆணவக்கொலைகளும்,
பல்கலைக்கழக தற்கொலைகளும் நடந்து கொண்டிருப்பதும், திருமண வரன் பார்க்கும் எண்ணற்ற வலைத்தளங்களும் இதை தான் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

அத்தோடு ஒடுக்கப்பட்டவரின் புரட்சி பேசியதால் தான் ரஞ்சித் திரைப்படத்துறையில் இருந்து தூக்கி வீசப்பட்டான் என்று இந்த சாதிய சமூகத்தில் பதிவு செய்யப்படட்டும்!! சக மனிதர்களின் ‪#‎வெற்றி‬ நம்மில் தன்னம்பிக்கையையும் தோல்வி‬ நம்மில் பயத்தையும் ஏற்படுத்துகிறது. அதாவது இதை செய்யக்கூடாது என்ற பயம்.

நீங்கள் சொல்வது போல நடந்துவிட்டால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு திரைத்துறையில் ரஞ்சித்தின் வீழ்ச்சி ஒரு பயத்தையும், ஆதிக்க வர்க்கத்திற்கு ஒரு கர்வத்தையும் கொடுக்கும். இதுவும் பாகுபாடான சமூகம் என்பதை உறுதிப்படுத்தும். ஒடுக்கப்பட்டவரின் பயம் அவர்களை மேலும் விழிப்படையச்செய்யும், அது அவர்களை மேலும் உழைக்க தூண்டும். அதற்காகவாவது ரஞ்சித்தின் தோல்வி பயன்பட்டுள்ளது என்பதை நினைத்துக்கொள்வோம். பலரின் வெற்றி தோல்விகள் சமூகத்தில் பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கலாமின் வெற்றி இந்த தலைமுறை இளைஞர்களை பாதித்ததை போல.. அவருடைய வாழ்க்கை வரலாறும் ஒரு நாள் திரைக்காவியமாகும்!! அதையும் நாம் பார்ப்போம்!!! விவாதிப்போம்!!

சினிமாவால்‬ கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா முடியாதா என்றால் முடியும்‬ என்பது தான் நிதர்சனமான உண்மை…

இதை நான் நேற்றே எழுதிவிட்டேன், நேற்று வைரமுத்துவின் கருத்தை கேட்ட பின்பு, எப்படியும் நீங்கள் அவர் பேசியதை நியாயப்படுத்தி ஒரு கருத்தை சொல்வீர்கள் அதன் பிறகு பதிவிடலாம் என்று காத்திருந்தேன். நேற்றுவரை உங்களுக்கு மிகவும் பிடித்த கவியரசு கண்ணதாசனை புகழ கவிப்பேரரசு வைரமுத்துவை இகழ்ந்த நீங்கள் இன்று நீங்கள் அவரின் கருத்து உங்களின் கருத்தோடு ஒத்திருந்தமையால் அதை நியாயப்படுத்தி பேசுகிறீர்கள்.

இதற்கு பெயர் சந்தர்ப்பவாதம் இல்லையா? அரசியலில் மட்டும்தான் சந்தர்ப்பவாதம் தவறா? பொதுவாழ்விலோ தனி வாழ்விலோ கிடையாதா? இது ஒன்றை மட்டும் வைத்து நான் இதைக்கூறவில்லை!! காமராஜர், கண்ணதாசன், ரஜினி ஆகியோரை புகழும்போது, கலைஞர், வைரமுத்து, கமலஹாசன் ஆகியோரை சிறுமைப்படுத்தியுள்ளீர்.

