பஞ்சு அருணாசலம் மறைவு …

பஞ்சு அருணாசலம் காலமாகிவிட்டாராம்

pa

சிலர் அவதாரமாய் வருவார்கள், அந்த அவதாரங்களை அருகிருந்து பார்த்து பணியாற்றி ரசிக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும், அப்படி கண்ணதாசன் எனும் பெரும் கலை அவதாரத்திற்கு அருகிலிருந்து வாய்க்கும் பேறு பெற்றவர் பஞ்சு அருணாசலம்

கவிஞரின் பெரும் பாடல்களை அவர் சொல்ல சொல்ல இவர் எழுதினார், ஒரு கட்டத்தில் இவரே பாடலும் எழுதினார், பூவோடு சேர்ந்த நாரே மணக்கும்போது கவிஞரின் தாக்கம் இவரிடமும் இருக்குமல்லவா?

விழியே கதை எழுது போன்ற அற்புதமான பாடல்களை சொந்தமாக எழுதினார், அது கண்ணதாசனின் பாடல் போலவே இருக்கும்

பல படங்களை தயாரித்தார், இளையராஜாவினை அறிமுகபடுத்தியதும் இவரே, ரஜினிக்கு முரட்டுகாளை மூலம் இன்னொரு கதவினை திறந்துகொடுத்ததும் இவரே

பெரும் பிண்ணணி இருந்தும் ஏவிஎம் போல எந்த சர்ச்சையிலும் சிக்காமல் அமைதியாக சினிமாவில் இருந்த அபூர்வ பெரியவர்களில் இவரும் ஒருவர்.

இனி அவரின் அருமை பெருமைகளை எல்லோரும் சொல்வார்கள், ஆனால் நமது நினைவில் வருவது இதுதான்

ஈசிசேரில் படுத்துகொண்டு நினைவுகளில் மூழ்கி கவிஞர் எடுத்த முத்துக்களை எல்லாம் கோர்த்தவர் இவர்தான்

அப்படி கவிஞர் அருளிய அர்த்தம் உள்ள இந்துமதம் போன்ற பெரும் அடையாளங்களுக்கு முதல் காப்பி இவரின் கை எழுத்திலே தான் இருந்திருக்கும்

இவர் கையெழுத்தைத்தான் பாடலாய் படித்திருப்பார்கள், காவிய புத்தகங்களாய் எடுத்திருப்பார்கள்

கண்ணதாசனை அனுப்பும்போதே இப்பணியினை செய்ய கடவுள் இவரையும் அனுப்பி இருக்கின்றான்

இன்று இருவரும் இல்லை, கொடுத்த காலம் எடுத்துகொண்டது. ஒவ்வொருவராக கடமை முடித்து கிளம்பிகொண்டே இருக்கின்றனர், காலம் இயங்கிகொண்டே இருக்கின்றது.

ஆனால் கண்ணதாசன் காலத்தை மீறி நிற்பார், அதன் ஓரத்தில் பஞ்சு அருணாசலமும் நிற்பார்

ஆழ்ந்த அஞ்சலி.

ஜோதிலட்சுமி .. மறைவு…

ஒரு நடிகை இறந்திருக்கின்றாள், நடிப்பை தவிர அவளுக்கு மறுப்பக்கமும் இருந்திருக்கும், அதனை பற்றி யாரும் சொன்னதாக தெரியவில்லை

jo

ஜோதிலட்சுமி

ஒரு பத்திரிகை சரோஜாதேவி பத்திரிகையினை மிஞ்சும் அளவு ஆபாசமாக எழுதிகொண்டிருக்கின்றது, இன்னும் வர இருக்கும் பத்திரிகைகளை நினைத்தால் பகீர் என்கிறது

அப்பொழுதும் கவனமாக ஜெயலலிதாவுடன் சேர்ந்து ஆடியவர் என்பதனை மறைத்து சிலர் எழுதிகொண்டிருக்கின்றார்கள், என்ன செய்ய சசிகலா புஷ்பா நினைவில் வந்திருப்பார்.

