ரஜினி : அவர் அவராகவே இருப்பார்

ரஜினியின் சில தந்திரங்கள் மகத்தானவை, எந்த முத்திரையும் தன் மீது படியாமல் பார்த்துகொள்வதில் அவருக்கு அவ்வளவு அக்கறை. அப்படித்தான் கலைஞரை வாழ்த்துவார், கலைஞரை பாராட்டுவார், இளங்கோவனுடன் டீ குடிப்பார், மோடிபுடன் யோகா செய்வார்

இப்படி எல்லாவற்றிலும் மகா கவனமாக இருக்கும் ரஜினி, தனக்கு தலித் அனுதாபி எனும் ஒரு முத்திரை கபாலியோடு கபாலத்தில் குத்தபடுமோ என உணர்ந்து அவசரமாக சோ ராமசாமியினை கபாலி பார்க்க அழைத்திருக்கின்றார்

இதுவரை எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்த ரஜினி என்றாவது இப்படி பெரும்பிரமுகர்களை ஸ்பெஷல் ஷோவிற்கு அழைத்திருக்கின்றாரா என்றால் அழைத்திருக்கின்றார், அப்பொழுதெல்லாம் டைரக்டரும் அருகில் இருப்பார்.

ஆனால் சோவினை அழைத்தது இதுதான் முதல் முறை, இன்னொரு முக்கிய‌ விஷயம் இயக்குநர் ரஞ்சித் அழைக்கபடவில்லை, ஒருவேளை அழைக்கபட்டிருந்தால் சோ அருகே ரஞ்சித் அமர்ந்து படம் வெளிவந்திருந்தால்? நிச்சயம் அழிச்சாட்டியம் தாங்காது

இன்னொன்று சோ ரஜினி படங்களும் காட்சிகளும் இணையமெங்கும் வலம் வருகின்றன அல்லது வர வைக்கபடுகின்றன‌

சோ வினை பற்றி தெரியுமல்லவா? அவரை அழைத்தால் மொத்த பிராமண சமூகத்தையும் அழைத்ததற்கு சமம். ஆக ரஜினி எதனையோ சொல்ல வருகின்றார், கலைஞரை அடிக்கடி சீண்டும் சோ வும் கலைஞர் போலவே வீல் சேரில் வந்திருக்கின்றார் என்பது ஒரு வகை மேட்சிங், இருவருமே வில்லாதி வில்லன்கள்

பொதுவாக சோ வின் பார்வை வித்தியாசனாமது, அவரது ஈழக்கோணம் சரி, புலிகளை குறித்து முதன் முதலில் 1986களில் தமிழகத்தில் எச்சரித்த ஒரே நபர் அவர்தான், பின்னாளில் அது மிக சரி என புலிகளே காட்டினர்.

இனி கபாலி பற்றி என்ன எழுதி மலேசிய தமிழர்கள் நிலை பற்றி சொல்லபோகின்றாரோ தெரியவில்லை பார்க்கலாம்.

மொத்தத்தில் ரஜினி யார் மூலமாக தன் தலித் அரசியல் முத்திரையினை நீக்க முயல்கின்றார் என உலகம் கண்டுகொண்டிருக்கின்றது, இதுதான் ரஜினி, மனிதர் மிக சிறந்த நடிகர் மட்டுமல்ல, சில விஷயங்களில் இப்படியான ரசிக்கதக்க வில்லனும் கூட‌

ரஜினிக்கென்ன, நாளையே அறிவிப்பு கொடுத்தால் போயஸ் கார்டன் முழுக்க இயக்குநராக குவிவார்கள், ஒரு படத்தில் ஜமீந்தாராக வந்து ஏழைகளுக்கு சொத்து எழுதி வைத்தால் முடிந்தது பிரச்சினை, டக்கென்று எழும்பி விடுவார்

அந்த வேகம் தான் ரஜினி, அவர் அவராகவே இருப்பார்.

ஆனால் ரஞ்சித் அப்படி அல்ல, இன்னொரு நெருப்பாற்றினை நீந்தி கடக்கவேண்டும். அதில் அவரோ அல்லது அவரின் தனிதன்மையோ காணாமல் போகலாம்

கபாலியை ஏன் விமர்சித்தோம்?

கபாலியினை ஏன் விமர்சித்தோம் என்றால், ரஞ்சித் மீதுள்ள வன்மம் அல்ல, மாறாக அவர் மறைத்த விஷயங்கள் ஏராளம்

மலேசியா அற்புதமான நாடு, மூன்று இனங்களும் கலந்து வாழும் நாடு, வரலாற்றினை கவனியுங்கள் சிங்கப்பூர் தனிநாடாகும் போது ஒரு சொட்டு ரத்தம் சிந்தி இருக்கும்? உலகில் எங்காவது அப்படி பிரிவினை உண்டா?

