வெட்கி தலகுனிய வேண்டும்…..

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கலைச்செல்வி சாதி வெறியர்களால் கொல்லபட்டிருக்கின்றாள்

இதிலெல்லாம் தீண்டாமை, ஒதுக்கி வைத்தல் போன்ற கொடுமைகளை கயவர்கள் செய்வதில்லை, இந்த விஷயத்தில் என்ன மனநிலை அவர்களுக்கு? தாழ்த்தபட்ட பெண்கள் என்றால் அது ஒரு ஜடம், எங்களுக்கு வேண்டும், அவ்வளவுதான் ஆடு போல அறுத்துவிடுவோம்

அந்த மனநிலையில் மட்டுமே இப்படி ஆடிகொண்டிருக்கின்றார்கள்.

சென்னையில் சரிகா ஷா செத்தால் தேசம் கொந்தளிக்கும், சுவாதி எனும் பிராமண பெண் கொல்லபட்டால் சட்டம் ஒழுங்கு என பொங்கிவிடுவார்கள், அதாவது உயர் குல பிறப்பாக இருக்கவேண்டும், கொடுமை நடக்கும் இடம் தலைநகராக இருக்கவேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான்

அதுவும் டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி என்றால் அவ்வளவுதான் உலகம் திரும்பி பார்க்க வைப்பார்கள்

அந்த சாலியமங்கலம் அபலை மக்கள் சாதாரணமாக சொல்கின்றனர், இது வழக்கமாக நடப்பது, நாங்கள் என்ன செய்ய முடியும்?

அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது, எதிர்க்க வலு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள், அழத்தான் முடியும். ஆனால் அவர்களை காக்கும் பொறுப்பு அரசுக்கும் உண்டு, ஊடகங்களுக்கும் உண்டு

தமிழக ஊடகங்களை நாம் கண்டிக்க காரணமே இதுதான், இதனை எல்லாம் எழுதி என்ன ஆகபோகின்றது, எங்காவது மூலையில் போடவேண்டிய செய்தி, நமக்கு என்ன லாபம் எனும் லாப நோக்கு

அரசு இறங்காது, காரணம் அது வோட்டு அரசியல், ஆனால் ஆட்சிக்காக இதனை எல்லாம் அனுமதித்துதான் அரசு நடத்தவேண்டும் என்றால்…

உண்மையில் இந்த குற்றவாளிகளை பிடித்து தூக்கில் இட்டால் கூட, யார் குற்றம் என்பார்கள்? எனது சாதிக்காரன் அப்படித்தான் செய்வான் என்றால் அவனையும் தூக்கலாம், என்ன நடந்துவிடும்? ஒன்றும் நடக்காது, அரசின் பெயர் கால காலம் நிற்கும்.

இவர்கள் செய்வார்களா என்று நமக்கு தெரியாது, ஆனால் மாவட்ட ஆட்சிதலைவர் போன்ற அதிகாரிகள், பெரும் அதிகாரிகள் தலையிட்டு சிறப்பு குழுக்களை அமைக்க சொல்லலாம்

எத்தனையோ நல்ல பொதுநல வழக்கறிஞர்கள் உண்டு, அவர்களில் ஒருவர் களமிறங்கலாம், என்ன வந்துவிடும்? எல்லா சாதியிலும் நல்லவர்களும் இருப்பார்கள், அது உண்மை, அவர்கள் பாதுகாப்பு தருவார்கள்.

ஒரு நல்ல முடிவு கிடைக்கும் பட்சத்தில் எங்கோ அடுத்த பெண் பாதுகாக்க படுவாள், அல்லது இன்னொரு பெண்ணை எங்கோ இழக்க நாம் தயாராகிகொண்டிருப்போம்

அரசு களமிறங்கவேண்டிய நிலைதான், என்ன செய்யுமோ?. ஊடகங்கள் இதனை பெரு செய்தியாக காட்டவேண்டிய விஷயம்தான் செய்வார்களா?

