தமிழகத்தில் ஓடும் ரயிலில் கொள்ளை…

தமிழகத்தில் முதல் முறையாக ஓடும் ரயிலில் கொள்ளை நடந்துவிட்டதாம், ஊடகங்கள் பொங்குகின்றன, ஆனால் உலகில் என்ன நடந்திருக்கின்றது?

உலகின் மிக பிரபலமான கொள்ளை இன்றுவரை இங்கிலாந்தில் நடந்த ஓடும் ரயிலில் நடந்த தங்க கொள்ளை, 22 மே 1855ல் நடந்த பிரமாண்ட கொள்ளை அது

Stanley Rajan's photo.

ஒரு கொள்ளை எப்படி அடிக்கபடவேண்டும் , எப்படி திட்டமிட வேண்டும் என்பதற்கு இன்றுவரை அகராதியாக திகழும் சம்பவம் அது.

அதாவது ரயிலின் ஒரு பெட்டியில் தங்கம் கொண்டு செல்லபடும், ரயில் புறப்பட 5 நிமிடம் முன்னால்தான் காவலோடு ஏற்படும், சீல் வைக்கபட்டு ரயில் கிளம்பும், இறங்குமிடமும் கடும் காவல் ரயில் நிற்காது, ஒரே வீக்னஸ் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் இது இணைக்கபட்டிருக்கும்

அதன் லாக்கரில் 4 சாவிகள் வசதி உண்டு, பிரமாண்ட லாக்கர் அது, உருவாக்கவே 2 வருடம் ஆனது. உடைப்பதோ, தூக்குவதோ சாத்தியமே இல்லை

சாவிகள் இன்றி திறக்கமுடியாது, 4 சாவிகளும் ஒரே நேரத்தில் செலுத்தபடவேண்டும்.

Stanley Rajan's photo.

 

ஒரு சேர 4 அதிகாரிகள் திறப்பார்கள், தங்கம் நிரப்பபட்டு சீல் வைக்கபடும், பின் சேருமிடத்தில் அதுபோல் 4 அதிகாரிகள் காவல் சூழ திறப்பார்கள். 4 சாவிகளும் 4 இடங்களில் பாதுகாப்பாக இருக்கும்.

உச்சமாக ஒரு அதிகாரி கழுத்திலே சாவி தொங்கவிட்டிருப்பது யாருக்கும் தெரியாது, 4ம் சாவி இடம் மாறி மாறி பாதுகாக்கபடும்.

இதில் எப்படி கொள்ளை சாத்தியம்??

ஒரு பெரும் கில்லாடி திட்டமிட்டான், ஒரு விலை மாது உட்பட 3 பேரை சேர்த்துகொண்டான், 4 சாவிகளையும் கடும் பாதுகாப்பிலும் தந்திரமாக நுழைந்து நகல் எடுத்தான். ஒரு முறை ஒத்திகையும் பார்த்தான், எல்லாம் டைமிங் ஒத்திகை,

எப்படி 4 சாவி நகல் எடுத்தான், எப்படி செய்தான் என்பதெல்லாம் மயிர் கூச்செறியும் விஷயங்கள், எழுதினால் தாங்காது. ஆனால் அட்டகாசமான வில்லன், நம்ம ஊர் திருடர்கள் எல்லாம் சும்மா.

கொஞ்சம் உளறிய ஒரு கூட்டாளியினை கொன்றும் போட்டான்

எப்படி ஒத்திகை பார்த்தான் என்றால், பிணபெட்டியில் பிணமாக ரயிலேறி படுத்துகொண்ட கில்லாடி அவன்.

rail

ஒரு சுபநாளில் கொள்ளையிட திட்டமிட்டான், எல்லாம் சரி, அவனும் அவளும் ரயில் ஏறினர். நடு வழியில் ரயில்பெட்டி மேல் நடந்து சிறிய துளை வழியாக இறங்கி லாக்கரை திறந்து தங்கத்தை எடுத்துவிட்டு, மிக சரியாக கூட்டாளி நிற்க சொன்ன இடத்தில் எறிந்துவிட்டு சாதுர்யமாக வந்து அமர்ந்தும் கொண்டான், டைமிங்

