மகா கலைஞன் சந்திர பாபு பிறந்ததினம்

“இந்த தமிழகத்தில் முதல் தர நடிகன் இந்த சந்திரபாபு, நெக்ஸ்ட் சிவாஜி கணேசன்

Image may contain: 1 person

ஜெமினி நேற்று இன்று நாளை எல்லாம் ஒரே, அவன் மாற மாட்டான்

எம்ஜி ராமசந்திரன்னு ஒருத்தன் நடிச்சிட்டு இருக்கான், அவனெல்லாம் ஏன் நடிக்க வாரான். ஏதோ ராமவரத்துல ஒரு ஆஸ்பிட்டல் கட்டுறாங்களாம், அவன் அங்க கம்பவுண்டரா போகலாம்” : சந்திரபாபு

தமிழக சினிமா உலகிற்கு மேற்கத்திய பாணியினை புகுத்திய முதல் கலைஞன்

இன்று வரை வரும் துள்ளிசை பாடல்களுக்கும், மேற்கத்திய ஆடல்களுக்கும் அவனே முன்னோடி

இந்நாளைய பிரபுதேவாக்கள், லாரன்ஸ் இன்னும் பலர் எல்லாம் அவனையே பின்பற்றுபவர்களே, நடனத்தில் அது நன்றாக தெரியும்.

சந்திரபாபு ஒரு பெரும் கலைஞன், மகா கலைஞன்

ஆடல், பாடல், நடிப்பு, நகைச்சுவை, இயக்கம் , உடை என பல பரிமாணங்களுக்கு புதிய பரிணாமம் கொடுத்தவன், அன்றே தமிழ் சினிமாவினை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்த எண்ணிய கலைஞன்.

காலத்தை மீறி கனவு கண்ட அந்த மகா கலைஞனின் பிறந்தநாள் இன்று

 

சிதறல்கள்

மாணவி நவீனா கொலை: ஐகோர்ட்டில் வழக்கு தொடருவோம் : காடுவெட்டி குரு

எத்தனை மாணவிகளும் பெண்களும் இதனைபோல உயிரிழந்தனர், அப்பொழுதெல்லாம் போகாத ஐகோர்ட்டுக்கு இப்பொழுது ஓடியே போவாரம்.

இதற்கு மேலும் பாமக சாதி வாரி கட்சி இல்லை என்பார்கள் அல்லவா அப்பொழுது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

நீண்ட நாளைக்கு பின் இவர்களுக்கு ஒரு வாய்ப்பு, எப்படி விடுவார்கள்?, இனி இதனை வைத்துதானே அடுத்த தேர்தல் வரை கட்சி நடத்தவேண்டும்


பயங்கரவாதிகளைத் தியாகிகள் என்று புகழ வேண்டாம் என சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி பேசினார்.

ரொம்ப சரி, அப்படியே இந்த கோட்சே தியாகி, இந்திரா கொலையாளி தியாகி, வேலூர் சிறையில் இருக்கும் 7 பேர் தியாகி என சொல்பவன்

புதிதாக புர்ஹான் வானி தியாகி, அசார் மசூத் தியாகி என சொல்ல ஆரம்பித்து இருப்பன் என எல்லோரையும் பிடித்து உள்ளேபோடுங்கள் அய்யா


குழாயடி சண்டை போடவா சட்டப்பேரவை? : ராமதாஸ் கண்டனம்

# வெட்டி நடுரோட்டில் போடவா சாலையோர மரங்கள்?


 

ரியோ 2016 ஒலிம்பிக்ஸ் : உலக விளையாட்டு திருவிழா

விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் தொடங்கி விட்டது, உலகின் மொத்த கவனமும் பிரேசில் மீது திரும்பிவிட்டது

தென்னமெரிக்க நாடுகளில் ஒலிம்பிக் நடப்பது இதுவே முதல் முறை, தென் அமெரிக்க நாடுகள் வளமானவை, இயற்கை வளம் நிரம்பியவை ஆனால் சுயநல அரசுகள், குழப்பான அரசியல் போதை கும்பல் என பல சர்ச்சைகள் உண்டு

பிரேசில் அந்நாடுகளில் பெரியது, ஓரளவு பொருளாதார வளம் கொண்டது, தற்போது கொஞ்சம் சிக்கலில் தத்தளிக்கின்றது

எனினும் சமீபத்தில்தான் உலக கால்பந்து போட்டியினை நடத்தி அசத்தியது, மறுபடி ஒலிம்பிக் போட்டியினை நடத்தி அசத்துகின்றது, வளரும் நாடுதான். ஆனால் என்னாலும் முடியும் என சாதிக்கின்றது

போட்டிகளை பொறுத்தவரை அமெரிக்கா பெரும் ஒலிம்பிக் சாம்பியன், அவர்களின் எதிரிகள் ஹிட்லரின் ஜெர்மன், பின் சோவியத், இன்று சீனா என எதிரணியினர் மாறலாம்

ஆனால் அவர்கள் அவர்களாகவே இருக்கின்றனர். இந்த ஒலிம்பிக்கில் அவர்கள் முதலிடம் பெறலாம்

உசேன் போல்ட், பெல்ப்ஸ் போன்றோர் பலதள வித்தகர்கள், பாதி பதக்கம் அவர்களாலே வந்துவிடும், உலகம் அவர்களை நோக்கிகொண்டிருகின்றது. ரஷ்யர்களுக்கு தடை இருப்பதால் அவர்கள் கடும் அப்செட்

ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றி வைப்பது பெரும் பெருமை, அவ்வகையில் இந்த வாய்ப்பு இன்று பீலே எனும் கருப்பு முத்துக்கு கிடைக்கும் என்பார்கள். பிரேசிலின் பெரும் கால்பந்து சகாப்தம் அவர்

அவரை விட்டால் அத்தேசத்தின் பெருமை மிகு வீரர்கள் சொற்பமே

இந்தியா கொடியினை அபினவ் பிடித்துசெல்வார் என்கின்றார்கள் பார்க்கலாம்.

துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போன்ற போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கின்றது

ராமனும், கர்ணனும், அர்ஜுனனும் வாழ்ந்த நாடல்லவா?, அதனால் எதிர்பார்ப்பு இப்படி செல்கின்றது என்றும் சொல்லலாம்