இது இலங்கை பாட புத்தகத்தில் இடம்பெறும்

இனி இலங்கை வரலாறு இப்படி தொடரும், இலங்கை மாணவர்கள் இப்படி படிப்பார்கள், அப்படித்தான் மாறிகொண்டிருக்கிறது இலங்கை. இந்தியா இலங்கை இடையே ஒரு பாலம் கட்ட இந்தியா முயற்சிக்கும் போது அவர்களின் கடும் கொந்தளிப்பு இப்படி நடக்கபோவதைத்தான் சொல்கின்றது

“1980களில் இந்தியா எனும் அந்நிய நாடு, நம் நாட்டில் குழப்பம் விளைவித்து, இலங்கையினை ஆக்கிரமிக்க ராணுவத்தோடு வந்தபொழுது, பிரபாகரன் தலமையில் இங்கையர் வீரப்போர் புரிந்தனர், அதிபர் பிரேமதாசாவின் அற்புதமான தந்திரமும் அதற்கு உதவியது

இலங்கை மக்கள் முன்னால் தாக்குபிடிக்க முடியாத இந்திய ஆக்கிரமிப்பு படை தோற்றோடியது. சிங்களர் தமிழ்ர் சேர்ந்து நடத்திய வீரப்போர் அது. அந்நேரம் இலங்கை வந்த ராஜிவினை ஒரு சிங்கள மாவீரன் கொல்ல முயன்றதும் வீர காவியம்

பின்னாளில் அதே இந்தியாவில் புகுந்து ராஜிவினை தீர்த்துகட்டியதும் புலிகள்.

இல்லை என்றால் பிரிட்டனுக்கு அடுத்தபடி இலங்கை இந்தியாவின் காலணி ஆகியிருக்கும், இந்திராவும் ராஜிவும் அதற்குதான் திட்டமிட்டார்கள். புலிகள்தான் அதனை முறியடித்தனர்

அப்படி இலங்கைக்காக பெரும் தியாகம் செய்த நாட்டுபற்றாளர்கள் தான் புலிகள், அவ்வகையில் இலங்கையின் இரண்டாம் சுதந்திரத்திற்கு பாடுபட்ட ஒரு பெரும் நாட்டுபற்றாளன் பிரபாகரன்,

இந்தியாவிடம் பயிற்சி பெற்ற மற்ற குழுக்களை, இந்தியாவில் தான் பெற்ற பயிற்சி மூலமாகவே ஒழித்துகட்டிய மாவீரன் அவர். அந்த இலங்கை துரோகிகளை கொன்று இந்தியாவினை நமது தேசத்தில் கால்வைக்காமல் பார்த்துகொண்டவர், பெரும் ராஜ தந்திரி

இலங்கை நலனுக்காக உயிர்காத்த இந்தியாவினையே எதிர்த்து நின்ற பெரும் தியாகி அவர். பெரும் ராஜதந்திரி
சிங்களருடன் அவர் சண்டையிட்ட போதிலும், அந்நிய நாடு தலையிடாமல் பார்த்துகொண்டதில் அவரின் நாட்டுபற்றினை கண்டு தேசமே வணங்கியது,

தமிழர் உரிமையினை விட அவருக்கு இலங்கை இன்னொரு நாட்டிடம் சிக்கிகொள்ள கூடாது எனும் தேச அபிமானமே கூடியிருந்தது. இந்த யாசர் அராபத் போல நார்வே காரன் பின்னால் சென்றால் என்ன ஆயிருக்கும்?

அவருக்கு “லஙகா ரத்னா” எனும் உயரிய விருது அளித்து நாடு கவுரவித்துள்ளது, இலங்கை நாடாளுமன்றத்தில் அவருக்கு சிலையும் உள்ளது”

குறித்துகொள்ளுங்கள், விரைவில் இது இலங்கை பாட புத்தகத்தில் இடம்பெறும்.

சிதறல்கள்

அனுமதியின்றி கடத்தபட்ட 30 டன் தாது மணல் கைபற்றபட்டதது : செய்தி

எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் எனும் சாதாரண அரசியல் தத்துவம் தெரியாதவரா முதல்வர்.

ஏதோ தமிழக அரசியலை புரட்டிபோடும் ரகசியம் என்னிடம் உள்ளது என சொன்ன சசிகலா புஷ்பா இனி வாய்திறப்பார்?

நாடார் சமூகம் எனக்கு பாதுகாப்பளிக்கும் என சசிகலா புஷ்பா சொன்ன மறுநிமிடம் பல சங்கங்கள் மறுப்பு தெரிவித்தபொழுதே, கண்ணி எங்கோ போடபட்டது தெரிந்தது.

