உலகம் கோலகலமாக ஒலிம்பிக் போட்டியினை தொடங்கும் வேளையில் தமிழகம் சசிகலா புஷ்பாவினையிம் திருச்சி சிவாவினையும் தூக்கி போட்டு விளையாட தயாராகின்றது.
இப்பொழுதே ஆரம்பித்துவிட்டார்கள், சசிகலா புஷ்பா பிறந்த வீடு, அவர் முதலில் எழுதிய சிலேட், 5ம் வகுப்பில் அவர் வகித்த தலைவர் பதவி, அவர் வீட்டு நாய்குட்டி, அவர் வீட்டு பூவரசமரம் என தொடங்குகின்றார்கள்
இன்னொரு பக்கம் யார் திருச்சி சிவா? என ஒரு ஆராய்ச்சி
அட கருமாந்திரங்களா, சசிகலா புஷ்பா என்ன ஹிலாரி கிளிண்டனா? அல்லது திருச்சி சிவா என்ன சிஐஏ கண்ணில் மண்ணை தூவிய துருக்கி மோர்டகனா?
இதில் கொடுமை என்னவென்றால் சசிகலா புஷ்பா ஒரு பெண், இனி இரட்டை விமர்சனங்களை தாங்கவேண்டும், மர்லின் மன்றோ ரேஞ்சிக்கு எழுதி தள்ளுவார்கள்.
உலகத்தில் ஆயிரம் விஷயங்கள் நடந்துகொண்டிருக்க, பாகிஸ்தான் சார்க் மாநாட்டில் இந்திய நிலைப்பாடு எப்படி இருக்கும் என ஒரு தியரி ஓடிகொண்டிருகக்கபல பரப்பான விஷயங்கள் நடந்துகொண்டிருக்க
இங்கே தமிழக ஊடகங்கள் கிளம்பி இருப்பது சசிகலா புஷ்பா பின்னால்
இந்த தமிழக ஊடகங்களை விரட்டாமல் இங்கு எதுவும் சாத்தியமில்லை
சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து நீக்கம் : ஜெ நடவடிக்கை
கட்சிக்குள் ஒரே ஒரு சசிகலாbuu போதும் என்பது மேலிட முடிவாக இருக்கலாம், எல்லா சசிகலாவும் சின்னம்மாவாகவோ அல்லது சின்னமாககோ மாறிவிட முடியுமா?
விமான நிலையத்தில் ஒரு எம்பியினை அடித்ததற்கு கட்சியினை விட்டு நீக்கிவிட்டார்கள், இது ஜனநாயகமா? இது கட்சி அரசியலா?
என்ன செய்திருக்கவேண்டும்?
இதற்கொரு வழக்கு தொடரவேண்டும், சாட்சிகள் வரவேண்டும், திடீரென 100 சாட்சிகள் பல்டி அடிக்கவேண்டும், இறுதியில் அடித்தது யார் என தெரியாமல் நீதிபதி தலையில் அடித்துகொண்டே ஓடவேண்டும்
அப்படித்தான் கொலை வழக்கில் சம்பந்தபட்டவர்கள் கூட எல்லாம் பல கட்சிகளில் நீடித்துகொண்டே இருக்கின்றார்கள்.
அடித்து விளையாடி கட்சியில் நீடிக்க இது என்ன சத்தியமூர்த்தி பவனா? அங்கே ராணுவ பாதுகாப்புடனோ அல்லது சர்வதேச அமைதிபடை உதவியோடு தான் இனி தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என அறிவிக்க முடியும்.
சோனியாவும் ராகுலும் இன்னும் அசையாமல் இருக்க அதுதான் காரணம், அறிவித்துவிட்டால் அவ்வளவுதான் சத்தியமூர்த்தி பவன் பெரும் கலவர பூமியாகும், எத்தனை பேரை டிஸ்மிஸ் செய்ய முடியும்? மொத்த கட்சி உறுப்பினர்களையுமா?
பெரும் கலவரமேகங்கள் சூழ்ந்துள்ள பகுதி இப்போது இந்தியாவில் சென்னை சத்யமூர்த்தி பவன் தான். தலைவரை அறிவித்துவிட்டால் அதன் பின் இருக்கின்றது கச்சேரி, இந்திய ராணுவம் தலையிட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.