நாமெல்லாம் சில்க் ஸ்மிதா தலைமுறை என்பதால், அந்த இடம் நம்மை பொறுத்தவரை என்றேன்றும் அந்த ஆசியாவின் மர்லின் மன்றோவிற்கே

ஜோதிலட்சுமி அருமையான நடிகையும் கூட, அண்ணாமலை சீரியலில் மிக பிரமாதமாக நடித்திருந்தார், அதனை எல்லாம் யாரும் சொல்வதாக தெரியவில்லை

Image may contain: 1 person , people smiling , close-up and indoor

எந்த திறமையாளர் எனினும் சினிமா ஒரு முத்திரை குத்திவிட்டால் அதில் அதனை தாண்டமுடியாது என்பது யதார்த்தம்

அதில் அலுப்படைந்து இறந்தவர் சிலுக்கு ஸ்மிதா. முடிந்த வரை இறுதிவரை நின்றவர் ஜோதிலட்சுமி,

அந்த மன உறுதியினை சொல்வார்கள் என்றால், உடல் உறுதியினை புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

ஒரு மறைமுக போர் நடத்துகின்றது இஸ்ரேல்

உலகமெல்லாம் எது இயங்குகின்றதோ இல்லையோ, சூரியனுக்கும் சந்திரனுக்கும் அடுத்து தவறாமல் இயங்கிகொண்டிருப்பது உளவு துறைகள், எப்படித்தான் ஊடுருவார்களோ தெரியாது ஆனால் சரியாக சாதிப்பார்கள்

இப்பொழுது மேற்கத்திய நாடுகளுக்கு சவாலாக இருப்பவை இரு முரட்டு நாடுகள். ஒன்று வடகொரியா, இன்னொன்று ஈரான்

இதில் வடகொரியா வித்தியாசமான நாடு, கொடுக்கவேண்டியதை கொடுத்தால் அமைதியாவார்கள், மகா ஏழ்மை. ஆனாலும் அரசு இரும்பு, அவ்வப்போது மேற்கத்திய உளவாளிகள் அகப்படுவார்கள், அதிபரும் எப்படி எமது சாமர்த்தியம், பிடித்துவிட்டோமா? இதோ ராக்கெட் , இதோ அணுகுண்டு எல்லாம் உனக்குத்தான் என்பார்கள்

அரசுகள் மேஜைக்கு அடியில் பேசிமுடித்து உளவாளியினை விடுவிக்கும், அரசும் கொஞ்சநாள் அமைதி ஆகும்.

ஆனால் ஈரான் அப்படி அல்ல, முரட்டு நாடு. இன்னொன்று அதன் குறி இஸ்ரேல், இன்னொன்று இன்றுவரை அரேபியாவில் அரேபியர்களால் ஆளபடும் நாடு ஈரான் மட்டுமே, இன்னொன்று சிரியா, வேறு எல்லாம் கைபாவைகள்

எப்படியாவது ஈரானை அணுகுண்டு செய்யாமல் தடுக்கவேண்டும் , வழி இல்லை என்றால் போர் நடத்தவேண்டும் என வெறியோடு அலையும் நாடு இஸ்ரேல், இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தானிடம் மட்டும் அணுகுண்டு உண்டு என்றாலும் அது அமெரிக்க அடிமை.

ஆனால் ஈரான் அணுஆயுதம் பெற்றுவிட்டால் அதுதான் அரேபிய தாதா அல்லது நாட்டாமை. இஸ்ரேலுக்கு ஒரு நிரந்தர எதிரி தயாராகிவிடும்.

ஒரு மறைமுக போர் நடத்துகின்றது இஸ்ரேல்

இதில் ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் மர்மமாக உயிரிழந்தனர், ஒருவருக்கு காய்சல், ஒருவருக்கு கார் வெடித்தது, இன்னொருவருக்கு குடும்ப பிரச்சினை என ஆளாளுக்கு ஓடினார்கள்

ஒருவர் வித்தியாசமாக ஹஜ் பயணம் செல்லும்போது காணாமல் போனார், கொஞ்சநாள் கழித்து ஈரான் திரும்பி தான் தப்பி வந்ததாக பேட்டியளித்து புகழடைந்தார், மொசார்ட்டையே ஏமாற்றிய ஈரானியனர் என்றேல்லாம் பட்டம் குவிந்தது

ஆனால் ஈரானிய அரசு வித்தியாசமாக சிந்தித்து, விசாரித்து அன்னார் கடத்தபடவில்லை, மொசார்த்துடன் கைகோர்த்து அணு ரகசியங்களை சொல்லிவிட்டு வந்துவிட்டார் என கைது செய்து நேற்று தூக்கிலும் போட்டுவிட்டது

இவரை கடத்தியவர் யார்? என்ன வாங்கினார்கள் என இதுவரை தகவல் இல்லை, இதுதான் உளவு உலகம்.