லண்டனே அலறியது, பிரிட்டன் அவமானத்தில் சிவந்தது, ஸ்காட்லாந்து யார்டு களமிறங்கியது, என்ன பெரிய கில்லாடி என்றாலும் ஒரு விஷயத்தில் மாட்டுவான் அல்லவா? அவன் மறந்தது என்ன? அது புகை வண்டி. ரயில்பெட்டி மேல் இவன் திறமை காட்டியபொழுது உடலெல்லாம் கரி அப்பி கொண்டது, அது முகத்திலும் இருந்தது, சிலர் கவனித்ததை போலிசிடம் சொன்னார்கள்

அவ்வளவுதான் எல்லா பயணிகள் வந்தவர்கள், போனவர்கள் எல்லோரையும் சோதித்து குற்றவாளியியில் ஒருவனை பிடித்தார்கள், அவன் மூலவரை காடிவிட்டான். அவர் அடுத்த காப்பி கடையில் காபி குடித்தபொழுது பிடித்தார்கள்

அவன் லண்டனில் மகா பிரபலமானான், இப்படி ஒரு கில்லாடியா என அவனை கோர்ட்டில் ஆஜர் படுத்தியபொழுது பார்க்க அடுத்த நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் விசா வாங்கி வந்தார்கள். லண்டன் கண்ட பெரும் கூட்டத்தில் அதுவும் ஒன்று

கோர்ட்டில் அவன் கொடுத்த வாக்குமூலத்தில் அரண்டு போய் இருந்தது நீதிமன்றம், இப்படியும் ஒருவன் திட்டமிட முடியுமா? இவ்வளவு நுட்பமா? என வியந்தார்கள்

நமது நாட்டில் இப்படி ஒரு அறிவாளியா என சிலர் காலரை தூக்கிகொண்டார்கள்.

அவன் பக்க்கத்து கல்லறை தோட்டத்தில் கல்லறையில் தங்கத்தை புதைத்து வைத்ததாக சொல்லிவிட்டு வெளிவந்தான், ஒரு பெண் வாயில் முத்தம் கொடுத்தாள், அவள் அதே விலைமாது

முத்தம் கொடுத்தவள் வாய்க்குள் ஒரு பின்னை செலுத்திவிட்டு சென்றதை யாரும் கவனிக்கவில்லை, அந்நாளைய குதிரை வண்டி காவலில் செல்லும்பொழுது அந்த பின்னை வைத்து கை விலங்கினை திறந்து
தப்பினான் அவன்.

அதன் பின் அவனையும் காணவில்லை, அவளையும் காணவில்லை ,

பெரும்பான்மை தங்கத்தையும் காணவில்லை, உலகிலே கொள்ளையிட்டு அகபபட்டால் எப்படி மீதி தங்கத்தோடு தப்பி என்ன செய்யவேண்டும், என திட்டமிட்ட முதல் கொள்ளையன் அவனே, அவ்வளவு எச்சரிக்கை அவனுக்கு.

இன்று வரை உலகின் சுவாரஸ்யமான கொள்ளை அது, உலகறிவுள்ள திருடர்களுக்கெல்லாம் அவனே குரு, துர் ஆத்மா, வழிகாட்டி எல்லாம், அப்படி ஒரு திறமையான திருடன் இனி பிறக்க வாய்ப்பில்லை என்கின்றார்கள், பெரும் கொள்ளையர்கள் அவன் ஆளுயர படத்தினை வைத்து ரகசியமாக வணங்குவர் என்பார்கள்

இப்பொழுது என்ன நடந்திருக்கின்றது, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் அதே போல 340 கோடி ரூபாய் ஓடும் ரயிலில் கொள்ளையடிக்கபட்டிருக்கின்றது, தமிழ்நாடு அலறுகின்றது

இங்கிலாந்து கொள்ளையில் ஸ்காட்லாண்டு யார்டு தன்னை யார் என நிரூபித்தது, இதில் தமிழக போலிஸ் எப்படி தன்னை நிருபிக்கின்றது என பார்க்கலாம்

மகா சுவாரஸ்யமான கொள்ளை இது, குற்றவாளிகள் பிடிபடும்பொழுதுதான் உண்மை தெரியும், இப்பொழுதெல்லாம் குற்றவாளிக கழுத்தினை அறுத்துகொள்கின்றார்களாம், ஆனாலும் ஒரு விவர வட்டம் வெளிவரும்

நமது அவதானிப்பு எல்லாம் விரைவில் இதனை மையமாக வைத்து பல திரைப்படம் வரும், விடுவார்களா சினிமாக்காரர்கள்? சூர்யாவினை வைத்து ஒரு திருட்டுபடம் எடுத்தால் முடிந்துவிடும்.