ஒரு சில நேரங்களில் சீமானை‬ திட்ட வேண்டுமானால் அந்த இடத்தில் தனக்கு பிடிக்காத ஒருவரையே அதாவது கலைஞரையே புகழ்வது, ஆனால் கண்ணதாசனை சினிமாவிலிருந்தே துரத்த நினைத்த எம்ஜிஆரைப்பற்றியும், காங்கிரஸ்காரார் ஒருவரின் உதவியால் கண்ணதாசன் எம்ஜிஆரை கேவலப்படுத்த வெளியிட்ட “உள்ளும்_புறமும்” என்ற நூலைப்பற்றியோ அதிலுள்ளவைகளை பற்றியோ கூறாமல் மறைத்து, இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்று எழுதுவது!! ஒருவரை இகழ வேண்டுமானால் அதற்கு இனையான இன்னொருவரை அந்த இடத்திலே புகழ்வது அல்லது ஒருவரை இகழ வேண்டுமானால் அந்த இடத்திலே இன்றொருவரை புகழ்வது தான் உங்களுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் என்று கருதுகிறேன். அதை நீங்கள் செம்மையாக செய்து வருகிறீர்கள்!!

அதாவது சமீபத்தில்,
கபாலியை சிருமைப்படுத்த பாரதி கண்ணம்மாவை புகழ்ந்ததைபோல!!

இறுதியாக, உங்களுக்கு ஆண்பாவம் திரைப்படத்திலுருந்து, இளையராஜா இசையில் அமைந்த “இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தான்” என்ற பாடலை டெடிகேட் செய்கிறேன்!!

நான் சின்ன பையன் தான்
உங்க அளவுக்கு எழுதவராது,
நான் எல்லாம் உங்கள பத்தி பேசுறதுக்கு என்ன தகுதியிருக்குனு கூட நினைக்கலாம்… அப்படி நினைத்தால் நினைத்துக்கொள்ளுங்கள் பரவாயில்லை!! இழக்க ஒன்றுமில்லை!!

சினிமாபிடிக்கும்‬
‪‎மகிழ்ச்சி‬


Sathya Gowtham அருமை சகோ.. தெளிவான பதிவு.. எனக்கும் சினிமா ரொம்ப புடிக்கும்.. ஸ்டான்லி அண்ணனின் பதிவுகளில் சினிமா பற்றிய பார்வையில் மட்டும் எப்பவும் நான் வேறுபடுவேன்.. அதுவும் இந்த கபாலி, ரஞ்சித் விஷயத்தில் நானே சொல்லலாம் னு நெனச்சேன்.. நீங்க சொல்லிட்டீங்க.. சூப்பர் 👍👍👍


Stanley Rajan நல்லது நண்பரே, மகா சீரியசாக இருக்கின்றீர் என்பது மட்டும் புரிகின்றது

சுருக்கமாக சொல்லிவிடுகின்றேன், அக்காலம் வேறு இக்காலம் வேறு, அன்று சுப்புலட்சுமி முதல் எம்ஜிஆர் வரை ஒரு ஈர்ப்பு இருந்தது, பிரமிப்பு இருந்தது, இன்னொன்று அரசாங்கம் படு சுதந்திரமாக இவர்களை அனுமதித்தது, பட்டுகோட்டை செய்யாத புரட்சியினையா இன்னொருவர் செய்துவிடமுடியும்? ஆனால் விளைவு என்ன?

இன்று அப்படி அல்ல,

அப்படி இருந்திருந்தால் விஜயகாந்த், வடிவேல் எல்லோரும் இப்படி ஓரம் கட்டபட்டிருக்க மாட்டார்கள்.

நான் சொல்லவந்ததை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதே வருத்தம்.

ரஞ்சித் புதியவர், முளை விடும் நாற்று. அவர் திறமையான இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப்படி பேசிகொண்டிருந்தால் சினிமா தயாரிப்பாளர்கள் யோசிப்பார்கள்,

பெரும் உதாரணம் இதோ சூர்யா படம் நிறுத்தபட்டிருக்கின்றது , கண்டீர்களா?

அவர் இன்னும் வளரவேண்டும், அதற்கு கொஞ்சம் நிதானம் வேண்டும்.இளையராஜா வளர்ந்தார் , ரகுமான் வளர்ந்தார், இவர்கள் எல்லாம் துறையினை தவிர ஏதும் பேசி கண்டீர்களா?

