‘யார் ஆட்சியில், அதிகளவில் பாலங்கள் கட்டப்பட்டன’ என்பதில், அ.தி.மு.க., – தி.மு.க.,வினர் இடையே, சட்டசபையில் கடும் விவாதம் நடந்தது
எல்லாம் இவர்கள் கைகாசில் இருந்து கட்டியது அல்லவா? அழகப்ப செட்டியாரும் அண்ணாமலை செட்டியாரும் பொதுபணியில் செலவழித்து யார் நிறைய பொதுப்பணி செய்யது என மோதிக்கொண்டிருப்பது போலவே பேசிகொண்டிருக்கின்றார்கள்
காமராஜரிடம் கேட்டார்கள், நீங்கள் ஏன் உங்கள் ஆட்சியின் நலன்களை விளம்பரபடுத்த கூடாது? வோட்டு கிடைக்குமல்லவா?
“இது என்ன கிறுக்குதனம்ணேன்…இது அரசு பணம்ணேண்…மக்களுக்கு உழைக்கத்தான் என்ன இங்க வச்சிருக்காங்கண்ணேன்… ஒரு தாய் தன் பிள்ளைக்கு பால் குடுத்தத ஊரெல்லாம் சொல்வாளா? அல்லது மகன் அப்பனுக்கு சோறுபோட்டுட்டு தம்பட்டம் அடிக்க முடிய்மாண்ணேன்..இது கடமைண்ணேன்..”
அவர் இருந்து ஆண்ட அதே கோட்டையில்தான் இன்று இவர்கள் யார் அதிக பாலம் கட்டினோம் விவாதிக்கின்றார்களாம், கால கொடுமை