இதனை எல்லாம் காணும்போது காமராஜர் ஆட்சியில் இம்மாதிரியான சில சம்பவங்களுக்கு அவர் எடுத்த சில அதிரடிகளும் நினைவுக்கு வருகின்றன‌

பல நடவடிக்கைகளை அவர் மறைமுகமாக எடுத்தார், அதனால் குறிப்பிட்ட இனத்திற்கு எதிரானவர் என அவர் முத்திரையும் குத்தபட்டார், பெரும் கலவரமும் அரங்கேறிற்று

அவர் கொஞ்சமும் அஞ்சவில்லை அசரவுமில்லை. அதெல்லாம் சேர்ந்து அவர் தோற்கடிக்கபட்டாலும் இன்றுவரை தாழ்த்தபட்ட மக்களுக்காக அவர் எடுத்த அந்த வீரமிகு நடவடிக்கைகள் போற்றதக்கவை

அவர் ஆட்சியும் அந்த காட்சிகளும் நினைவுக்கு வந்தே போகின்றன.

அந்த அளவு வேண்டாம், அதில் ஒருபங்கு போதும்.

அந்த ஒரு பங்கினையும் எடுக்காமல் இம்மாதிரியான கொடுமைகள் யார் ஆட்சியில் தலைதூக்கின என்பது தெரியாததல்ல, சொன்னால் எம் பொன்மன தலைவனை சொன்னாயா? என சீறுவார்கள், அவர் செய்த புரட்சி இதுதான்.

அவர்கள் நமது பெண்கள், இந்நாட்டு குடிமக்கள் அவர்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு, உண்மைகளை எடுத்து சொல்லும் கடமை ஊடகங்களுக்கு உண்டு

சாதி மறந்து பெண்மையினை தாயாய் மதித்து காக்கும் கடப்பாடு நம் எல்லோருக்கும் உண்டு,

இந்த நாட்டில் நடந்த, அதுவும் நமது தமிழகத்தில் நடந்திருப்பது நாமெல்லாம் வெட்கி தலைகுனிய வேண்டிய நிகழ்வு.

இல்லாத சாதி வீரத்தை அந்த அபலை பெண்களிடம் போய் காட்டிய அந்த மனநலம் குன்றிய கும்பலை தமிழகத்திற்கு அடையாளம் காட்டவேண்டிய பொறுப்பில் காவல்துறை இருக்கின்றது.

இந்த தேசத்தின் ஏழை குடிமகனாக அப்பெண்ணின் தந்தை கதறும் காட்சியினை கடந்து செல்ல முடியவில்லை. பெரும் சோகம்

ஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி

FB_IMG_1470196452068

 

ஒரு இந்தியனான நான் என் தாய்நாட்டை பற்றி சொன்னால் அதன் பெயர் சொம்பு தூக்குதலாம், ஒரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது

இவர்களுக்கெல்லாம் என்ன வேண்டும், ஒன்றுமில்லை, என்ன வேண்டும் என அவர்களுக்கே தெரிவதில்லை, அதுதான் பிரச்சினை, தன்னை புரட்சியாளராக காட்டிகொள்ளவேண்டும் என்பதில் அவர்களுக்கு ஒரு ஆசை, அதனால் சொல்லிகொள்கின்றார்கள்.

தேசம் தனக்கு அது செய்யவேண்டும் இது செய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்களே தவிர, இத்தேசத்திற்கு இவர்கள் என்ன கிழித்தார்கள் என யோசிக்க மாட்டார்கள். பொதுநலம் இல்லை எல்லாம் சுயநலம்

அதனால்தான் தேசத்திற்காய் உழைத்த கலாம் முதல் யாரை கண்டாலும் அவர்களுக்கு பிடிப்பதில்லை

இந்தியா வெள்ளையன் உருவாக்கிய அமைப்பு, இதில் நீ தமிழன் எப்படி இந்தியன் ஆவாய் என சத்தம் வேறு

சரி சேர சோழ பாண்டி ,கொங்கு, கடையேழு வள்ளல் என இருந்த தமிழகம் மட்டும் ஒரே நாடா? அதனை ஒன்றாக்கியது நாயக்கர்கள் அல்லவா? அப்படியானால் தமிழகத்தை 25 துண்டுகளாக உடைப்போமா?

ஈழம் என்பது என்ன?, கண்டி, யாழ்பாணம், வன்னி என மூன்று அரசுகளில் ஒருங்கிணைப்பு அல்லவா? 3 ஈழம் அமைப்போமா?

ஒரு தேசத்தை உடைத்தால் உடைத்துகொண்டே இருக்கலாம், வளர்த்தால் வளர்த்துகொண்டே இருக்கலாம்

சீனாவில் மாண்டரின் பெரும் மொழி, அது தவிர கெண்டனிஸ், ஹாக்கியன் என எத்தனை மொழிகள் உண்டு அது வளரவில்லையா?