முன்பு புலிகளும் இப்படியான விளையாட்டுக்களை சந்தித்தனர், வேலூர் சிறையில் தப்பிய புலிகள், இப்படித்தான் அமைப்பிற்குள் ஊடுருவினர், ஆனால் பின்னாளில் புலிகள் தூக்கினர்.

இதனால்தான் அந்நியரால் கடத்தபட்ட அல்லது சந்தித்த எந்த நபர்களும் மறுபடி அரசுக்குள் எடுக்கமாட்டார்கள், மகாபாரதத்திலும் ராமயணத்திலும் இந்த காட்சிகள் அழகாக தெரியும்

துரியோதனனும், ராவணனும் அதில் பெரும் விழிப்பாய் இருந்தார்கள்.

அவை ராஜ தந்திரத்தில் உச்சம் பெற்ற இதிகாசங்கள், புராணம் என ஒதுக்கமுடியாதவை.

மொசார்ட் என்ன மொசாட், ராஜ தந்திரத்தில் அவர்களுக்கு பெரும் முன்னோடி பகவான் கிருஷ்ணனே, அந்த மாய வேலையினை தான் இன்று மொசாத் செய்துகொண்டிருக்கின்றது

நதிகளை, மலைகளை, கடவுளை பெண்ணாய் வணங்கும் நாடு இது!

என்னதான் பகை என்றாலும், வாழவேண்டிய இரு இளம்பெண்களை அருவருக்கதக்க வகையில் பேச வைத்து, ஒரு பெண்ணை பெண்களால் கேவலபடுத்தும் ஒரு பெரும் அவமானம் தமிழகத்தில் அரங்கேற தொடங்கியுள்ளது

Image may contain: 2 people

அந்த இளம்பெண்கள், வாழவேண்டிய குருத்துக்கள், மலரவேண்டிய மொட்டுக்கள், இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் செய்தால் அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

யாருக்கும் அந்த எண்ணமில்லை, பெண்ணிய அமைப்புக்களுக்கும் அந்த அக்கறை இல்லை, சிம்புவிற்கு பொங்கிய அமைப்புகளை காணாவில்லை, அப்பெண்களுக்கும் சாதிகள் இருக்குமல்லவா?, அவர்களும் மானம் காக்க வரவில்லை

நமது வீட்டு பெண் என்றால் தாங்கமுடியுமா? ஆனால் இந்த தேசத்து பெண்கள், நமது சகோதரிகள் ஆனால் கேட்க யாருமில்லாத அபலைகள்

பத்திரிகைகள் இவ்விஷ்யத்தில் அக்கால மஞ்சள் பத்திரிகைகளை மிஞ்சி சென்றுகொண்டிருப்பது அப்பட்டமான ஊடக கொடூரம், கூவத்தை விட மோசமானவை அதன் செயல்பாடுகள்

பெண்களை பொத்தி பொத்தி வளர்க்கும் சமூகம் இது, இம்மாதிரியான விஷயங்களில் பெண்களின் முகம் கூட காட்ட கூடாது என்பது பெண்ணுரிமை சலுகை, ரகசிய வாக்குமூலம் என பெண் நீதிபதிக்கு மட்டுமே அவர்கள் சொல்லவேண்டும்

இங்கோ பத்திரிகை, இணையம் என போட்டு வாங்குகின்றார்கள், ஈழத்தில் தமிழகபெண்களை சிங்களன் தொட்டால் விடமாட்டோம் என்பவர்களை, அருகில் நடக்கும் இந்த பெரும் அவமானத்தில் காணவில்லை

இந்த பத்திரிகைகளையும், பெண்களை வைத்து பகடை ஆடும் இந்த அவமானத்தையும் காணும்போது வெட்கத்தால் தலைகுனிகின்றோம்

நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம், என்றான் பாரதி, இதோ இப்பெண்களின் மானமும் எதிர்காலமும் பதவியும், பழிவாங்கலும், பரபரப்பு செய்தியும் தேடும் இந்த ….. வேண்டுமாம்.

