அம்மா ஆட்சியினை பழித்ததால்…

இனி பலபேர் யாரையாவது அடித்துவிட்டு, அம்மா ஆட்சியினை பற்றி தப்பாக பேசியதால் அடித்தேன் என கிளம்பிவிடுவார்களோ என பயமாக இருக்கின்றது,

இனி சொந்த பிரச்சினையில் அடித்துவிட்டு அம்மா ஆட்சியினை பழிக்க என்ன தைரியம் என சீறிவிட்டு வந்துவிடலாம், அது துண்டு பீடி, குவார்ட்டர் என என்ன பிரச்சினையாகவும் இருந்தாலும், அம்மா ஆட்சியினை பழித்ததால் அடித்தேன் என சொல்லிவிடலாம்

இன்னும் என்னென்ன விசித்திரங்களை எல்லாம் தமிழகம் காணபோகின்றதோ தெரியவில்லை, எதற்கும் எல்லோரும் ஹெல்மெட் மாட்டிகொண்டு நடமாடுவதுநல்லது,

அது விமான நிலையமாக இருந்தாலும் சரி, ரயில் நிலையமாக இருந்தாலும் சரி.

ஆனால் அதே டெல்லியில் உச்சநீதிமன்றம் அவதூறு வழக்கில் தமிழக அரசினை முறைத்த விஷயம் சற்றே ஆறுதளிக்கின்றது, ஏதும் சிக்கல் என்றால்

“அரசை விமர்சித்தால் முன்பு வழக்கு போட்டார்கள், இப்பொழுது கன்னத்திலே பளாரென்று போடுகின்றார்கள்” என வாதிடலாம்

நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கின்றது என நீதிபதி மனதிற்குள் நினைத்துகொள்வார்

நல்ல வேளையாக சீமானியரும், புலியரும், புதிதாக சம்பாதித்த ரஞ்சித் வெறியர்களும் என் அருகில் இல்லை

இருந்திருந்தால் என் கன்னம் என்ன ஆகி இருக்கும் 🙂 , அம்மாவை பற்றி பேசிய உன்னை விடுவோமா என பாய்ந்திருப்பார்கள், அதில் திமுகவினரும் உண்டு என்பதுதான் ஆச்சரியம்