அதுவும் சசிகலா புஷ்பா சொன்னதற்காக அவசரமாக கூடி மறுப்பு அறிக்கை விட்டதுதான் பெரும் விறுவிறுப்பு. யாருக்கோ முகத்தில் “மண்” அள்ளி போட்டிருக்கின்றார்கள். தாதுமணல் அல்ல, சாதாரண மணல்

சங்கங்கள் அப்படித்தான் அரசினை எதிர்க்கமாட்டார்கள், புறம்போக்கு நிலத்தில் சங்க கட்டடம் உள்ளது என வழக்கு பாய எவ்வளவு நேரமாகும். சங்கமும் இருக்காது, கட்டடமும் இருக்காது

ஆக நன்கு திட்டமிட்டு காய்கள் நகர்த்தபடுகின்றன,

மன்னாதி “மண்”ணவனுக்கு சோதனை காலம்.


 

30 ரூபாய் லஞ்சத்தால் 10 மாத குழந்தை இறந்த அவலம்: உ.பியில் லஞ்ச கொடூரம்

அக்குழந்தைக்கு 10 மாதமாம், காய்சலுக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள். குறைந்தபட்சம் 30 கூட இல்லாமல் நர்ஸ் மற்றும் துப்புரவு தொழிலாளி அனுமதிக்கவில்லையாம். நோய் தாமதிக்குமா? குழந்தை போனது

லஞ்சம் ஒரு புறம் இருக்கட்டும், மனிதாபிமானம் அறவே செத்துவிட்ட தேசமிது

ஆனல் 30 ரூபாய் இல்லாமல் அக்குழந்தையினை சாகவிடும் அளவிற்கு வறுமை தாண்டவமாடுகின்றது, 30 ரூபாய் லஞ்சம் கேட்கும் அளவிற்கு அவர்கள் நிலமையும் இருந்திருக்கின்றது

இந்த உ.பியில்தான் பல்லாயிரம் கோடியில் ராமர் ஆலயம் கட்டுவார்களாம்

அக்காலத்தில் இருந்தே அறியாமையும், வறுமையும் புரையோடிய மாநிலம் அது. அவர்களுக்கு தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை

ஆனால் அன்றே கோஷம் எழுப்பினார்கள் அல்லவா? “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என அவர்களை சொல்லவேண்டும், எல்லாம் பொய்

வடக்கு வாழும் நிலைக்கு வரவே இன்னும் பல காலம் ஆகும்.

ஹிருத்திக் ரோஷனின் ‘மொகஞ்சதாரோ’

ஹிருத்திக் ரோஷனின் மொகஞ்சதாரோ படம் நாளை வெளிவருகிறது, சர்ச்சை வெடிக்கின்றது

rt

அதாகபட்டது லகான், ஜோதா அக்பர் போன்ற படங்கள் வரிசையில் அந்த இயக்குநர் மொகஞ்சதாரோ படம் எடுக்கின்றாராம், ஆனால் கதை அதே சிந்து சமவெளி காலத்தில் நடக்கும் கதையாம் (அமலா பால் நடித்தது அல்ல) அக்காலம் இன்றளவும் பல மர்மங்களை கொண்டது

முதல் மர்மம் அது உலகின் முதல் நாகரீகமான வாழ்வு வாழ்ந்த இடம் அல்ல, நமது ஆதிச்சநல்லூர், மெசபடோமியா போன்றவையே முன்னோடி, சரஸ்வதி எனும் நதி திடீரென வற்றிவிட்டதால் மக்கள் வெளியேறி பாலைவனமான நிலம் அது என்பது ஒரு தியரி, அதிலிருந்த மக்கள் திராவிட மக்கள் எனவும் அது தமிழுக்கு மூத்த மொழி எனவும் அவர்கள் தெற்குநோக்கி நகர்ந்தார்கள் என்பதும் ஒரு தியரி

ஆனால் அங்கு கிடைத்த முத்திரைகள், சில அடையாளங்கள், இன்றும் பாகிஸ்தானில் இருக்கும் ஊர் பெயர்கள் எல்லாம் தமிழரோடு தொடர்பு கொண்டவை, இது தொல்பொருள் விஷயம்

சரி படத்தில் என்ன பிரச்சினை?