மனம் கனத்த நேரமிது, அந்த பெண்கள் சொல்லவேண்டியதை ரகசியமாக சட்டத்தின்முன் சொல்லட்டும்,

சசிகலா புஷ்பா நாளையே ஜெயலிலிதாவினை சந்தித்து மாறலாம் அல்லது இன்னொரு கட்சியில் அடைக்கலம் ஆகலாம், 2 வருடம் கழித்தால் எல்லாம் மறைந்துவிடும், அன்னார் அன்று அமைச்சராக கூட இருக்கலாம், இந்த அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை

நமது சமூகம் அப்படி இச்செய்தி நாளையே மறையலாம், ஆனால் காலெமெல்லாம் அதனை சுமந்து அலையபோவது அந்த அபலைகளே, நமது சமூக யதார்த்தபடி இந்தபழி மாறாது.

நதிகளை, மலைகளை, கடவுளை பெண்ணாய் வணங்கும் நாடு இது, அதில் இப்படியும் சில கண்ணீர் பரிதாபங்கள்.

இறைவன் எல்லாவற்றையும் பார்த்துகொண்டே இருக்கின்றான், அவன் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருப்பான்,

அது வரை ஆடட்டும்.

ஆனால் இந்த அபலைகளை விட்டுவிட்டு ஆடுங்கள் என கை கூப்பி கேட்க மனது ஏங்குகின்றது.

அந்த முகங்களையும் அந்த பரிதாப கோலத்தையும் பாருங்கள், நம்மிடம் பிறந்ததை விட அவர்கள் என்ன தவறு செய்தார்கள்

கொஞ்சம் சிந்தித்தால் உங்கள் கரங்கள் தானாக அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடும், திக்கற்றவர்களுக்கு அல்ல சிக்கி கொண்டவர்களுக்கும் அவனே துணை.

சங்ககாலத்தில் பாரிக்கு இரு மகள்கள் இருந்தார்களாம், அவன் கொல்லபட அவர்கள் அனாதை ஆகி நடுதெருவில் நின்றார்களாம், ஒரு புலவன் அதனை பாடலாய் வைத்தான், நெஞ்சுருகும் பாடல் அது.

இன்று இப்பெண்களை காணும்பொழுதும் அதே பாடல் நினைவுக்கு வருகின்றது, அப்பெண்களுக்காவது கபிலர் இருந்தார். இவர்களுக்கு யார் இருக்கின்றார்கள்???

கவிஞர் கவிஞரே, ஞானி ஞானியே

நண்பர்கள் எனும் முகமூடிகளை , அவர்களின் துரோகத்தை ஒரு மனிதனால் இதனை விட அழுத்தமாக சொல்லமுடியாது என்பதற்கு கண்ணதாசனின் போய் வருகிறேன் எனும் கட்டுரையே சாட்சி

“அவன் நட்பு என அணைத்த தோள்களில் எல்லாம் கத்தை கதையாக முட்கள் இருந்தன, அவை அவன் கைகளை கிழித்தன” எனும் வசனமாகட்டும்

“உங்களை எல்லாம் மகிழ்ச்சியாக வைப்பதனை அன்றி அவனுக்கு என்ன எண்ணம் இருந்தது..” எனும் வரி ஆகட்டும்

“மனதிற்குள் இத்தனை வஞ்சம் வைத்தா அவன் முன் சிரித்தீர்கள், முதுகுக்கு பின்னால் கத்தி வைத்துவிட்டா அவன் கன்னத்தை வருடினீர்கள்..” எனும் அழுகை ஆகட்டும்

“”ஒன்றாக உண்டீர்கள், ஒன்றாக விளையாடினீர்கள், அவை எல்லாம் அவனை கொல்லும் ஒத்திகையா…” என கலங்கியதாகட்டும்

“உங்கள் மனசாட்சிக்கு தெரியாததையா, அடுத்தவன் சாட்சியில் நம்பிவிட்டீர்கள்..” பரிதாபமாகட்டும்

