ஒரு இந்தியனான நான் என் தாய்நாட்டை பற்றி சொன்னால் அதன் பெயர் சொம்பு தூக்குதலாம், ஒரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது
இவர்களுக்கெல்லாம் என்ன வேண்டும், ஒன்றுமில்லை, என்ன வேண்டும் என அவர்களுக்கே தெரிவதில்லை, அதுதான் பிரச்சினை, தன்னை புரட்சியாளராக காட்டிகொள்ளவேண்டும் என்பதில் அவர்களுக்கு ஒரு ஆசை, அதனால் சொல்லிகொள்கின்றார்கள்.
தேசம் தனக்கு அது செய்யவேண்டும் இது செய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்களே தவிர, இத்தேசத்திற்கு இவர்கள் என்ன கிழித்தார்கள் என யோசிக்க மாட்டார்கள். பொதுநலம் இல்லை எல்லாம் சுயநலம்
அதனால்தான் தேசத்திற்காய் உழைத்த கலாம் முதல் யாரை கண்டாலும் அவர்களுக்கு பிடிப்பதில்லை
இந்தியா வெள்ளையன் உருவாக்கிய அமைப்பு, இதில் நீ தமிழன் எப்படி இந்தியன் ஆவாய் என சத்தம் வேறு
சரி சேர சோழ பாண்டி ,கொங்கு, கடையேழு வள்ளல் என இருந்த தமிழகம் மட்டும் ஒரே நாடா? அதனை ஒன்றாக்கியது நாயக்கர்கள் அல்லவா? அப்படியானால் தமிழகத்தை 25 துண்டுகளாக உடைப்போமா?
ஈழம் என்பது என்ன?, கண்டி, யாழ்பாணம், வன்னி என மூன்று அரசுகளில் ஒருங்கிணைப்பு அல்லவா? 3 ஈழம் அமைப்போமா?
ஒரு தேசத்தை உடைத்தால் உடைத்துகொண்டே இருக்கலாம், வளர்த்தால் வளர்த்துகொண்டே இருக்கலாம்
சீனாவில் மாண்டரின் பெரும் மொழி, அது தவிர கெண்டனிஸ், ஹாக்கியன் என எத்தனை மொழிகள் உண்டு அது வளரவில்லையா?
சோவியத் யூனியன் பெரும் அமைப்பாக இருந்து உலகத்தை மிரட்டியது, இன்று பிரிந்து சென்ற உக்ரைன் பன்னாட்டு படைகளால் மிதிபடுகின்றது
வட கொரியா தென் கொரியா ஒரே மொழி, அரபு நாடுகள் பலவற்றில் ஒரே மொழி, இணைந்தார்களா? ஒற்றுமையாக வாழ்கின்றார்களா?
ஆப்ரிக்க நாடுகளிலும் இந்நிலை உண்டு, ஒரே மொழி தான் பல நாடுகளில் பேசபடும், ஆனால் இணைந்து வாழசொல்லுங்கள், அவர்களால் முடிவதில்லை
ஆக மொழியால் இணைவோம் என கிளம்பினால் அன்றே ஒரே தமிழகம் இருந்திருக்கவேண்டும், இன்னும் என்ன தனி தமிழ்நாடு கிடைத்தால் , அடுத்தது என்ன? தனி சோழநாடு, தனி பாண்டிய நாடு
அந்த பிரிவினைகளால் ஒன்றும் கிழிக்க முடியாது
ஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி
கருப்பர் வெள்ளையர் சர்ச்சைகளை தாண்டி இன்று ஒரே அமெரிக்காவாக நிற்கும் அத்தேசமே உலகினை ஆள்கின்றது,
அப்படி மொழி, இன ஒற்றுமை ஓங்கி நிற்கும் சீனமே அதற்கு சவால் விடுகின்றது
இப்ப்படி ஒரு மண்ணாங்கட்டியும் யோசிக்க மாட்டார்கள், ஒருவனுக்கு மொழி ரீதியாக இந்தியா உடைய வேண்டுமாம், இன்னொருவனுக்கு இன ரீதியாக வேண்டுமாம்
ஒருவனுக்கு ஜாதிரீதியாக உடையவேண்டுமாம், அதுதான் பகீர் ரகம். அப்படியானால் வீட்டிற்கு ஒரு நாடு இருக்கும். அன்று வாடிகன் உலகின் மிக சிறிய நாடு எனும் அந்தஸ்தை இழக்கும்
4 சென்ட் நிலத்தில் ஒருநாடு, அது ஒருவனுக்கு வேண்டுமாம்.