அந்த பெரும் மனதிற்கு சொந்தக்காரர்கள் அவர்கள், அப்படி ஒரு மனம் எந்த இனத்திற்கு வரும்? சிங்கள்ன், யூதன், வெள்ளையன், ம்ம் ஹூம்.. யாருக்கும் வராது

இன்றும் இரு நாடுகளும் பகை அல்ல, ராணுவ குவிப்புகள் அல்ல, ஏவுகனைகள், அணுகுண்டுகள் இம்சைகள் இல்லை, எப்படி அமைதியாக வாழ்கின்றார்கள்

காரணம் பரந்த மனமும், விட்டுகொடுக்கும் பண்பும், உழைத்தால் வாழலாம் எனும் வாழ்க்கை தத்துவமும் அப்படி வாழ வைக்கின்றன. மலாய் மக்களின் பெரும் பரந்த மனம் அவர்களின் புன்னகை போலவே அழகானது, விசாலமானது

இட ஒதுக்கீடு முறை கொண்டுவந்தார்கள், காரணம் வறுமையும் அறியாமையும் அவர்களிலும் உண்டு , மக்களாட்சியில் பெரும்பான்மை இன ஆதரவு இல்லாமல் ஆட்சி சாத்தியமில்லை

அப்படி வந்ததில்தான் 7% மக்கள் தொகை கொண்ட இந்தியருக்கு குறிப்பிட விகிதமே கொடுக்க முடியும், அதிலும் பஞ்சாபியர், தெலுங்கர், மலையாளி என எல்லா இனமும் உண்டு ஆக தமிழர் என்பவர்கள் இவர்களோடு சேர்ந்த இந்தியரே

இதில் கல்வி கற்ற தமிழர் நல்ல பணிகளில் உண்டு, உழைத்து மேல் எழும்பிய தமிழர் உண்டு. சீன இனம் கேட்கவே வேண்டாம் அசாத்திய உழைப்பில் பிரமாண்டமாக எழும்பி இருக்கும் இனம அது.

இப்படி பல வாய்ப்புள்ள அழகிய தேசத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையினை படமாக்குவேன், அதிலும் பல உண்மைகளை மறைத்து தலித்தியம் பேசுவேன், மக்கள் புறக்கணிக்கபட்டதை போலத்தான் காட்டுவேன் என்றால் விமர்சனம் செய்யமாட்ட்டார்களா?

எல்லா விஷயத்தையும் காட்டிவிட்டல்லவா இன்னொரு முகத்தை காட்டவேண்டும்?

இந்நாட்டில் வரதட்சனை இல்லை, அரசு கல்வி கடனுக்கு ரெடி இன்னும் ஏராளமான வசதிகள் உண்டு, ஒரே விஷயம் பெற்றோற் பிள்ளைகளின் வாழ்வினை நிர்மானிக்க முடியாது

அதாவது அவர்களின் தலைவிதியினை அவர்களே முடிவுசெய்கின்றார்கள், இதுதான் யதார்த்தம்

இவ்வளவிற்கும் போதை பொருள் இருந்தால் கடும் தண்டனை என வைத்திருக்கும் நாடு இது, அந்நாடு அதில் கடுமையாக இருக்கின்றது

இதனை எல்லாம் எப்பக்கமாவது நீங்கள் அப்படத்தில் காண முடிந்ததா?

அம்பேத்கர் என்றால் யார் என இவர்களுக்கு தெரியுமா? அவ்வளவாக தெரியாது, ஆக கோட் வசனம், ஆண்ட பரம்பரை எல்லாம் வலிந்து திணிக்கபட்ட வசனங்களே

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எல்லா விஷயங்களையும் தொட்டு செல்வார் மணிரத்னம், கொழும்பில் தமிழ் இலக்கிய கூட்டம் நடக்கும், அதாவது இப்படியும் சில தமிழர்கள் அமைதியாக வாழ்கின்றார்கள், ஆனால் வடக்கே ஒரு தமிழ் குழந்தையின் தாய் என்ன பாடுபடுகின்றாள்

அக்குழந்தை போராளிகளில் ஒன்றாய் வாழவேண்டிய பெண் சென்னையில் வளர்ந்ததால் எப்படி ஒப்பிட்டு பேசுகின்றாள் என்பதில் தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தில் மொத்த வலியும் புரியும். அகதி முகாம் ரணம் புரியும் இன்னும் என்னவெல்லாமோ புரியும்

ஆனால் ரஞ்சித் அப்படி பரந்து பார்க்காமல், மிக மிக குறுகிய வட்டத்தில் காட்டிய படம் அது. எல்லா விஷயங்களையும் காட்டிவிட்டு இப்பக்கம் வந்தால் எப்படி இருந்திருக்கும்?