இன்றைய 570கோடி கண்டெய்னர் விவகாரத்தை 21 ஆண்டுகளுக்கும் முன்பே சினிமா எடுத்த தமிழகம் இது, இந்த ரயிலை விடுமா? சும்மாவே ரயில் சென்டிமென்ட் ஜாஸ்தியான தமிழ் சினிமா இது. இனி வரிசையாக வரும்

நாம் இப்படி யோசித்தால் வெள்ளையன் எப்படி யொசிப்பான், அந்த ரயில் கொள்ளையினை வைத்து பல படம் வந்தாயிற்று “The Great Train Roberry ” அதில் ஒன்று,

இது போக ஏகபட்ட நாவல்களும் வந்தது, டைட்டானிக் மூழ்கும் வரை இதுதான் பெரும் விற்பனை பொருள்

காரணம் கொள்ளையன் மக்களை அதிசயிக்க வைத்தது அப்படி, மனதிற்குள் மக்கள் ரசித்தார்கள். ஒரு கட்டத்தில் அவன் தாடியும் உடையும் கூட பேஷனாகிபோனது

அதன் பின் எத்தனையோ ஓடும் ரயில் கொள்ளை மேற்குலகில் நடந்தாலும் இன்று வரை போலிசாரே வாசித்து மலைத்து நிற்பது இந்த முதல் பிரமாண்ட ரயில்கொள்ளையே, அந்த எட்வர்ட் போலிசாருக்கே பல்கலை கழகமாக ஆகி இருக்கின்றான்

எப்படியோ இந்தியா பின் தங்கிய நாடுதான், அவர்கள் 1855ல் நிகழ்த்திய கொள்ளை சாதனையினை நாம் 161 வருடம் கழித்து நிறைவேற்றி இருக்கின்றோம், எவ்வளவு காலம் பின் தங்கிவிட்டோம்

சரி அந்த கொள்ளையினை கண்டுபிடித்து பெரும் புகழ் பெற்றது ஸ்காட்லாந்து யார்டு, காரணம் கொள்ளையன் எட்வர்ட் விதைதிருந்த மர்மம் அப்படி, ஒவ்வொன்றாக அவிழ்த்து அவனை நெருங்கினார்கள், அந்த கரி மட்டும் முகத்தில் இல்லை என்றால் நிச்சயம் ஸ்காட்லாண்ட் போலிஸ் முகத்தில் கரிதான்

நமது தமிழக போலிஸ் எப்படி என பார்க்கலாம், இங்கு என்ன நடக்கும் என நினைக்கின்றீர்கள்? வழக்கு ரயில்வே போலிசா அல்லது மாநில போலிசா, சிபிசிஐடியா, சிபிஐ யா? என ஒப்படைப்பதற்கும் 340 கோடி எங்கோ சென்றுவிடும்

அது என்னமோ வங்கிகளுக்கு சோதனையான காலம், மல்லையா மொத்தமாக கம்பி நீட்டிவிட்டார், 570 கோடி நடுதெருவில் கிடக்கின்றது, இதோ ரயிலில் வந்ததும் போனது இனி என்ன செய்ய?

எவனாவது விவசாயி கறவை மாடு கடனோ அல்லது பாவபட்டவன் வீட்டுலோனோ, அல்லது விதவை நகை கடனோ வாங்கி இருப்பாள், இல்லாவிட்டால் கல்வி கடனை அம்பானி போல இன்னொருவனிடம் ஒப்படைத்து வசூலிக்கலாம், எவன் செத்தால் என்ன? 4 பில்லை கூட்டிபோட்டால் முடிந்தது விஷயம்

எனினும் தமிழக கொள்ளையர்கள் அந்த எட்வர்ட்டை வணங்கிவிட்டு வந்தார்களா இல்லையா என தெரியாது, ஆனால் அவனை பின்பற்றி இருந்தால் இவர்களை நெருங்க கூட முடியாது

எமபாதகன் எனும் சொல்லுக்கு முற்றிலும் பொருந்தியவன் அந்த கொள்ளையர் நூலகம் எட்வர்ட் எனும் ஜெகஜால கில்லாடி.

