இன்று உலக நண்பர்கள் தினம்

இன்று உலக நண்பர்கள் தினமாம்

முகநூலில் கிடைத்திருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களை சொல்லிகொள்கிறோம், இந்த விஞ்ஞா வீதியான‌ முகநூலில் மில்லியன் கணக்கான நபர்கள் உண்டு எனினும் நமக்கு நண்பர்கள் என வாய்த்தவர்கள் வித்தியாசமானவர்கள்

பெரும்பாலும் நாட்டுபற்றுள்ளவர்ர்கள், சாதி கடந்தவர்கள், ஓரளவிற்கு எது தர்மம் என அறிந்தவர்கள் , குறுகிய வட்டத்தில் தன்னை அடைத்துகொள்ளா பெரும் மனதிற்கு சொந்தகாரர்கள் எனது முகநூல் நண்பர்கள் எனும்பொழுது மனம் மகிழ்கின்றது.

சர்ச்சை செய்வார்கள், வாதம் செய்வார்கள், கடுமையாக விமர்சனம் செய்வார்கள். மறுநொடி அப்புறம்… என சகஜநிலைக்கு வந்துவிடுவார்கள்

பெரும் ஆச்சரியமாக இதில் 90% நண்பர்களை நான் நேரில் பார்த்ததே இல்லை, அதனால் என்ன?

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பின் ஆண்ராய்ட் வெர்ஷன் என சொல்லிவிடலாம்

அதுபோலவே நட்பில் உறுதி என்பது மட்டும் உண்மை

குறள்
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

பொருள்:
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

முகநூலில் எனக்கு கிடைத்திருக்கும் நண்பர்கள் இப்படியானவர்கள், ஒன்றுபட்ட எண்ணங்களே நம்மை எல்லாம் நட்பாக நிறுத்தியிருக்கின்றன.

நட்பு நாளின் வாழ்த்துக்கள் நண்பர்களே, கொண்டாடுவோம்

சிதறல்கள்

பாலாற்று தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை , இனியாவது விழிக்குமா அரசு : அன்புமணி சாடல்

அதாகபட்டது தாழ்த்தபட்ட சாதிக்காரன் காதல் திருமணம் செய்து சர்ச்சைகுரிய “தற்கொலை” செய்தால் அரசு தூங்கட்டும் என விட்டுவிடுவார், ஆனால், விவசாயி செத்தால் மட்டும் அரசினை விழிக்க சொல்வார்

எந்த சாதி விவசாயி என்பதை அன்னார் விரைவில் சொல்வார் என எதிர்பார்க்கலாம், பொதுவாக வன்னிய விவசாயிகளை தவிர யாருக்கும் இந்த அன்புமகன் வாய்திறப்பதில்லை


கர்நாடகாவில் இன்று பந்த், மகதாயி நதியினை மராட்டியத்துடன் பகிர்ந்துகொள்வதை கண்டித்து வாட்டாள் நாகராஜ் தலமையில் பந்த் ஆர்பாட்டம்

வாட்டாள் நாகராஜ் எனும் கன்னட வெறியருக்கு தண்ணி ராசி, எங்காவது நீரை பங்கிட வேண்டும் என்றால் பொங்கிவிடுவார். ஆந்திரா, தமிழத்தை தொடர்ந்து இதோ மகாராஷ்ட்டிரத்திடம் மல்லு கட்டுகின்றார்.

தமிழகத்திற்கு எதிராக இவர் பேசிய பேச்சுக்கள் சாதரணமானவை அல்ல.

கன்னட மக்கள் ஒரு வகையில் வித்தியாசமானவர்கள், என்னதான் கன்னடர் நலம், கன்ன்ட வெறி என கத்தும் இம்மாதிரி சண்டியர்களை தெருக்கத்தலுக்கு மட்டும்
அனுமதிப்பார்களே தவிர

ஒரு போதும் ஆட்சிக்கு அல்ல.

அவ்வகையில் தனித்து நிற்கிறது கன்னடம்