போகிறேன்.. என்றாவது ஒரு நாள் உங்களை சந்திப்பேன், அன்று அவன் கண்ணீர் அவன் மாறவில்லை எனும் அவன் சுத்தமான உள்ளத்தை காட்டும்” என கடைசி பஞ்ச் வைத்ததாகட்டும்

கவிஞர் கவிஞரே, ஞானி ஞானியே

காயம்பட்ட மனதிற்கு அதனை விட பெரும் ஆறுதல் வரிகள் இருக்கமுடியாது, நிச்சயம் அவன் காலத்தை வென்றவன்

சிதறல்கள்

 

கதிர்வீச்சை தடுக்க செல்போனில் சாணியை மெழுகுங்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

இனி இவரை சாணியால் அப்பி கூடங்குள அணுவுலை அல்லது கல்பாக்கம் அணுவுலை அருகில் ஒரு மாமாங்கம் நிறுத்தி சோதித்து முடிவினை பெறலாம்.

என்ன மண்ணாங்கட்டியோ தெரியவில்லை, பசு, ஹோமியம், சாணி தாண்டி யோசிக்க மாட்டார்கள்,

விரைவில் நாடாளுமன்றத்தில் பசுமாடுகளுக்கு இடையில் அறிக்கை வாசிக்கும் நிலை வரலாம் என்பதால் மோடி கொஞ்சம் அஞ்சுகின்றார்

சமீபத்தில் அவர் வாய்திறந்தது அதற்காகத்தான்.


பிரபாகரனை சந்திக்க செல்லும்பொழுதே கடற்படை என்னை சுட்டு கொன்றிருந்தால்………: வை.கோ உருக்கம்

அப்படி நடந்திருந்தால், ராஜிவ் கொலை வரை புலிகளுக்கு தைரியம் வந்திருக்காது, பிரபாகரனும் 2009ல் குடும்பத்தோடு கொல்லபட்டிருக்க மாட்டார்

இப்படி உருகி என்ன அனுதாபம் தேட வருகின்றார், சரி ராணுவம் சுடவில்லை அல்லவா? நம்பிய யாரை காப்பாற்றி கிழித்துவிட்டார். திமுகவினை உடைத்தார், இவர் கட்சி இவரை மட்டும் கழற்றிவிட்டு மறுபடி அங்கே ஒட்டிகொண்டது

சரி புலிகளுக்காவது ஒரு ஆதரவு திரட்டி கொடுத்தார் என்றால் அதுவுமில்லை

ஆக ஒன்றுமே உருப்படியாக செய்யாமல் அன்றே நான் செத்திருந்தால்.. என புலம்புவது என்ன வகை அனுதாபமோ தெரியவில்லை


இலங்கை கிழக்கு மாகாணத்தில் காட்டு யானைகள் அட்டகாசம், சிலர் உயிரிழப்பு, பெரும்பான்மையான மக்கள் பாதிப்பு, அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் போராட்டம்

எங்கே ஈழ உணர்வாளர்கள்?, புலி என்றால்தான் கிளம்புவீர்களா? யானை என்றால் சத்தம்போட மாட்டீர்களா?

புறநானுற்றில் முப்பாட்டனின் வீரம் என்ன? வேல் எறிந்தே களிறினை கொன்ற வரலாறு எப்படி?, கிளம்புங்கள் அங்கிள் சைமன் தலமையில் சென்று யானையிடமிருந்து தமிழரை காப்பாற்றுங்கள்.


பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில்75 பேர் பலி

இந்தியாவின் நிம்மதியினை கெடுக்க பாகிஸ்தான் உருவாக்கிய மதவாதம் இன்று அவர்களையே கொன்றுகொண்டிருக்கின்றது, சிறிதும் பெரிதுமாக அடிக்கடி குண்டுவெடிப்புகள், அதாவது மதவாதம் ஊட்டி வளர்க்கபட்ட அந்த தீவிரவாதிகள் ஐஎஸ் போல தீவிர இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை மாற்ற போராடுகின்றார்களாம்

இந்தியா பெரும் சக்தியாகிவிட கூடாது என வலிந்து வெட்டிகொடுக்கபட்ட தேசம் அதுவே தவிர, உண்மையான மார்க்க சிந்தனையில் கிடைத்த நாடு அல்ல, ஆனால் அந்த மார்க்க சிந்தனையினை வெறிதனமாக இந்தியாவிற்கு எதிராக தூண்டிய விளைவினை அவர்கள் அனுபவிக்கின்றார்கள்