சிதறல்கள்


இந்த எவிடென்ஸ் உன்மை அறியும் குழு, அந்த குழு, மலையினை கண்டறியும் குழு, மண்புழு கண்டறியும் குழு எல்லாம் சுவாதி கொலை இன்னபிற சம்பவங்களில் களமிறங்கியது இதுதான் உண்மை, சொல்வதெல்லாம் உண்மை என சொன்னார்கள்

இந்த ரயில் கொள்ளைக்காவது களமிறங்கவேண்டாம், சசிகலா புஷ்பா மீது குவியும் வழக்குகளில் ஒன்றிற்காவது இது பொய் வழக்கு என உண்மை கண்டறியலாம் அல்லவா?

(அப்படி செய்தால் அதன்பின் அமைப்பே இருக்காது என்பது வேறு விஷயம்)

எனினும் இது பற்றி எல்லாம் நாம் பேச கூடாது,


பஞ்சு அருணாசலம் மரண செய்தி மனதை பாதித்தது, கொஞ்ச நேரம் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்துகொண்டிருந்தேன்.

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் என ஒரு கட்டுரை எழுதியிருந்தார், அதில் சொன்னார். நான் சில இடங்களில் பாடல் எழுதிய வரி அப்படியே சிலருக்கு பொருந்திற்று

உதாரணம் நடிப்பிசை புலவர் டி.ஆர் மகாலிங்கத்திற்கு எழுதினேன்
“விடியும் விடியும் என்றிருந்தோம்
முடியும் பொழுதாய் விடிந்ததடா
நம் குலமும் குடியும் ஓய்ந்தத்டா”

அதோடு அவர் பெரும் சிக்கலுக்கு ஆளானார்.

இதனை வாசித்து கொண்டிருந்தபொழுதே டிவியினை பார்த்தால் ஒரு அன்னை பாடிகொண்டிருந்தார்

“இன்ப மலர்கள் பூத்து குலுங்கும் சிங்கார தோட்டம்

நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம் ஒரே கொண்டாட்டம்”

அந்த காட்சியினை பார்த்ததும், கண்ணதாசனின் வரிகள் மறுபடியும் ஞாபகத்துக்கு வந்தன, இதுவும் பலித்திருக்கலாம் என உதட்டோரம் ஒரு புன்னகையும் வந்தது.

காரணம் பாடிகொண்டிருந்தது நடிகை சந்தியா, முதல்வர் ஜெயலலிதாவின் அன்னை சந்தியா 🙂

எங்கே போய்விடும் காலம்…

இப்பொழுதெல்லாம் நிறைய அனுபவங்கள் கிடைக்கின்றது, கொட்டுகின்றது. ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் கிடைக்கின்றது, ஆக சமீபத்திய அனுபவம் இது.

ஒருவனை ஆரம்பத்திலே பிடிக்கவில்லை, பழிவாங்க வேண்டுமென்றால், பழக வேண்டும், பழக்கமென்றால் மிக உறவாக பழகவேண்டும், சிரித்து சிரித்து பழகவேண்டும்.

மனதிற்குள் கடும் வன்மம் வைத்துகொள்ளவேண்டும், மனதிற்குள் கோபத்தை மறைத்து வெளியே உறவாட வேண்டும், அப்படி ஒரு 65ம் கலைக்கு இரவு பகலாக தயாராக இருக்கவேண்டும்.

ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும் வரை கொக்குபோல் தவமிருக்கவேண்டும், கிடைத்துவிட்டால் நேரடியாக சொல்லகூடாது, சொல்லிவிட்டால் என்ன ஆகும்? இன்னும் நெருக்கமாக நண்பர்கள் ஆவோம் அல்லவா?, நட்பு தெய்வீகம் ஆகும் அல்லவா?

அது என்ன நட்பு மண்ணாங்கட்டி தெய்வீகம், வன்மம் தீர்ப்பதல்லவா முக்கியம், சாத்தானியம்.

இன்னொருவருவனிடம் சென்று அல்லது வீட்டிற்கு பிச்சை எடுக்க வருபவனோ அல்லது சிலிண்டர் போட வருபவனையோ பிடித்து அதோ இருக்கிறான் அல்லவா.. என தொடங்கி ஆட்டோ சங்கர் தாவூத் இப்ராஹிம் லெவலுக்கு ஏற்றி விட வேண்டும், ஏற்றிவிட்டு அவன் நல்லதற்குதான் சொல்கிறோம் மறக்காமல் சொல் என சொல்லவேண்டும்.