கதைபடி சினிமாவில் சமஸ்கிருதம் பேசுகின்றார்களாம், இந்த ஆட்சியில் விருதோ வரிவிலக்கோ வாங்க அப்படி பேசித்தான் ஆகவேண்டும். ஆனால் ஒரு விஷயம் சர்ச்சையாகின்றதாம்

அதாவது இந்நாள்வரை நடந்த ஆராய்சி முடிவில் அம்மக்களுக்கு குதிரை பயன்பாடு இருந்ததாக தெரியவில்லை. பசு, காளை பயன்பாட்டில் இருந்திருக்கின்றது, முத்திரைகளில் ஒற்றை கொம்புடன் ஒரு விலங்கு இருந்திருக்கின்றது

அது அப்பகுதியில் நிலவிய மத நமபிக்கையா? அல்லது கிரேக்கர்கள் சொல்வது போல ஒற்றை கொம்பு குதிரையா என்பதில் இன்றுவரை சர்ச்சை. ஆனால் குதிரைகள் சிந்துசமவெளி பகுதியில் அன்று இல்லை என்பது ஆராய்சி முடிவு

சிலருக்கு புரியும், பசு ஒரு அரசியல் என்றால் குதிரை இன்னொரு அரசியல்

அதாவது இந்தியருக்கு யானை தெரிந்த அளவு குதிரை தெரியாது, அந்த வீக்னெஸை பயன்படுத்திய ஆரியர்கள் குதிரையினை காட்டி இந்தியாவில் வந்தனர், பின்னாளில் அலெக்ஸ்காண்டர், கோரி, கஜினி, பாபர், என சகலரும் வெற்றிகொள்ள குதிரைபடையே காரணம் என்பது ஒரு ஒப்புகொள்ளபட்ட வாதம்.

ஆக சிந்துசமவெளியில் குதிரை இருப்பதாக காட்டினால், அங்கு ஆரியர் இருந்திருக்கின்றார்கள் என சொல்லிவிடலாம்.

ஆரியர் வந்தேறி அல்ல, மாறாக சிந்துசமவெளியில் நம்மோடு வசித்தவர்கள் என வரலாற்றை திரித்து கதையில் காட்டிவிடலாம்

அப்படி காட்டிவிட்டார் என்பதுதான் சர்ச்சையின் தொடக்கம்

இந்த இயக்குநர் அசுதோஷ் கவுரிகர் பாகுபலி ராஜ மவுலி போல திறமையானவர், அவரின் லகான், ஜோதா அக்பரும் மறக்கமுடியாதவை.

அதில் ஜோதா அக்பருக்கு வட இந்தியாவில் எழுந்த எதிர்ப்பு தெரியும், அந்த அற்புதமான படத்தினை தோல்விபடம் ஆக்கினார்கள், அது மத அரசியல்

இப்பொழுது இவரே வாய்ப்பு கொடுக்கின்றார் போல, எனினும் படம் வந்தபின்புதான் சொல்லமுடியும். எவ்வளவு அழகான கற்பனை, சிந்துவெளி மக்கள் இப்படி இருந்திருப்பார்கள் என்பதை கண்ணில் பார்க்கபோவதே பெரும் எதிர்பார்ப்பினை தூண்டுகின்றது

நிச்சயம் படம் பார்க்கவேண்டும், சொல்லவேண்டிய கதை, பார்க்கவேண்டிய படம்

இதனை போல கடலில் பூம்புகாரும், நெல்லை பக்கம் ஆதிச்சநல்லூரும் பெரும் வரலாற்றினை தன்னோடு கொண்டு தூங்கிகொண்டிருக்கின்றது, படமாக்குவது யார்?

அதற்கெல்லாம் இங்கே யார் வருவார்கள்? தமிழன் மதம், தமிழன் சாதி என்றெல்லாம் எடுப்பார்களே தவிர, தமிழனின் நாகரீகம் என ஒன்றையும் தேடமாட்டார்கள்

ஒருவேளை வருங்காலத்தில் யாரும் வரலாம்.

சரி மோகஞ்சதாரோ வரப்போகின்றது, குதிரையால் சர்ச்சை வரப்போகின்றது என்கிறது ஒரு செய்தி

நாட்டின் நிலை எப்படி செல்கிறது. பசுவினை தொடர்ந்து குதிரை சர்ச்சை

இனி அடுத்து என்ன விலங்கோ? அநேகமாக ஓட்டகமாக இருக்கலாம்.

அதற்கு அடுத்து பேன்கள் யார் தலையில் முதலில் இருந்தது, எது எந்த மக்கள் மூலம் இந்தியாவிற்குள் வந்தது? என அடுத்த சர்ச்சை வரலாம்.