இளையராஜா தலித்தியம் பேசி, நான் இப்படித்தான் என்று எஙகாவது சவால் விட்டு கண்டீர்களா?

இவருக்கு வயது இருக்கின்றது, இன்னும் வளரவேண்டும் இல்லையா?

அப்படி வளர்ந்தபின் சொந்தமாக இவரே படம் எடுக்கலாம் அல்லவா? யார் தடுக்க முடியும்?

பெரும் இயக்குநராக அவர் பரிணமித்தால் நாமெல்லாம் அவரை ஒதுக்கிவிட முடியுமா? ஒருவேளை இந்திய தலித்கள் நிலை பற்றி பெரும் படம் எடுத்தால் ஆஸ்கார் அடிக்கலாம், ஸ்லம்டாக் மில்லியனர் அப்படித்தான், வெள்ளையனுக்கும் அப்படிபட்ட ஆசை அதிகம்

ஆனால் வளர்வதற்கு முன்பே புரட்சி என்றால் முளையிலே கருகிவிடாதா? கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள், சில விஷயம் புரியும்


Stanley Rajan என்ன சொன்னீர்? சிலரை இகழ்வதும், அவரை புகழ்வதும் என்ன முரண்பாடா?

இந்த இடத்தில் இவர் முகம் இப்படி, இந்த இடத்தில் இவர் முகம் இப்படி என சொல்லா விட்டால்தான் குற்றம், உண்மையினை இப்படித்தான் சொல்லமுடியும் வேறு எப்படி?

என்னை கவனித்தீர்கள்தானே? யார் மீதும் முழு வெறுப்பும் அல்ல யார் மீதும் முழு ஆதரவும் அல்ல என்பது புரியும், புரியாவிட்டால் நீர் கவனிக்கவில்லை என்பது உண்மை.

இதற்கு ஏன் இவ்வளவு நீண்ட கடிதம்?

ஆனால் என்னையும் ஒரு மனிதனாக மதித்து நீங்கள் கேட்டதற்கு பதில் சொல்லி இருக்கின்றேன் நன்றி

மற்றபடி நடக்க இருப்பதை காலம் சொல்லும், தமிழ் சினிமா வரலாற்றில் யாரும் தனி மனிதனாக புரட்சி செய்திருக்க முடியாது, எம்ஜிஆர் மட்டும் வரலாறு, காரணம் அவரின் கட்சி பின்புலம் அப்படியானது,

வீழ ஆரம்பித்த பாகவதரில் இருந்து சந்திரபாபு, கண்ணதாசன் (அவர் முழுக்க பிரகாசிக்கவில்லை) இன்னும் ஏராளமான கலைஞர்களை காட்ட முடியும்

அதுவும் இன்றுள்ள வர்த்தக சினிமா எதற்கும் இடமளிக்காது, கொஞ்சம் கவனியுங்கள் நீண்ண்ண்ட நாளைக்கு பின் பிரச்சினை இல்லாமல் வந்த விஜய் படம் தெறி, அதிமுக ஆட்சிதான் ஆனால் வடிவேலுவினை காணவே இல்லை, ஏன்? அதுதான் இக்காலம்

இப்படி ஆயிரம் சிக்கல் உள்ளது தமிழ்சினிமா

கால வேறுபாடுகளை அறியுங்கள், இன்னொன்று நன்றிகெட்ட உலகம் ஒன்று உண்டென்றால் அது சினிமா உலகம்தான் , அது நடுவீதியில் நிறுத்தியிருக்கும் கலைஞர்கள் எத்தனையோ ஆயிரம்

அவர்களில் ரஜினிக்கு ஒரு காலத்தில் ஹிட் கொடுத்த இயக்குநர்களும் உண்டு

ரஜினிக்கு நாளையே இன்னொரு இயக்குநர் கிடைப்பார், ஆனால் ரஞ்சித் தன்னை நிலை நிறுத்த இன்னும் பெரும் பாடு படவேண்டும்

இன்னும் புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள், இன்னொரு கடிதத்திற்கு பதிலளிக்க முடியாது