சீனர், பஞ்சாபியர், வங்கத்தவர், மலையாளி, தெலுங்கள் என எத்தனை இனங்கள் உண்டு, அவர்கள் வாழவிலையா? அடிமைகள் நாங்கள் என ஓலமிட்டார்களா? கேட்டதுண்டா? இதனை எல்லாம் சொல்லி இருக்கவேண்டாமா?

ஆக தமிழன் மட்டும் அடிமையா என்ற வசனம் எல்லாம் வியாபாரம் அல்லவா?

அதனைத்தான் சொன்னேன், அதற்கு எனக்கு கிடைத்தது சாதி வெறியன், பிராமண அடிவருடி, தலித் வளர பிடிக்காதவன் இன்னும் ஏராளம்

கொடுமையாக சீன பெருஞ்சுவர் அளவிற்கு நீண்ட கடிதங்கள்

நான் கம்பனுமல்ல‌… நீங்கள் சடையப்பனுமல்ல

நண்பர்கள் என சொல்லிகொண்டவர்களின் ஜாதி வெறி அப்பட்டமாக தெரியும் நேரமிது, எனக்கு ஜாதி பற்றி பெரும் பிம்பமெல்லாம் இல்லை, நானும் அடக்கபட்ட சூத்திர சாதியே, அடக்குதல் என்றால் விரட்டி விரட்டி அடக்குதல் எனும் ஒருவகை வன்மத்தால் அந்நாளில் விரட்டபட்ட சாதி

ஆனால் அன்றைய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் ஏக மாறுதல் உண்டு, உலகமயமாக்கம் எனும் இக்கால கட்டத்தில் எல்லோருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்கின்றது, வாழ நினைத்தால் வாழலாம் எனும் கனவு கனியும் காலம்

யாரும் யாரையும் நம்பி இருக்கவேண்டிய நிலை இல்லை, இப்படி எல்லாம் சாதி பேசுபவர்கள், வெளிமாநிலம் சென்றால் தமிழன் எனவும் அதே வெளிநாடு சென்றால் இந்தியன் எனவும், இன்னும் தாண்டி ஐரோப்பா சென்றால் ஆசிய கருப்பன் எனவும்தான் அழைக்கபடுவார்கள், நானை செவ்வாய் சென்றால் பூமிக்காரன் என்பார்கள்

ஆக மிக உயர்ந்த சிந்தனையும், பரந்த மனமுமே ஒருவனுக்கு வேண்டுமே தவிர, குறுகிய சுயநல சாதி வெறி அல்ல, அதனால் ஒன்றையும் கிழித்துவிட முடியாது.

இது உழைக்க வாய்ப்புள்ள காலம், இன்னொன்று நாம் எல்லோருமே வளரும் வர்க்கம், அதனால்தான் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கின்றோம், உலகம் அப்படி ஆகிவிட்டது,

காலத்திற்கேற்ப வாழவேண்டும் அதனை விட்டு பழங்கதைகளை பெசினால், உங்களுக்கு மட்டுமா? எங்களுக்கு பேச விஷயம் இல்லையா? புரட்சி, விடுதலலை, அடக்கப்ட்டோர் முன்னேற்றம் என சொல்ல தெரியாதா?

வேண்டாம்

காரணம் அது தேவை இல்லா காலம், வீணாண சர்ச்சைகளையும் அர்த்தமில்லா குழப்பங்களையும் அது கொண்டுவரும், அதனை வைத்து அரசியல் செய்யலாமே தவிர வேறு ஒன்றும் அல்ல‌

என்னை சாதி வெறியன், குழப்பவாதி என நினைத்தால் நினைத்து கொள்ளுங்கள், ஈழம் பற்றி மட்டும் எழுத நான் என்ன கதிர்காமத்திற்கு நேர்ந்துவிட பட்டவனா?

பிடிக்கவில்லை என்றால் நகர்ந்துவிடலாம் அல்லவா? உங்களை போலவே நானும் சிந்திக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி?

இதோ என் தாத்தா செருப்பினை கையிலேந்தி நடந்த அக்கிரகாரத்துல் என்னால் ஷூ போட்டு நடக்க முடிகின்றது, அங்கே வீடும் வாங்கி நடுத்தெருவில் கருவாடும் காயவைக்க முடிகின்றது என்றால் காலம் மாறி இருக்கின்றது என்றுதான் பொருள், இதில் நான் ஷூ போட்டது அரசியல் என சொல்லமுடியுமா?

திறமை உள்ளவர்கள் ஒருநாளும் சாதிய போர்வையில் , சிறுபான்மை போர்வையில் தன்னை அடைத்துகொள்ள மாட்டார்கள், திறமை அவர்களை உயர்த்தும்

தலித் மக்களின் வலியினை பாரதி கண்ணம்மா படம் அழுதமாக சொன்னது என்றால் அதிலென்ன தவறு கண்டீர்கள்?