புலிகள் ஒன்றுபட்ட இலங்கைக்காகத்தான் போராடியிருக்கின்றார்கள்…

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்டும் பேச்சே இல்லை, இலங்கை அதிபர் அறிவிப்பு

கொஞ்ச நாளைக்கு முன்புதான் டெல்லி பாராளுமன்றத்தில் நிதின் கட்காரி பாலம் கட்டுவோம் என அறிவித்திருந்தார், அதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழும்பிற்று

விடகூடாது, இது இந்தியாவின் 30ம் மாநிலமாக இந்தியாவினை இணைக்கும் திட்டம், பாலத்தை குண்டு வைத்து தர்ப்போம், பாலம் கட்டினால் தமிழக தமிழர்கள் வந்து நம்மை தாக்கி அபகரிப்பர் (சீமான் எப்படி பயம்காட்டியிருக்கின்றார் 🙂 ) எனவே பாலம் வேண்டாம் என பயங்கர ஆர்ப்பாட்டம்

இந்தியா பாலம் அமைப்போம் என சொன்னதும் அப்படித்தான், வட இலங்கை முழுக்க ஆதிக்கம் செலுத்த வாய்ப்புண்டு

இலங்கை அந்த காலத்திலிருந்தே இப்படித்தான், ஒரு நேரம் பணிவார்கள், ஒரு நேரம் சீறுவார்கள். அவர்களை அடக்க அந்த இந்திரா காந்தி பாணிதான் சரி

சரி இந்தியா என்ன செய்யலாம்?, ஓகே பாலம் வேண்டாம், அந்த சேது சமுத்திர திட்டத்தை தொடங்கட்டுமா என கேட்டாலே போதும், இலங்கைக்கு சப்தநாடியும் அடங்கும், அது தொடங்கிவிட்டால் கொழும்பு துறைமுகத்தில் தூண்டில் போடத்தான் முடியும்

ஆனால் பாஜ அரசு கேட்க முடியாது, காரணாம் ராமர் பாலம் என சிக்கலை தொடங்கியதே இவர்கள்தான், இனி தொட்டால் அவ்வளவுதான் வாரனாசி தொகுதியிலே மோடியினை ஓட ஓட சாமியார்கள் விரட்டுவார்கள்.

சில இஸ்லாமிய அமைப்புகளிடம் ஈரான், புத்த அமைப்புகள் கையில் இலங்கை போல சில மத கூட்டத்தின் கையில் இந்திய அரசும் சிக்கி இருப்பது ஒரு வகை கொடுமை.

சரி இப்படி அப்பட்டமாக கரி பூசியதற்கு இந்திய பதிலடி எப்படி இருக்க போகின்றது என தெரியாது, ஆனால் சரணடைந்த புலிகளுக்கு விஷ மருந்து கொடுத்தது இலங்கை, 10 ஆயிரம் புலிகளை காணவில்லை, எல்லோரையும் கொன்றிருக்கலாம் என ஒரு புது சர்ச்சை இலங்கை தூக்கத்தை கெடுக்கின்றது

காரணம் யுத்த குற்றங்களை தாண்டலாம், ஆனால் சரணடைந்தவர்களை கொன்றால் அது பெரும் சர்வதேச தலைவலியினை கொடுக்கும்

அது..வந்து..புலிகள் குண்டு புகையில் சிக்கி, உணவில்லாமல் போரிட்டு..மன சஞ்சலமாகி..உடல் நலம் குன்றி…ஆங் ஆனால் எம்மிடம் சிக்கிவிட்டு பின் வெளிநாடு சென்ற புலிகள் எல்லாம் நலமாகத்தானே இருக்கின்றனர், என என்னவெல்லாமோ சொல்லி சமாளிக்கின்றது இலங்கை.

இந்திய உதட்டு ஓரம் ஒரு மர்மபுன்னகை

ஒரு குட்டிநாடு தன்னை மிரட்டுவதா என்றுதான் களமிறங்கினார் இந்திரா, இந்திய தளம் அங்கில்லாமல் இதற்கு தீர்வில்லை என்றுதான் மிக தைரியமாக ராணுவத்தை அனுப்பினார் ராஜிவ்

இன்று தமிழருக்கும் தீர்வில்லை, இந்தியாவிற்கும் மிரட்டல் நீடிக்கின்றது

இது எதனால், யாரால் என்றால்?, முடிவு உங்களுக்கே தெரியும்

அவர்கள் ஒருவரையும் வாழவைக்கவும் இல்லை, அவர்களால் யாருக்கும் நன்மை விளைந்ததுமில்லை. புலிகளால்சகல நன்மையும் விளைந்ததென்றால் அது சிங்களனுக்கே

அவ்வகையில் மனதிற்குள் ஒவ்வொரு சிங்களனும் பிரபாகரனை வணங்கிகொண்டே இருப்பான்.

தமிழருக்காக போராடுகிறேன் என சொல்லி, தன்னையும் அறியாமல் சிங்களனுக்கு பிரபாகரன் செய்திருக்கும் உதவிகள் கோடி கோடியானவை.

உண்மையில் சொல்லபோனால் புலிகள் ஒன்றுபட்ட இலங்கைக்காகத்தான் போராடியிருக்கின்றார்கள், வரலாறு அப்படித்தான் பதிந்துகொண்டிருக்கின்றது