அந்த வயர்மேனோ, கேஸ் போடுபவனோ, கார் கழுவுவனொ, மெக்கானிக்கோ அவன் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு சென்ற்பின் ரகசியமாக ரசிப்பினை தொடங்க வேண்டும்.

அப்படியே அவன் படும் மனசிக்கல்களை மறைமுகமாக கண்காணித்து ரசிக்கவேண்டும், அவன் புழுங்கி அழுவதை ரசிக்க வேண்டும், ஆனால் ஒருவார்த்தை கேட்க கூடாது

அவன் அழுது புரண்டு, ஏன் இப்படி செய்தார்கள்?, தனியாக ஒரு வார்த்தை சொன்னால் முடிந்துவிடும் விஷயமல்லவா? நம்மை பிடிக்கவில்லை என்பதால்தானே இப்படி செய்தார்கள், ஓஓ மனதை காயபடுத்திவிட்டோம் போல என விலக தொடங்கினால்…

மறுநாள் ஒன்றுமே தெரியாதது போல குட்மார்னிங் சார்… என சொல்லவேண்டும், அதாவது ஒரு வன்மமும் இல்லை என்பது போல காட்டிகொள்ளவேண்டும்

மறுபடி அதே உறவினை தொடர்ந்து, அப்படியே கண்காணித்து அடித்துகொண்டே இருக்கும் ஒரு வகை கலை. நெருப்பில் காட்டி இரும்பினை குளிரவைத்து அடிப்பார்கள் அல்லவா?

இரும்பிற்கு மனம் இல்லை வலிக்காது, ஆனால் மனிதனுக்கு?

அப்படி சிரித்து சிரித்து பழகி, திடீரென பின் மண்டையில் அடிக்கும் கலை. பின் தடவி விட்டுகொண்டே ரசிக்கும் கலை.

ஒரு சிலருக்கே வாய்க்கும் கலை

அதாவது பிடிக்கவில்லை என வெட்டி விடாமல், உறவாடியே கெடுக்கும் கலை,

இப்படி ஒரு கொடூர கலை இருக்கிறது என்று சமீபத்தில்தான் அறிய முடிந்தது,

வானத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உருவத்தில் மேகங்கள் வரும், அவை கூடும் மழை கொட்டும்

அப்படி ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு உருவத்தில் வருகின்றார்கள், நமக்கு அனுபவ மழை கொட்டுகின்றது, சில நேரம் ஞான மின்னல் மனதை வெட்டி விடுகின்றது,

அந்த இயற்கையில்தான் ஆண்டவன் எவ்வளவு பெரும் விஷயத்தை மறைத்திருக்கின்றான், மானிட வாழ்வின் நண்பர் குழாமும் அப்படியே, எல்லாம் அனுபவ மழை.

மானுக்கும் நரிக்கும் என்ன உறவு? சிட்டுகுருவிக்கும் கோட்டானும் ஒரே இனமாக வாழ முடியுமா? இரண்டின் குணம் வேறு, தன்மை வேறு

அப்படி வேறுபட்ட சிந்தனை கொண்ட மனிதர்களும் நண்பர்களாய் வரமுடியாது, அவனவன் தரத்தில் அவனவன் நிற்கவேண்டும் என்பது மகா உண்மை.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆயிரம் அரசியல்வாதி ஒளிந்திருக்கின்றான், சந்தர்ப்பம் வாய்க்கும்போது அது வெளிபடுகின்றது என்பது கண்டுகொண்டிருக்கும் அனுபவம்

வாழ்க்கை ஒரு நாடக மேடைதான், அதில் நடிக்கத்தான் செய்வார்கள் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும், வாழ்க்கை கடலை கடக்கும்போது நெத்திலி மீன் முதல் ஆபத்தான ஜெல்லி, பெரும் முதலை, திமிங்கலம் எல்லாம் கடக்கத்தான் வேண்டி இருக்கின்றது

போகட்டும்

தலைவர் பாணியில் போனால “ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை, அவன் அன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை” என சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம்.

எங்கே போய்விடும் காலம்.