எல்லாவற்றையும் சாதிய கண்ணோட்டத்ததோடு பார்த்தால் உங்களுக்கு கிளிண்டன் பிராமணனாகவும், சதாம் உசேன் தேவராகவும்தான் தெரிவார், பில்கேட்ஸ் நாடாராக தெரியலாம்

லெனின், மாவோ போன்றார் தாழ்த்தபட்டவராக தெரியலாம்.

என்ன பைத்தியக்ரமான சிந்தனை இது

சிவாஜி கணேசன் பெரும் உச்சம் பெற சாதி உதவிற்றா? இவ்வளவிற்கும் அவர் சொந்த சாதிகாரனன தேவர் பிலிம்ஸ் அவரை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை?

இப்படி சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம்

திறமையுள்ள யாருடைய முன்னேற்றதை இங்கு சாதி தடுத்தது? சொல்லுங்கள், நாங்களும் திரையுலகம் அறிவோம்

ஒடுக்கபட்ட இனத்தின் அவருக்கும், மேட்டுகுடியான சுஜாதாவிற்கும் பெரும் நட்பு இருந்திருக்கின்றது, இருவருமே உச்சம் தொட்டிருக்கின்றார்கள், யாழ் தாழ்திருக்கின்றார் அல்லது தாழ்த்தப்ட்டிருக்கின்றார்?

நேற்று அப்துல் கலாம் நினைவுநாள், தாழ்த்தபட்ட மீணவ குப்பத்துக்காரரான அவருக்கும் மேட்டுகுடி சுஜாதாவிற்கும் நல்ல நட்பு இருந்திருக்கின்றது, இருவருமே உச்சம் தொட்டிருக்கின்றார்கள்

பாரதியாரின் இறுதி நாட்களில் அவருக்கு துணை யார்?, காமராஜர் ஜாதி வைத்தா அகில இந்திய காங்கிரசினை ஆட்டி வைத்தார்?

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே , அதாவது நல்லவர்கள் எல்லா ஜாதியிலும் உண்டு

மனதை விசாலமாக்கிகொண்டு, பர்ந்த சிந்தனையோடு பதில் எழுதுங்கள், இல்லாவிட்டால் சென்றுவிடலாம்.

உங்கள் மகிழ்ச்சிக்காக எழுத நீங்கள் எட்டயபுரம் ஜமீனும் அல்ல, நான் பாரதியும் அல்ல,

நீங்கள் சடையப்பனுமல்ல நான் கம்பனுமல்ல‌

சிதறல்கள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கலவரம், சிலர் பலி, கலவரத்தை அடக்க ராணுவம் குவிப்பு

எங்கே ஆட்டு மந்தை இயக்கமும், அங்கிள் சைமனும் இன்னும் பிற மனிதநேயர்களும்? இந்திய காஷ்மீர்வாசிதான் சகோதரனா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வாசி எதிரியா?

இப்படித்தான் இனி யாழ்பாண தமிழன் தொப்புள் கொடி, கொழும்பு தமிழன் உச்சி ..ர் என இருந்துவிடுவீர்களா?

அப்படி உங்கள் சகோதரத்துவமும், உங்கள் மனிதநேயமும் உண்மை என்றால் பாகிஸ்தான் ராணுவத்தை கண்டித்து ஊர்வலமும், அவர்கள் தூதரகம் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டமும் செய்யுங்கள் பார்க்கலாம்.


உலகெல்லாம் சில நாடுகளில் இந்திய அரசின் மறைமுக உதவியுடன் மோடி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா பெரு விருந்தோடு கொண்டாட படுகின்றதாம்,

அப்படி என்ன சாதனை படைத்துவிட்டார்கள் என கொண்டாடுகின்றார்களோ தெரியவில்லை, ஒருவேளை இரு ஆண்டுகளில் நாடு திவால் ஆகவில்லை என்பதை கொண்டாடி இருக்கலாம்

அதற்கு உண்மையில் கச்சா எண்ணெய் விலை குறைவிற்கு காரணமான ஐஎஸ் இயக்கத்திற்கும், ஈரானுக்கும் தான் விருந்து கொடுக்கவேண்டும்

என்ன கிழித்தார்களோ தெரியாது, தினமும் காலண்டரை கிழித்து நாட்களை கடத்துவதுதான் சாதனை என எண்ணி இருக்கலாம்

(இப்பொழுது வந்து கமெண்டில் ஆடுவார்கள் பாருங்கள், மோடி ஜப்பானிலும், தான்சானியாவிலும் அடித்த டிரம் போல சத்தம் வரும் 🙂 )