அவர்களை சொல்லுங்கள், அவர்கள் அடிக்கலாம், கத்தலாம், ஏன் சட்டை கிழித்து விளையாடலாம், அவர்கள் சுதந்திரம் அப்படி
திமுகவில் கூட ஏதாவது செய்து சமாளிக்கலாம், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, செல்வி என யார் பின்னால் நின்றாவது மன்னிப்பு கேட்டு ஒட்டிகொள்ளலாம்
ஆனால் இது ஒன் லேடி ஆர்மி
தென்னக மூலவர் கருப்பசாமி பாண்டியனே வனவாசம் சென்று திரும்பியாயிற்று , அப்பாவு என்பவருக்கு இனி கலைஞரே எளிதாக சீட் கொடுக்கமாட்டார் என்கின்றார்கள், அதிமுக அங்கே வலுவாக கால் ஊன்றியாயிற்று, பின் என்ன தயக்கம், வெட்டிவிடலாம். வெட்டி ஆயிற்று.
இந்த புஷ்பா என்ன, அம்மா கண்ணசைத்தால் ஆயிரம் புய்பங்கள் தூத்துகுடியில் பூக்கும்
இனி என்ன நடக்கும்? “திராவிட இயக்கத்து தோழி, இயக்கத்து தளகர்த்தன் ஒருவன் கன்னத்தில் அடித்தது பெரியார் கொடுத்த துணிவு, அவர் கொடுத்த தைரியம்,அந்த திராவிட பாரம்பரிய பெண்மணிக்காக இந்த கழகம் தன் கதவுகளை திறந்தே வைக்கின்றது,
பொதுவாழ்வில் பெரியார், அண்ணா, நான் எல்லாம் எத்தனை வசவுகளை அவமானங்களை தாண்டிவந்தோம் என்பது தம்பி சிவாவிற்கு தெரியும்
விட்டுகொடுப்பவர்கள் கழகத்திற்கு ஒரு செங்கல் வைக்கின்றார்கள் என்றார் அண்ணா.
பெண் சிங்கமே வா, .. 15 எம் எல் ஏக்களோடு வா, அடுத்த சபாநாயர் நீதான்….” என்ற ரீதியில் அந்த பத்திரிகையில் அழைப்பு வரலாம் 🙂
ஜெயலலிதா என்னை கன்னத்தில் அறைந்தார், பதவி விலக சொல்லி மிரட்டினார் : சசிகலா புஷ்பா
# நாய் அடிபட்டதற்கு கத்தியவன், மாடு பிடித்தால் அது சித்திரவதை என்பவன் எல்லாம் எங்கே?. பெண் உரிமை போராளிகள், ஆர்வலர்கள் எல்லாம் அண்டார்டிக்கா போய்விட்டார்களா?
இந்த உண்மை கண்டறியும் குழுக்கள் என அழிச்சாட்டியம் செய்பவர்களாவது, உண்மை கண்டறியபோகின்றோம் என கிளம்பவில்லை, போயஸ் கார்டனில் நடந்தது என்ன ஜெயலலிதாவிடம் உண்மை கண்டறிந்தால் எப்படி இருக்கும்?
அவர்கள் என்ன செய்வார்கள்?, கிடைத்தது ராம்குமார் தான்.
கவிதை எழுதி பெண்ணியம், மண்ணியம் பேசுபவர்களையும் காணவில்லை, பெரியார் வாரிசு தாலியறுப்பு வீரமணியிடமிருந்தும் சத்தமில்லை
ஒரு தமிழச்சி தாக்கபட்டிருக்கின்றாள், தமிழருக்காய் பொங்கும் அமைப்புகளையும் காணவில்லை, எல்லாம் கப்சிப்
அட சாதி பெருமை பேசுபவனையும் இந்த விவகாரத்தில் காணவில்லை, சங்கத்து ஆட்கள் சத்தமே இல்லை
ஆக அம்மா என்றால் எல்லோர் வாயும் தானாக அடைத்துகொள்கின்றது, மூச்சாவது விடுகின்றார்களா இல்லையா என்பது மட்டும் தெரியவில்லை.