ரியோ 2016.. தங்கமே தங்கம் …

பிரேசிலில் பதக்கபட்டியல் வரதொடங்கியாயிற்று, ஆஸ்திரேலியா அதிரடியாக முதலிடம் வகிக்கின்றது, 4 தங்கத்தை தவறவிட்ட அமெரிக்கா மூன்றாமிடம் வகிக்கின்றது, சைனாவிற்கு இன்னும் தங்கம் கிட்டவில்லை

ஒரு பெரும் சவுகர்யம் என்னவென்றால் ஒலிம்பிக் போட்டியினை முன்னிட்டு வங்க, பாகிஸ்தானிய இலங்கை நண்பர்களிடமிருந்து ஒரு சிக்கலும் வராது, அவர்களும் நம்மை போலவே அல்லது நாமும் அவர்களை போலவே

ஒலிபிக் பதக்கம் என்பதே பெரும் கனவு , கிடைத்தால் அதிசயம். வெண்கலத்தை தொடர்ந்து பித்தளை, ஈயம் அலுமினியம் என 10 பதக்கங்கள் இருந்தால் கிடைக்கலாம், என்ன செய்ய? பாழாய்போன கமிட்டி மூன்றாக நிறுத்திகொண்டது.

ஆக நமக்கும் நண்பர்களுக்கும் கிரிக்கெட் தவிர சிக்கல் இல்லை

சிதறல்கள்

“பசுக்களை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் வியாபாரம் நடத்துவோரை கண்டால் எனக்கு கோபம் வருகின்றது, அதுபோன்ற பெயரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” : மோடி

கோபம் வருகிறதாம், அதாவது இன்னும் பசு சர்ச்சை வந்தால் இன்னும் கோபபடுவார், கடுமையாக கோபபடுவார் நமது பிரதமர்

ஆனால் நடவடிக்கை எல்லாம் மாநில அரசுகள்தான் எடுக்கவேண்டுமாம். ஜிஎஸ்டி என வரிபோட்டு நாடு முழுக்க ஒரே வரி, ஒரே போல வசூலிப்பார்களாம், ஆனால் சர்ச்சைகுரிய விஷயங்களில் மாநில அரசு மட்டும் கடுமையாக நடக்கவேண்டுமாம்.