சோவியத் யூனியன் பெரும் அமைப்பாக இருந்து உலகத்தை மிரட்டியது, இன்று பிரிந்து சென்ற உக்ரைன் பன்னாட்டு படைகளால் மிதிபடுகின்றது

வட கொரியா தென் கொரியா ஒரே மொழி, அரபு நாடுகள் பலவற்றில் ஒரே மொழி, இணைந்தார்களா? ஒற்றுமையாக வாழ்கின்றார்களா?

ஆப்ரிக்க நாடுகளிலும் இந்நிலை உண்டு, ஒரே மொழி தான் பல நாடுகளில் பேசபடும், ஆனால் இணைந்து வாழசொல்லுங்கள், அவர்களால் முடிவதில்லை

ஆக மொழியால் இணைவோம் என கிளம்பினால் அன்றே ஒரே தமிழகம் இருந்திருக்கவேண்டும், இன்னும் என்ன தனி தமிழ்நாடு கிடைத்தால் , அடுத்தது என்ன? தனி சோழநாடு, தனி பாண்டிய நாடு

அந்த பிரிவினைகளால் ஒன்றும் கிழிக்க முடியாது

ஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி

கருப்பர் வெள்ளையர் சர்ச்சைகளை தாண்டி இன்று ஒரே அமெரிக்காவாக நிற்கும் அத்தேசமே உலகினை ஆள்கின்றது,

அப்படி மொழி, இன ஒற்றுமை ஓங்கி நிற்கும் சீனமே அதற்கு சவால் விடுகின்றது

இப்ப்படி ஒரு மண்ணாங்கட்டியும் யோசிக்க மாட்டார்கள், ஒருவனுக்கு மொழி ரீதியாக இந்தியா உடைய வேண்டுமாம், இன்னொருவனுக்கு இன ரீதியாக வேண்டுமாம்

ஒருவனுக்கு ஜாதிரீதியாக உடையவேண்டுமாம், அதுதான் பகீர் ரகம். அப்படியானால் வீட்டிற்கு ஒரு நாடு இருக்கும். அன்று வாடிகன் உலகின் மிக சிறிய நாடு எனும் அந்தஸ்தை இழக்கும்

4 சென்ட் நிலத்தில் ஒருநாடு, அது ஒருவனுக்கு வேண்டுமாம்.

புஷ்பா விவகாராம் எங்கோ திரும்புகிறது

புஷ்பா விவகாராம் எங்கோ திரும்புகிறது, தென்னகத்து அம்பானியின் அதிமுக ஆதரவாளர்கள் நெல்லை பக்கம் கட்சியிலிருந்தே விரட்டபடுகின்றார்கள், அதுவும் வேட்பாளர்களாக அறிவிக்கபட்டவர்கள் எல்லாம் ஓட விரட்டபடுவது சாதாரண விஷயமாக இருக்காது

தாதுமணலில் அரசு ஒரு முடிவுக்கு வந்தவுடன், அண்ணாச்சியும் ஒரு முடிவிற்கு வந்து ஆட்டத்தை தொடங்கி இருக்கின்றார் என்கிறது சில செய்திகள், ஆனால் உறுதிபடுத்தபடவில்லை

இன்னும் சில நிகழ்வுகள் நடந்தால் சாட்சாத் தமிழக அம்பானி களமிறங்கிவிட்டார் என்பது உறுதிபடுத்தபட்டு விடும்

சில நிகழ்வுகள் என்பது வேறு ஒன்றுமல்ல, “அண்ணாச்சி நல்லவர் வல்லவர், தாது மணல் 1 லட்சம் மக்களுக்கு சோறு போடும் தொழில், நாங்கள் ஸ்பூன் வைத்து கடற்கரையில் லேசாக மணல் அள்ளிதான் தொழில் செய்வோம்

பெரும் எந்திரங்கள் எல்லாம் வெளிநாட்டுகாரனை ஏமாற்றவே அன்றி, மணல் அல்ல அள்ள ” என ஒரு கோஷத்துடன் பலர் கிளம்புவார்கள்

நாடாண்ட நாடார் இனத்தின் தவப்புதல்வியின் கண்ணீருக்கு காரணம் யார்? என பல “சங்கத்து” தலைவர்கள் களமிறங்குவார்கள்