இதோ கலவரம் மூண்டு பாகிஸ்தான் அரசு துப்பாக்கி சூட்டில் இறங்கி இருக்கின்றது, அடிக்கடி அங்கு இது இப்பொழுது எல்லாம் சாதாரணம், கராச்சி எனும் பிரிட்டிஷ் இந்தியாவின் பெருமை மிகு நகரம் இன்று ஆசியாவின் பயங்கரமான நகரங்களில் ஒன்று

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், இதோ அறுவடை செய்கின்றார்கள்

இப்படி ஒரு தேசத்தில் இருந்துதான் நவாஸ் இந்தியாவினை காஷ்மீருக்காக கண்டிக்கின்றாராம்.


570 கோடியுடன் சிக்கிய கண்டெய்னர் போலி பதிவெண் கொண்டது, சிபிஐ விசாரணையில் முதல் கட்ட தகவல்

முதலில் தெரியாது என்றார்கள், பின் வங்கி எமது பணம் என்றது, ஆனால் எடுத்துகொள்ளவில்லை, ஏன் என்றால் தெரியாது? 570 கோடியினை அம்போ என விட்டுவிடும் அளவிற்கு இந்திய பொருளாதாரம் உயர்ந்துவிட்டதா? அல்லது வெறும் 570 கோடியினை வைத்துகொண்டு உப்பு கூட வாங்க முடியாதே என்ற ஜிம்பாப்வே நிலை வந்துவிட்டதா? அந்த வங்கிக்கே வெளிச்சம்.

இப்பொழுது சிபிஐ விசாரணையில் கண்டெய்னர் பதிவே போலி என்கின்றார்கள், நல்லவேளையாக பணம் போலி கள்ளநோட்டு எனும் தகவல் இதுவரை வரவில்லை

ஒருவேளை விஜய் மல்லையா வங்கிக்கு பயந்து கண்டெய்னரில் கடத்தியிருப்பாரோ? மனிதருக்கு தெரிந்தால் என் பணம் தான், வங்கி எடுத்துகொள்ளட்டும் என்பார், அவர் வியாபாரி அல்லவா? அப்படி யோசிப்பார்

ச‌ரி மறுத்து இது என்பணம் என சொல்ல யார் வருவார்கள்?

ஆனாலும் இந்தியாவினை நினைத்து நான் பெருமைபடுகின்றேன், இம்மக்கள் எவ்வளவு உயர்வானவர்கள் மூன்று கண்டெய்னர் நிறைய பணம் இருந்தும் இன்னும் யாரும் உரிமை கொண்டாடவில்லை, இது அல்லவோ நாடு, இவர்கள் அல்லவோ மக்கள், எவ்வளவு செழிப்பான நாடாக மாறிவிட்டது

எப்படியும் போகட்டும், கண்டெய்னர் சிக்கல் வந்த பின் சசிகலா புஷ்பா சர்ச்சை வந்தது, இல்லாவிட்டால் இந்நேரம் 570 கோடி சசிகலா புஷ்பா பணமா? என்றொரு பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கும் 🙂


கோவை ஈசா யோகா மையத்தில் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுக்கொடுக்க வேண்டும் என தூத்துக்குடியை சேர்ந்தமேலும் ஒரு பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

ஆக இந்த யோகா மையம் எனும் பெயரில் பெரும் குழந்தை கடத்தல் தொழில் நடந்திருக்கின்றது, கதறிகொண்டிருக்கும் பெற்றோரின் நிலை அதனைத்தான் சொல்கிறது

அது என்னவோ தெரியவில்லை கோவை மலையடிவாரத்தில்தான் யோகா தியானம் எல்லாம் செய்யமுடியுமாம், கர்தராகிய தேவன் அங்கே தான் கல்லூரி கட்டி கல்விபணியாற்றவும் ஒருவரிடம் காருண்யமாக சொன்னாராம்

இருக்கட்டும், இந்த குழந்தை கடத்தல் பற்றி அரசாங்கம் ஏன் இன்னமும் களமிறங்கவில்லை என்பதை பற்றி எல்லாம் நாம் பேச கூடாது.