திரைப்பட துணுக்ஸ்

தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்திருக்கும் சமூகநோக்குள்ள இயக்குநர், தயாரிப்பாளர் சமுத்திரகனி

நிச்சயமாக மனிதர் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்கின்றார், நிமிர்ந்து நில், சாட்டை போன்ற படங்கள் வரிசையில் அட்டகாசமாக வந்திருக்கின்றது “அப்பா”.

சிறந்த இயக்குநர்தான், ஆனால் பாதிக்கு பின் அவரின் எல்லா படங்களிலும் காணப்படும் சிறிய தடுமாற்றம் இதிலும் தெரிகின்றது, ஆனால் பாராட்டபடவேண்டிய படம், முக்கியமாக அவரின் சமுதாய பார்வை.

வடக்கே அமிதாப் போல, ரஜினிகாந்தும் ஒரு சமுத்திரகனி படத்தில் அழகாக நடிக்கத்தான் செய்யலாம். ஆனால் தமிழக யதார்த்தபடி முடியாது.

சிவாஜி எனும் பெரும் சகாப்தத்தையே அழவைத்து மட்டுமே கதையினை முடித்த தமிழகம் இது, ரஜினியினை விடுமா?

என்ன செய்ய, அவர் ஸ்டைலாக நடந்து கொண்டு 4 பேரை சுட்டுகொன்றே ஹா..ஹா என சிரித்துகொண்டே செல்லவேண்டியதுதான், அவருக்கு விதிக்கபட்டிருக்கும் சினிமா வாழ்வு இங்கே இப்படி


உலகில் சில விஷயங்கள் சுவாரஸ்யமானவை, அதிலும் சில விஷயங்கள் தமிழக அரசியல்வாதிகள் போல ஒருநாளும் திருந்தாதவை, நடிகர் சிம்பு அதில் ஒரு வகை

பீப் சாங்கில் சிக்கி அன்னாரின் தாய் வரை அழுது ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் , இன்னொரு வரப்போகும் படத்தில் மனிதர் பாடியிருக்கின்றாராம் “உன்ன கொன்னே போடுவேண்டி..வெட்டியே போடுவேண்டி…”

இது ஒருபுறம் என்றால் சமீபத்தில் தன்னை கண்டித்த ஒய்ஜி மகேந்திரனை தன் படத்தில் மாமனராக நடிக்க கேட்டுகொண்டாராம், கிட்டதட்ட அருணாசலம் படத்தின் போது தன்னை மெண்டல் என திட்டிய மனோரமாவினை நடிக்க அழைத்த ரஜினியின் சாயல் அது.

ஆனால் அவர் ரஜினி, சிக்கல் இன்றி நடித்துவிட்டார், இது சிம்பு அல்லவா? படத்தில் மாமனாரை காரி துப்புவது போல வசனம் வைத்தால் என்ன ஆகும்?, வாய்ப்பு உண்டல்லவா

“ஏய்.. எச்சை.. பொறுக்கி.. ஆம்பிளையா நீ….மாமனரா டேய்,,” என்றெல்லாம் வசனம் வைப்பாரோ?, பழிதீர்ப்பாரோ? என ஒய்ஜி அஞ்சிகொண்டிருக்கலாம் என்கிறது ஒரு செய்தி

பயணங்கள் முடிவதில்லை..சிம்பு திருந்துவதில்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s