காமராஜரை, காந்தியினை பற்றி நான் சொல்லித்தான் உலகிற்கு தெரியவேண்டுமா என்ன?

அவ்வப்போது அங்கிள் சைமனை போட்டு தாக்கும்போது ஓடிவந்து தோள்கொடுத்தார்கள், அது நாட்டுபற்று என்றொ அல்லது சமாதான விரும்பிகள் என்றோ நினைத்ததுண்டு

ஆனால் காமராஜரை பற்றி சொல்லும்பொழுதும் வந்து அவர் அப்படி இப்படி சாதி பார்த்தார் என பழிக்கும்பொழுது மனம் கலங்கத்தான் செய்கின்றது, சீ.. இவர்கள் இவ்வளவுதானா

சாதி பார்த்தா என்னோடு சீமானை கலாய்த்தார்கள்?? அப்படியானால் அது உண்மை முகம் இல்லையா, அந்த வந்தேறிகள் , பிரபாகரன் என சீமான் சொல்லும்போது சாடியது சமூக நலன் இல்லையா?, சாதி அடையாளமா?

பல முகத்திரைகள் கிழியும் நேரம், அதற்காக சைமன் செய்வதெல்லாம் சரி என நாம் கிளம்பபோவதில்லை.

காமராஜரை பற்றி தெரிந்தவர்களுக்கு விளங்கும் என்பதால் விளக்க ஒன்றுமில்லை, ஆனால் அவர் தேசியவாதி குறுகிய வட்டத்தில் தன்னை அடைக்காதவர், சில விஷயங்களில் சர்ச்சை உண்டு, உதாரணம் பீர்மேடு தேவிகுளம் விட்டுகொடுத்தார்

அன்றைய காலம் உணவு தட்டுப்பாட்டால் அமெரிக்காவிடம் கையேந்திய காலம், நேரு அதனைத்தான் செய்தார்.

அப்பொழுது முப்போகம் விளையும் கன்னியாகுமரி மாவட்டமா? அல்லது பிர்மேடு பகுதியா எனும்பொழுது அவர் பார்வை கன்னியாகுமரி மீதே விழுந்தது, இன்னொன்று பீர்மேடை விட்டுகொடுத்ததால்தான் ஆழியாறு அணை கட்ட முடிந்தது

விட்டுகொடுப்பு இன்றி அரசியல் இல்லை

திருப்பதியும், குடகையும் ஏன் மீட்கவில்லை என சிலர் இதோ கத்த்துகின்றனர். கார்கில் மலை மீது கூட சோழனின் புலிமுத்திரை உண்டு, மீட்டுவிடலாமா?

கடாரம் எனும் மலேயாவும், இந்தோணேசியாவு, ஈழமும் தமிழர் ஆண்ட பகுதிதான், ஏன் தமிழகத்தோடு இணைக்கவில்ல காமராஜர் என கேட்கமுடியுமா? இதோ ஒருவர் கேட்டுகொண்டிருக்கின்றார்.

மைசூர் சமஸ்தானத்தில் உள்ள குடகை எப்படி மீட்கமுடியும்? திருப்பதியா சென்னையா தமிழ்நாட்டிற்கு எனும்பொழுது இரண்டும் தா என கேட்டு சண்டையிட அவர் என்ன சீமானா?

வறண்ட பகுதியில் ஒரு பயிரை வளர்க்கமுடியுமா என்றபொழுது தான் சீமை உடை அவருக்கு சொல்லபட்டது, அதுவும் கரி ஏற்றுமதி எனும் தொலைநொக்கில்தான் அனுமதித்தார், அதன் இன்றைய பின்விளைவு அவர் எதிர்பாராதது

இன்னொருவர் கத்துகின்றார், அரசு ஒப்பந்தத்தை எல்லாம் நாடருக்கு கொடுத்தார், எப்படிபட்ட அநியாயம் இது

பரம்பிகுளம் ஆழியாறு அணைகட்டிய தொழிலாளர்களில் ஒருவரை சந்திக்கும் போது சொன்னார், காமராஜர் காலம் வரை பெருவாரியான கட்டுமான பணிகள் அரசின் நேரடி பார்வை, ஜெர்மனியிலிருந்து பெரும் இயந்திரங்களை அரசிற்காக வாங்கி நிறுத்தி இருந்தார், ஆட்சி மாறியவுடன் எல்லாம் மாறிற்று, நானும் என் நண்பரும் அங்கேதான் மேஸ்திரியாக பணியாற்றினோம்,

நானும் என்நண்பரும் அதனை நேரில் கண்டவர்கள், ஒரு அரசு எப்படி நேரடியாக பணியாற்றமுடியும் என்பதை பாத்தவர்கள்,

அவர் நண்பர் என சொன்னது பி.ஆர் பழனியபனை, அதே கிரானைட் சக்கரவர்த்தியை

பழிப்பதற்கும் ஒரு அளவு இருக்கின்றது, சொந்த தாய்க்கே ஒன்றும் செய்யாத அவர், சொந்த சாதிக்கு உழைத்தார் என்பதெல்லாம் ஏற்ககூடியதல்ல‌

நான் தெற்கத்திய தாதாக்களை, ரவுடிகளை பற்றி உலக உத்தமர்கள் என எழுதியிருந்தால் இவர்கள் சாடுவதில் அர்த்தமிருக்கின்றது

ஆனால் காந்தியினை போன்றே வாழ்ந்த ஒருவனை சாதிவன்மத்தில் சாடுபவர்கள்தான் முகநூல் நண்பர்கள் என்றால் வேண்டாம், நடையினை கட்டலாம்

என்ன கொடுமை இது, காந்தியினை ஒரு கும்பல் வடக்கே பழிக்கின்றது, தெற்கே கருப்பு காந்தியினை கொடிய சாதிவெறியன் என சொல்ல ஒருகும்பல் கிளம்பி இருக்கின்றது

வேண்டாம், காந்தி காமராஜர் கலாம் வரிசையினை சீண்ட வேண்டாம்

கலாமினை பழித்ததற்காக பலபேரை நண்பர்கள் வரிசையில் இருந்தே கழற்றிவிட்டேன், காந்தியினை, காமராஜரை பழிப்பவர்களுக்கும் அப்படியே

காரணம் இது பெரும் சிக்கலான நிலை, சிலவற்றை சொல்ல யோசிக்கவேண்டும், அது பெரும் கலவரங்களுக்கு அடித்தளமாக அமையலாம், தமிழக எதார்த்தம் அபடியானது

சமூகபொறுப்புள்ள ஒருவன் கண்டதையும் எழுதி விடமுடியாது, என்னை சீண்டி இவர்கள் விரும்புவதெல்லாம் அதுதான்

இதற்கு மேல் என்ன இருக்கின்றது, காமராஜரை காந்தியினை பற்றி நான் சொல்லித்தான் உலகிற்கு தெரியவேண்டுமா என்ன?

ஆக முன்பொருகாலத்தில் நண்பர்களாக இருந்தவர்களே, நீங்களே விலகிவிடுவது நல்லது.

அப்பட்டமான சாதி வெறியர்களை அருகில் வைத்துகொள்வது அணுகுண்டு மேல் இருப்பதை விட ஆபத்தானது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s