இப்படி சில நிகழ்வுகள் நடைபெறும், சுருக்கமாக சொன்னால் கூடங்குள போராட்டத்தில் தொடக்கத்தில் இருந்த வீரியம் போல சில விஷயம் நடக்கும், அங்கிள் சைமனும் கும்பலோடு கும்பலாக கத்த வாய்ப்பு உண்டு, அப்படி நடந்தால் அவர் களமிறங்கிவிட்டார் என பொருள்

இந்த இடத்தில் தமிழக மக்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்

முதன் முதலில் அண்ணாச்சியினை பகிரங்கமாக கண்டித்தவர் வியஜகாந்த், தூத்துகுடியிலே சவால் விட்டார், அதன் பின் அங்கிள் சைமன் வந்தேறி கோஷம் எழுப்பி விஜயகாந்தினை குறிவைத்து சாடியதும், வைகோவின் நாடகங்களும் நடந்து விஜயகாந்த் கட்சி கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டதும் தெரியும், அப்பொழுது சீமானின் ஆட்டங்கள் கொஞ்சமல்ல‌

விஜயகாந்த தோற்றவுடன், சீமானும் மகா அமைதி. இப்பொழுதெல்லாம் வந்தேரி, தெலுங்கர் , போர் போன்ற வார்த்தைகள் அவரிடம் இல்லை

இப்பொழுது ஜெயாவிற்கும் வைகுண்டராஜனுக்கும் அவ்வளவாக பொருந்தவில்லை, இனி என்ன நடக்கும் என்பது இனிதான் தெரியும், ஆனால் ஆளுநர் உரையில் தாதுமணல் தொழிலை அரசு ஏற்கும் என்பது யாரும் எதிர்பாரா விஷயம்.

அரசியலில் எதுவும் நடக்கலாம்.

மூப்பனார் ஒரு காலத்தில் ஜெயாவினை எதிர்த்து கட்சி நடத்தி கலைஞருடன் உறவாடிவிட்டு, பின் ஜெயா எவ்வளவோ பரவாயில்லை என சென்றது போல, ஒருவேளை விஜயகாந்த பரவாயில்லை என அம்மா முடிவெடுத்துவிட்டால்?

அதன் பின் காட்சிகள் மாற ஆரம்பித்தால், காரணம் அரசியலில் நிரந்தர உறவோ, பகையோ கிடையாது. காலத்திற்கேற்ப மாறுவார்கள், அப்படி மாறினால்?

அண்ணாச்சியினை விடுங்கள், அவருக்கு எல்லா கட்சியிலும் தொடர்பு உண்டு. ஏதாவது செய்து இழுத்துகொண்டே இருப்பார். ஜெகஜால கில்லாடி

ஆனால் அங்கிள் சைமனின் நிலை?

விஜயகாந்த், ஜெயா எல்லாம் ஓரணிக்கு வரவேண்டும் என்பது கூட இல்லை,

கட்சிக்குள் அண்ணாச்சி அடிமைகள் களையெடுக்கபடுகின்றனர், இது தமிழகத்திற்குள் நடந்தால்?

அண்ணாச்சியின் அல்லக்கைகள் அரசால் களையெடுக்கபடுகின்றன எனும் நிலை வந்தால் என்ன ஆகும்? வரலாம் வாய்பிருக்கின்றது.

அங்கிள் சைமன் நிலை இனி ஆப்பசைத்த குரங்கு, அவரின் அடிப்பொடிகள் நிலை என்ன ஆகும்?

என்னவெல்லாம் பேசினார்கள் அவர்கள், இனி பேசட்டும் பார்க்கலாம்? ஹிட்லர் முதல் பிரபாகரன் வரை கொடிபிடிக்கட்டும் பார்க்கலாம்

இனி தெரியும் இந்தியா என்றால் என்னவென்று, அரசு நடவடிக்கை எடுத்தால் எப்படி இருக்குமென்று,

அப்பொழுதும் கோபாலபுரம் மீது கல் எறிந்துவிட்டு யாராவது திமுககாரனை பிடித்து அடித்து தப்பிக்க பார்ப்பார்கள், எல்லாம் சசிகலா புஷ்பா காட்டிய வழி, இவர்களாக என்று யோசித்தார்கள்.

எதற்காக கல் எறிவார்கள்?, “ஏன் வீணாக தோற்றீர் கலைஞரே, உம்மை நம்பித்தானே அரசியலில் இறங்கினோம்..இப்படி ஏமாற்றி விட்டீரே அய்யா..”